அபிவிருத்தியை முடக்கும் இலங்கை அரசியல்

0 309

நாட்டின் பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு தீர்வு பெறு­வ­தற்­காக நாட்டில் நிலவும் பொரு­ளா­தார நிலை­மைகள் குறித்து மீளாய்வு செய்­வது வழக்கம். அதன் மூலம் கண்­ட­றி­யப்­படும் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­களைத் தீர்த்துக் கொள்­வ­தற்­காக வரி அற­விடல், கடன் பெறல் மற்றும் அரச செல­வி­னங்கள் குறித்து அர­சாங்கம் எடுக்கும் தீர்­மா­னங்கள் என்­பன அரச நிதிக் கொள்­கை­யாக வரை­வி­லக்­க­ணப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

இந்த அரச நிதிக்­கொள்­கையைப் பயன்­ப­டுத்­தியே நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை ஸ்திரப்­ப­டுத்­திக்­கொள்­ளவும் மக்­க­ளது வறு­மையை ஒழிக்­கவும் முடி­யு­மாக அமை­கி­றது.

நாட்டில் 30 வரு­டங்­க­ளாகத் தொடர்ந்த உள்­நாட்­டுப்போர் 2009 ஆம் ஆண்டில் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அன்று முதல் 2019 ஆம் ஆண்டு வரை­யான ஒரு தசாப்த காலத்தில் நாட்டின் தனி­நபர் ஆதாயம் 200 முதல் 4000 அமெ­ரிக்க டொல­ராக உயர்ந்­துள்­ளது. தனி­நபர் ஆதாயம் எனப்­ப­டு­வது ஓர் அவ்வாண்டின் நாட்டு ஆதா­யத்தை ஆண்டின் மத்­தி­யி­லுள்ள குடித்­தொ­கையால் பிரிக்­கும்­போது வரும் தொகையே அவ்­வாண்டின் தனி­நபர் ஆதா­ய­மாகக் கொள்­ளப்­ப­டு­கி­றது. ஆசியா மற்றும் தென்­கி­ழக்­கா­சிய நாடு­க­ளான வியட்நாம், லாவோஸ், மியன்மார், பிலிப்பைன், வங்­கா­ள­தேசம், இந்­தியா ஆகிய நாடுகள் கடந்த ஒரு தசாப்த காலத்தில் தனி­நபர் வரு­மா­னத்தை இரு மடங்­கு­க­ளாக உயர்த்திக் கொள்­வதில் வெற்றி கண்­டுள்­ளன.

உலக வங்­கியும் மேலே குறிப்­பிட்ட அடிப்­ப­டை­யி­லேதான் உலகின் ஒவ்­வொரு நாட்­டி­னதும் தனி­நபர் ஆதா­யத்தை மீளாய்­வுக்­குட்­ப­டுத்தி தனி­நபர் ஆதா­யத்தை மதிப்­பீடு செய்­கின்­றது. இந்த அடிப்­ப­டையில் உலக நாடுகள் நான்கு வகுப்­பாகத் தரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

கீழ்­மட்ட வரு­மானம் பெறும்­நா­டுகள், கீழ் மட்ட நடுத்­தர வரு­மா­ன­முள்ள நாடுகள், மேல்­மட்ட நடுத்­தர வரு­மானம் பெறும் நாடுகள், உயர்­மட்ட ஆதாயம் பெறும் செல்­வந்த நாடுகள் என்­ப­னவே நான்கு தரங்­க­ளாகும்.

2016 ஆம் ஆண்டு உலக வங்­கியின் வகைப்­ப­டுத்­த­லுக்­க­மைய நாடொன்றின் தனி­நபர் வரு­மானம் 1005 அமெ­ரிக்க டொல­ருக்குக் குறை­வாயின், அது வறிய நாடாகக் கணிக்­கப்­ப­டு­கி­றது. 1006 டொல­ரி­லி­ருந்து 3955 அமெ­ரிக்க டொலர் வரை தனி­நபர் ஆதாயம் அமையும் நாடுகள் நடுத்­தர கீழ்­மட்ட நாடு­க­ளாகும். 3956 அமெ­ரிக்க டொல­ரி­லி­ருந்து 12235 அமெ­ரிக்க டொலரைத் தனி­நபர் ஆதா­ய­மாகப் பெறும் நாடுகள் நடுத்­தர உயர்­மட்ட நாடு­க­ளாக வகைப்­ப­டுத்தப் படு­கின்­றன. தனி­நபர் 12235 அமெ­ரிக்க டொல­ருக்கு மேல் வரு­மா­ன­முள்ள நாடு­களே உலகின் செல்­வந்த நாடு­க­ளாகும் என்­பதே உலக வங்­கியின் மதிப்­பீட்டு தரப்­ப­டுத்­த­லாகும். இந்த வகையில் 2018 ஆம் ஆண்டில் உலகில் 81 செல்­வந்த நாடுகள் காணப்­பட்­டுள்­ளன.

2018 ஆம் ஆண்டு இலங்­கையில் 4000 அமெ­ரிக்க டொலரே தனி­நபர் வரு­மா­ன­மாக இருந்­துள்­ளது. இதனால் உலகின் இரண்டாம் வகை மத்­திய உயர்­மட்ட தரத்­தி­லுள்ள 60 நாடு­களில் இலங்­கையும் உள்­ள­டக்கப் பட்­டுள்­ளது. மூன்­றா­வது வகை மத்­திய கீழ்­மட்ட தரத்தில் உலகில் 47 நாடுகள் உள்­ளன. நான்­கா­வ­தாக கீழ்­மட்ட வறுமை நிலையில் 31 நாடுகள் காணப்­ப­டு­கின்­றன.

2018 இல் இலங்­கை­யுடன் கொசோவோ மற்றும் ஜோர்­ஜியா ஆகிய இரு நாடு­களும் மத்­திய உயர்­மட்ட நாடு­க­ளாக தரம் உயர்ந்­துள்­ளன. செல்­வந்த நாடா­க­வி­ருந்த ஆர்­ஜன்­டீனா 2018 இல் தனி­நபர் வரு­மா­னத்தில் 12235 டொலரை விட தாழ்ந்­ததன் விளை­வாக செல்­வந்த நாடு­களின் பட்­டி­ய­லி­லி­ருந்து அந்­நாடு நடுத்­தர மேல்­மட்ட நாடு­க­ளுக்குள் நுழைந்­துள்­ளது.

உலகில் 219 நாடு­களில் 141 நாடுகள் மத்­திய மேல்­மட்ட நாடு­க­ளா­கவும் செல்­வந்த நாடு­க­ளா­கவும் உயர்­நி­லையில் உள்­ளன.

இலங்­கைக்கு சுதந்­திரம் கிடைத்த 1948 ஆம் ஆண்டில் இலங்­கையின் தனி­நபர் வரு­மா­ன­மாக 120 அமெ­ரிக்க டொலரே இருந்­துள்­ளது. 1977 ஆம் ஆண்­டாகும் போது அது 294 அமெ­ரிக்க டொல­ராக உயர்ந்­துள்­ளது. 1978 ஆம் ஆண்டு திறந்த பொரு­ளா­தார முறைமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. அதன் விளை­வாக 2004 ஆம் ஆண்­டாகும் போது இலங்­கையின் தனி­நபர் வரு­மானம் 1063 அமெ­ரிக்க டொல­ராக மிகவும் வேக­மாக உயர்வு கண்­டது. ஆனாலும் 1978 முதல் 2004 வரை­யான 26 வரு­டங்­களில் இலங்­கையின் தனி­நபர் வரு­மானம் 769 டொல­ரா­லேயே அதி­க­ரித்­துள்­ளது. சரா­சரி வருடம் ஒன்­றுக்கு 29 டொலர் வீதமே உயர்வு கண்­டுள்­ள­தாக பொரு­ளா­தார ஆய்­வாளர் வின்சன் மர்வின் பெர்­னாந்து தெரி­வித்­துள்ளார்.

2005 இல் 1242 டொல­ரா­க­வி­ருந்த தனி­நபர் வரு­மானம் 2014 இல் 3821 டொல­ராக மேலும் அதி­க­ரித்­தது. பத­விக்கு வரும் ஒவ்­வொரு அர­சாங்­கமும் தாம் முன்­னெ­டுக்கும் பொரு­ளா­தாரக் கொள்­கையால் குறு­கிய காலத்­திற்குள் நாட்டை பொரு­ளா­தார ரீதியில் உயர்­நி­லைக்கு மாற்­றி­ய­மைப்போம் என்று வீராப்­புப்­பே­சுவர். ஆனால் இந்த இனிப்­புக்குப் பின்னால் கசப்பு ஒன்றே மறைந்­தி­ருக்­கி­றது.

இலங்­கையின் பொரு­ளா­தார வளர்ச்சி வீதம் தங்கு தடை­யின்றி வரு­டாந்தம் 8 வீதத்தால் வளர்ச்­சி­கண்டு வந்தால் செல்­வந்த நாடு­க­ளி­லுள்ள தனி­நபர் ஆதா­ய­மான 12235 அமெ­ரிக்க டொலர் அளவைத் தொடுவ­தற்கு சுமார் 15 வரு­டங்கள் தாண்டும். உள்­நாட்டு யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் நாட்டில் 5.6 வீதம் பொரு­ளா­தார வளர்ச்சி நில­வி­யது. இவ்­வ­ளர்ச்சி வீதம் தொடர்ந்தும் நீடித்து வந்தால் எமது இலங்கை செல்­வந்த நாடாக மிளிர்­வ­தற்கு குறைந்த பட்சம் 20 வரு­டங்­க­ளா­வது எடுக்கும். இதே 5.6 வீதம் வளர்ச்சி வேகத்தில் எமது நாடு செல்­லு­மே­யானால் தென்­கொ­ரியா இன்­றுள்ள இடத்தை எமது நாடு பிடிப்­ப­தற்கு சுமார் 37 வரு­டங்­க­ளா­வது எடுக்கும். அதே வேகத்தில் இன்று ஜப்பான் இருக்கும் இடத்தை எட்­டிப்­பி­டிப்­ப­தற்கு 42 வரு­டங்­களும் சிங்­கப்பூர் இருக்கும் இடத்தை அடை­வ­தற்கு 49 ஆண்­டு­களும் எடுக்கும் என்­பது உறுதி.

2019 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதத்தில் உள்­நாட்டு உற்­பத்­தியின் வளர்ச்சி வீதம் 2.9 வீத­மாக இருந்­தது. ஆனால் 2000 ஆம் ஆண்டில் தேசிய உற்­பத்தி 33 வீத­மாகத் திகழ்ந்­தது. ஏற்­று­ம­தியில் முன்­னணி வகித்த எமது நாடு 2018 ஆகும்­போது அது 13 வீதம் வரை பின்­ன­டைவு கண்­டுள்­ளது. எமது நாடு வறுமைக் கோட்­டி­லி­ருந்து மத்­திய மேல் மட்­டத்­திற்கு வந்த போதிலும் செல்­வந்­த­நா­டு­களின் வகுப்­புக்குள் நுழை­வ­தென்­பது மிகவும் இல­கு­வான காரி­ய­மல்ல.
1960களில் மத்­திய வரு­மா­ன­முள்ள 101 நாடுகள் இருந்­துள்­ளன. இதற்கு நான்கு தசாப்­தங்­க­ளுக்குப் பின்­ன­ரான 2000 த்தில் மேற்­படி 101 நாடு­களில் 13 நாடு­களே செல்­வந்த நாடு­க­ளாக பரி­மாணம் பெற்­றுள்­ளன.

சுதந்­தி­ரத்­திற்குப் பின்னர் நாட்டை ஆட்சி செய்­த­வர்­களால் முன்­னெ­டுக்­கப்­பட்ட பொரு­ளா­தாரக் கொள்­கைகள் யாவும் மிகவும் பல­வீ­ன­மா­ன­தா­கவே அமைந்­தன. இதனால் இன்று வரையும் இலங்கை அர­சாங்கம் உழைக்கும் வரு­மா­னத்தை விட செல­வுத்­தொகை இரு மடங்­கு­க­ளாக மிகைத்து விடு­கின்­றன. ஒவ்வோர் ஆண்டும் செலவுத் தொகையின் பாதியை உள்­நாட்டு வெளி­நாட்டு கடன்கள் பெறு­வதன் மூலமே ஈடு செய்து வரு­கின்­றது. அரசு பெறும் வரு­மா­னத்தில் சுமார் 90 வீதம் தவணை அடிப்­ப­டையில் செலுத்­து­வ­தற்­காகப் பெற்ற கடன்­களை அடைப்­ப­திலும் மற்றும் கடன்­க­ளுக்­கான வட்­டியைச் செலுத்­து­வ­தற்கு மாகவே செல­வி­டப்­ப­டு­கின்­றன.

அரச துறை­களில் உண்­மை­யிலே அமர்த்­தப்­ப­ட­வேண்­டிய ஊழி­யர்­களின் எண்­ணிக்கை 750,000 பேர்­க­ளாகும். ஆனாலும் இலங்­கையில் தற்­போது சுமார் 15 இலட்சம் அரச சேவை­யா­ளர்கள் உள்­ளனர். நாடு­க­ளி­லுள்ள சனத்­தொகை விகி­தா­சார அடிப்­ப­டையில் ஒப்பு நோக்­கு­கையில் அதிக அரச உத்­தி­யோ­கத்­தர்கள் உள்ள நாடு­களில் இலங்­கையே முத­லி­டத்­தி­லுள்­ளது. 37.6 மில்­லியன் சனத்­தொ­கை­யுள்ள கன­டாவில் 262696 அரச பணி­யா­ளர்­களே சேவையில் அமர்த்­தப்­பட்­டுள்­ளனர். 2019 ஆம் ஆண்டில் மக்கள் சேவைக்­காக 768 பில்­லியன் ரூபா செல­வா­கு­மென அரசு மதிப்­பீடு செய்­துள்­ளது.

2018 ஆம் ஆண்டு பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­ப­னத்தில் 103 பில்­லியன் ரூபா நஷ்டம் ஏற்­பட்­டுள்­ளது. இதே­நேரம் 1974 ஆம் ஆண்டு ஸ்தாபிக்­கப்­பட்ட மலே­ஷியா நாட்டு எண்ணெய்க் கூட்­டுத்­தா­ப­ன­மான ‘பெற்­றோனாஸ்’ நிறு­வனம் 2019 ஆம் ஆண்டு 90 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தியைத் தன்­ன­கத்தே கொண்டு, மலே­ஷி­யாவின் மிகவும் பலம் வாய்ந்த நிறு­வ­ன­மாக வளர்ச்சி கண்­டுள்­ளது. 2019 ஆம் ஆண்டில் உல­கி­லுள்ள மிகவும் பாரிய நிறு­வ­னங்­களில் 158 ஆவது இடத்தில் மேற்­படி நிறு­வனம் விளங்­கு­வ­தாக ‘போசூன்’ எனும் உலகப் பிர­சித்தி பெற்ற சஞ்­சிகை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இலங்­கையில் சுமார் 530 அரச நிறு­வ­னங்கள் உள்­ளன. அபி­வி­ருத்தியடைந்த நாடொன்­றாக விளங்கும் சுவீ­டனில் சுமார் 48 அரச தொழி­ல­கங்­களே காணப்­ப­டு­கின்­றன. அவற்றில் பணி­யாற்றும் ஊழி­யர்­களின் எண்­ணிக்கை 137000 பேர்­க­ளாகும்.

தேசிய பொரு­ளா­தா­ரத்தின் இயந்­திரம் தனியார் துறை­யாகும் என்று சீனா செயற்­ப­டுத்திக் காட்­டி­யுள்­ளது. சீனா தேசிய உற்­பத்­தியில் 60 வீதத்தை தனியார் துறை­க­ளி­டமே கைய­ளித்­துள்­ளது. புதிய கண்­டு­பி­டிப்­புக்கள் உள்­ளிட்ட 70 வீத­மா­னவை அவற்றுள் அடங்­கு­கின்­றன. மற்றும் சீனாவில் புதி­தாக தொழில் வழங்­கு­வதில் 90 வீதத்தை தனியார் துறை­யி­டமே வழங்­கி­யுள்­ளது.

முத­லீ­டுகள் செய்­வ­திலும் 70 வீதம் தனியார் துறை­க­ளி­டமே ஒப்­ப­டைத்­துள்­ளது.
2016 ஆம் ஆண்டு எமது நாட்டில் அரச நிறு­வ­னங்­களால் 42 பில்­லியன் ரூபா நஷ்டம் விளை­விக்­கப்­பட்­டுள்­ளன. 2017 ஆம் ஆண்டில் அத்­தொகை 87 பில்­லியன் ரூபா­வாக உயர்ந்­துள்­ளது. இவற்­றுக்கு மாற்றுத் திட்­டங்கள் ஏதும் கையா­ளாது ஒரு அடி­கூட எமது நாட்டால் முன்நகர முடியா தென்பதைச் சொல்ல வேண்டியதில்லை. மத்திய உயர்மட்ட தர தனிநபர் வருமானமுள்ள நாடு என்று இலங்கை இருந்தபோதிலும் இலங்கையின் சனத்தொகையில் 40 வீதம் பேர் சமுர்த்தி நிவாரணம் பெறுவோராவர். அரசு கைமாறும் போது மாற்றங்காணாத நிலையான பொருளாதாரக் கொள்கையொன்று கொண்டுவரப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், இலங்கைக்கு சர்வதேச சந்தையை வெற்றிகொள்ள முடியாது போகும். அத்துடன் வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கவர்ந்து கொள்ளவும் இயலாமல் போய்விடும். நாட்டு மக்களுக்கு தொழில் வழங்குவதை நிறுத்திவிட்டு அவர்களுக்கு கைத்தொழில், சுயதொழில்களில் ஈடுபடுவதற்கான வழிவகைகள் செய்து கொடுக்க வேண்டும். அதன் மூலம் புதிய உற்பத்திகள் பிறக்க வழிகோலும். 71 வருடங்களாக நடைமுறைப்படுத்தி வந்த தவறான பாதையை சீர் செய்து கொள்வோமானால் இலங்கையை பொருளாதார வளர்ச்சி கண்டதொரு நாடாக மாற்றியமைக்கலாம்.-Vidivelli

நன்றி–ராவய

  • சிங்­க­ளத்தில்: பிர­பாஸ்­வர
    தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்

Leave A Reply

Your email address will not be published.