இன நல்லுறவை வளர்க்க மாணவர்களுக்கு விழுமியக்கல்வி அவசியம்

சிரேஷ்ட விரிவுரையாளர் அன்சார் பழீல் மெளலானா

0 1,545

இலங்­கையில் இன­ரீ­தி­யான பாட­சா­லைகள் உரு­வாக்­கப்­பட்­டதன் பின்பு இன­ரீ­தி­யான வேறு­பா­டுகள் அதி­க­ரிக்க வாய்ப்­பா­கி­யுள்­ளன. ஐரோப்­பிய நாடு­க­ளி­லுள்ள விழு­மியக் கல்வி (Ethics education) முறை எமது நாட்­டிலும் செயற்­ப­டுத்­தப்­பட வேண்டும். அதா­வது, அனைத்­தின மாண­வர்­களுக்கும் அனைத்து மதங்­க­ளி­லு­முள்ள நல்ல விட­யங்­களை கற்­றுக்­கொ­டுக்க வேண்டும்” என்­கிறார் அட்­டா­ளைச்­சேனை ஆசி­ரியர் கலா­சாலை சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ளரும், கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவையின் ஊடக இணைப்­பா­ள­ரு­மான மரு­த­மு­னையைச் சேர்ந்த அன்சார் பழீல் மௌலானா. அவர் ‘த கட்­டு­மரன்’ இணை­ய­த­ளத்­துக்கு வழங்­கிய நேர்­கா­ணலை இங்கு தரு­கிறோம்.

நேர்­காணல்:- இஸட். ஏ. றஹ்மான்

தொழில் ரீதி­யாக விரி­வு­ரை­யா­ள­ராக இருக்கும் நீங்கள் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபையின் பிர­சார உறுப்­பி­ன­ரா­கவும் உள்­ளீர்கள். மதம் சார்ந்து பொதுத் தளத்தில் எவ்­வாறு இயங்­கு­கி­றீர்கள்?

எனது சமூக சேவையின் ஓர் அங்­க­மா­கத்தான் நான் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபையின் பிர­சார உறுப்­பி­ன­ராக இருக்­கிறேன். அத­னூ­டாகப் பல இன நல்­லு­றவு செயற்­பா­டு­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்றேன். குறிப்­பாக மார்க்க போத­கர்­க­ளுக்கு (மௌல­விமார்) மக்­க­ளி­டையே பிர­சா­ரங்கள் செய்யும் நுட்­பத்­தையும் தெளி­வையும் அறி­வூட்­டு­வ­துடன் இன நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­துதல், மார்க்கம் கூறி­யதை சரி­யாக விளங்கித் தெளி­வாகக் கூறும்­ப­டியும் பயிற்­று­விக்­கிறேன். அத்­துடன் இன­வாத, மத­வாத சிந்­த­னை­களை இல்­லாமல் செய்யும் நோக்­குடன் மக்­க­ளி­டை­யேயும் மௌல­வி­மார்­க­ளி­டை­யேயும் அறி­வூட்டல் கருத்­த­ரங்­கு­க­ளையும் இத­னூ­டாக செய்து வரு­கின்றேன். இவை­மட்­டு­மல்­லாமல் ஆசி­ரி­யர்­க­ளுக்­காக கல்­வி­யியல் கல்­லூரி, ஆசி­ரியர் கலா­சா­லை­யிலும் இன நல்­லு­றவு, சக­வாழ்வு எனும் எண்ணக் கருவை ஊக்­கப்­ப­டுத்தி வரு­கிறேன். அவர்கள் மூலம் ஒரு நல்­லி­ணக்க மாணவ சமூ­கத்தை உரு­வாக்­கு­வதே எனது எண்ணம்.

இன நல்­லு­றவு, சக­வாழ்வு என்­பது பற்­றிய இஸ்­லா­மிய கண்­ணோட்டம் என்ன?

முஸ்லிம் என்­பவன் சாந்தி, சமா­தானம், இன நல்­லு­றவைப் பேணுபவனாக காணப்­பட வேண்டும். மாறாக குழப்­ப­வா­தி­யாக, இன­வா­தி­யாக, தீவி­ர­வா­தி­யாக இருக்­கக்­கூ­டாது என்­பதே இஸ்­லாத்தின் கோட்­பா­டாகும். ஆனால் சிலர் இதனை புரிந்து கொள்­வ­தில்லை.

இஸ்­லாத்தின் போதகர் முஹம்­மது (ஸல்) கூறும் போது, “மனி­தர்­க­ளுக்குப் பிர­யோ­ச­ன­மா­ன­வரே உங்­களில் சிறந்­தவர்” என்றார்கள். இங்கு மனிதன் எனும் பொதுப்­பெயர் பாவிக்­கப்­பட்­டுள்­ளது. எனவே இனம், மதம் பார்க்­காமல் அனைத்து மக்­க­ளுக்கும் ஒரு மனிதன் உதவ வேண்டும். அதுதான் இஸ்­லா­மியக் கண்­ணோட்டம்.

மாண­வர்­க­ளி­டையே இன ரீதி­யான நல்­லு­ற­வுகள் குறை­வா­க­வுள்­ளன என்ற குற்­றச்­சாட்டு உண்டு. இதனை எவ்­வாறு களை­யலாம்?

சுதந்­தி­ரத்­துக்­குபின் பாட­சா­லைகள் இன ரீதி­யாக உரு­வாக்­கப்­பட்­ட­தனால் ஒரே இனத்தை சேர்ந்த அல்­லது ஒரே மதத்தை சேர்ந்த மாண­வர்­கள்தான் ஒரு பாட­சா­லையில் கல்வி கற்­கத்­தொ­டங்­கினர். இதனால் ஓர் இனத்தின் மத, கலா­சார அறி­வுகள் மற்­றைய இன மாண­வர்­க­ளுக்குத் தெரி­வ­தில்லை. இது இன­ரீ­தி­யான உற­வு­களைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்குத் தடை­யாகவே உள்­ளது. பாட­சா­லை­யில்தான் அப்­ப­டி­யென்றால், பல்­லின மாண­வர்கள் பயிலும் பல்­க­லைக்­க­ழ­கங்கள், கல்­லூ­ரி­க­ளுக்கு வந்த மாண­வர்­களும் தனித்­தனிக் குழு­வா­கவே இயங்­கு­கின்­றனர். அவர்­களின் பாட­சாலைப் பழக்­கத்­துக்கு அமைய ஒரே இனத்தை அல்­லது ஒரே மதத்தை சேர்ந்­த­வர்­க­ளு­டனே அதிகம் கூட்டுச் சேர்­கின்­றனர். இதனால் இன உறவை மேலோங்கச் செய்­வது தொடர்ந்தும் கஷ்­ட­மா­க­வே­யுள்­ளது. எனவே பல்­லின மக்கள் வாழும் நாடு­களில் பாட­சாலை, கல்­லூ­ரிகள், பல்­க­லைக்­க­ழ­கங்­களில் விழு­மியக் கல்வி உரு­வாக்­கப்­பட வேண்டும். இதனால் அனைத்­தின மாண­வர்­களும் ஒருவர் மீது ஒருவர் நம்­பிக்­கை­யையும் மரி­யா­தை­யையும் கட்­டி­யெ­ழுப்­புவர். இதனால் இன நல்­லி­ணக்கம் ஏற்­படும். மற்­ற­வர்­களின் மத­ரீ­தி­யான பொய்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டாது. அதனால் இன­வி­ரிசல் ஏற்­ப­ட­மாட்­டாது

‘விழு­மி­யக்­கல்வி’ என்று நீங்கள் கூறு­வதன் விளக்கம் என்ன?

மதக் கல்­விக்கு ஈடாக கொண்­டு­வ­ரப்­பட்ட கல்வி முறையே விழு­மியக் கல்­வி­யாகும். அதா­வது, அனைத்து மதங்­க­ளி­லு­முள்ள நல்ல பொதுப்­ப­டை­யான விட­யங்­களை தொகுத்து இக் கல்­வித்­திட்டம் ஆக்­கப்­பட்­டுள்­ளது. உதா­ர­ண­மாக அன்பு செலுத்­துதல், நீதி­யாக நடத்தல், நேர்மை போன்ற அறம் பொருந்­திய விட­யங்கள் குறித்து அனைத்து மதங்­க­ளிலும் கூறப்­பட்­ட­வை­களை உள்­ள­டக்­கிய கல்­வித்­திட்­ட­மாகும். இதை அனைத்து மதத்­த­வர்­களும் விரும்­புவர்.

ஐரோப்­பிய நாடு­க­ளான பிரித்­தா­னியா, அவுஸ்­தி­ரே­லியா, ஜெர்­மனி போன்ற நாடு­களில் இந்தக் கல்­வித்­திட்டம் பாட­சாலை மட்­டத்­தி­லி­ருந்து உயர் கல்வி நிறு­வ­னங்­க­ளிலும் கற்­பிக்­கப்­ப­டு­வ­துடன், விசே­ட­மாக பல்­க­லைக்­க­ழ­கங்­களில் இதற்­கென பீடங்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அதனை மனிதப் பெறு­மான கல்­விக்­கான பீடம் என அழைக்­கின்­றனர். அதேபோல் ஆசிய நாடு­க­ளான இந்­தியா, பாகிஸ்தான், பங்­க­ளா­தேஷ், மாலை­தீவு போன்ற நாடு­க­ளிலும் விழு­மி­யக்­கல்வி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. விசே­ட­மாக சார்க் நாடு­களின் சார்க் பிர­க­ட­னத்­திலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஐரோப்­பிய நாடு­களின் விழு­மியக் கல்­வித்­திட்­டத்தில் சம­யங்­களில் கூறப்­பட்ட விட­யங்­களைக் குறிப்­பிட்டு அவை எந்த மத­நூலில் கூறி­ய­தென சுட்­டிக்­காட்­டப்­ப­டு­வ­தில்லை. ஆனாலும் ஆசிய நாடு­க­ளான பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ், மாலை­தீவு போன்­ற­வற்றில் அவை எந்த மத­நூலில் (அல்­குர்ஆன், பைபிள், பக­வத்­கீதை, மகா­வம்சம்) குறிப்­பி­டப்­பட்­டது என்­பது சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கி­றது.

இலங்­கையில் அறி­மு­கப்­ப­டுத்­த­வேண்டும் என்­கி­றீர்கள். இதற்­கான சாத்­தி­யப்­பா­டுகள் எந்­த­ளவில் உள்­ளன?

இலங்­கையில் கல்­வி­மாணி, கல்வி முது­மாணி பாட­நெ­றி­களுள் இது சேர்க்­கப்­பட்­டுள்­ளது. எமது பாட­சா­லை­களில் விசேட செயற்­றிட்­டத்தின் மூலம் இதனை மேற்­கொள்ள முடியும். இதற்­காக முதலில் ஆசி­ரி­யர்­க­ளுக்கு விழு­மி­யக்­கல்வி பற்­றிய அறிவை வழங்­க­வேண்டும். பல்­க­லைக்­க­ழ­கங்­களில் தற்­போது ஒப்­ப­டைகள், ஆய்­வுக்­கட்­டு­ரைகள் விழு­மி­யக்­கல்வி சம்­பந்­த­மாக மேற்­கொள்­ளப்­பட்­டாலும் அதனை மேலும் ஊக்­கப்­ப­டுத்த வேண்டும். விழு­மி­யக்­கல்­வியை பாட­சா­லை­களின் பாடத்­திட்­டத்தில் உள்­ள­டக்­கு­வ­தற்கு மதக் கல்­வி­யி­ய­லா­ளர்கள், மதத் தலை­வர்கள் இணைந்து பங்­க­ளிப்பு செய்­யலாம்.

இனங்­க­ளி­டையே ஓர் இக்­கட்­டான சூழல் உரு­வா­கும்­போது அதை கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்க முடி­யாமல் போவ­தற்கு என்ன காரணம் என எண்­ணு­கி­றீர்கள்?

அநே­க­மாக சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி அதி­கா­ரத்தில் இருக்கும் இன­வா­திகள் போலிச் செய்­தி­களை உரு­வாக்­கு­கி­றார்கள். வெறுப்­பூட்டும் பேச்­சுக்­களை வெளிப்­ப­டுத்­து­கி­றார்கள். இவற்றை ஊட­கங்கள் உட­ன­டி­யாக பர­வ­லாக்கம் செய்­து­வி­டு­கின்றன. இதனால் ஓர் இன மக்கள் மற்ற இன மக்­களில் நம்­பிக்கை இழக்­கின்­றனர். இது சாதா­ரண மக்­க­ளி­டையே சந்­தே­கத்­தையும் வெறுப்­பையும் உரு­வாக்­கு­கி­றது. இந்­நி­லையில் ஒரு­வ­ருடன் ஒருவர் மனம் விட்டுப் பேச­மு­டி­யாத நிலை ஏற்­ப­டு­கி­றது. இத­னைத்தான் நாம் ஏப்ரல் 21 ஆம் திக­திய தாக்­கு­தலின் பின் அவ­தா­னிக்க முடிந்­தது.

கவ­லைக்­கு­ரிய விடயம் என்­ன­வென்றால், ஓர் இனத்­துக்­காக வேறு இனங்­க­ளி­லி­ருந்து உண்­மையை கதைக்கும் நபர்­கள்­கூட இக்­கால கட்­டத்தில் அமை­தி­காத்­தனர். காரணம், அவர்­க­ளில்­கூட இந்த ஊட­கங்­களின் பொய் செய்­திகள் தாக்கம் செலுத்­தி­யுள்­ளன. இலங்­கையில் பரப்­பப்­படும் பொய்ச் செய்­திகள், வெறுப்புப் பேச்­சுக்கள் உலகின் கவ­னத்­தையே ஈர்த்­துள்­ளன. இத­னால்தான் அண்­மையில் இலங்­கைக்கு விஜயம் செய்த மத சுதந்­தி­ரத்­திற்­கான ஐக்­கிய நாடுகள் சபையின் விசேட அறிக்­கை­யாளர் அஹமட் சஹீட், இலங்கை அர­சுக்கு தேசிய நல்­லி­ண­க்கத்­துக்­கான பல முன்­மொ­ழி­வு­களை முன்­வைத்­த­துடன், வெறுப்புப் பேச்­சுக்­களை அரசு கட்­டுப்­ப­டுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துச் சென்றிருக்கிறார்.

ஊடகங்கள்மீது மிகப்பெரிய குற்றச்சாட்டை வைத்திருக்கிறீர்கள். ஆனால் இதில் மக்கள்தானே செயற்பாட்டாளர்கள்.?

ஆம். ஆனால், ஒன்றில் மக்கள் கல்விமூலம் ஓரினத்தவர் மற்ற இனத்தவரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அல்லது மனிதாபிமான ரீதியில், ஓர் இனத்தின் உரிமைகள் மறுக்கப்படும் போது மற்ற இனத்தவர்கள் அவர்களுக்கு சார்பாக குரல் கொடுக்கும் நிலை இருக்கவேண்டும். அவ்வாறு இருக்கின்றபோது, மக்களிடையே பொய்ச் செய்திகள், வெறுப்புப்பேச்சுக்கள் எடுபடாது. அது மட்டுமின்றி இதனால் மக்களைத் தவறாக வழிநடத்தும் அரசியல்வாதிகள், இனவாதிகள், ஊடகங்கள் எல்லாம் ஓரம்கட்டப்படும். மக்கள் தங்கள் அதிகாரத்தை அரசியல்வாதிகள் கையில் கொடுக்கும்போது சரியான தேர்வுகளைச் செய்யவேண்டும். நாம் யாருக்கு, எதற்கு வாக்களிக்கப்போகிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். இங்கே மக்களிடையே செல்வாக்கு செலுத்துவதில் ஊடகங்கள் மட்டுமல்ல மதபோதகர்களும் முக்கியமானவர்கள்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.