பௌத்த முஸ்லிம் உறவை வலுவூட்டும் ஜகார்த்தா செயலமர்வு

0 1,302

கொழும்பு ஸாஹிராக் கல்­லூ­ரியின் உப அதி­பரும் Center for Excellence இன் பணிப்­பா­ள­ரு­மான அஷ்ஷேய்க் ஏ. எம். மிஹ்ழார் இந்­தோ­னே­சியத் தலை­ந­க­ரான ஜகார்த்­தாவில் 2019 டிசெம்பர் 17-–19 ஆம் திகதி வரை இடம்­பெற்ற பௌத்­த-­முஸ்லிம் உறவு தொடர்­பான செய­ல­மர்வில் கலந்­து­ரை­யா­டப்­பட்ட விட­யங்­களை வாச­கர்­க­ளுடன் பகிர்ந்­து­கொள்­கிறார்.

q: பல்­வேறு சம­யங்கள் வாழும் தெற்­கா­சிய, தென்­கி­ழக்­கா­சிய பிராந்­தி­யத்தில் பௌத்த முஸ்லிம் உறவை மையப்­ப­டுத்தி இந்­தோ­னே­சியா ஜகார்த்­தாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசெம்பர் 17 முதல் 19 ஆம் திகதி வரை இடம்­பெற்ற மாநாடும், செய­ல­மர்வும் எவ்­வா­றான அடை­வு­களை இலக்­காகக் கொண்டு அமைந்­தன?

பௌத்த முஸ்லிம் உறவை மேம்­ப­டுத்தும் நோக்கில் செய­ல­மர்வின் பிர­தான இலக்­கு­க­ளாக பின்­வரும் இரு விட­யங்கள் கவ­னத்­திற்­கொள்­ளப்­பட்­டன.

1. தெற்­கா­சிய, தென்­கி­ழக்­கா­சிய பிராந்­தி­யத்தில் குறிப்­பாக பௌத்­த-­முஸ்லிம் உற­விலும் ஏனைய சமய உற­வு­க­ளிலும் காணப்­படும் பிர­தான போக்­கு­களின் நடப்பு நில­வ­ரங்கள் பற்றி பரி­சீ­லனை செய்தல்.

2. சமயத் தலை­வர்கள் மற்றும் கொள்கை வகுப்­பா­ளர்கள் இடையே பரஸ்­பர ஆக்க பூர்­வ­மான கூட்­டு­றவை ஏற்­ப­டுத்­து­வதன் மூலம் தேசிய, பிராந்­திய மட்­டங்­களில் பிர­தான சமூக விவ­கா­ரங்­களை கையாள்­வ­தற்கு வழி­கோ­லு­தலும் முக்­கிய நோக்­காகும். இந்­தோ­னே­சியா, மலே­சியா, தாய்­லாந்து, மியன்மார், இலங்கை போன்ற நாடு­களில் பன்­மைத்­து­வத்தின் தோற்­றப்­பாட்டை மக்­க­ளது சமய, கலா­சார, இன விவ­கா­ரங்­களில் தெளி­வாக காணலாம். ஆங்­காங்கே சில முரண்­பா­டுகள் காணப்­பட்­ட­போதும் வேற்­று­மையில் ஒற்­று­மையைப் பலப்­ப­டுத்தும் அம்­சங்­களை இனங்­கண்டு நடை­முறை சாத்­தி­ய­மான செயல்­திட்­டங்­களை பரிந்­து­ரைப்­ப­தற்­கான பரந்­த­ள­வி­லான சந்­தர்ப்பம் இச்­செ­ய­ல­மர்­வு­களில் பங்­கு­பற்­றி­ய­வர்­க­ளுக்கு ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்­டது.

2019 ஆம் ஆண்டு தெற்­கா­சிய, தென்­கி­ழக்­கா­சிய பிராந்­தி­யத்தில் சம­யங்­க­ளி­டையே பதற்ற­நிலை அவ­தா­னிக்­கப்­பட்­டது. அதிலும் குறிப்­பாக இலங்­கையில் ஈஸ்டர் ஞாயிறு துன்­பியல் நிகழ்வை தொடர்ந்து வெறுப்பு பேச்சு, வன்­மு­றை­களைத் தூண்டும் நிகழ்­வுகள் பர­வ­லாக இடம்­பெற்ற நிலையில் பதற்ற­நிலை மேலும் அதி­க­ரித்­தது. இப்­பி­ராந்­தி­யத்தில் குறிப்­பிட்ட சில சம­யங்­க­ளுக்கு எதி­ரான உணர்வு வலுப்­பெற்­றது. இவ்­வா­றான நிலைமை ஒரு நாட்டில் தோன்­றி­னாலும் பிராந்­தி­யத்தில் உள்ள பல நாடு­க­ளிலும் அதன் அதிர்­வ­லை­களை பிர­தி­ப­லித்­தன. சமூக வலைத்­த­ளங்­களூடாக போலிச்­செய்­திகள், வதந்­திகள் பரப்­பப்­பட்டு சமூ­கங்­க­ளி­டையே நம்­பிக்­கை­யற்ற நிலை உரு­வா­னது. இவ்­வா­றான நிலையில் மக்­க­ளி­டையே சமா­தான சக­வாழ்வை, நல்­லி­ணக்­கத்தை உறு­திப்­ப­டுத்­தக்­கூ­டிய நட­வ­டிக்­கை­களை பற்றி சிந்­தித்து செயற்­ப­டு­வ­தற்­கான ஊக்­கு­விப்பை, உந்­து­தலை ஜகார்த்தா செய­ல­மர்வு வழங்கும் என்­பது ஏற்­பாட்­டா­ளர்­களின் எதிர்­பார்ப்­பாகும்.

q: முரண்­பா­டு­களை தவிர்த்து பல்­லின சமூ­கங்­க­ளி­டையே நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வழி­காட்­டிய ஜகார்த்தா மாநாட்­டையும் செய­ல­மர்­வையும் வடி­வ­மைத்த பிர­தான ஏற்­பாட்­டா­ளர்­களை பற்றி குறிப்­பி­டு­வ­தாயின்……

வியன்­னாவை தலை­மை­ய­க­மாக கொண்­டுள்ள சம­யங்கள், கலா­சா­ரங்கள் இடை­யி­லான கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்­கான மன்னர் அப்­துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் சர்­வ­தேச மத்­திய நிலையம் (KAICIID), இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­புக்­கான நிறு­வனம் (OIC) இந்­தோ­னே­சி­யாவை தள­மாகக் கொண்ட குஸ்­தூ­ரியன் வலைப்­பின்னல் அமைப்பு நாக­ரி­கங்­க­ளி­லான கலந்­து­ரை­யாடல் ஒத்­து­ழைப்­புக்­கான மத்­திய நிலையம் என்­பன இச்­செ­ய­ல­மர்வை வெற்­றி­க­ர­மாக நடத்­து­வ­தற்கு பங்­க­ளித்­தன.

q:பௌத்­த-­முஸ்லிம் உறவை மையப்­ப­டுத்­திய இத்­த­கைய செய­ல­மர்வு இதற்கு முன்­னரும் இடம்­பெற்­றுள்­ளதா?

ஆம். 2017 ஆம் ஆண்டு தாய்­லாந்து தலை­நகர் பாங்­கொக்கில் முத­லா­வது செய­ல­மர்வு இடம்­பெற்­றது. இதனை வியன்­னாவை தலை­மை­ய­க­மாக கொண்­டுள்ள சம­யங்கள், கலா­சா­ரங்கள் இடை­யி­லான கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்­கான மன்னர் அப்­துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் சர்­வ­தேச மத்­திய நிலை­யமும் (KAICIID), இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­புக்­கான நிறு­வனம் (OIC) என்­பன இச்­செ­ய­ல­மர்வை வெற்­றி­க­ர­மாக நடத்­து­வ­தற்கு பங்­க­ளித்­தன. முத­லா­வது செய­ல­மர்வின் போது மியன்மார் விவ­காரம் பல­ரதும் கவ­னத்தை ஈர்த்­தது. அதன் விளை­வாக (KAICIID) கைசீட் அமைப்பு மியன்­மாரில் சமா­தா­னத்தை நிலை நிறுத்­து­வ­தற்­காக Peaceful Myanmar Initiative என்ற முன்­னெ­டுப்பு ஆரம்­பிக்­கப்­பட்­டது.

கைசீட் நிறு­வ­னத்தின் பயிற்­று­விப்­புக்­கான பணிப்­பா­ள­ராக கட­மை­யாற்றும் இலங்­கை­ய­ரான கலா­நிதி சபி­யுல்லாஹ் மன்சூர் 2017 மற்றும் 2019 ஆம் ஆண்­டு­களில் இடம்­பெற்ற செய­ல­மர்­வு­களில் முக்­கிய வள­வா­ள­ராக விளங்­கி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.

q:ஜகார்த்தா செய­ல­மர்­வின்­போது முக்­கி­ய­மான பேசு­பொ­ரு­ளாக அமைந்த விட­யங்­க­ளென எவற்றை குறிப்­பி­டு­வீர்கள்?

1. வெறுப்­பு­ணர்வை மற்றும் வன்­மு­றையை தூண்டும் நடத்­தை­க­ளையும் சமூக ஊட­கங்­களில் அவற்றின் தாக்­கத்­தையும் எவ்­வாறு எதிர்­கொள்­வது என்ற சம­கால விவ­காரம் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

2. அனை­வ­ரது புனிதத் தளங்­களும் பாது­காக்­கப்­ப­டு­வதன் அவ­சியம் உணர்த்­தப்­பட்­டது.
அது­மட்­டு­மன்றி சமய நம்­பிக்­கை­களை பின்­பற்­று­வ­தற்­கான சுதந்­தி­ரமும் பாது­காக்­கப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டது.

3. யாவ­ருக்கும் சம­யக்­கல்வி : சமயப் பெரும்­பான்மை, சிறு­பான்மை என்ற பார­பட்­ச­மின்றி அனை­வரும் தமது சமய நம்­பிக்­கை­க­ளுக்கு ஏற்ப சம­யக்­கல்­வியைப் பெறு­வ­தற்­கான அனைத்துத் தேவை­களும் முறை­யாக நிறை­வேற்றிக் கொடுக்­கப்­பட வேண்­டி­யதன் கடப்­பாடு உணர்த்­தப்­பட்­டது. மலே­சிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான கலா­நிதி அஸ்மான், தாய்­லாந்து செனட்­ட­ரான அனு­சா­சனா போன்ற அர­சியல் பிர­மு­கர்கள் இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­புக்­கான நிறு­வனம் (OIC) அமைப்பின் தஃவா கலந்­து­ரை­யாடல் பிரிவின் பணிப்­பா­ள­ரான கலா­நிதி பசீர் அன்­சாரி பல முக்­கி­யஸ்­தர்கள் தமது துறை­சார்ந்த அனு­ப­வங்­களை இச்­செ­ய­ல­மர்­வின்­போது பகிர்ந்­து­கொண்­டனர். முகநூல் உட்­பட சமூக வலைத்­த­ளங்­களூடாக சமா­தா­னத்­துக்கு குந்­தகம் விளை­விக்கும் வெறுப்பு பேச்சு போன்ற நவீன சவால்­களை எதிர்­கொள்­வ­தற்கு ஒவ்­வொரு அர­சாங்­கமும் மேற்­கொள்ளும் அண்­மைக்­கால நட­வ­டிக்­கைகள் மற்றும் நாடு­வா­ரி­யான கருத்­து­ப­கிர்­வுகள் செய­ல­மர்வில் பங்­கு­பற்­றி­ய­வர்­களை புதிய தீர்­வு­களின் பால் சிந்­திக்க தூண்­டின. மேஜர் ஜெனரல் தர்­சன ஹெட்­டி­ஆ­ரச்சி, இலங்­கையின் பாது­காப்பு அமைச்சில் சமய தீவி­ர­வாதம், வன்­முறை, பயங்­க­ர­வாதம் என்­ப­ன­வற்றை தடுப்­ப­தற்கும் முறி­ய­டிப்­ப­தற்­கு­மான தேசிய வேலைத்­திட்­டத்தின் தலை­வ­ராக விளங்­கு­வதால் ஈஸ்டர் தாக்­கு­தலின் பின்­ன­ரான அவ­ரது பார்­வை­களும் பதி­வு­களும் முக்­கி­யத்­துவம் பெற்­றன. பேரா­சி­ரியர் ல்மோருவே பிய­ரத்ன தேரர் உட்­பட அங்கு பங்­கு­பற்­றிய இலங்­கையைச் சேர்ந்த பெரும்­பான்மை சமூ­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தி­ய­வர்கள் வர­லாறு நெடு­கிலும் இலங்கை முஸ்­லிம்கள் நாட்டில் அமை­தி­யையும் சமா­தான சக­வாழ்­வையும் பேணி நாட்டின் அபி­வி­ருத்­திக்கு உறு­து­ணை­யாக இன்­று­வரை பங்­காற்றி வரு­வதை நினை­வு­கூர்ந்­தனர்.

q:ஜகார்த்தா செய­ல­மர்­வின்­போது சமூ­கத்­திற்கு பயன்­பெ­றக்­கூ­டிய தீர்­மா­னங்கள் எதுவும் மேற்­கொள்­ளப்­பட்­ட­னவா?

செய­ல­மர்வில் பங்­கு­பற்­றிய ஐந்து நாடு­களின் அரச பிர­தி­நி­தி­களும், சமயத் தலை­வர்­களும் மூன்று நாட்­க­ளாக கலந்­து­ரை­யா­டிய பல்­வேறு விட­யங்­க­ளிலும் காணப்­பட்ட பொது­வான அம்­சங்­களை தொகுத்து, இறு­திநாள் அமர்வின் போது கலா­நிதி அம்ஜத் சலீம் ஜகார்த்தா பிர­க­ட­னத்தில் உள்­ள­டங்­க­வேண்­டிய செயற்­திட்­டங்­களை முன்­மொ­ழிந்து கலந்­து­ரை­யா­டினார். இதன்­போது நம்­பிக்கை, இனத்­துவம், கலா­சாரம் என்­ப­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்ட அடை­யாள அர­சியல், அநீதி என்­பன இப்­பி­ராந்­தி­யத்தில் உள்ள நாடு­களில் வன்­முறை முரண்­பா­டு­க­ளுக்கும் மனித உரிமை மீறல்­க­ளுக்கும் இட்டுச் சென்ற பிர­தான கார­ணி­க­ளாக அமைந்­துள்­ளதை அங்கு பங்­கு­பற்­றியோர் ஏற்­றுக்­கொண்­டனர். அத்­துடன் தெற்­கா­சிய, தென்­கி­ழக்­கா­சிய பிராந்­தி­யத்தில் பின்­வரும் விட­யங்கள் குறித்து கவனம் செலுத்­த­வேண்­டி­யதன் முக்­கி­யத்­து­வத்­தையும் உணர்ந்­துள்­ளனர்.

1. சமய உட்­பி­ரி­வு­க­ளி­டை­யேயும், சம­யங்­க­ளி­டை­யேயும் கலந்­து­ரை­யா­டலை மேற்­கொள்­வ­தற்­கு­ரிய முன்­னேற்­ற­க­ர­மான புதிய சூழலை உரு­வாக்­கக்­கூ­டிய நிகழ்ச்சி நிரல் ஒழுங்­க­மைக்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. இப்­பி­ராந்­தி­யத்­தையும், இப்­பி­ராந்­திய நாடு­க­ளிலும் பொது­வான விழு­மி­யங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட சமயப் பன்­மைத்­து­வத்தை புரிந்­து­கொள்­ளக்­கூ­டிய நிலையை உரு­வாக்கும் விதத்தில் அனைத்து சம­யத்­த­வர்­களும் கூட்­டாக செயற்­பட வேண்டும்.

2. அனை­வ­ரையும் உள்­வாங்­கக்­கூ­டிய தன்மை உரு­வாக வேண்டும். இதற்­காக இளை­ஞர்கள், பெண்கள், வலது குறைந்தோர் போன்­ற­வர்­க­ளுக்கு உரிய இடத்­தையும் வலைப்­பின்­ன­லையும் ஏற்­ப­டுத்திக் கொடுப்­பது வர­வேற்­கத்­தக்­கது.

3. இப்­பி­ராந்­திய சமூ­கங்­க­ளி­டையே காணப்­படும் அச்சம், சந்­தேகம், அவ­நம்­பிக்கை என்­பன களை­யப்­பட்டு அதற்குப் பக­ர­மாக நம்­பிக்கை, நட்­பு­றவு, பரஸ்­பர சமூக உற­வாடல் என்­ப­வற்றை பலப்­ப­டுத்தல் வேண்டும். மேற்­கு­றிப்­பிட்ட விட­யங்கள் உட்­பட செய­ல­மர்வில் கலந்­து­ரை­யா­டப்­பட்ட பல விட­யங்­களில் பங்­கு­பற்­றி­யோ­ரி­டையே உடன்­பாடு காணப்­பட்­டது. ஜகார்த்தா செய­ல­மர்வில் பங்­கு­பற்­றிய தீர்­மா­னங்­களை மேற்­கொள்­ளக்­கூ­டிய அரச தரப்பு கொள்கை வகுப்­பா­ளர்­க­ளிடம் பல­வி­ட­யங்கள் கோரிக்­கை­யாக நினை­வூட்­டப்­பட்­டன.

அவர்­களின் எதிர்­கால செயற்­றிட்­டங்­களின் போது பின்­வரும் விட­யங்கள் குறித்து கவ­னத்­திற்­கொள்வர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

1. சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்­கெ­தி­ரான நட­வ­டிக்­கைகள் உட்­பட ஏனைய சமய நம்­பிக்­கை­களை அர­சியல் நிகழ்ச்சி நிர­லுக்­காக தவ­றாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதை முறை­யாக கையா­ளக்­கூ­டிய நிலை­யான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும்.

2. வழி­பாட்டுத் தளங்கள், ஆன்­மீக முக்­கி­யத்­துவம் வாய்ந்த பாரம்­ப­ரிய தளங்கள் என்­பன அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு பரா­ம­ரிக்­கப்­பட்டு பாது­காக்­கப்­ப­ட­வேண்டும். சமா­தானம் நல்­லி­ணக்­கத்­துக்­காக அப்­பு­னித இடங்­களை பயன்­ப­டுத்த வழி­பாட்­டா­ளர்­க­ளுக்கு அனு­ம­திப்­பதும் இன்­றி­ய­மை­யா­தது.

3. கருத்து வெளிப்­பாட்டு சுதந்­தி­ரத்தை மீறாத வகையில் வெறுப்பு பேச்சு, வன்­மு­றையைத் தூண்டல் போன்ற விட­யங்கள் குற்றச் செய­லாக கரு­தப்­பட்டு அது தொடர்­பான சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யுள்­ளது.

4. சம­யங்­களின் உட்­பி­ரி­வு­க­ளி­டை­யேயும், சம­யங்­க­ளி­டை­யேயும் கலந்­து­ரை­யா­டலை ஊக்­கு­விக்க வேண்­டி­யுள்­ளது. அரச அலு­வ­லர்­க­ளி­டை­யேயும், கொள்கை வகுப்­பாளர் களி­டை­யேயும் சமய நம்­பிக்கை தொடர்­பான நம்­பிக்­கை­களை மேம்­ப­டுத்தும் வகையில் சமயத் தலை­வர்­க­ளு­டனும், சமய நிறு­வ­னங்­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டலை முன்­னெ­டுப்பர்.

5. பாட­சா­லை­க­ளிலும், சமய நிறு­வ­னங்­க­ளிலும் சர்­வ­தேச தன்மை வாய்ந்த பொது­வான விழு­மி­யங்­களை கற்­பிக்­கக்­கூ­டிய விதத்தில் சம­யத்­த­லை­வர்­க­ளுடன் கொள்கை வகுப்­பா­ளர்கள் நெருங்கி ஒத்­து­ழைப்­பாக செயல்­ப­டுவர்.

மேலும் இச்­செ­ய­ல­மர்வில் பங்­கு­பற்­றிய சமயத் தலை­வர்­க­ளிடம் பின்­வரும் விட­யங்கள் குறித்து கவனம் செலுத்­த­வேண்­டு­மென கோரிக்கை விடுக்­கப்­பட்­டது :

1. சமய உட்­பி­ரி­வு­க­ளி­டை­யேயும் சம­யங்­க­ளி­டை­யேயும் கலந்­து­ரை­யாடும் பண்பை பலப்­ப­டுத்தும் விதத்தில் அனைத்து சமூ­கங்­க­ளையும் அனு­ச­ரித்து நடை­முறை சாத்­தி­ய­மான விதத்தில் செயற்­பட வேண்டும்.

2. சிந்­திக்கும் முறையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக உடன்­பாட்டு சிந்­த­னையை வளர்க்கும் விதத்தில் நேர்­ம­றை­யான விளக்­கங்­களை முன்­வைத்தல் அவ­சி­ய­மாகும்.

3. ஒற்­றுமை, நீதி, சூழல் பாது­காப்பு, நல்­லி­ணக்கம் என்­ப­வற்றை ஏற்­ப­டுத்தும் விதத்தில் அனைத்து சம­யங்­க­ளையும் உள்­ள­டக்­கிய வழி­பாடு மற்றும் கலந்­து­ரை­யா­ட­லுக்­கான ஒரு பிரத்­தி­யேக தினத்தை வரை­ய­றுத்தல் சிறப்­பாக அமையும். ஐக்­கிய நாடுகள் சபையால் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட சம­யங்­க­ளி­டை­யே­யான நல்­லி­ணக்க வாரத்­துடன் ஒரு­மைப்­பாட்டை வெளிப்­ப­டுத்தும் விதத்தில் இந்நாள் அமை­யலாம்.

4. வெறுப்பு பேச்சை விட்டு தவிர்ந்து கொள்ளும் விட­யத்தில் சமயத் தலை­வர்கள் முனைப்­புடன் செயல்­பட வேண்டும். எவ­ரேனும் பிறரை புண்­ப­டுத்தும் மொழியை பயன்­ப­டுத்தும் சந்­தர்ப்­பங்­களில் முறை­யாக பொதுத்­த­ளத்தில் அவர்­களை ஆற்­றுப்­ப­டுத்தும் விதத்தில் வழி­காட்­டல்­களை வழங்க வேண்டும்.

5. கட்­ட­மைப்பு ரீதி­யான மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தும் விதத்தில் சமயத் தலை­வர்கள், கொள்கை வகுப்­பா­ளர்­க­ளுடன் உற்­சா­க­மாக கூட்­டாக செயல்­ப­டு­வது சிறந்த நடை­மு­றை­யாக அமையும்.

q: இலங்­கையில் பௌத்­த-­முஸ்லிம் உறவை வலுப்­ப­டுத்தும் கூட்டு செயல்­பா­டு­களை மேற்­கொள்­வது தொடர்­பாக இலங்கைப் பிர­தி­நி­தி­க­ளிடம் எவ்­வா­றான புரிந்­து­ணர்வும், தீர்­மா­னமும் காணப்­ப­டு­வ­தாக கரு­து­கி­றீர்கள்?

ஜகார்த்தா செய­ல­மர்வில் கொள்கை வகுப்­பா­ளர்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய புத்­த­சா­சன அமைச்சின் பிர­தம உள்­ளக கணக்­காய்­வாளர் கமகே விமல், பாது­காப்பு அமைச்சைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் தர்­சன ஹெட்­டி­ஆ­ரச்சி, பௌத்த சமயத் தலை­வர்­க­ளான கலா­நிதி திவு­ல­பெ­லெஸ்ஸே விம­லா­னந்த தேரர், பேரா­சி­ரியர் வல்­மோ­ருவே பிய­ரத்ன தேரர் ஆகியோர் முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளுடன் கூட்­டாக சமா­தான செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வ­தற்­கான தமது ஆர்­வத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். தமது உயர் பத­வி­நி­லை­களூ­டாக 2020 ஆம் ஆண்டு ஆற்­ற­வுள்ள அவர்­க­ளது பணி­களில் சமா­தான சக­வாழ்வு, சமய நல்­லி­ணக்கம் என்­ப­வற்றை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளுக்கும் இடம் ஒதுக்­கப்­ப­டலாம் என்ற நம்­பிக்கை எழுந்­துள்­ளது. இச்­செ­ய­ல­மர்வைத் தொடர்ந்து அங்கு பங்­கு­பற்­றிய இலங்­கை­யர்­க­ளி­டையே கொழும்பில் சில சந்­திப்­புகள் இடம்­பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. இச்­செ­ய­ல­மர்வில் பங்­கு­பற்­றிய முஸ்லிம் சமயத் தலை­வர்­க­ளான அஷ்ஷேய்க் எஸ். எச். எம். பழீல், அஷ்ஷேய்க் அர்கம் நூர் ஆமித், அஷ்ஷேய்க் ஏ. எம். மிஹ்ழார் ஆகியோர் கல்வித் துறையில் கட­மை­யாற்­று­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வ­கையில் பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ள­ரான கலா­நிதி திவு­ல­பெ­லெஸ்ஸ விம­லா­னந்த தேர­ருடன் இணைந்து மேற்­கொள்ள முடி­யு­மான கல்வி செயற்­திட்­டங்­களில் ஒன்­றாக தாம் கட­மை­யாற்­று­கின்ற கல்வி நிறு­வ­னங்­க­ளுக்கும் பௌத்த கல்வி நிறு­வ­னங்­க­ளுக்கும் இடையில் கல்­விசார் பரி­மாற்­றங்கள் கள­வி­ஜ­யங்­களை மேற்­கொள்­வ­தன்­மூலம் இரு தரப்பு உறவை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான வாய்ப்­புகள் உள்­ள­தாக இனங்­கண்­டுள்­ளனர். அவ்­வாறே வெறுப்பு பேச்சைக் கட்­டுப்­ப­டுத்தி பன்­மைத்­து­வத்தை ஊக்­கு­விப்­ப­தற்­கான வழி­வ­கை­களை ஆராயும் கொள்கை வகுப்­பா­ளர்­க­ளுக்­கான மூன்று நாள் செய­ல­மர்வு குறித்து பிரே­ரிக்­கப்­பட்­டுள்­ளது. சமய வழி­பாட்டுத் தளங்கள் தொடர்­பான தப்­ப­பிப்­பி­ரா­யத்தை களைந்து சமூக நல்­லி­ணக்­கத்தை மேம்­ப­டுத்தும் நோக்கில் தேசிய நல்­லி­ணக்கத் தினம் மற்றும் நல்­லி­ணக்க உரைகள் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளன. மாணவர் மத்­தியில் இலங்­கையில் உள்ள ஆன்­மீக முது­சங்­களைக் கொண்ட பாரம்­ப­ரிய தளங்­களின் முக்­கி­யத்­து­வத்தை உணர்த்தும் கள­வி­ஜ­யங்கள் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. தெற்­கா­சி­யா­விலும், தென்­கி­ழக்கு ஆசி­யா­விலும் சம­யங்­க­ளி­டை­யே­யான கலந்­து­ரை­யா­டலில் காணப்­படும் சிறந்த நடை­மு­றை­களை பிர­தி­ப­லிக்கும் கண்­காட்சி இப்­பி­ராந்­தி­யத்தில் உள்ள சமா­தான செயற்­பாட்­டா­ளர்­களின் அனு­ப­வங்­களை பகிர்ந்து கொள்­ளவும் அவற்­றி­லி­ருந்து சிறந்த நடை­மு­றை­களை கற்­றுக்­கொள்­ளவும் வாய்ப்­பாக அமை­யு­மென கரு­தப்­ப­டு­கி­றது. இச்­செ­ய­ல­மர்வில் தீர்­மா­னிக்­கப்­பட்ட செயற்­திட்­டங்­களை கைசீட் நிறு­வ­னத்­துடன் ஒருங்­கி­ணைக்கும் நட­வ­டிக்­கை­களை கைசீட் அமைப்பின் இலங்கை உறுப்­பி­னர்­க­ளான அஷ்ஷேய்க் ஏ. எம். மிஹ்ழார் மற்றும் தேசிய சமா­தானப் பேர­வையைச் சேர்ந்த நிஷந்த குமார் ஆகியோர் மேற்­கொள்வர்.

q: இலங்­கையில் சமூ­கங்­க­ளி­டையே சமா­தான சக­வாழ்வைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக சமா­தான கல்­வியை மக்கள் மயப்­ப­டுத்த வியன்­னா­வி­லுள்ள கைசீட் (KAICIID) நிறு­வ­னத்தின் பங்­க­ளிப்பு எவ்­வாறு அமைந்­துள்­ளது?

கைசீட் (KAICIID) நிறு­வ­னத்தின் பயிற்­சி­நெ­றியை பூர்த்தி செய்த சர்­வ­தேச உறுப்­பி­னர்­களூ­டாக அவர்கள் வாழும் நாடு­களில் சமா­தான திட்­டங்கள் செயற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. உதா­ர­ணத்­திற்கு 2019 ஒக்­டோபர் 29 ஆம் திகதி தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளி­டையே சம­யங்­க­ளி­டை­யி­லான கலந்­து­ரை­யா­டலும் பன்­மைத்­து­வமும் என்ற தொனிப்­பொ­ருளில் கலா­நிதி ரமீஸ் அபூ­பக்கர் நடாத்­திய செய­ல­மர்வை குறிப்­பி­டலாம். கல்­கந்தே தம்­மா­னந்த தேரர், திரு­மதி ஹொம், சுவாமி சிடா­கா­ஷா­னந்த, அஷ்ஷேய்க் ஏ. எம். மிஹ்ழார், கலா­நிதி ரமீஸ் அபூ­பக்கர், நிஷாந்த குமார, கலா­நிதி தீகல்லே மஹிந்த தேரர், விலியம் ப்ரேம்குமார் எபநேசர் ஜோசப் பாதிரியார் ஆகியோர் வியன்னாவிலுள்ள கைசீட் நிறுவனத்தின் சமாதானம், கலந்துரையாடல் குறித்த பாடநெறியை பூர்த்தி செய்த உறுப்பினர்களாவர். இதுவரை 2015 முதல் 2019 வரை 59 நாடுகளைச் சேர்ந்த 279 பேர் கைசீட் நிறுவனத்தின் சமாதானம் கலந்துரையாடல் பற்றிய பாடநெறியை பூர்த்திசெய்துள்ளதுடன் கலை, கலாசாரம், சமயம், ஆய்வு சார்ந்த செயற்திட்டங்களை அமுல்படுத்தியுள்ளனர். சர்வதேச ரீதியில் நிலைபேறான சமாதானத்துக்காக கலந்துரையாடலை முக்கிய ஊடகமாக பயன்படுத்துகின்ற கைசீட் (KAICIID) நிறுவனம் கடந்த காலங்களில் மத்திய ஆபிரிக்க குடியரசு, மியன்மார், நைஜீரியா, அரபு பிராந்தியத்தில் குறிப்பாக ஈராக், சிரியா போன்ற நாடுகளில் கூடிய கரிசனையுடன் தனது ஆக்கபூர்வமான பணிகளை ஆற்றி வருகிறது. இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து இலங்கை குறித்தும் அதனது சமாதான சகவாழ்வுக்கான செயற்திட்டங்களை அமுல்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வகையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கொழும்பில் சினமன் கிரேன்ட் ஹொட்டலில் கைசீட் அமைப்பின் இலங்கை உறுப்பினர்களின் வலைப்பின்னல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு கலாநிதி சபியுல்லாஹ் மன்சூர் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வின்போது சமாதானத்தை கட்டியெழுப்பும் சமயக் கலந்துரையாடலில் ஆர்வமுள்ள சமய நிறுவனங்களின் பிரதிநிதிகள் சிலரும் கலந்துகொண்டனர். கைசீட் நிறுவனத்தின் இலங்கைக்கான செயற்திட்டங்களில் ஓர் அம்சமாக எதிர்வரும் மார்ச்- ஏப்ரல் காலப்பகுதியில் சமாதானம், சமய கலந்துரை யாடலுக்கான மாநாடொன்று இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக சமாதான செயற்பாட்டாளரான சுசித் அபேவிக்ரம இத்துறையில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பற்றிய விபரங்களை திரட்டி வருகிறார். இளைஞர், யுவதிகளை சமயக் கலந்துரையாடல் துறையில் ஈடுபடுத்துவதற்கு ஊக்குவிக்கும் செயலமர்வுகள் குறித்தும் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது. கைசீட் நிறுவனத்தின் பணிகளுள் கைசீட் நிறுவனத்தின் இணையத் தளம் ஊடாக சமாதானக் கல்வி தொடர்பான ஆக்கங்களையும் காணொளிகளையும் ஒன்லைன் பாடநெறிகளையும் பற்றி kaiciid.org என்ற இணையத்தளத்தினூடாக மேலும் அறிந்துகொள்ளலாம்.-Vidivelli

  • நேர்காணல் : யாழ் அஸீம்

Leave A Reply

Your email address will not be published.