ரூ. 500 மில்லியன் நஷ்டஈடு கோரி அலி சப்ரிக்கு எதிராக வழக்கு

ஹரின் பெர்னாண்டோ

0 603

 

ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி­சப்­ரிக்கு எதி­ராக 500 மில்­லியன் ரூபா நஷ்­ட­ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்­ய­வுள்­ள­தாக விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் ஹரின் பெர்­னாண்டோ தெரி­வித்தார். ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அலி சப்ரி, ஹரின் பெர்­னாண்­டோவும் அவ­ரது தந்­தையும் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான தக­வல்­களை மறைத்து பொது­மக்கள் 300  பேர் உயி­ரி­ழக்க கார­ண­மா­கினர் என குற்றம் சுமத்­தி­யி­ருந்த நிலையில், இதற்கு எதி­ரா­கவே அவர் இவ்­வாறு வழக்கு தாக்கல் செய்­ய­வுள்­ள­தாகத் தெரி­வித்தார்.

கொழும்பில் நேற்று திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இதனை தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது :

கோத்­தா­பய ராஜபக் ஷவின் அமெ­ரிக்க குடி­யு­ரிமை தொடர்பில் கல­வ­ர­ம­டைய வேண்­டிய தேவையோ அல்­லது அதைப்­பற்றி தேர்தல் பிர­சார மேடை­களில் பேச வேண்­டிய தேவையோ சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு கிடை­யாது. காரணம் தேர்­தலில் கோத்­தா­பய ராஜபக் ஷவே எம்மால் இல­கு­வாக தோல்­வி­ய­டையச் செய்யக் கூடி­ய­வ­ராவார்.

இவ்­வாறு சகோ­த­ரரின் பின்னால் செல்லும் கோத்­தா­பய நிச்­சயம் தேர்­தலில் போட்­டி­யிட வேண்டும் என்­பதே எமது எதிர்­பார்ப்­பாகும். எனினும், அவ­ரது அமெ­ரிக்க குடி­யு­ரிமை தொடர்பில் மீண்டும் ஒரு பிரச்­சினை ஏற்­பட்­ட­மை­யி­னா­லேயே நான் எனது டுவிட்டர் பதிவில் அது குறித்து பதி­வொன்றை இட்­டி­ருந்தேன். எனினும் அது இப்­போது பூதா­க­ர­மான பிரச்­சி­னை­யா­கி­யுள்­ளது.

அமெ­ரிக்க குடி­யு­ரி­மையை நீக்கிக் கொண்­ட­வர்கள் பட்­டி­யலில் கோத்­தா­பய ராஜபக் ஷவின் பெயர் ஏன் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை என்­பதே தற்­போது காணப்­படும் பாரிய பிரச்­சி­னை­யாகும். அமெ­ரிக்க தூத­ரகம் ஏன் இது­பற்றி எந்தக் கருத்­தையும் கூறா­ம­லி­ருக்­கி­றது? கோத்­தா­பய ராஜபக் ஷ அமெ­ரிக்கப் பிர­தி­நி­தியா? அல்­லது அமெ­ரிக்­காவின் துப்­ப­றி­வா­ளரா? சோபா ஒப்­பந்­தத்தை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு அமெ­ரிக்கா கோத்­தா­ப­யவை பயன்­ப­டுத்திக் கொள்ள முயற்­சிக்­கி­றதா?

மேலும், ஞாயிற்­றுக்­கி­ழமை ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி­சப்ரி பங்­கு­பற்­றி­யி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் நானும் என்­னு­டைய தந்­தையும் 300 பொது மக்­களை கொன்­ற­தாகக் கூறினார். இந்தக் கூற்றை கண்­டிப்­ப­தோடு, அவ­ருக்கு எதி­ராக 500 மில்­லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி வழக்கு தொட­ர­வுள்ளேன். என்­மீதும் தந்தை மீதும் இவ்­வாறு அநா­வ­சி­ய­மான போலி குற்­றச்­சாட்டுக்கள் முன்­வைத்­தமை ஏற்றுக் கொள்ள முடி­யா­த­தாகும். காரணம், கோத்­தா­பய ராஜபக் ஷவை களத்­திற்கு கொண்டுவருவதற்காகவே பொதுஜன பெரமுனவினரால் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. சஹ்ரான் போன்ற பயங்கரவாதிகளுக்கும் இவர்களே ஊக்கம் கொடுத்தனர். தற்போது அந்த பழியை எம்மீது சுமத்த முயல்கின்றனர். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.