போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை

தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்கிறார் ஜனாதிபதி

0 642

சட்ட விரோத போதைப்­பொருள் கடத்­த­லுக்கு எதி­ராக கடந்த நான்கு வரு­டங்­க­ளாக முன்­னெ­டுக்­கப்­பட்ட வேலைத்­திட்­டங்கள் இவ்­வாரம் முதல் புதிய உத்­வே­கத்­துடன் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்றும் போதைப்­பொருள் கடத்­தற்­கா­ரர்­க­ளுக்கு மரண தண்­டனை வழங்க வேண்டும் என்ற தீர்­மா­னத்­தி­லி­ருந்து ஒரு­போதும் பின்­வாங்கப் போவ­தில்லை என்றும்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். நேற்று முற்­பகல் முல்­லைத்­தீவு முள்­ளி­ய­வளை வித்­தி­யா­னந்த மகா வித்­தி­யா­ல­யத்தில் இடம்­பெற்ற தேசிய போதைப்­பொருள் ஒழிப்பு வாரத்தை பிர­க­ட­னப்­ப­டுத்தும் நிகழ்வில் உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனா­தி­பதி இவ்­வாறு குறிப்­பிட்டார்.

போதைப்­பொருள் கடத்தல் மற்றும் அத­னுடன் தொடர்­பான கட்­ட­மைக்­கப்­பட்ட குற்­றங்கள் பற்­றிய முறைப்­பா­டு­களை தெரி­விப்­ப­தற்­கான கட்­ட­ண­மற்ற துரித தொலை­பேசி இலக்­க­மொன்றும் இதன்­போது ஜனா­தி­ப­தி­யினால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. அதற்­க­மைய 1984 என்ற இலக்­கத்­தி­னூ­டாக இந்த தக­வல்­களை வழங்க முடியும்.

இங்கு ஜனா­தி­பதி மேலும் உரை­யாற்­று­கையில் , இலங்­கையில் சட்­ட­வி­ரோத போதைப்­பொருள் கடத்­தலை ஒழிப்­ப­தற்­காக எனது வேண்­டு­கோ­ளுக்­க­மைய பிலிப்பைன்ஸ் அர­சாங்கம் இணக்கம் தெரி­வித்­துள்­ள­தோடு, அதற்­காக வழங்­கக்­கூ­டிய தொழி­நுட்ப ஆலோ­ச­னைகள் தொடர்பில் கண்­ட­றி­வ­தற்­காக பிலிப்பைன்ஸ் நாட்டின் நிபுணர் குழு­வொன்று வெகு­வி­ரைவில் வருகை தர­வுள்­ளது.

போதைப்­பொருள் பாவனை கார­ண­மாக சீர­ழி­வு­க­ளுக்கு முகங்­கொ­டுத்­தி­ருந்த பிலிப்பைன்ஸ் நாடு, அந்­நாட்டு ஜனா­தி­ப­தி­யினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட வேலைத்­திட்­டங்கள் கார­ண­மாக இன்று அந்த சவா­லினை வெற்­றி­கொண்­டுள்­ளது. போதைப்­பொருள் கடத்­த­லுக்கு எதி­ராக பிலிப்பைன்ஸ் ஜனா­தி­ப­தி­யினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட தீர்­மா­னங்­களை நாம் நடை­மு­றைப்­ப­டுத்­தா­வி­டினும் சில அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு அஞ்சி சட்­ட­வி­ரோத போதைப்­பொருள் கடத்­த­லுக்கு எதி­ராக மேற்­கொண்ட தீர்­மா­னங்­க­ளி­லி­ருந்து ஒரு­போதும் பின்­வாங்கப் போவ­தில்லை.

போதைப்­பொருள் கடத்­தற்­கா­ரர்­க­ளுக்கு எதி­ரான தீவிர தீர்­மா­னங்­க­ளுக்கு எதி­ராக சில மனித உரிமை அமைப்­புக்கள் குர­லெ­ழுப்பி வரு­கின்ற போதும், போதைப்­பொ­ருட்­களால் ஏற்­படும் அழிவு கார­ண­மாக நாட்­டிற்கும் மக்­க­ளுக்கும் எதிர்­கால சமு­தா­யத்­திற்கும் ஏற்­படும் பாதிப்­புக்கள் தொடர்பில் அவர்கள் கவனம் செலுத்­த­வில்லை. நாட்­டிற்கு ஏற்­பட்­டுள்ள இந்த அழி­விற்கு அவர்கள் அனை­வரும் பொறுப்­புக்­கூற வேண்டும் .

போதைப்­பொருள் கடத்­தல்­கா­ரர்கள் தொடர்­பாக மட்­டு­மன்றி அக்­க­டத்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு பின்­ன­ணியில் செயற்­படும் தரப்­பினர் தொடர்­பான தக­வல்­க­ளையும் நான் நாட்­டுக்கு வெளிப்­ப­டுத்­த­வுள்ளேன் என்றும் ஜனா­தி­பதி தெரி­வித்தார்.

தேசிய போதைப்­பொருள் ஒழிப்பு வாரம் 21ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன், அதன் கீழான பிர­தான செயற்­திட்­ட­மாக ஜன­வரி 21 முதல் 25 வரை போதைப்­பொருள் ஒழிப்பு பாட­சாலை வாரம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. வட மாகாண பாட­சா­லை­களைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்­சத்து ஐம்­ப­தா­யி­ரத்­திற்கும் மேற்­பட்ட மாணவ, மாண­விகள் இன்­றைய காலைக் கூட்­டத்­தின்­போது போதைப்­பொருள் பற்­றிய உறுதி மொழியை வழங்­கி­யதன் பின்­னரே போதைப்­பொருள் ஒழிப்பு வாரத்தின் அங்­கு­ரார்ப்­பண நிகழ்வு ஜனா­தி­பதி தலை­மையில் முல்­லைத்­தீவு முள்­ளி­ய­வளை வித்­தி­யா­னந்தா மகா வித்­தி­யா­ல­யத்தில் ஆரம்­ப­மா­னது.

ஒட்­டு­மொத்த நாட்­டுக்கும் அச்­சு­றுத்­த­லாக விளங்கும் போதைப்­பொருள் பாவ­னையை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கும் ஒழிப்­ப­தற்கும் ஜனா­தி­ப­தி­யினால் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் வேலைத்­திட்­டத்தில் மாண­வர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ள­துடன், அதற்­க­மைய போதைப்­பொருள் ஒழிப்பு பாட­சாலை வாரம் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

ஜன­வரி மாதம் 21ஆம் திகதி போதைப்­பொருள் ஒழிப்பு தொடர்பில் விழிப்­பூட்டும் செய­ல­மர்­வுகள் வகுப்­ப­றை­களில் மேற்­கொள்­ளப்­பட்­ட­துடன், 22ஆம் திகதி பெற்­றோர்­களை பாட­சா­லைக்கு வர­வ­ழைத்து போதைப்­பொருள் தடுப்பு பற்றி விழிப்­பு­ணர்­வூட்டும் செய­ல­மர்­வுகள், 23ஆம் திகதி போதைப்­பொருள் தொடர்­பி­லான சட்ட நட­வ­டிக்­கைகள் பற்­றிய தெளி­வு­ப­டுத்தும் செய­ல­மர்­வு­களும் இடம்­பெ­ற­வுள்­ளன.

ஜன­வரி 24ஆம் திகதி போதைப்­பொருள் தொடர்பில் அர­சியல் பிர­தி­நி­தி­களை தெளி­வூட்டும் செய­ல­மர்­வு­களும், ஜன­வரி 25ஆம் திகதி ஊட­கங்­களின் வாயி­லாக பாட­சா­லை­க­ளுக்கு உள்­ளேயும் வெளி­யேயும் போதைப்­பொருள் தடுப்பு தொடர்­பி­லான தக­வல்­களை வழங்கும் நிகழ்­வு­களும், ஜன­வரி 26ஆம் திகதி தனியார் தொண்டு நிறு­வ­னங்­களால் மேற்­கொள்­ளப்­படும் போதைப்­பொருள் ஒழிப்பு வேலைத்­திட்­டங்கள் உள்­ள­டக்­கிய நிகழ்­வு­களும் இடம்­பெ­ற­வுள்­ளன. அத்­துடன் ஜன­வரி 27ஆம் திகதி வணக்­கஸ்­த­லங்கள் மற்றும் அற­நெறி பாட­சா­லை­களில் போதைப்­பொருள் ஒழிப்பு தொடர்பில் விழிப்­பு­ணர்­வூட்டும் வேலைத்­திட்­டங்கள் நடை­பெ­ற­வுள்­ளன.

தொடர்ந்தும் ஜனா­தி­பதி இங்கு கருத்து வெளி­யி­டு­கையில், சமூ­கத்­திற்கு செய்­தி­களைக் கொண்டு செல்லும் சிறந்த தூது­வர்­களை பாட­சாலை மாண­வர்­க­ளே­யாவர். இதனால் போதைப்­பொருள் ஒழிப்பு வேலைத்­திட்­டத்­தின்­போது பாட­சாலை மாண­வர்­களின் பங்­க­ளிப்பை பெற்­றுக்­கொள்ள வேண்­டி­யது முக்­கி­ய­மாகும் என்றார்.

இந் நிகழ்­வின்­போது, கிளி­நொச்சி மற்றும் முல்­லைத்­தீவு மாவட்­டங்­களில் வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்ட 11 பாட­சா­லை­களின் புனர் நிர்­மாணப் பணி­க­ளுக்­கான ஆரம்ப செல­வு­க­ளுக்­கான நிதியை வழங்­குதல், முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் சுத்­த­மான குடிநீர் வச­திகள் இல்­லாத 13 பாட­சா­லை­க­ளுக்கு குடிநீர் வச­தி­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான நிதி­யு­தவி வழங்கும் நிகழ்வு உள்­ளிட்ட பல வேலைத்­திட்­டங்கள் ஜனா­தி­ப­தி­யினால் மேற்­கொள்­ளப்­பட்­டன.

யாழ்ப்­பாணம், முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி, மன்னார் மாவட்­டங்­களில் இரா­ணு­வத்­தி­னரின் கட்­டுப்­பாட்டின் கீழ் இருந்து வந்த சுமார் 264 ஏக்கர் தனியார் காணி­களும் அர­சாங்­கத்தின் கீழ் இருந்த நான்கு பண்­ணை­க­ளுக்குச் சொந்தமான 1099 ஏக்கர் காணிகளையும் விடுவிப்பதற்கான சான்றுப் பத்திரங்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவால் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், ஜனாதிபதி குறித்த ஆவணங்களை மாவட்ட செயலாளர்களிடம் கையளித்தார்.

அமைச்சர்களாகிய தயா கமகே, ரிஷாட் பதியுதீன், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் மாவட்ட செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை பிரதானிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.