இஸ்லாமிய கல்வியை கண்காணிக்க புதிய சபை

0 620

நாட்டில் இயங்­கி­வரும் அரபுக் கல்­லூ­ரிகள் மற்றும் குர்ஆன் மத்­ர­ஸாக்­களில் போதிக்­கப்­பட்டு வரும் இஸ்­லா­மிய கல்­வியை கண்­கா­ணிப்­ப­தற்­காக சபை­யொன்­றினை நிய­மிப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

இஸ்­லா­மிய கல்வி, கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்­பட வேண்­டு­மெ­னவும் இதனைக் கண்­கா­ணிப்­ப­தற்­காக சபை­யொன்று அமைக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் அச்­ச­பையில் உல­மாக்கள், கல்­வி­யி­ய­லா­ளர்கள் மற்றும் இஸ்­லா­மிய புத்­தி­ஜீ­விகள் அடங்­கி­யி­ருக்க வேண்­டு­மெ­னவும் மற்றும் பல விட­யங்­க­ளையும் உள்­ள­டக்கி முஸ்லிம் விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் சட்ட வரை­பொன்­றினை அமைச்­ச­ர­வைக்குச் சமர்ப்­பித்­தி­ருந்தார்.

இந்த சட்ட வரை­புக்குள் உள்­ள­டங்க வேண்­டிய சில விட­யங்­களை ஜனா­தி­ப­தியும் சில அமைச்­சர்­களும் முன்­வைத்­தி­ருந்­தனர். இந்­நி­லையில் கடந்த திங்­கட்­கி­ழமை கூடிய அமைச்­ச­ர­வையில் இஸ்­லா­மிய கல்­வியை கண்­கா­ணிப்­ப­தற்கு சபை­யொன்­றினை நிய­மிப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அமைச்­ச­ர­வையும் இதற்கு அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.

குறிப்­பிட்ட கண்­கா­ணிப்பு சபையில் கல்வி அமைச்சின் செய­லாளர், உயர்­கல்வி அமைச்சின் செய­லாளர் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் செய­லாளர் ஆகிய மூவ­ருடன் இஸ்­லா­மிய கல்­வி­யுடன் தொடர்­பு­பட்ட அதி­கா­ரி­களும் நிய­மிக்­கப்­பட வேண்­டு­மென தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

அரபுக் கல்­லூ­ரிகள், அரபு மத்­ர­ஸாக்­க­ளுக்­கான தனி­யான சட்ட மூலம் ஒன்­றினைத் தயா­ரித்துக் கொள்­வ­தற்­கான சட்ட வரை­பொன்­றினை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் கடந்த மே மாதம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கைய­ளித்­தி­ருந்தார். குறிப்­பிட்ட சட்ட வரைபு சட்­டமா அதிபர் மற்றும் அதி­கா­ரி­களின் மீளாய்வினைப் பெற்றுக் கொண்ட பின்பு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் 1669 குர்ஆன் மத்ரஸாக்களும் 317 அரபுக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.