ஏப்ரல் 21: இனி நடக்க வேண்டியது குறித்து சிந்திப்போமா?

0 638
  • ஜெம்ஸித் அஸீஸ்

ஏப்ரல் 21 அன்று இடம்­பெற்ற மிலேச்­சத்­த­ன­மான குண்டுத் தாக்­கு­தலை ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கமும் கண்­டித்­தது.

தாக்­கு­தலில் பலி­யான அப்­பாவி பொது­மக்­க­ளுக்­காக கண்ணீர் வடித்­தது. குற்­ற­வா­ளிகள் யாராக இருந்­தாலும் தண்­டிக்­கு­மாறு அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தி­யது. சாய்ந்­த­ம­ருதில் மறைந்­தி­ருந்த தீவி­ர­வா­தி­களை படைத் தரப்­புக்கு காட்டிக் கொடுத்­தது. தற்­கொலைத் தாக்­கு­தல்­தா­ரி­களின் உடலை முஸ்லிம் சமூகம் பொறுப்­பேற்க மறுத்­தது. முஸ்­லிம்­களை நல்­ல­டக்கம் செய்யும் மைய­வா­டியில் தீவி­ர­வா­தி­க­ளுக்கு இட­மில்லை என்­றது.

அவர்­க­ளுக்கு இஸ்­லா­மிய முறைப்­படி இறுதிக் கிரியை நடத்த நாம் தயா­ரில்லை என்­றது.

இன்று வரை அவர்­களை சரி காண ஒரு முஸ்­லி­மேனும் முன்­வ­ர­வில்லை.

அந்த ஈனச் செயலைப் புரிந்­த­வர்கள், துணை நின்­ற­வர்­க­ளை­யெல்லாம் சபித்து வரு­கி­றது முஸ்லிம் சமூகம்.

முஸ்லிம் தன­வந்­தர்­களும் முஸ்லிம் வியா­பார நிலை­யங்­களும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­வி­னூ­டாக முஸ்லிம் மக்­களும் சேத­ம­டைந்த கத்­தோ­லிக்க தேவா­ல­யங்­க­ளுக்கும் காயப்­பட்­ட­வர்­க­ளுக்கும் தம்­மா­லான நிதி உத­வி­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

இத்­த­னைக்குப் பிறகும், முழு முஸ்­லிம்­க­ளுக்கும் பயங்­க­ர­வாதப் பட்டம் கொடுக்க பலரும் முயற்­சிக்­கி­றார்கள். இலங்கை முஸ்­லிம்கள் அனை­வ­ருமே குற்­ற­வா­ளிகள். அவர்­கள்தான் இதற்குப் பொறுப்­பேற்க வேண்டும். இவ்­வாறு ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளையும் குற்­ற­வாளிக் கூண்டில் நிறுத்தி விசா­ரிக்கும் தோர­ணையுன் நடந்து கொள்­கி­றார்கள். சில இன­வாத ஊட­கங்கள் அதற்கு எண்ணெய் வார்க்­கின்­றன.

முஸ்­லிம்­களின் முது­கெ­லும்பை முறித்­துப்­போட இத­னை­விட வேறு சந்­தர்ப்பம் வாய்க்­காது. குட்­டையோ நன்­றாக கலங்­கி­யி­ருக்­கி­றது. மடித்துக் கட்டிக் கொண்டு இறங்கி நிற்­கி­றார்கள் பலர்.

விளை­வாக முஸ்­லிம்­களும் குற்ற உணர்­வோடு கூனிக் குறுகி நிற்­கி­றார்கள். அச்­சத்தில் உறைந்து போயி­ருக்­கி­றார்கள். தம்மை முஸ்­லிம்­க­ளாக இனங்­காட்ட வெட்­கப்­ப­டு­கி­றார்கள் சிலர். இந்த நாட்டில் இனியும் வாழ­லா­காது. நாடு துறந்து வேறெங்­கா­வது சென்று வாழ்­வ­துதான் நல்­லது என்று சிந்­திப்­ப­வர்­களும் இல்­லாமல் இல்லை.

முஸ்லிம் சமூ­கத்­தி­னரே! இந்தத் தாக்­கு­த­லுக்கும் எங்­க­ளுக்கும் எந்த சம்­பந்­த­மு­மில்லை. வெளி­நாட்டுத் தீவி­ர­வா­தி­களின் அஜண்­டா­வுக்கு விலை போன­வர்கள் செய்த வேலை இது. அவர்­க­ளது பெயர்கள் முஸ்லிம் பெயர்­க­ளாக இருப்­ப­தனால் நாங்கள் எப்­படி குற்­ற­வா­ளி­க­ளாக முடியும்?

தேசத் துரோகம், கொலை, கொள்ளை, கற்­ப­ழிப்பு, சிறுவர் துஷ்­பி­ர­யோகம், போதைப்­பொருள் மாபியா, கடத்தல், பாதாள உலக குழு­வி­னரின் அட்­ட­காசம் என்று பஞ்­சமா பாத­கங்கள் தினம் தினம் நடக்­கின்­றன. தனி மனி­தர்­க­ளா­கவும் குழுக்­க­ளா­கவும் அவை அரங்­கே­று­கின்­றன. அவர்­க­ளது குற்­றங்­க­ளுக்கு அவர்கள் சார்ந்த இனமோ மதமோ பொறுப்­பல்ல.

எனவே, அநா­வ­சி­ய­மாக நாம் குற்ற உணர்­வோடு வாழ வேண்­டி­ய­தில்லை. குற்­ற­மி­ழைத்த கய­வர்­களை சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தற்கு ஒத்­து­ழைப்பு நல்­கு­வதே நமது கடமை.

என்­றாலும், இந்தத் தாக்­குதல் மதத்தின் பெயரால் நடந்­தி­ருப்­ப­தனால் சூழ்­நிலை சற்று சூடா­கவே இருக்­கி­றது. அதனைக் காரணம் காட்டி முஸ்­லிம்கள் குறி வைக்­கப்­ப­டலாம். அநா­வ­சிய கெடு­பி­டி­க­ளுக்கு உள்­ளா­கலாம். துன்­பு­றுத்­தல்­களை சந்­திக்க நேரி­டலாம். சின்னச் சின்ன விட­யங்கள் பூதா­க­ரப்­ப­டுத்­தப்­ப­டலாம். முஸ்லிம் என்ற ஒரே கார­ணத்­திற்­காக வஞ்­சிக்­கப்­ப­டலாம். வெறுக்­கப்­ப­டலாம். முன்பு புன்­மு­றுவல் பூத்­த­வர்கள் இப்­போது முறைத்துப் பார்க்­கலாம். நெருக்­க­மாக பழ­கி­ய­வர்கள் தூர விலகிச் செல்­லலாம். எந்தக் கார­ண­மின்­றியும் சோத­னை­யி­டப்­ப­டலாம்.

இந்த சந்­தர்ப்­பங்­களில் நாம் பொறு­மை­காக்க வேண்டும். ஆவே­சப்­ப­டு­வ­தற்கும் ஆத்­தி­ரத்தைக் கொட்­டு­வ­தற்­கு­மான சந்­தர்ப்­ப­மல்ல இது. நிதா­ன­மி­ழக்­காது சம­யோ­சி­த­மாக நடந்து கொள்ளக் கட­மைப்­பட்­டுள்ளோம். முதலில் இந்த சூழலை எதிர்­கொள்ளத் தேவை­யான அறிவை வளர்த்­துக்­கொள்ள வேண்டும். உணர்­வு­களை ஒரு­பக்கம் வைத்­து­விட்டு அறி­வு­பூர்­வ­மாக பேசவும் கலந்­து­ரை­யா­டவும் செயற்­ப­டவும் வேண்டும். முரண்­பாட்­டுக்கு வழி­வ­குக்கும் விட­யங்­களைத் தவிர்க் வேண்டும். விதண்­டா­வாதம் வேண்­டவே வேண்டாம். படைத் தரப்­பி­ன­ருக்கு உதவி செய்­கிறோம் என்ற பெயரில் ஆதா­ர­மற்ற விட­யங்­க­ளையும் எமக்குத் தெரி­யா­த­வற்­றையும் பொய்­க­ளையும் அவர்­க­ளிடம் பகிர்ந்து கொள்­வ­தி­லி­ருந்து தவிர்ந்­து­கொள்ள வேண்டும். இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும் தூண்­டு­கின்ற கருத்­துக்­களை ஒரு­போதும் பகிர்ந்­து­விடக் கூடாது.

இலங்கை எமது தாய் நாடு. நாம் இங்கு இரண்டாம் தரப் பிர­ஜை­யல்ல. ஒவ்­வொரு குடி­ம­க­னுக்கும் உள்ள உரிமை எமக்கும் உண்டு. மத சுதந்­தி­ரத்தை எமது நாட்டின் சட்ட யாப்பு உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. நாம் இங்கு வெளி­நாட்­ட­வர்கள் போல் வாழ வேண்­டி­ய­தில்லை. அந்­நி­யப்­பட்டு பிரிந்து நிற்க வேண்­டி­ய­தில்லை. நாட்டு நலன்தான் எமது நலன். அதில் எவ்­வித சந்­தே­க­மு­மில்லை. நாட்டைப் பாது­காப்­பது எமது கடமை. ஏகா­தி­பத்­திய சக்­தி­க­ளி­ட­மி­ருந்து எமது தாய்­நாட்டைப் பாது­காப்­ப­தற்­காக தமது உயிரைப் பணயம் வைத்து போரா­டி­ய­வர்­களின் வாரி­சுகள் நாம் என்­பதை ஒரு­போதும் நாங்கள் மறந்­து­விடக் கூடாது.

ஒரு முஃமின் சோத­னைகள் வரும்­போது அதனை எவ்­வாறு எதிர்­கொள்­கின்றான் என்­ப­தனை அல்­லாஹுத் தஆலா பார்க்­கின்றான். பரி­சோ­திக்­கின்றான். தற்­போ­துள்ள சூழலை மைய­மாக வைத்து நாம் எதிர்­காலம் குறித்து அச்­ச­ம­டை­யவோ நம்­பிக்­கை­யி­ழக்­கவோ தேவை­யில்லை. மார்க்­கத்தின் அடிப்­படை அம்­சங்கள், பண்­பா­டுகள், நற்­கு­ணங்­களை யாருக்­கா­கவும் எதற்­கா­கவும் விட்டுக் கொடுக்க வேண்­டிய தேவை­யில்லை.

ஆனால், கடந்த காலங்­களில் நாம் மார்க்­கத்தின் பெயரால் விட்ட தவ­று­களைத் திரும்பிப் பார்க்க வேண்டும். அவற்றைத் திருத்திக் கொள்ள வேண்டும். அதி­லி­ருந்து பாடம் கற்­கவும் வேண்டும்.

நபி­ய­வர்­க­ளது காலத்தில் முஸ்­லிம்கள் தோல்­வி­ய­டைந்த சந்­தர்ப்­பங்­களில் இது உங்­க­ளது தவ­று­களால் நடந்த தோல்வி என்­பதை சுட்­டிக்­காட்டி அல்லாஹ் அவர்­க­ளது தவ­று­களை திருத்த சந்­தர்ப்­ப­ம­ளித்தான்.

எனவே, நாம் எங்கு சமூ­க­மாக தவ­றி­ழைத்­தி­ருக்­கின்றோம் என்­பதை சீர்­தூக்கிப் பார்க்க வேண்­டிய சந்­தர்ப்பம் இது. எமது பண்­பா­டுகள், நடத்­தைகள், வெளித் தோற்­றங்கள், முஸ்லிம் சமூ­கத்­தி­ன­ரு­ட­னான உறவு, மாற்றுக் கருத்து தெரி­விப்­போ­ரு­ட­னான தொடர்பு, சகோ­தர மதத்­த­வர்­க­ளு­ட­னான உறவு முத­லா­ன­வற்றில் எமது கடந்த கால அனு­ப­வங்­களை மீட்டிப் பார்த்து படிப்­பினை பெற வேண்­டிய காலம் இது.

இந்த நெருக்­க­டி­யான கால கட்­டத்­திலும் நாம் எமது உள்­வீட்டுச் சண்­டையை சந்­திக்கு கொண்டு வரக்­கூ­டாது. இயக்க, கட்சி பேதங்­களால் ஏற்­பட்ட கசப்­பு­ணர்­வு­களை மறக்க வேண்­டிய தருணம் இது. பழைய வெறுப்­பு­ணர்வும் காழ்ப்­பு­ணர்வும் பழி­வாங்கும் உணர்வும் எம்மை வழி­ந­டத்­த­லா­காது.

பொறு­மை­யையும் சகிப்­புத்­தன்­மை­யையும் ரமழான் கற்றுத் தரும் அரிய பாடங்கள். சோத­னை­களை பொறு­மை­யுடன் எதிர்­கொள்­வதில் வெற்றி இருக்­கி­றது.

சோத­னைகள் பொது­வாக இரண்டு வகை­யான எதிர்­வி­ளை­வு­களை நோக்கி ஒரு மனி­தனை நகர்த்தி விடும்.

  1. மதச் சார்­பின்மை
  2. தீவி­ர­வாதம்

இந்தக் கட்­டத்தில், மார்க்­கத்தைப் பின்­பற்­று­வ­த­னால்தான் எமக்கு இந்த சோதனை என்று கருதி மார்க்­கத்தை விட்டும் தூர­மாகி நிற்க சிலர் முயற்­சிப்பர். அதற்­கான கார­ணங்­க­ளையும் பட்­டி­ய­லி­டுவர். தமது வாதத்தை நிறுவ முயற்­சிப்பர். கொஞ்சம் கொஞ்­ச­மாக அவர்கள் மார்க்­கத்­தி­லி­ருந்து விலகி மார்க்­கத்தின் அடிப்­ப­டை­யி­லி­ருந்தே தூர­மாகி விடுவர். மற்­ற­வ­ரையும் தூர­மாக்கும் முயற்­சியில் ஈடு­ப­டுவர். இது ஆபத்­தா­னது. இந்த யதார்த்­தத்தை நாம் புரிந்து வைத்­தி­ருக்க வேண்டும்.

மறு­பக்கம், சோத­னை­களும் தொடர்ந்­தேச்­சி­யான அடக்­கு­மு­றையும் தீவி­ர­வா­தத்­தின்பால் மற்றும் சிலரைத் தள்ளி விடும் அபா­யமும் இருக்­கி­றது. இது நிலை­மையை இன்னும் சிக்­க­லாக்கி விடும்.

இந்த இரு திசை­க­ளின்பால் முஸ்லிம் சமூ­கத்தை நகர்த்­து­வ­தற்­கான முயற்­சிகள் திரை­ம­றைவில் இடம்­பெ­றலாம். இது விட­யத்தில் முஸ்லிம் சமூகம் எப்­போதும் விழிப்­பு­ணர்­வுடன் இருப்­பது அவ­சியம்.

குறிப்­பாக முஸ்லிம் பெற்றோர் தமது பிள்­ளைகள் விட­யத்தில் கூடுதல் கரி­சனை செலுத்த வேண்டும். நவீன யுகத்தில் அவர்கள் யாருடன் தொடர்பு வைத்­தி­ருக்­கி­றார்கள், எங்கு செல்­கி­றார்கள், என்ன பேசு­கி­றார்கள், சமூக வலைத்­த­ளங்­களில் அவர்­க­ளது நண்­பர்கள் யார், எவ்­வா­றான கருத்­துக்­களைப் பகிர்ந்து கொள்­கி­றார்கள், யாருடன் தொடர்­பி­லி­ருக்­கி­றார்கள் என்­பதை பெற்றோர் கண்­கா­ணிக்க கட­மைப்­பட்­டுள்­ளனர். தீவி­ர­வாத சிந்­த­னை­யின்பால் தமது பிள்ளைகள் கவரப்படுவதிலிருந்து அவர்களைத் தடுத்து நிறுத்துவது பெற்றோரின் பாரிய பொறுப்பு.

சமூக ஒழுங்கு, சமூகக் கட்டமைப்பைப் பாதுகாக்கின்ற பொறுப்பு முஸ்லிம் சமூகத்திற்குரியது. ஊர் மட்ட, தேசிய மட்ட சமூக சன்மார்க்க தலைமைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதுடன் நாட்டு சட்டங்களை மதித்து நடக்கவும் வேண்டும்.

ஏனைய சமூகத்தினருடன் இணைந்து சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும். ஊர், பிரதேசம், மாவட்டம், தேசிய மட்டங்களில் அரச இயந்திரத்துடன் இணைந்தும் சமூகநலப் பணிகளை முன்னெடுக்க வேண்டும். கிராம சேவகர், மாவட்ட அதிகாரி, பொலிஸார், பாதுகாப்புத் தரப்பினர், நகர சபை, மாநகர சபை என்று எங்கெல்லாம் அரச நிறுவனங்களுடன் இணைந்து சமூகப் பணகளில் ஈடுபட முடியுமோ அங்கெல்லாம் எமது ஒத்துழைப்பை வழங்குவது கட்டாயம்.

இனியும் நாம் தனியாகவோ தனித்தோ இயங்க முடியாது. இணைந்து பணியாற்றுவதில்தான் பலன் அதிகம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.