சிலைகளை தாக்கியோரை நீதியின் முன் நிறுத்துங்கள்

0 686

இஸ்லாம் தீவி­ர­வா­தத்தை ஒரு­போதும் அனு­ம­திக்­க­வில்லை. மாவ­னெல்­லையில் இடம்­பெற்ற புத்­தர்­சி­லைகள் சேத­மாக்­கப்­பட்ட சம்­ப­வங்கள் போன்­ற­ன­வற்றை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. இச்­சம்­ப­வங்கள் தொடர்பில் குற்­றபு­ல­னாய்வுப் பிரிவு தீர விசா­ரித்து சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை நீதியின் முன்­நி­றுத்த வேண்டும். அவர்கள் யாராக இருந்­தாலும் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும்.  நாட்டின் பாது­காப்­பிற்கும் மக்­க­ளின சக வாழ்­விற்கும் தீவி­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்கும் உலமா சபை தொடர்ந்தும் ஒத்­து­ழைப்பு வழங்கும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை, பாது­காப்பு செய­லாளர் ஹேம­சிரி பெர்­ணாந்­து­விடம் உறு­தி­ய­ளித்­துள்­ளது.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை­யி­னது தலை­மை­யி­­லான பிர­தி­நி­திகள் குழு­வொன்று கடந்த சனிக்­கி­ழமை பாது­காப்பு செய­லாளர் ஹேம­சிரி பெர்­ணாந்­துவை அவ­ரது காரி­யா­ல­யத்தில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­துடன் முஸ்லிம் சமூ­கத்தின் தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ரான நிலைப்­பா­டு­களை விளக்­கி­யது.

இக் குழுவில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி,   உத­விச்­செ­ய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். தாஸிம், ஊடக செய­லாளர் பாஸில் பாரூக் மற்றும் ரபீக் (எக்ஸ்போ லங்கா), மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகி­யோரும் இடம்­பெற்­றி­ருந்­தனர்.

பாது­காப்பு செய­லாளர் ஹேம­சிரி பெர்­ணாந்து உட­னான கலந்­து­ரை­யாடல் தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி கருத்து தெரி­விக்­கையில்;

‘ஐ.எஸ். தீவி­ர­வாத அமைப்­பினை நாம் எதிர்க்­கிறோம்’. அந்த அமைப்பின் செயற்­பா­டுகள் இஸ்­லாத்­துக்கு முர­ணான தென்று உலகில் உலமா சபையே முதன் முதல் சிவில் சமூக அமைப்­பு­க­ளுடன் இணைந்து பிர­க­டனம் ஒன்­றினை வெளி­யிட்­டது. இலங்­கையில் ஐ.எஸ். தீவி­ர­வாதம் இல்லை என்­பது புல­னாய்வு பிரி­வி­னரின் தக­வல்கள் மூலம்  இதற்கு முன்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்­பதையும் பாது­காப்பு செய­லா­ள­ருக்குத் தெளி­வு­ப­டுத்­தினோம்.

இஸ்லாம் தீவி­ர­வா­தத்தை எதிர்க்­கி­றது. அதனை ஒரு­போதும் அனு­ம­திப்­ப­தில்லை. உலமா சபை நாட்டின் பாது­காப்­புக்­காக தொடர்ந்தும் ஒத்­து­ழைப்பு வழங்கி வரு­கி­றது. அனைத்து இன மக்­க­ளி­டையே சக­வாழ்­வினை உறுதி செய்ய வேலைத் திட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. விழிப்­பு­ணர்வு நிகழ்ச்­சிகள் தொட­ராக இடம்­பெ­று­கின்­றன.

இந்தப் பணி­களில் சிவில் சமூக அமைப்­பு­களும், தரீக்­காக்­களும், இஸ்­லா­மிய நிறு­வ­னங்கள் மற்றும் ஏனைய அமைப்­பு­களும் எமக்கு உதவி செய்­கின்­றன என்­ப­தனை தெளி­வு­ப­டுத்­தினோம். தேசிய நல்­லி­ணக்­கத்­தையும் ஒரு­மைப்­பாட்­டி­னையும் இனங்­க­ளுக்கு இடையில் நல்­லு­ற­வி­னையும் வளர்ப்­ப­தற்­காக நாம் அஸ்­கி­ரிய, மல்­வத்த பீடா­தி­ப­திகள் மற்றும் பௌத்த மதத் தலை­வர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டல்­களை நடத்தி வரு­வ­தா­கவும் தெரி­வித்தோம்.

அனர்த்­தங்­களின் போது இன, மத வேறு­பா­டு­க­ளின்றி அனைத்து மக்­க­ளுக்கும் உத­வி­களை நல்கி வரு­கிறோம் என்­ப­த­னையும் தெரி­வித்தோம்.

தீவி­ர­வா­தத்தை வன்­மை­யாகக் கண்­டிக்­கிறோம். மாவ­னெல்லை பகு­தியில் புத்தர் சிலைகள் சேத­மாக்­கப்­பட்­ட­மையை நாம் உட­ன­டி­யாகக் கண்­டித்தோம். இதன் பின்­ன­ணியில் உள்­ள­வர்கள் கைது செய்­யப்­பட்டு அவர்கள் யாராக இருந்­தாலும் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட்டு தண்­டிக்­கப்­பட வேண்டும். இஸ்லாம் தீவி­ர­வா­தத்தை அனு­ம­திக்­க­வில்லை. சக­வாழ்­வி­னையும் இனங்­க­ளுக்கு இடையிலான புரிந்துணர்வுகளையுமே இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது என்றும் தெரிவித்தோம் என்றார்.

பாதுகாப்பு செயலாளருக்கு உலமா சபையின் வெளியீடான ‘சமாஜ சங்வாதய’ என்ற நூல் பொதியும் கையளிக்கப்பட்டது.

சந்திப்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் உட்பட பாதுகாப்பு செயலகத்தின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.