இவ்வருடம் ஹஜ் யாத்திரை மேற்கொண்ட ஹாஜிகள், தங்களின் பயண ஏற்பாடுகளை மேற்கொண்ட முகவர்கள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் அவற்றை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னதாக பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாகவோ, தபால் அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ இந்த முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் மற்றும் இலங்கை ஹஜ் உம்ரா குழு தலைவர் ரியாஸ் மிஹுலார் ஆகியோர் நேற்று அறிவிப்பொன்றை விடுத்திருந்தனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஹஜ் முகவர்களூடாக 2025 ஆம் ஆண்டு ஹஜ் கடமையினை நிறைவேற்றியவர்கள் தாங்கள் பயணித்த முகவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் ஏதேனும் இருப்பின் தகுந்த ஆதரங்களுடன் நேரடியாக, தபால் மூலமாக அல்லது மின்னஞ்சல் மூலமாக “பணிப்பாளர்” முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலக்கம் 180, டீ.பி.ஜாயா மாவத்தை, கொழும்பு 10 என்ற முகவரிக்கு 2025.07.15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், [email protected], [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிகளுக்கும் முறைப்பாடுகளை அனுப்பி வைக்க முடியும் எனவும் அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. – Vidivelli