இருண்ட 52 நாட்களின் பின்னர் பொருளாதாரத்தை ஸ்திரமாக்க கடுமையாக உழைக்க வேண்டி ஏற்பட்டது

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தேவையான வளங்கள் பெற்றுக்கொடுக்கப்படும்

0 472

2018 இன் இறு­தியில் ஏற்­பட்ட அர­சியல் ஸ்திர­மற்ற நிலைமை முடி­வு­றுத்­தப்­பட்­டதன் பின்னர் நாட்டின் பொரு­ளா­தா­ர­மா­னது உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு வளர்ச்­சியை நோக்கி நகர்­வதை நாம் காணலாம். இலங்­கையின் சுதந்­தி­ரத்­திற்குப் பின்­ன­ரான வர­லாற்றில் மிகவும் இருண்ட 52 நாட்­களின் பின்னர் ஸ்திர நிலை­மை­யினை மீண்டும் அடைந்­து­கொள்­வ­தற்கு நாம் கடு­மை­யாக உழைக்க வேண்­டி­யேற்­பட்­டது என நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர வரவு செலவுத் திட்ட உரையில் தெரி­வித்தார்.

மக்­களை வலு­வூட்டி வறுமைக் கோட்டின் கீழ் வாழ்­ப­வர்­களை வலுப்­ப­டுத்­து­வ­தற்­காக அனை­வ­ரி­னதும் தேவை­களை நிறை­வேற்றும் நோக்­கி­லான அர­சாங்­கத்தின் வரவு செலவுத் திட்ட அறிக்கை நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் பாரா­ளு­மன்றில் நேற்று பிற்­பகல் 2 மணிக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டது.  வரவு செலவுத் திட்­டத்தை சமர்ப்­பித்து அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

தொடர்ச்­சி­யான பல வரு­டங்­க­ளாக ஏற்­பட்ட பல வரட்­சி­க­ளினால் கிரா­மிய வரு­மானம் வீழ்ச்­சி­ய­டைந்து முழுப் பொரு­ளா­தா­ரமும் பாதிப்­ப­டைந்த நிலையில் 2018 ஒக்­டோபர் 26 ஆம் திகதி இடம் பெற்ற நிகழ்வு பொரு­ளா­தா­ர­த்தை மேலும் மோச­மாகப் பாதித்­தது. உலக எண்ணெய் விலை இரட்­டிப்­பா­கி­ய­துடன் ஐக்­கிய அமெ­ரிக்க பெடரல் ரிசேவ் ஆனது வட்டி வீதங்­களை மிக விரைவில் அதி­க­ரித்­தது. இவ்­வா­றான உள்­நா­ட்டு வெளி­நாட்டு சவால்­க­ளுக்கு வெற்­றி­க­ர­மாக முகம் கொடுத்த அதே­வேளை, எமது அர­சாங்கம் பொரு­ளா­தார ஸ்திரத்­தன்­மை­யி­னையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

2018 ஒக்­டோபர் இறு­தி­யி­லி­ருந்து உலக எண்ணெய் விலை­யா­னது பாரி­ய­ளவு வீழ்ச்­சி­ய­டைந்­தி­ருந்­த­துடன் ஐக்­கிய அமெ­ரிக்க பெடரல் ரிசேவ் ஆனது குறைந்த வட்டி வீதங்­க­ளுக்­கான சமிக்­ஞை­யினைக் காட்­டி­ய­துடன், நுகர்­வா­னது பழைய நிலை­மைக்குத் திரும்­பி­யது. இந்­நி­லை­மை­யினால் இலங்கை பெற்­றுக்­கொள்ள முடி­யு­மா­க­வி­ருந்த பொரு­ளா­தார வளர்ச்­சி­யினை 2019 வரையில் அனு­ப­விக்க முடி­யாது போனது. துர­திஷ்­ட­வ­ச­மாக, நாம் அர­சியல் சதி­யொன்­றிற்கு முகங்­கொ­டுக்க வேண்டி ஏற்­பட்­டதால் மேற்­கு­றித்த நன்­மை­களின் விளை­வு­களை அனு­ப­விப்­ப­தற்­கான வாய்ப்­பினை இழந்தோம்.

இலங்­கையின் மீதான நம்­பிக்கை இழந்­ததன் விளை­வாக, அந்த 52 நாட்­க­ளுக்குள் எமது கடன் மற்றும் பங்குச் சந்­தை­யி­லி­ருந்து மூல­தன வெளி­யேற்றம் பாரி­ய­ளவு இடம்­பெற்­ற­துடன் மிகவும் கடி­ன­மான உழைப்பின் மூலம் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்ட எமது வெளி­நாட்டு ஒதுக்­கீ­டு­க­ளி­லி­ருந்து பல பில்­லியன் டொலர்­களை இழக்க வேண்­டி­யேற்­பட்­டது. இக்­கா­லப்­ப­கு­தியில், ஏனைய வளர்ந்­து­வரும் சந்­தை­களின் நாண­யங்கள் மதிப்­பேற்­ற­ம­டைந்த அதே­வேளை, எமது நாண­யத்தின் பெறு­ம­தி­யா­னது வர­லாற்றில் மிகக் குறைந்த மட்­டத்­தி­லான வீழ்ச்­சி­யினை பதி­வு­செய்­தது.

இலங்­கையின் கடன் தரப்­ப­டுத்­த­லா­னது கீழ் மட்­டத்­திற்குத் தள்­ளப்­பட்­டதன் விளை­வாக எமது வெளி­நாட்டுக் கடன் பெறுகைச் செல­வினம் இரட்டை இலக்க மட்­டத்­திற்கு அதி­க­ரித்­துள்­ளது. 2019 இல் வெளி­நாட்டுப் படு­கடன் மீள் கொடுப்­ப­ன­வாக 5.9 பில்­லியன் ஐ.அ. டொல­ரினை மீள் நிதி­ய­ளிக்க வேண்­டி­யி­ருப்­ப­தனால் மிகவும் சாத­க­மற்ற தன்மை உரு­வா­கி­யுள்­ளது. இலங்கை சிறந்த பிர­யாணம் செய்­யக்­கூ­டிய இட­மாக “லோன்லி பிலனற்” சஞ்­சி­கை­யினால் தரப்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்­னரும் கூட, அப்­போது காணப்­பட்ட அர­சியல் நில­மையின் கார­ண­மாக சுற்­றுலா பய­ணி­களின் வரு­கை­யா­னது மிகவும் மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டது.  இந்­நி­லையை நிவர்த்­தி­செய்யும் பொருட்டு புதிய பிர­சார நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

நிலைமை இவ்­வா­றி­ருக்க, 2018 டிசெம்பர் 17 ஆம் திகதி நாம் மீண்டும் அதி­கா­ரத்­திற்கு வந்தோம். எமது வெளி­நாட்­டுத்­துறைக் கார­ணி­க­ளுக்கு ஏற்­பட்ட சேதத்­தினை நாம் தற்­பொ­ழுது சீர்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் சந்­தைகள் கடந்த இரண்டு மாதங்­களில் நம்­பிக்கை தரக்­கூ­டிய வகையில் மீள் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டுள்­ளது. இன்று எமது வெளி­நாட்டுக் கடன் பெறுகை செல­வி­ன­மா­னது 200 அடிப்­படை புள்­ளி­க­ளுக்கு மேலாக வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. எமது பொரு­ளா­தா­ரத்­தினை நோக்கி வெளி­நாட்டு மூல­த­ன­மா­னது நகர்ந்துள்ள அதேவேளை, ஜனவரியிலிருந்து அரசாங்க பிணையங்கள் மீது ரூபா 3,400 மில்லியன் வெளிநாட்டு நிதியானது உட்பாய்ச்சப்பட்டுள்ளதுடன் இன்றுவரை ரூபாவானது 1.5 சதவீதத்தினால் மதிப்பேற்றமடைந்துள்ளது.

எனவே, அரசியல் சதியினால் ஏற்பட்ட பல்வேறுபட்ட பாதிப்புக்களை நிவர்த்திசெய்ய வேண்டியுள்ளதுடன், பொருளாதாரம் மீண்டும் ஸ்திரப்படுத்தப்பட வேண்டியுள்ளது என்றார்.

அத்துடன், அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்கு எதிர்­வரும் ஜூலை மாதம் 1 ஆம் திக­தி­யி­லி­ருந்து 2500 ரூபா மேல­தி­க­மாக வழங்­கப்­ப­ட­வி­ருப்­ப­தாக நிதி­ய­மைச்சர் வரவு செலவுத் திட்­ட உரை­யாற்­று­கையில் தெரி­வித்­தார்.

மேலும், 2016ஆம் ஆண்டில் ஆரம்­பிக்­கப்­பட்ட அரச ஊழி­யர்­களின் சம்­பள அதி­க­ரிப்பு 2020 ஆண்டு வரையில் 5 கட்­டங்­களின் கீழ் இடம்­பெ­ற­வுள்­ளது. இதே­போன்று சம்­பள முரண்­பாட்டை தீர்ப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழுவின் அறிக்கை தொடர்பில் அமைச்­ச­ரவை கவனம் செலுத்­தி­யுள்­ளது. இதற்­க­மைய சம்­பள முரண்­பாடு தீர்க்­கப்­படும்.

கல்விச் சிறப்புத் தேர்ச்­சிக்­கான புலமைப் பரிசில் ஒன்­றினை ஆரம்­பிப்­பது தொடர்­பான அறி­விப்­பினை மேற்­கொள்­வதில் மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன்.  இதன்­மூலம் க.பொத. (உ.த.) பரீட்­சையில் பௌதீக விஞ்­ஞானம், உயி­ரியல் விஞ்­ஞானம், தொழில் நுட்பம், வர்த்­தகம் மற்றும் கலைப் பிரி­வு­களில் உயர் செய­லாற்­று­கை­யினைக் காட்டும் மாண­வர்கள் தமது பல்­க­லைக்­கழகக் கல்­வி­யினை ஹாவட், எம்.ஐ.ரி., ஒக்ஸ்போட், கேம்ப்றிஜ் போன்ற பல்­க­லைக்­க­ழகங்­களில் தொடர்­வ­தற்கு இந்­நி­தி­யா­னது வச­தி­ய­ளிக்கும்.  இதற்­கான முத­லா­வது தகைமை பெறும் மாணவர் தொகு­தி­யா­னது 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் இடம்­பெ­ற­வுள்ள உயர்­தரப் பரீட்சை பெறு­பே­று­க­ளி­லி­ருந்து தெரிவு செய்­யப்­ப­டுவர்.  இவ்­வ­ரு­டத்தில் தமது துறை­களில் உயர்ந்­த­பட்ச செய­லாற்­று­கை­யினைக் காட்டும் 14 பேருக்கு புலமைப் பரி­சில்கள் பெற்றுக் கொடுக்­கப்­படும்.  இதன் கீழ் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­ற­வர்கள் உயர்­கல்­வியின் பின்னர் நாடு திரும்பி 15 வரு­டங்கள் நாட்­டிற்­காக சேவை­யாற்ற வேண்டும்.  இப்­பு­ல­மைப்­ப­ரி­சி­லா­னது ஏனைய வரு­டங்­க­ளுக்கும் விரி­வு­ப­டுத்­தப்­படும்.

எமது நாடு நடுத்­தர வரு­மானம் பெறும் நாடு என்ற அந்­தஸ்த்­தினை அடைந்­தி­ருக்கும் நிலையில், அதி­ந­வீன, அதி­வேக நெடுஞ்­சா­லைகள் அமைப்­பதில் பல மில்­லி­யன்­களை முத­லீடு செய்து கொண்­டி­ருக்கும் அதே­வேளை எமது நாட்டில் சுமார் 260,000 வீடுகள் அடிப்­படை துப்­பு­ர­வேற்­பா­டு­க­ளற்ற நிலையில் காணப்­ப­டு­கின்­றன. உதா­ர­ண­மாக அம்­பாந்­தோட்டை  மாவட்­ட­மா­னது கலி­போர்­னியா பாணியில் பாரிய கருத்­திட்­டங்கள் மற்றும் அதி­வேக நெடுஞ்­சா­லைகள், சீன பாணியில் மாநாட்டு மண்­ட­பங்கள் மற்றும் விளை­யாட்டுத் தொகு­திகள் என்­ப­வற்றைக் கொண்­டி­ருந்த போதிலும் 15,000 இற்கும் மேற்­பட்ட மக்கள் அடிப்­படை துப்­பு­ர­வேற்­பா­டு­க­ளற்ற நிலையில் வாழ்­கின்­றனர். ஆகவே, நாட்டில் காணப்­படும் துப்­பு­ர­வேற்­பா­டு­க­ளற்ற அனைத்து வீடு­க­ளுக்கும் இரண்டு வரு­டங்­க­ளுக்குள் மல­ச­ல­கூட வச­திகள் பெற்றுக் கொடுக்­கப்­படும்.  இதன் மூலம் 1 மில்­லியன் மக்கள் பயன்­பெ­றுவர். அரச ஊழி­யர்­களின் சீரு­டைக்­காக வழங்­கப்­படும் கொடுப்­ப­னவு 600 ரூபாவால் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. இரா­ணுவ கமாண்டோ படை­யி­ன­ருக்­காக மாதாந்தம் வழங்­கப்­படும் கொடுப்­ப­னவு 1000 ரூபா­வி­லி­ருந்து 5000 ரூபா­வாக அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. வீட்டு வாடகை கொடுப்­ப­னவு 30 சத­வீ­தத்தால் அதி­க­ரிக்­கப்­ப­டு­கி­றது. இரா­ணு­வத்­துக்கு சம­மான ஏனைய ஊழி­யர்­க­ளுக்கும் இது வழங்­கப்­படும்.

கிரா­ம­பு­றங்­க­ளி­லுள்ள பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு இல­வ­ச­மாக ஒருகப் பால் வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

ஓய்­வூ­தி­யக்­கா­ரர்­களின் சம்­பள முரண்­பாட்டை தீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும் இதற்­காக 12,000 மில்­லியன் ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­ப­ட­வுள்­ளது. இதன்­மூலம் 85 இலட்சம் பேர் பய­ன­டை­ய­வுள்­ளனர்.

வரவு செலவு திட்­டத்­துக்­க­மை­வாக உள்­நாட்டு சாராய உற்­பத்­தி­களின் விலைகள் இன்று (நேற்று) நள்­ளி­ரவில் திருத்தம் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. 750 மில்லி லீற்­றரைக் கொண்ட சாராயம் 63 ரூபா­வினால் அதி­க­ரிக்­கப்­ப­டு­கி­றது. 350 மில்­லி­லீற்றர் பியர் போத்தல் 9 ரூபாவால் அதி­க­ரிக்­கப்­ப­டு­கி­றது. கள்ளு சாரா­யத்தின் விலையில் எந்­த­வித மாற்­ற­மில்லை

60 மில்­லி­மீற்றர் நீளத்தை கொண்ட சிக­ரட்­டுக்­கான வரி 12 சத­வீ­தத்­தினால் அதி­க­ரிக்­கப்­ப­டு­கி­றது. இதற்­க­மை­வாக பொது­வாக சிக­ரட்டின் விலை 5 ரூபா­வினால் அதி­க­ரிக்­கப்­ப­டு­கி­றது.

பீடி விலைக்­கான செஸ் வரி ஒரு கிலோ­வுக்கு 2500 ரூபா­வி­லி­ருந்து 3500 ரூபா வரையில் அதி­க­ரிக்­கப்­ப­டு­கி­றது. இதற்­க­மை­வாக பீடி ஒன்றின் விலை 50 சதத்தால் அதி­க­ரிக்­கப்­ப­டு­கி­றது.

வணக்­கஸ்­த­லங்­களில் சூரிய மின்­னுற்­பத்­திக்­கான வச­திகள் விரி­வுப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.  வணக்­கஸ்­தலம் ஒன்­றுக்கு இதன் கீழ் 3 இலட்சம் ரூபா வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

வரட்சி வலய அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டத்­திற்­காக மகளிர் மற்றும் வரட்சி வலய அபி­வி­ருத்தி அமைச்­சுக்கு 250 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீடு.

அனர்த்­தத்­துக்­குள்­ளான வீடு­களை புன­ர­மைப்­ப­தற்கு 200 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீடு. இதற்­க­மை­வாக தெரி­வு­செய்­யப்­பட்ட பிர­தே­சங்­களில் வீடுகள் அமைக்­கப்­படும்.

சமுர்த்தி வேலைத்­திட்டம் விரி­வு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. மேலும் 6 இலட்சம் பேருக்கு சமுர்த்தி நிவா­ரணம் வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

இலஞ்சம் அல்­லது ஊழல் ஆணைக்­கு­ழுவின் நட­வ­டிக்­கையை மேலும் வலுப்­ப­டுத்­து­வ­தற்கு 100 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

ஏப்ரல் மாதம் முதலாம் திக­தி­யி­லி­ருந்து அலு­வ­லக நேரங்­களில் அதி­வேக நெடுஞ்­சா­லையின் கட்­டணம் 100 ரூபாவால் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது.

கெசினோ அனு­மதி கட்­டணம் 200 மில்­லி­ய­னி­லி­ருந்து 400 மில்­லியன் ரூபா வரை அதி­க­ரிப்பு. கெசி­னோவில் பிர­வே­சிப்­ப­தற்­கான கட்­டணம் 50 டொலர்­க­ளாக அதி­க­ரிக்­கப்­ப­டு­கி­றது.

விமான பய­ணிகள், கப்பல் பய­ணி­க­ளுக்­கான விமான நிலை­யங்­களில் அற­வி­டப்­படும் கட்­டணம் 10 அமெ­ரிக்க டொலர்­க­ளாக திருத்­தப்­ப­ட­வுள்­ளது. இந்த கட்­டணம் முன்னர் 5 டொலர்­க­ளாக அமைந்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

பொது­வான கட­வு­சீட்­டுக்­கான கட்­டணம் 500 ரூபாவால் அதி­க­ரிக்­கப்­ப­டு­கி­றது. புதிய கட்­டணம் 3500 ரூபா­வாகும். ஒரே நாளில் கட­வுச்­சீட்டை பெறு­வ­தற்­கான கட்­டணம் 5000 ரூபாவால் அதி­க­ரிக்­கப்­ப­டு­கி­றது. இதற்­க­மை­வாக புதிய கட்­டணம் 15 ஆயிரம் ரூபா­வாகும். கட­வு­சீட்­டுக்­களில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­கான கட்­டணம் 500 ரூபா­வினால் அதி­க­ரிக்­கப்­ப­டு­கி­றது. இதற்­கான புதிய கட்­டணம் 1000 ரூபா­வாகும்.

800 சிலிண்டர் வலு­வுக்கும் குறைந்த பெற்றோல் வாக­னங்­க­ளுக்­கான உற்­பத்தி வரி 150,000 வினாலும் 1000 சிலின்டர் வலு­வுக்கும் குறைந்த பெற்றோல் வாக­னங்­க­ளுக்­கான உற்­பத்தி வரி 175,000 ரூபா­வி­னாலும் 1300 சிலின்டர் வலு­வுக்கும் உட்­பட்ட பெற்றோல் வாக­னங்­க­ளுக்­கான உற்­பத்தி வரி 5 லட்சம் ரூபா­வாக அதி­க­ரிப்பு. 800 சிலிண்டர் வலு­வுக்கும் குறைந்த ஐபிரிட் வாக­னங்­க­ளுக்­கான உற்­பத்தி வரி 250,000 ரூபா­வினால் அதி­க­ரிக்­கப்­ப­டு­கி­றது. சிலிண்டர் வலு­வுக்கும் உட்­பட்ட ஐபிரிட் வாக­னங்­க­ளுக்­கான உற்­பத்தி வரி 500,000 ரூபாவால் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது.

கிலோ வோட் 70 மின்­சார மோட்டார் வாக­னத்தின் மீதான உற்­பத்தி வரி 175,000 ரூபா­வினால் அதி­க­ரிப்­ப­தற்கு முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளது. இதே­போன்று 200 சிலின்டர் வலுவைக் கொண்ட முச்­சக்­கர வாகனம் மீதான உற்­பத்­தி­வரி 60 சத­வீ­தத்­தினால் அதி­க­ரிக்­கப்­ப­டு­கி­றது.

நாளை­யி­லி­ருந்து அதி­சொ­குசு வாகன இறக்­கு­மதி வரியில் திருத்தம் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­துடன், வாகன இறக்­கு­ம­திக்­காக விதிக்­கப்­பட்­டுள்ள 200 சத­வீத வைப்பு இரத்து செய்­யப்­ப­ட­வுள்­ளது.

யுத்­த­கா­லத்தில் அழி­வ­டைந்த பகு­தி­களை அபி­வி­ருத்தி செய்ய 5 பில்­லியன் ஒடுக்­கீடு.

வடக்கில் 10 பொரு­ளா­தார மத்­திய நிலை­யங்கள். பல்­வேறு வேலைத்­திட்­டங்­க­ளுக்­காக வங்­கி­க­ளுக்கு 250 மில்­லியன் ஒதுக்­கீடு.

தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் – மலை­யக மக்­களின் நலன் தொடர்பில் சம­கால அர­சாங்கம் முக்­கிய கவனம் செலுத்­தி­யுள்­ளது. இது தொடர்­பாக அமைச்சர் திகாம்­பரம் உள்­ளிட்டோர் எம்­முடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளனர். இந்த வரவு செல­வுத்­திட்­டத்­திலும் இந்த மக்­களின் நலன் கருதி கவனம் செலுத்­தி­யுள்ளோம்.

இதே­போன்று வடக்கு கிழக்கு மக்­களின் சேம நலன்­க­ளிலும் அர­சாங்கம் கவனம் செலுத்­தி­யுள்­ளது. வடக்கு கிழக்கு அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கைக்­காக 24 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீடு செய்­யப்­படும். வடக்கில் 15 ஆயிரம் வீடு­களின் நிர்­மாணப் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. 2019ஆம் ஆண்டில் 4500 மில்­லியன் ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டது. இந்த வரவு செல­வுத்­திட்­டத்தில் மேலும் 5500 மில்­லியன் ரூபா ஒதுக்­கீடு செய்ய முன்­மொ­ழி­கின்றேன்.

அத்­துடன், வடக்­கி­லி­ருந்து பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களின்  மீள்­கு­டி­யேற்றம் தொடர்­பான பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு எடுக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கை­க­ளா­னது தொடர்ந்தும் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன், தேவை­யான வளங்­களும் பெற்றுக் கொடுக்­கப்­படும்.

நாட்டில் டயர் தயா­ரிப்பு, இறப்பர் பால் மூல­மான தயா­ரிப்பு தொடர்பில் பிரச்­சி­னைகள் நில­வு­கின்­றன. இவற்­றுக்குத் தீர்­வாக இத்­து­றையை ஊக்­கு­விப்­ப­தற்­காக 850 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது விவ­சா­யத்­து­றையில் அறு­வ­டைக்கு பின்னர் ஏற்­படும் பாதிப்பை தடுப்­ப­தற்­காக களஞ்­சிய வச­தியை தம்­புள்ளை கட்­டு­நா­யக்க போன்ற இடங்­களில் அமைப்­ப­தற்கு முன்­மொ­ழி­கின்றேன்.  சிறிய மற்றும் நடுத்­தர அள­வி­லான வர்த்­தகத் துறை­யி­னரை ஊக்­கு­விக்கும் நோக்கில் சிறிய ட்ரக் வாகனம் போன்ற உப­க­ர­ணங்­க­ளுக்கு வரியை குறைப்­ப­தற்கு எதிர்­பார்க்­கின்றேன். 52நாள் சதியில் சிக்­கி­யி­ருந்த என்­டர்­பிரைஸ் ஸ்ரீலங்கா போன்ற சமூக அபி­வி­ருத்தி திட்­டங்கள் ஊக்­கு­விக்­கப்­ப­ட­வுள்­ளன. இவ்­வா­றான சதியில் ஈடு­பட்­டி­ருந்­தோ­ரினால் இந்த அபி­வி­ருத்தி திட்­டங்கள் முழு­மை­யாகத் தடைப்­பட்­டன. நாம் இப்­பொ­ழுது இவற்றை வலுப்­ப­டுத்தி வரு­கின்றோம்.

இந்த வரு­டத்தில் நாம் அறி­மு­கப்­ப­டுத்­திய என்­டர்­பிரைஸ் ஸ்ரீலங்கா, கம்­பெ­ர­லிய போன்ற அபி­வி­ருத்தி திட்­டங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நாட்டு மக்­களை வலுப்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்ளோம். வறி­ய­வர்­க­ளுக்கு பாது­காப்பு என்ற தொனிப்­பொ­ருளில் இந்த வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. சமூக பாது­காப்பு வலைப்­பின்­னலை வலு­வூட்­டு­த­வற்­காக நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. என்றும் அவர் மேலும் தெரி­வித்தார். திரு­மணம் முடிக்கும் இளம் சமூ­கத்­தி­ன­ருக்கு 25வருட காலத்­துக்குள் செலுத்­தக்­கூ­டிய வகையில் தமக்­கென வீடொன்றை நிர்­மா­ணிப்­ப­தற்­கான முன்­மொ­ழிவை முன்­வைக்­கின்றேன். இதற்கு 6 சத­வீத வட்டி அற­வி­றப்­படும். இதே­போன்று வெளி­நாட்டில் பணி­யாற்றி நாடு திரும்­பு­வோ­ருக்கு சிஹின மாலி­காவ கடன் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும். இதனை 2 வரு­டத்­துக்கு பின்னர் திருப்பி செலுத்­து­வதை ஆரம்­பிக்க முடியும். 15வருட காலத்­துக்குள் செலுத்தி முடிக்­கக்­கூ­டிய கடன் முறை­யாகும்.

சிறிய குற்­றங்­க­ளுக்­காக சிறையில் அடைக்­கப்­படும் பெண்­க­ளுக்கு தொழில் மட்­டத்தில் புனர்­வாழ்வு அளிப்­ப­தற்கு தொம்­பேயில் ஆய்வு தொழில் பயிற்சி மத்­திய நிலையம் ஒன்று அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. இதற்கு 50 மில்­லியன் ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­படும். தொற்றா நோயான 21ஆயிரம் சிறு­நீ­ரக நோயா­ளர்­க­ளுக்கு தலா 5000 ரூபா வழங்­கப்­படும். இதனை மேலும் 5000 ரூபா­வினால் அதி­க­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும். ஊன­முற்ற நபர்­க­ளுக்­காக வழங்­கப்­படும் 3000 ரூபா 5000 ரூபா­வாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. முதியோர் பாரா­ம­ரிப்பு அலு­வ­லகம் வலுப்­ப­டுத்­தப்­படும். இதற்­காக 4000 மில்­லியன் ரூபா ஒதுக்­கி­டப்­படும். பாது­காப்பு புக­லிடம் பரிந்­து­ரைக்கு அமை­வாக இதற்கு கடன் வச­திகள் வழங்­கப்­படும்.

பெண்கள் தொழில் வாய்ப்­புக்­களில் ஈடு­ப­டு­வ­தினால் பிள்­ளை­களை பாது­காப்­ப­தற்­கான வேலைத்­திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும். சிறுவர் பாது­காப்பு மத்­திய நிலையம் பாட­சாலை நேரத்­துக்கு பின்­னரும் விடு­முறை காலத்­திலும் இவ்­வா­றான வச­தி­களை வழங்கும் நிறு­வ­னங்­க­ளுக்கு என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் வசதி வழங்­கப்­ப­ட­்டுள்­ளது.

நாடு முழு­வ­திலும் இயற்கை கழி­வறை வசதி மற்றும் கழிவுப் பொருட்கள் போன்­றன தொடர்­பாக சுகா­தார மேம்­பாட்­டுக்­காக 400 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீடு. பஸ் தரிப்பு நிலையம், ரயில்வே நிலை­யங்கள் போன்ற பொது இடங்­களில் நவீன வச­தி­களை கொண்ட இயற்கை கழி­வறை வச­திகள் விரி­வு­ப­டுத்­தப்­படும். பேசாலை, பருத்­தித்­துறை துறை­முக வச­திக்­காக 1300 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீடு செய்­யப்­படும். உலர்த்­தப்­படும் தேங்காய் உள்­ளிட்ட பொருட்­களைக் கொண்டு மட்­பாண்ட தொழிற்­து­றையில் பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டுள்­ளன. இது தொடர்­பிலும் கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. சுற்­றா­டலை பாது­காத்து வச­தி­களை மதி­ப்பீடு செய்து நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும். விவ­சாயம் மற்றும் தோட்­டத்­து­றைக்­கான நீர் விநி­யோ­கத்­திற்­காக 2020ஆம் ஆண்­ட­ளவில் மொரக்­க­ஹ­கந்த நீர் விநி­யோக திட்டம் பூர்த்தி செய்­யப்­படும்.

வடமேல் மஹ­எல மினிப்பே கால்­வாயின் நிர்­மாண பணிகள் ஆரம்­பிக்­கப்­படும். இதற்­காக 12 ஆயிரம் மில்­லியன் ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­படும். தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­கா­கவும் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. தெதுரு ஓயா நீர்  வேலைத்­திட்­டத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக 410 மில்­லியன் ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

கல்­முனை, சம்­மாந்­துறை, வாழைச்­சேனை மற்றும் தலை­மன்னார் நகர அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளுக்கு மேலும் ஒத்­து­ழைப்பு வழங்­கப்­படும்.

பேரே வாவி திட்டம் பூர்த்தி செய்­யப்­ப­ட­வுள்­ளது. அறு­வக்­காடு கழி­வுப்­பொருள் கட்­ட­மைப்பு நிறு­வ­னத்தை முன்­னெ­டுப்­ப­தற்­காக 7000 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீடு. வெள்ள அனர்த்­தத்தை கட்­டுப்­ப­டுத்தல், பெத்­த­கான பூங்கா, கொழும்பு மாந­கரம் வெள்ள பாதிப்­பி­லி­ருந்து தடுப்­ப­தற்­காக 900 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீடு.

பிர­தேச மட்­டத்தில் விளை­யாட்டுத் துறையை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக மாத்­தளை அலு­வி­கார விளை­யாட்டு மைதானம், கொன்­னாவ மல்­லி­மா­ரச்சி விளை­யாட்டு மைதானம் ஆகி­யன அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வுள்­ளன. விவ­சாயம், கால்­ந­டைத்­துறை, அலங்­கார மீன் உற்­பத்தி, புல்­டோசர் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான பயிற்­சியை வழங்க முன்­வந்­துள்­ளது. NVQ சான்­றிதழ் வழங்­கப்­படும் இந்தப் பயிற்­சிகள் தெரிவு செய்­யப்­படும் இரா­ணுவ முகாம்­களில் இடம்­பெ­ற­வுள்­ளன. இதன் மூலம் இளை­ஞர்கள் நன்­மை­ய­டைய முடியும்.

சுவ­ச­ரிய அம்­புலன்ஸ் சேவை நாடு முழு­வ­திலும் விரி­வு­பட்ட வகையில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும். இதற்­காக 600 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீடு செய்­யப்­படும். இதற்­க­மை­வாக நாடு முழு­வ­திலும் சுவ­ச­ரிய அம்­பு­லன்ஸ்­களை நிறுத்­து­வ­தற்­காக 300 இடங்கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. இவற்றில் இந்த வருடத்தில் 100 இடங்கள் அமைக்கப்படவுள்ளன.

ருஹுணு பல்கலைக்கழகத்தில் – பீடம் ஒன்று அமைக்கப்படும். உயர் கல்விக்காகவும் வைத்திய கற்கைநெறிகளை மேம்படுத்துவதற்காகவும் சப்ரகமுவ மற்றும் குளியாபிட்டி வைத்திய பீடங்களுக்காக இரத்தினபுரி பெரியாஸ்பத்திரி, குளியா பிட்டிய பெரியாஸ்பத்திரி ஒன்றிணைக்கப்படும்.

கல்வி பொது தராதர உயர்தரத்திற்கு தோற்றி பல்கலைக்கழகத்திற்கான சந்தர்ப்பத்தை இழக்கும் மாணவர்களுக்காக விஷேட வேலைத்திட்டம். இதனை நிதியமைச்சின் கீழ் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டில் சிறந்த உயர்தர பெறுபேரை பெற்றுக்கொள்ளும் 14 மாணவர்கள் மூலம் இது ஆரம்பிக்கப்படவுள்ளது. வெளிநாடுகளில் உயர்கல்வி, பல்கலைக்கழக கல்வியை தொடர்வதற்கு சந்தர்ப்பம். அனைத்து மாணவர்களுக்கும் தரம் 13 கல்வியை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டம் வலுப்படுத்தப்படும். இதற்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவதற்காக 32 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இளைஞர் சுற்றுலா பயணிகளுக்கும் சிறுவர் சுற்றுலா பயணிகளுக்கும் கலாசார நிலையங்களை பார்வையிடுவதற்காக அறவிடப்படும் கட்டணம் 50 சதவீதத்தால் குறைக்கப்படவுள்ளது.

மாணிக்கக் கற்களை பட்டை தீட்டுதலுக்கான இயந்திரங்கள் முதலானவற்றை இறக்குமதி செய்வதில் துறைமுகம் மற்றும் விமான நிலைய வரிகள் குறைக்கப்படவுள்ளன. சுற்றுலா நிறுவனங்கள் இணையத்தள மூலமாக இலகுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் சுற்றுலா தொழிற்துறை அபிவிருத்தி அடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.