இலங்கையில் பைத்துல்மால் நிதியத்தை ஆரம்பிக்க அனுமதிக்க கோரி சபையில் தனிநபர் பிரேரணை

ஹிஸ்புல்லாஹ் எம்.பி. சமர்ப்பிப்பு; ஒழுங்கு பத்திரத்தில் உள்ளீர்ப்பு

0 45

இலங்­கையில் பைத்­துல்மால் நிதி­ய­மொன்றை உரு­வாக்க அங்­கீகாரம் தரு­மாறு தனி­நபர் பிரே­ரணை ஒன்று பாரா­ளு­மன்­றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிர­தித்­த­லை­வரும் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்­புல்­லாஹ்­வினால் சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் பா.56/2025 இலக்க பாரா­ளு­மன்ற விஷேட ஒழுங்குப்பத்­தி­ரத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. குறித்த பிரே­ரணை தொடர்பில் கருத்து வெளி­யிட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹிஸ்­புல்லாஹ், ‘பைத்­துல்மால் நிதியம்’ என்ற பெய­ரி­லான நிதியம் உல­கி­லுள்ள முஸ்லிம் நாடுகள் மற்றும் முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யி­ன­ராக வாழ்­கின்ற நாடு­க­ளிலும் பல ஆண்­டு­கா­ல­மாக இயங்­கி­வ­ரு­கி­றது.

இலங்­கையில் வாழ்­கின்ற முஸ்லிம் மக்­களின் கல்வி, கலாசாரம், தொழில் மற்றும் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான ஒத்­து­ழைப்பு சம்­பந்­தப்­பட்ட பிரச்­சி­னைகள் மற்றும் அன்­றாட வாழ்­வா­தா­ரத்தை பூர்த்தி செய்­வ­தற்­கான ஒரு நிதியம் தற்­ச­மயம் முஸ்லிம் சமய, கலா­சார அலு­வ­லக திணைக்­க­ளத்தில் இல்­லாமல் உள்­ளது.

இலங்­கை­யிலும் இவ்­வா­றான­தொரு நிதியம் ஆரம்­பிக்­கப்­ப­டு­மானால் பல்­வேறு உத­வித்­திட்­டங்­களை வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து பெற்­றுக்­கொள்­ள­மு­டியும்.

முஸ்லிம் சமய, கலாச்­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் கீழ் “இலங்கை பைத்­துல்மால் நிதியம்” என்ற பெயரில் நிதியம் ஒன்றை ஆரம்­பிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு தெடர்ந்தும் கோரிக்கை விடுத்து வரு­கின்­றேன். அத்­துடன், நிதி­யத்தை ஆரம்­பிப்­ப­தற்கு தேவை­யான நிதி­யினை வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து பெற்­றுத்­தர தயா­ரா­கவும் இருக்­கின்றேன்.

அதே­போன்று, பா.56/2025 இலக்க பாரா­ளு­மன்ற விஷேட ஒழுங்குப் பத்­தி­ரத்தின் மூலமும் இது அச்­சி­டப்­பட்டு வெளியிடப்பட்டுள்ளதுடன், இப்பிரேரணைக்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இன, மத, கட்சி வேறுபாடுகளுக்கப்பபால் ஆதரவளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.