பிரபல பாடகர் மொஹிதீன் பேக்கின் புதல்வரும் பாடகருமான இஷாக் பேக்கின் மருத்துவ செலவுகளுக்காக அரசாங்கம் ரூபா. ஒரு மில்லியன் நிதியை வழங்கியுள்ளது.
புத்த சாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி எச்.சுனில் செனவி, அண்மையில் நாட்டின் பிரபல மூத்த பாடகர் இஷாக் பேக்கை கொலன்னாவையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
சுகவீனமுற்றுள்ள நிலையில் சில மாதங்களாக இஷாக்பேக் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.இவரைப் பார்ப்பதற்காக சென்ற அமைச்சர் சுனில் செனவி அவருடன் கலந்துரையாடி சுகநலன்களை கேட்டறிந்ததுடன் இஷாக்பேக்கின் மருத்துவ செலவுகளுக்காக ஒரு மில்லியன் ரூபா காசோலையையும் வழங்கினார்.
இவரது சிகிச்சைக்குத் தேவையான 10 மில்லியன் ரூபா சினிமா கலைஞர்கள் தனிநபர்கள், ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகளால் சேகரித்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli