இஸ்ரேலுக்கு ஆயுதம் விற்கும் நிறுவனங்களுடனான வணிகத்தை நிறுத்தியது நோர்வே நிதியம்

0 68

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்கும் இரண்டு நிறுவனங்களுடனான வணிக தொடர்புகளை இனி மேற்கொள்ளப்போவதில்லை என நோர்வேயின் மிகப்பெரிய ஓய்வூதிய நிறுவனமொன்று அறிவித்துள்ளது.

இந்த ஆயுதங்கள் பலஸ்தீனர்களுக்கு எதிராக காசா மீது பயன்படுத்தப்படலாம் என்பதனால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக நோர்வேயின் ஓய்வூதிய நிதியமான KLP குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்திற்கு உபகரணங்களை விற்கும் Oshkosh Corporation மற்றும் ThyssenKrupp ஆகிய நிறுவனங்களுடனான வணிக உறவுகளை முறித்துக்கொள்வதாகவே அந்நிதியம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட Oshkosh நிறுவனம் லொறிகள் மற்றும் இராணுவ வாகனங்களை உற்பத்தி செய்கிறது. அத்துடன், ThyssenKrupp நிறுவனமானது மின்னுயர்த்தி, தொழிற்துறை இயந்திரங்கள், போர் கப்பல்கள் உள்ளிட்ட பரந்தளவிலான தயாரிப்புகளை உற்பத்தி செய்கின்றன.

கடந்த 2024 ஜூன் மாதம் முதல், பெயர் குறிப்பிடப்பட்ட நிறுவனங்கள் இஸ்ரேல் இராணுவத்திற்கு ஆயுதங்கள் அல்லது உபகரணங்களை விநியோகிப்பதாகவும் அவை காஸாவில் பயன்படுத்தப்படுவதாகவும் ஐ.நா.வின் அறிக்கைகள் மூலம் அறிந்துகொண்டதாக KLP நிதியத்தின் முதலீடுகள் விவகாரத்துக்கு பொறுப்பான தலைவர் சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.