இலங்கை முஸ்லிம்களுக்கு தீராத களங்கம்

0 706

தமிழ் – சிங்­களப் புத்­தாண்டு முடி­வுற்று ஒரு வார­கால விடு­மு­றையில் பெரு நாளைக் கொண்­டா­டிய மக்கள் ஒரு புறம், ஏனை­ய­வர்­க­ளான முஸ்லிம் ,கிறிஸ்­தவ மக்­களும் விடு­முறை காலம் முடிந்து மீண்டும் அன்­றாட வேலை­க­ளுக்கு ஆயத்­த­மாகும் வார இறுதி நாட்கள். அதிலும் கிறிஸ்­தவ மக்­க­ளுக்கு அன்று ஈஸ்டர் பண்­டிகை தினம். வழி­பா­டு­களும் கொண்­டாட்­டங்­களும் என தேவா­ல­யங்கள் பக்­தர்­களால் நிரம்பி வழிந்­தன.

மூன்று தசாப்­தங்கள் உள்­நாட்டு யுத்­தத்தில் இருந்து மீண்டு பத்து வரு­டங்­க­ளா­கின்­றன. பாது­காப்­பான சூழ்­நி­லைக்கு பழக்­கப்­பட்ட நாட்டு மக்கள் மகிழ்ச்­சி­யாக வாழ்ந்து கொண்­டி­ருந்த தருணம். உல்­லாசப் பய­ணி­களும் பாது­காப்பும் நம்­பிக்­கையும் நிறைந்த அழ­கிய இலங்கைத் தீவின் அத்­தனை இடங்­க­ளிலும் அச்­ச­மின்றி நட­மாடிக் கொண்­டி­ருந்த ஒரு அரு­மை­யான சூழல். நம் நாட்டு வரு­மா­னத்தில் கணி­ச­மான ஒரு பங்கை வெளி­நாட்டு உல்­லாசப் பய­ணி­களின் வருகை தான் நிர்­ண­யித்துக் கொண்­டி­ருந்­தது. அத்­தனை மகிழ்ச்­சி­க­ளையும் ஒரே நாளில் ஸ்தம்­பிக்கச் செய்­தது பயங்­க­ர­வாதம்.

எந்த ஒரு தீவி­ர­வாதத் தாக்­கு­த­லாக இருந்­தாலும் ஏதா­வது ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்­டி­ருக்கும் . ஆனால் இந்தத் தாக்­கு­தலின் நோக்கம் என்ன என்­பது எவ­ருக்கும் புரி­யாத புதி­ராக உள்­ளது. வெறு­மனே அப்­பா­வி­களின் உயிர்­களைக் கொன்­றதும் இலங்­கையில் மற்ற மதங்­க­ளுடன் சுமு­க­மாக வாழ்ந்து வந்த முஸ்லிம் சமூ­கத்­திற்கு அழி­யாத அவப்­பெ­யரை ஏற்­ப­டுத்­தி­யது மட்­டுமே இந்தத் தாக்­கு­தலின் பிர­தி­ப­லிப்­பாக எம்மால் உணர முடி­கி­றது.

பல வருட உள்­நாட்டு யுத்­தத்தில் இருந்து மீண்டு வந்த மக்கள் மீண்டும் பீதி­யுடன் வாழ வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை. இஸ்லாம் போதித்த மனித நேயத்தை மறந்து, இறை வேத­மான திரு­ம­றையைத் தவ­றாகப் புரிந்து கொண்­ட­வர்­களின் தப்­பான நட­வ­டிக்­கை­களால் ஒரு வார கால­மாக முழு நாடும் மயான அமை­தியில் அழுது கொண்­டி­ருக்­கி­றது. இத­யங்கள் உடைந்தும் உறைந்தும் போன ஒரு நிலையில் அடுத்த விநா­டி­களை கேள்­விக்­கு­றி­க­ளாக்கி வாழ்ந்து கொண்­டி­ருக்­கிறோம்.

“உங்­களில் யார் மனி­தர்­க­ளுக்கு இரக்கம் காட்­ட­வில்­லையோ அல்­லா­ஹுத்­த­ஆலா அவர் மீது இரக்கம் காட்­ட­மாட்டான்” (நபி மொழி – ஸஹீஹுல் புஹாரி )
தீவி­ர­வாதம், பயங்­க­ர­வாதம், இனக்­க­ல­வரம், வன்­மு­றைகள், உள் நாட்டு வெளி நாட்டு யுத்­தங்கள் என மனித குல அமை­தியை சீர்குலைத்து நாச­மாக்கும் செயல்கள் அதி­க­ரித்துவிட்­டன. ஒரு மனி­த­னுக்கு அவ­னது மதத்தை தேர்ந்­தெ­டுப்­பதும் அதனைப் பின்­பற்­று­வதும் அவ­னது அடிப்­படை சுதந்­திரம். அது அவ­னது மனித உரி­மையும் கூட. ஆனால் எந்த ஒரு மனி­த­னுக்கும் இன்­னொரு மதத்தை நிந்­திக்­கவோ, இழிவுபடுத்­தவோ, இகழ்ந்து பேசவோ உரி­மை­யில்லை. அதே போல் அப்­பாவி மக்­களின் உயிர்­களைப் பறிக்­கவும் எவ­ருக்கும் எந்த அதி­கா­ரமும் இல்லை. எந்த மத­மா­னாலும் அதற்­கு­ரிய மதிப்­பையும், மரி­யா­தையையும் அளிக்க வேண்­டி­யதே முஸ்­லிம்­க­ளுக்­கான பண்பு. இதை இஸ்லாம் புனித திரு­ம­றை­யிலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்­களின் வாழ்க்கை முறை­யிலும் மிகத் தெளி­வாகச் சுட்டிக் காட்டி இருக்­கின்­றன.
“இதன் கார­ண­மா­கவே, எவ­ரொ­ருவர் மற்றோர் ஆத்­மாவின் கொலைக்குப் பிர­தி­யா­கவோ, அல்­லது பூமியில் (உண்­டாகும்) குழப்­பத்­தினை தடை செய்­வ­தற்­கா­கவோ தவிர, (அநி­யா­ய­மாக மற்­றொ­ரு­வரை) கொலை செய்­கி­றாரோ அவர், மனி­தர்கள் யாவ­ரையும் கொலை செய்­தவர் போலாவார் என்றும், எவர் அதனை (ஓர் ஆத்­மாவை) வாழ வைக்­கி­றாரோ அவர், மனி­தர்கள் யாவ­ரையும் வாழ வைத்­தவர் போலாவார் என்றும் , இஸ்­ரா­யீலின் மக்­களின் மீது நாம் விதி­யாக்கி விட்டோம். மேலும், நம்­மு­டைய தூதர்கள் பலர் அவர்­க­ளிடம் , நிச்­ச­ய­மாகத் தெளி­வான அத்­தாட்­சி­க­ளையும் கொண்­டு­வந்­தி­ருந்­தார்கள். அப்பால் நிச்­ச­ய­மாக அவர்­களில் பெரும்­பாலோர், இதற்குப் பின்­னரும் வரம்பு கடந்­த­வர்­க­ளா­கவே இருந்­தனர். ” (சூரா மாயிதா வசனம் 32)

அறி­வி­லி­க­ளாக வாழ்ந்த மக்­க­ளுக்கு நேர்­வழி காட்டி அன்பைப் போதித்த மார்க்கம் இஸ்லாம். சாந்­தி­யையும் சமா­தா­னத்­தையும் வலி­யு­றுத்தி அமை­தி­யாக வாழ வழி­காட்டித் தந்த அழ­கிய மார்க்கம் இஸ்லாம். ஓரிறைக் கொள்­கையை அடிப்­ப­டை­யாகக் கொண்­டி­ருந்­தாலும் பிற மதங்­க­ளையும் மனி­தர்­க­ளையும் மதிக்கும் படி கற்றுத் தந்­தி­ருக்­கி­றது. பிற மனி­தர்­க­ளது உரி­மை­களைப் பேணி நடப்­பதைப் பற்றி திரு­மறை வச­னங்கள் ஊடா­கவும் ஹதீஸ்கள் மூல­மா­கவும் அறி­வு­றுத்தி இருக்­கி­றது. இவ்­வாறு எல்­லா­வற்­றையும் அழ­கான முறையில் விரி­வான விளக்­கங்­க­ளுடன் போதித்­தி­ருந்தும் கூட இஸ்­லாத்­திற்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் அவப் பெயரை ஏற்­ப­டுத்தும் செயல்­களை தீவி­ர­வாதப் போக்­கு­டைய சிலரோ அல்­லது சில அமைப்­புக்­களோ செய்து விடு­கின்­றன.

இதனால் ஏற்­படும் பின் விளை­வு­களை அவர்கள் சிந்­தித்­தார்­களா? அப்­பாவி மக்­களைக் கொன்று குவித்­து­விட்டு அவர்­களும் தற்­கொலை செய்து கொண்டால், தீவி­ர­வா­தத்­திற்கு எந்த வகை­யிலும் சம்­பந்­த­மில்­லாத எஞ்­சி­யி­ருக்கும் அப்­பாவி முஸ்­லிம்கள் முகம் கொடுக்கப் போகும் பிரச்­சி­னை­களை அவர்கள் அறிந்து தான் பயங்­க­ர­வா­தத்தைக் கையில் எடுத்­தார்­களா? இஸ்லாம் அனு­ம­திக்­காத அவர்­க­ளது பயங்­க­ர­வாதச் செயலை இறை­வனோ அவ­னது தூதரோ (ஸல்) ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் போவ­தில்லை என்­பதைக் கூட உண­ராது அடுத்­தவர் உயிரைப் பறிக்­கவும், தமது உயிரை மாய்த்துக் கொள்­ளவும் அவர்­க­ளுக்கு அதி­காரம் கொடுத்­தது யார்? ஒரு சிறு பிரி­வி­னரின் தீவி­ர­வாதப் போக்­கினால் மற்ற எல்லா முஸ்­லிம்­களும் பாதிக்­கப்­ப­டு­வது எந்த வகையில் நியாயம்? இவ்­வாறு எமக்குள் எழும் அத்­தனை கேள்­வி­க­ளுக்கும் இனி­வரும் காலம் தான் பதில் கூறுமா?

இது எந்­த­ளவு பார­தூ­ர­மான பாவச் செயல் என்­ப­தையும் இதனால் இலங்கை வாழ் முஸ்­லிம்­க­ளுக்கு எந்­த­ளவு அப­கீர்த்­தி­யையும் தீராத களங்­கத்­தையும் ஏற்­ப­டுத்தும் என்­ப­தையும் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் சிந்­தித்துப் பார்த்­தார்­களா? தீவி­ர­வாதப் போக்­கு­டைய அவர்­களின் இவ்­வா­றான ஈனச் செயல்­களால் எதனை சாதிக்க நினைக்­கின்­றனர்? “தீவி­ர­வாதம் ” என்ற வார்த்­தைக்கு இஸ்­லாத்தில் இட­மில்லை. தீவி­ர­வா­தத்தை இஸ்லாம் கடு­மை­யாக எதிர்ப்­ப­துடன், நபிகள் நாய­கம் (ஸல்) அவர்களின் வாழ்­விலோ அல்­லது புனித திருக் குர்­ஆ­னிலோ எந்த ஒரு இடத்­திலும் தீவி­ர­வா­தத்­திற்கு ஆத­ர­வாக எந்த ஒரு ஆதா­ரமும் இருந்­த­தில்லை.

2019 ஏப்ரல் 21. அமை­தி­யாக சமா­தா­ன­மாக வாழும் ஒரு சமூகம் என சகோ­தர இனத்­த­வர்கள் முஸ்­லிம்­களின் மீது இது­வரை வைத்­தி­ருந்த நம்­பிக்­கையில் இடி விழுந்த நாள் அது. நாட்­டுப்­பற்று மிக்­க­வர்­க­ளாக நெஞ்சை நிமிர்த்திப் பெரு­மை­யாக வாழ்ந்து வந்த முஸ்­லிம்­க­ளுக்கு தலை குனிவை ஏற்­ப­டுத்­திய வேத­னைக்­கு­ரிய நாளும் அது தான்.

நாட­ளா­விய ரீதியில் மொத்தம் எட்டு இடங்­களில் குண்டு வெடிப்­புக்கள் நடந்­தன. 359 அப்­பாவி மக்­களின் உயிர்­களைக் காவு கொண்­ட­துடன் ஏறத்­தாழ 500 பேர்கள் பலத்த காயங்­க­ளுடன் வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.

சட­லங்­களின் இறுதிக் கிரி­யைகள் செவ்வாய்க்கிழ­மை­யி­லி­ருந்து தொடர்ந்து நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கி­ன்றன. உற­வு­களை இழந்து தவிக்கும் குடும்­பத்­த­வர்­களும், பெற்­றோரைப் பறி கொடுத்த பிள்­ளை­களும், பிள்­ளை­களைப் பறி­கொ­டுத்த பெற்­றோர்­களும், சகோ­தர உற­வு­களின் கத­றல்­களும் உள்­ளங்­களை உருக வைக்­கின்­றன. உயிரைத் தொட்டுச் செல்லும் அழு குரல்­களைக் கேட்க முடி­யாமல் ஊடக செய்­தி­க­ளையும் காணொ­லி­க­ளையும் பார்த்து நெஞ்சு வெடித்துச் சித­றி­வி­டு­வதைப் போன்ற உணர்வு மட்­டுமே ஏற்­ப­டு­கின்­றது.
தினமும் இறப்­புக்­களின் எண்­ணிக்கை கூடிக் கொண்டு வரும் சோகத்தை ஜீர­ணிக்க முடி­யாமல், அமை­தி­யையும் சமா­தா­னத்தையும் விரும்பும் மக்கள் ஒரு­புறம். முழு முஸ்லிம் சமூ­கத்தின் மீதும் வெறுப்­பு­ணர்­வுடன், மன்­னிக்­கவே முடி­யாத மன நிலையில் இருக்கும் மக்கள் இன்­னொரு புறம். முஸ்­லிம்கள் மீது இலங்கை வாழ் முஸ்­லி­மல்­லா­த­வர்கள் வைத்­தி­ருந்த அத்­தனை நம்­பிக்­கை­க­ளையும் தவிடு பொடி­யா­க்கி­விட்­டது இச் சம்­பவம். பல தசாப்­தங்­க­ளாகப் பாது­காத்து வந்த நன்­ம­திப்பும் குண்­டு­க­ளோடு சேர்ந்து வெடித்துச் சித­றி­விட்­டது. இதி­லி­ருந்து நம் சமூகம் மீள்­வது எத்­த­கைய கடி­ன­மா­ன­தென போகப் போகத் தான் தெரியப் போகி­றது.

காலங்கள் மாறி இன்று இஸ்­லாத்­தினுள் புதுப்­புது இயக்­கங்கள் மலிந்து விட்­டன. ஒற்­று­மை­யாக இருந்த குடும்­பங்கள் இயக்­கங்­களால் துண்­டா­டப்­பட்­டன. ஒரே வீட்­டுக்குள் இரண்டு மூன்று இயக்­கங்கள். நற்­கா­ரி­யங்­க­ளிலும் வணக்க வழி­பா­டு­க­ளிலும் கூட சந்­தே­கங்­களை உரு­வாக்கி பிரி­வி­னை­களைத் தோற்­று­வித்­தனர். 1400 வரு­டங்­க­ளுக்கு முன் அழ­கான முறையில் பூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட புனித இஸ்­லாத்தில் புதி­தாகக் குறை­களைத் தேடி கண்டு பிடித்துப் பிள­வு­களை ஏற்­ப­டுத்­தி­விட்­டனர். பக்­கு­வ­மாகக் கற்­ற­றிந்து பேணு­த­லாக வாழ்ந்த அந்தக் கால சன்­மார்க்க அறி­ஞர்­களைப் போலன்றி புதுப்­புது மார்க்க அறி­ஞர்­களும் இன்று மலிந்து விட்­டனர் .

இலங்கை முஸ்­லிம்கள் எப்­போதும் அமை­தியை விரும்­பு­ப­வர்கள். நாட்டுப் பற்­றுடன் வாழ்­ப­வர்கள். ஒரு­சில தீவி­ர­வாத இயக்­கங்­களின் இஸ்­லாத்­திற்குப் புறம்­பான போக்கு அத்­தனை முஸ்­லிம்­களும் பாதிக்கும் நிலையை உரு­வாக்­கி­விட்­ட­தின்று. குர்ஆன், ஹதீஸ்­களைக் கூறிக் கூறியே அவற்­றுக்கு மாற்­ற­மாக நடக்­கின்­றனர். இவ்­வா­றான புதிய இயக்­கங்கள் இது­வரை சாதித்­தது தான் என்ன?

இது முஸ்­லிம்கள் சிறுபான்­மை­யாக வாழும் நாடு. இவ்­வா­றான நாடு­களில் வாழும் முறை­களை இஸ்லாம் அழ­காகக் காட்டித் தந்­தி­ருக்­கி­றது. நூறு வீத முஸ்­லிம்கள் வாழும் நாட்டில் வாழ்­வதைப் போல சிறு­பான்­மை­யாக வாழும் நாடு­களில் வாழ முடி­யாது. அந்­தந்த நாட்டுச் சட்­டங்­களை மதித்து வாழ்­வதும் நபிகள் நாயகம் காட்டித் தந்த இஸ்லாம் தான். இந்த அடிப்­படை விட­யங்­களைக் கூட அறி­யாமல் சிலர் செய்யும் காரி­யங்­களால் தான் பிரச்­சி­னைகள் உரு­வா­கின்­றன. பிற மதத்­தவர் எவ்­வாறு வாழ்­கின்­றனர் என்­பதை விட பல்­லின மக்கள் வாழும் ஒரு நாட்டில் ஒரு இஸ்­லா­மி­ய­னாக நாம் எவ்­வாறு வாழ்­கிறோம் என்­பதில் தான் இறை­வனின் திருப் பொருத்தம் இருக்­கி­றது .

இன்று இலங்கை வாழ் முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்பட்டிருக்கும் களங்கமும், தீவிரவாத முத்திரையும் அகற்றப்படுமா? இந் நாட்டில் சுதந்திரமாக சகோதர இனங்களுடன் ஒற்றுமையாக முன்பு போல இனியும் நாம் வாழ முடியுமா? அப்படியானால் நாம்தான் மாற வேண்டும். இஸ்லாம் காட்டித் தந்த சக இனங்களோடு வாழும் முறையை முதலில் முஸ்லிம்கள் கற்றுக் கொள்ள வேண்டும். விலக்கப்பட்ட கடுமையான பாவங்களான வட்டி, விபசாரம், போதைவஸ்துப் பாவனை என்பன முஸ்லிம்களின் அன்றாட வாழ்க்கையில் கலந்திருப்பதில் இருந்து விடுபட வேண்டும். சக மனிதர்களின் நம்பிக்கைக்கு மாறு செய்யாதவர்கள் என்று, நாம் இழந்த நன்மதிப்பை மீண்டும் பெற வேண்டும். வியாபாரத்திலும் பொது வாழ்க்கையிலும் ஹலாலான முறையிலும் சக மனிதருக்கு தீங்கிழைக்காத மனிதர்களாகவும் வாழ வேண்டும். மதம் என்ற பெயரில் தீவிரப் போக்கை விட்டு சாந்தியான முறையில் வாழ்ந்து காட்ட வேண்டும். இயக்க ரீதியான பிரிவினைகளை விட்டு விலகி நாம் அனைவரும் ஒற்றுமையான சமூகம் என்பதை பிறருக்கு உணர்த்த வேண்டும்.

கல்ஹின்னை
பஹ்மி ஹலீம்தீன்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.