மேற்குக் கரை பகுதியிலுள்ள ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசத்தில் இன்று காலை தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள இஸ்ரேலிய இராணுவத்தினர், பலஸ்தீனர்கள் மீதான கைது வேட்டையையும் ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் ஹெப்ரோனில் குறைந்தது 11 பேரைக் கைது செய்துள்ள இஸ்ரேலிய இராணுவம், பல நகரங்களுக்கான நுழைவாயில்களை மூடி சுற்றுவளைப்புகளை மேற்கொண்டுள்ளது.
ரமல்லாவின் வடமேற்கே மேலும் ஐந்து பேரை கைது செய்துள்ளதுடன், நப்லஸில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனிடையே, துல்கரேமுக்கு கிழக்கே அக்தாபா புறநகர்ப் பகுதியில் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்போது இரு இளைஞர்களை இஸ்ரேலிய இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.
அத்துடன், ஜெனினுக்கு தெற்கே உள்ள காஃப்ர் ராய் பகுதியில் மேலும் பல கைதுகள் பதிவாகியுள்ளன. மேலும், பெத்லகேமின் தெற்கே உள்ள தீஷே அகதிகள் முகாமில் மற்றொரு சுற்றுவளைப்பு சோதனையும் இடம்பெற்றுள்ளது. – Vidivelli