ஆளுநர்கள், அமைச்சர்களின் பதவி விலகல்கள் பிக்குமாரும் சட்டமும்

0 948
  • கலாநிதி அமீர் அலி

இரு முஸ்லிம் ஆளு­நர்­களும் சகல முஸ்லிம் அமைச்­சர்­களும் பிரதி அமைச்­சர்­களும் கூண்­டோடு பத­வி­வி­ல­கி­யமை இலங்கை ஜன­நா­ய­கத்­தி­னதும் முஸ்லிம் அர­சி­ய­லி­னதும் வர­லாற்றில் முன்­னொ­ரு­போ­து­மில்­லாத வகை­யி­லான ஓர் அர­சியல் நட­வ­டிக்­கை­யாகும். சில செய்­திகள் கூறு­வ­தைப்­போன்று, அவர்கள் இன்­னமும் தங்­க­ளது  சிறப்­பு­ரி­மை­க­ளையும் தனிச்­ச­லு­கை­க­ளையும் கைவி­ட­வில்­லை­யானால், பத­வி­வி­லகல்  நேர்­மை­யான ஒரு நட­வ­டிக்கை என்­பதை நிரூ­பிப்­ப­தற்­காக அவற்றை உட­ன­டி­யாக துறந்­து­வி­ட­வேண்டும். இரு முஸ்லிம் மாகாண ஆளு­நர்­களும் ஒரு அமைச்­சரும் பத­வி­நீக்­கப்­பட வேண்­டு­மென்ற கோரிக்­கையை முன்வைத்து ஒரு பிக்கு தொடங்­கிய  சாகும்­வரை உண்­ணா­வி­ரதப் போராட்­டமும் இன்­னொரு பிக்கு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுத்த குரோதப் பிர­சா­ரமும் நாட­ளா­விய ரீதியில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராகக் கல­வ­ரங்­களைத் தூண்­டி­வி­டக்­கூ­டிய சாத்­தி­யத்தை  தடுப்­ப­தற்கே இந்தப் பத­வி ­வி­ல­கல்கள் என்­பது மாத்­தி­ரமே ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய ஒரே கார­ண­மாகும். இப்­போது இன்­னொரு குழு உயர்­மட்ட பிக்­குமார் பத­விப்­பொ­றுப்­புக்­களை  மீண்டும் ஏற்­றுக்­கொண்டு நாட்­டுக்கு சேவை­செய்­யு­மாறு முஸ்லிம் அமைச்­சர்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­தி­ருக்­கி­றார்கள். பிக்­கு­மா­ருக்கும் அமைச்­சர்­க­ளுக்கும் இடையில் நாட்டின் சட்டம் விடு­மு­றையில் சென்­று­விட்­டது போலத் தோன்­று­கி­றது.

தங்­க­ளது சமூ­கத்தின் பாது­காப்­பிலும் பத்­தி­ரத்­திலும் நல்­வாழ்­விலும் முஸ்லிம் அமைச்­சர்­க­ளுக்கும் ஆளு­நர்­க­ளுக்கும் கருத்­தூன்­றிய அக்­கறை இருந்­தி­ருந்தால், முன்­னைய அர­சாங்­கத்தின் காலத்தில் அளுத்­க­ம­விலும் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் கீழ் திக­ன­விலும் இடம்­பெற்ற கல­வ­ரங்­க­ளை­ய­டுத்து உட­ன­டி­யாகப் பத­வி­வி­ல­கி­யி­ருக்க வேண்டும். இப்­போது பதவி வில­கி­யி­ருக்கும் அமைச்­சர்­களில் ஒருவர் முன்­னைய அர­சாங்­கத்தில் நீதி­ய­மைச்­ச­ராக பத­வி­வ­கித்­தவர். அப்­போது அவரும் சகாக்­களும் ஏன் பத­வி­வி­ல­க­வில்லை என்­பதும் இப்­போது ஏன் பதவி வில­கி­னார்கள் என்­பதும் நம்­ப­க­மான விடை­களை வேண்­டி­நிற்கும் கேள்­வி­க­ளாகும். முன்­னைய அர­சாங்­கத்தில் எந்­த­வொரு முஸ்லிம் அமைச்­ச­ருக்கும் ஆளு­ந­ருக்கும் எதி­ராக சட்­ட­வி­ரோத அல்­லது ஊழல்­த­ன­மான நடத்தை எதிலும் ஈடு­பட்­ட­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­ட­வில்லை. இப்­போது அவர்­களில் மூவர் குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கு­கி­றார்கள்.  இந்த வேறு­பாடு அதி­கா­ரப்­ப­த­வி­களில் உள்ள சகல முஸ்­லிம்­களும் குற்­றச்­சாட்­டுக்­களை எதிர்­நோக்­கு­கின்ற மூவ­ரையும் பாது­காக்க முயற்­சிக்­கின்­றார்கள் என்று குறிப்­பிட்ட சில வட்­டா­ரங்­க­ளினால் தெரி­விக்­கப்­ப­டு­கின்ற கருத்தை சார­மு­டை­ய­தாக்­கு­கி­றது.

எது எவ்­வா­றி­ருந்­தாலும், குற்­றச்­சாட்­டுகள் நிரூ­பிக்­கப்­பட்ட மெய்ம்­மைகள் அல்ல. அந்த குற்­றச்­சாட்­டுகள் நம்­ப­கத்­தன்­மை­யான திண்­ணிய சான்­று­க­ளினால் ஆதா­ரப்­ப­டுத்­தப்­பட வேண்டும்; சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டக்­கூ­டி­ய­தாக  அவை நீதி­மன்­றங்­களில் சமர்ப்­பிக்­கப்­பட வேண்டும். குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­வர்கள் நீதி­வி­சா­ர­ணைக்கு முகங்­கொ­டுக்­க­வேண்டும். மாறாக, யார்  குற்­ற­வாளி, யார் குற்­ற­மற்­றவர் என்று பிக்­குமார் தீர்­மா­னிக்­கப்­போ­கின்­றார்கள் என்றால், எதற்­காக சட்­டங்கள்? எதற்­காக நீதி­மன்­றங்கள்? எதற்­காக நீதி­ப­திகள்?

வெளி­நாட்டுத் தலை­யீட்­டுக்­கான சாத்­தியம் மற்றும் பொரு­ளா­தார சீர்­கு­லைவு குறித்து மகா­நா­யக்க தேரர்கள் உண்­மை­யி­லேயே கவ­லை­கொண்­டி­ருக்­கி­றார்கள் என்றால்,  பொரு­ளா­தா­ரத்தைப் பற்றி எந்­த­வித அக்­க­றையும் இல்­லாமல் வன்­முறைக் குழப்­பங்­களை விளை­விப்­பதில் வரிந்­து­கட்­டிக்­கொண்டு நிற்கும் சில பிக்­கு­மாரின் செயற்­பா­டு­களை ஏன் அவர்கள் பகி­ரங்­க­மாகக் கண்­டிக்­க­வில்லை. தேசத்­தி­னதும் பௌத்­த­ம­தத்­தி­னதும் நலன்­க­ளுக்­காக மகா­சங்­கத்­தி­லி­ருந்து விரும்­பத்­த­காத பிர­கி­ரு­தி­களை மகா­நா­யக்க தேரர்கள் களை­யெ­டுக்­க­வேண்டும். பௌத்த பிக்­கு­மாரில் கீர்த்­தி­மிக்­க­வர்கள் எத்­த­னையோ பேர் இருந்­தி­ருக்­கி­றார்கள். உதா­ர­ணத்­துக்கு சொல்­வ­தானால் வெலி­விற்ற சர­ணங்­கர தேரர், வல்­பொல ராகுல தேரர், மாது­ளு­வாவே சோபித தேரர் போன்­ற­வர்­களை நாம் மறத்­த­லா­காது. அவர்­களைப் போன்ற பல பிக்­குமார் இப்­போதும் இருக்­கி­றார்கள். அவர்கள் வெளியில் வந்து அறி­வற்­ற­வர்­க­ளி­னதும் பழி­பா­வத்­துக்கு அஞ்­சாத பேர்­வ­ழி­க­ளி­னதும்  ஆட்­சியை நோக்கி நாடு செல்­வதைத் தடுக்­க­வேண்டும்.

சட்­டத்­துக்கு மேலாக எவரும் இல்லை. ஜனா­தி­ப­தியும் கூட. பதவி வில­கி­ய­வர்கள் பௌத்த குருமார் வேண்­டுகோள் விடுக்­கி­றார்கள் என்­ப­தற்­காக  தங்கள் பொறுப்­புக்ளை மீண்டும் இப்­போது ஏற்­ப­தானால், குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பான விசா­ர­ணை­களில் தலை­யீடு செய்­வ­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கின்ற நிலையில் பத­வி­களில் தொட­ரு­வ­தற்கு தாங்கள் விரும்­ப­வில்லை என்ற அமைச்­சர்­களில் ஒரு­வரின் முந்­திய வாதம் அதன் நம்­ப­கத்­தன்­மையை இழந்­து­வி­டு­கி­றது. அவர்கள் குற்­ற­வியல் விசா­ரணை பிரி­வி­னரால்  (சி.ஐ.டி.) விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என்று கோரிக்கை விடுத்­த­துடன் ஒரு மாத­கால அவ­கா­சமும் கொடுத்­தி­ருந்­தார்கள். அது உண்­மை­யி­லேயே ஒரு பெறு­ம­தி­யான யோச­னை­யாகும்.

அவர்­களில் எந்­த­வொ­ரு­வ­ருக்கும் அல்­லது பல­ருக்கும்  எதி­ராக நம்­ப­கத்­தன்­மை­யான சான்­று­களை சி.ஐ.டி.கண்­டு­பி­டித்தால் அவர்­களை சட்­டத்தின் முன் நிறுத்­த­வேண்டும்; குற்­ற­வாளி என்று நிரூ­பிக்­கப்­பட்டால் தண்­டனை வழங்­கப்­ப­ட­வேண்டும். மிக அண்­மையில் அதுவும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கீழ் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் பிரி­வினர் கேலிக்­கி­ட­மா­ன­வர்­க­ளாக்­கப்­பட்­டதை கண்டோம். உதா­ர­ணத்­துக்கு கூறு­வ­தானால் பொது­பல சேனாவின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரின் விவ­கா­ரத்தை எடுத்­துக்­கொள்வோம். நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­த­தாக குற்­ற­வா­ளி­யாகக் காணப்­பட்டு அவர் சிறைக்கு அனுப்­பப்­பட்­டி­ருந்தார். முன்னர் கிரா­ம­சே­வ­க­ராக இருந்த ஒரு ஜனா­தி­ப­திக்கு ஞான­சார செய்த குற்­றத்தின் பார­தூ­ரத்­தன்மை பற்றி எதுவும் தெரி­யாமல் போய்­விட்­டதே.

நீதித்­து­றை­யி­ட­மி­ருந்து எந்­த­வி­த­மான ஆலோ­ச­னை­யையும் கேட்­காமல் ஜனா­தி­பதி அவ­ருக்கு மன்­னிப்பு அளித்து சிறை­யி­லி­ருந்து விடு­தலை செய்தார். விடு­த­லை­யான மூன்று நாட்­க­ளுக்­குள்­ளாக  அந்த பிக்கு தனது இன­வெறி நச்சைக் கக்­கு­வ­தற்­காக வீதியில் இறங்­கி­யதைக் கண்டோம். தனது கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­ப­டா­விட்டால் ஆட்­சியைக் கவிழ்க்­கப்­போ­வ­தாக அவர் அச்­சு­றுத்­தினார். அதே­போன்றே, இன­வாத வன்­செ­யல்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் அவ­ச­ர­கா­ல­நி­லையைப் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­ய­துடன் ஊர­டங்குச் சட்­டத்­தையும் பிறப்­பித்­தது. ஆனால், அந்த அவ­ச­ர­கா­ல­நி­லையும் ஊர­டங்குச் சட்­டமும்  ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் வன்­மு­றை­யையும் தூண்­டி­வி­டு­கின்ற காவி­யு­டைக்­கா­ரர்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான அதி­கா­ரத்தைக் கொண்­டி­ருக்­க­வில்லை என்றே தோன்றுகிறது. ஊரடங்கு வேளையில் காடையர்கள் வீதிகளில் சுதந்திரமாகத் திரிந்து வர்த்தக நிலையங்களை சூறையாடியதையும் சொத்துக்களை நிர்மூலம் செய்ததையும் எவ்வாறு விளங்கிக்கொள்வது ? அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டார்கள். ஆனால், எந்த நீதிவிசாரணையுமின்றி அவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள். தற்சமயம் நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைவரம்  எந்தளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறது என்பதை காண்பிப்பதற்கு இவற்றை விடவும் வேறு சம்பவங்கள் தேவையா?

பதவி விலகிய அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் தங்களது அந்த நடவடிக்கையின் விளைவாக அனுகூலமான ஏதாவது நடக்கவேண்டும் என்று விரும்பினால், தங்களது சிறப்புரிமைகளையும் தனிச்சலுகைகளையும் தூக்கியெறிந்துவிட்டு, சட்டம் அதன் வேலையைச் செய்வதற்கு அனுமதித்து பாராளுமன்றத்தில் பின்வரிசையில் அமரவேண்டும். நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அவர்களால் செய்யக்கூடிய நீண்டகால பங்களிப்பாக அதுவே அமையட்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.