ட்ரம்பும் அவருடைய நிர்வாகமும் இஸ்ரேலிய தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், காஸா மீதான போரை முடிவுக்கு கொண்டுவர தாம் முன்னுரிமையளிப்பதாகவும் வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
இந்த யுத்தத்தில் இஸ்ரேல் மற்றும் காஸாவின் காட்சிகளை பார்க்கும்போது இதயம் நொறுங்கி மன வேதனையை தருகிறது. எனவே, ஜனாதிபதி ட்ரம்ப் இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறார். அவர் உயிர்களை காப்பாற்ற விரும்புகிறார் என லீவிட் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அடுத்த வாரம் வெள்ளை மாளிகையில் இடம்பெறும் பேச்சுவார்த்தையொன்றில் கலந்துகொள்வதற்காக இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு அமெரிக்கா செல்லவுள்ளதாக ஏ.பி. செய்தி முகவர் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நெதன்யாகுவின் நெருங்கிய சகபாடியான இஸ்ரேலிய அமைச்சர் ராட் டெர்மர் இந்த வாரம் வொஷிங்டன் சென்று, காஸா போர் நிறுத்தம், ஈரான் விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli