வடக்கிலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேற்றிய முஸ்லிம்கள் விடயத்திலும் கரிசனை செலுத்துங்கள்

உயர்ஸ்தானிகரிடம் வடக்கு சிவில் சமூகம் எடுத்துரைப்பு

0 33

தமி­ழீழ விடு­தலைப் புலி­களால் முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டமை குறித்தும் அதன் விளை­வாக இடம்­பெ­யர்ந்த முஸ்லிம் மக்கள் முகங்­கொ­டுத்து வரும் நெருக்­க­டிகளில் ஐக்­கிய நாடுகள் ஸ்தாபனம் கரி­சனை செலுத்த வேண்டும் என மனித உரி­மைகள் உயர்ஸ்­தா­னிகர் வோல்கர் டேர்க்­கிடம் வடக்கின் சிவில் சமூக பிர­தி­நி­திகள் எடுத்­து­ரைத்­தனர்.

அத்­துடன், வடக்கில் இருந்து வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்கள் மீளக்­கு­டி­ய­மர்த்­தப்­பட வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தினார்.

அர­சாங்­கத்தின் அழைப்­பின்­பேரில் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு கடந்த திங்­கட்­கி­ழமை நாட்­டுக்கு வருகை தந்த ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் உயர்ஸ்­தா­னிகர் வோல்கர் டேர்க் நேற்று புதன்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்­தி­ருந்தார்.

இந்த விஜ­யத்தின் ஓரங்­க­மாக சிவில் சமூக பிர­தி­நி­திகளை சந்தித்து கலந்­து­ரை­யா­டலில் ஈடு­பட்டார்.

இதன்­போதே வடக்­கி­லி­ருந்து 1990 ஆம் ஆண்­டு­க­ளிலும் அதற்கு முற்­பட்ட காலங்­க­ளிலும் புலி­களால் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்கள் தொடர்பில் கரி­சனை செலுத்­து­மாறு சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.