துல் ஹிஜ்ஜா 9 வது நாளே அறபா தினம்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பத்வா

0 60

துல் ஹிஜ்ஜா 09 வது தினம் அறபா தினம். அது ஹாஜிகள் அற­பாவில் ஒன்று சேர்­வதைக் கொண்டு தீர்­மா­னிக்­கப்­ப­டு­வ­தில்லை என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தெரி­வித்­துள்­ளது.

அத்­துடன், பிறை மாதக் கணிப்­பீட்டைக் கொண்டே தீர்­மா­னிக்­கப்­படும். இதுவே பெரும்­பான்­மை­யான அறி­ஞர்­க­ளதும் ஃபத்வா அமைப்­புக்­க­ளதும் நிலைப்­பா­டாகும் என்றும் உலமா சபை மேலும் தெரி­வித்­துள்­ளது.

இலங்­கையில் அற­பா­வு­டைய நோன்பு நோற்­பது பற்­றிய மார்க்க விளக்கம் என்ன? என்­பது தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் ஃபத்வா குழு 2018 ஆம் ஆண்டு வெளி­யிட்ட ACJU/FTW/2018/21-342 அறிக்­கையை நேற்றை தினம் மீளவும் வெளி­யிட்­டி­ருந்­தது.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
துல் ஹிஜ்ஜஹ் மாதத்­து­டைய ஆரம்ப பத்து நாட்­க­ளிலும் நல்­ல­மல்கள் செய்­வது வேறு நாட்­களில் நல்­ல­மல்கள் செய்­வதை விடவும் சிறந்­தது என்று ஹதீஸ்­களில் வந்­துள்­ளது.
இப்னு அப்பாஸ் ரழி­யல்­லாஹு அன்­ஹுமா அவர்கள் அறி­விக்­கின்­றார்கள்:

‘(துல்ஹஜ்) பத்து நாட்­களில் செய்யும் நல்­ல­மல்கள் ஏனைய நாட்­களில் செய்யும் நல்­ல­மல்­களை விட சிறந்­த­தாகும் என்று நபி ஸல்­லல்­லாஹு அலை­ஹி­வ­ஸல்லம் கூறி­னார்கள். ‘ஜிஹாதை விட­வுமா’? என்று நபித் தோழர்கள் கேட்­டனர். ‘தன் உயி­ரையும் பொரு­ளையும் பணயம் வைத்துப் புறப்­பட்டு இரண்­டையும் (இறை­வ­ழியில்) இழந்­து­விட்­டவன் செய்த ஜிஹாதைத் தவிர’ என்று நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி­னார்கள். (ஸஹீஹுல் புகாரி : 969)

அதே போன்று நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துல் ஹிஜ்ஜஹ் மாதத்தில் ஆரம்ப 09 நாட்­க­ளிலும் நோன்பு நோற்­றுள்­ளார்கள் என்ற ஹதீஸ் முஸ்னத் அஹ்மத் மற்றும் அபூ­தாவூத் போன்ற கிரந்­தங்­களில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.
இவ்­வாறே குறிப்­பாக பிறை 09ஆம் நாளில் நோற்­கப்­படும் அறபா நோன்­பிற்கும் பல சிறப்­புக்கள் உள்­ளன. ஸஹீஹ் முஸ்­லிமில் பதி­வா­கி­யுள்ள பின்­வரும் ஹதீஸ் இதற்கு சான்­றாகும்.

நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்­க­ளிடம் அற­பா­வு­டைய நாளில் நோற்­கப்­படும் நோன்பு பற்றிக் கேட்­கப்­பட்ட பொழுது அது சென்ற வருடம் மற்றும் இவ்­வ­ருடம் செய்த பாவங்­க­ளுக்கு குற்றப் பரி­கா­ர­மா­கவும் ஆகி­விடும் என்று கூறி­னார்கள். (ஸஹீஹு முஸ்லிம் -1162)

ஹஜ்ஜுக் கட­மையை நிறை­வேற்றச் சென்­ற­வர்கள் துல் ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 09ஆம் நாள் (ஹஜ்ஜுப் பெரு­நா­ளுக்கு முன்­னைய தினம்) அறபா மைதா­னத்தில் தரித்­தி­ருப்­பது ஹஜ்­ஜு­டைய கட­மை­களில் ஒன்­றாகும். ஹஜ்­ஜுக்குச் செல்­லா­த­வர்கள் அன்­றைய தினம் நோன்பு நோற்­பது சுன்­னத்­தாகும்.

சில அறி­ஞர்கள் மக்­காவில் ஹாஜிகள் அற­பாவில் ஒன்­று­கூ­டு­வதை வைத்து, அதே தினத்தில் ஏனைய நாடு­க­ளிலும் அறபா நோன்பு நோற்­கப்­பட வேண்டும் என்று கரு­து­கின்­றனர். உள்­நாட்டு பிறையின் அடிப்­ப­டையில் மாதத்தை தீர்­மா­னிப்­ப­வர்­க­ளுக்கு மத்­தி­யிலும் இந்த சந்­தேகம் காணப்­ப­டு­கின்­றது.

மக்­காவில் ஹாஜிகள் அற­பாவில் பிறை 09ஆம் நாளில் தரிப்­பதும் ஏனைய நாடு­களில் பிறை 09ஆம் நாளன்று அறபா நோன்பு நோற்­பதும் பிறை மாதம் ஆரம்­ப­மா­கு­வதை அடிப்­ப­டை­யாக வைத்து வேறு­ப­டலாம். இதுவே பெரும்­பான்­மை­யான மார்க்க அறி­ஞர்­களின் நிலைப்­பா­டாகும்.

புவி­யி­யலின் அடிப்­ப­டையில் பார்க்கும் போது பிராந்­தி­யத்­துக்குப் பிராந்­தியம் நேரங்கள் வேறு­ப­டு­வதால் நாட்­களின் ஆரம்­பமும் வேறு­ப­டு­கின்­றது என்­பது யாவரும் அறிந்த விடயம். அவ்­வாறே மாதங்­களின் ஆரம்­பமும் வேறு­படும். எனவே, மக்­காவில் ஹாஜிகள் அறபா தினத்தில் தரித்து நிற்கும் நேரத்தில், முழு உலக நாடு­க­ளிலும் அதே நேரம் காணப்­ப­டு­வது சாத்­தி­ய­மற்­ற­தாகும்.

ஏனெனில், மக்­காவில் பிறை தென்­ப­டு­வ­தற்கு முன்­னைய நாள் அல்­லது அடுத்த நாள் வேறு பகு­தி­களில் பிறை தென்­ப­டு­வ­தற்கு வாய்ப்­புள்­ளது என்­பதை யாவரும் அறிவர். அந்த வகையில் மக்­காவில் 09 ஆவது தின­மாக இருக்கும் பொழுது ஏனைய பகு­தி­களில் பிறை 08 ஆக அல்­லது 10ஆக இருக்கும். எனவே, மக்­காவை மைய­மாக வைத்து நோன்பு நோற்றால் அதற்கு முன்­னைய தினம் பிறை தென்­பட்ட பகு­தி­களில் உள்­ள­வர்­க­ளுக்கு 10 ஆம் நாளாக இருக்கும். அன்­றைய தினம் அவர்­க­ளுக்குப் பெரு­நா­ளாகும். அத்­தி­னத்தில் நோன்பு நோற்­பது ஹரா­மாகும்.

மக்­காவில் அமைந்­துள்ள றாபி­தாவின் இஸ்­லா­மிய பிக்ஹ் ஒன்­றியம் உட்­பட, பெரும்­பான்­மை­யான மார்க்க அறி­ஞர்­களின் நிலைப்­பாடும், பிராந்­தி­யங்­களில் பிறை தென்­ப­டு­வதில் உள்ள வேறு­பாட்­டுக்­கேற்ப இஸ்­லா­மிய மாதங்­களின் ஆரம்பம் நாட்­டுக்கு நாடு வேறு­படும் என்­ப­தாகும். இது குறிப்­பிட்ட ஓரிரு மாதங்­க­ளுக்கு மாத்­திரம் என்­றில்­லாமல் 12 மாதங்­க­ளுக்கும் இதுவே அடிப்­ப­டை­யாகக் கொள்­ளப்­படும் என்­பது இவர்­க­ளது நிலைப்­பா­டாகும்.

இதற்கு பின்­வரும் அடிப்­ப­டைகள் ஆதா­ரங்­க­ளாக உள்­ளன:
அல்­லாஹு தஆலா அல்-­குர்­ஆனில் ‘உங்­களில் றமழான் மாதத்தை யார் அடை­கின்­றாரோ அவர் நோன்பு நோற்­கட்டும்’ (02:185) என்று கூறு­கிறான். இதன் விளக்கம் யாதெனில், உங்­களில் ரமழான் மாதத்தை அடை­யா­த­வர்கள் (ரமழான் மாதத்­துக்­கான பிறை தென்­பட்­ட­தாக அறி­விக்­கப்­ப­டாத பகு­தி­களில்) நோன்பு நோற்கத் தேவை­யில்லை என்­ப­தாகும்.

மேலும், நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் ‘நீங்கள் பிறையைக் கண்டால் நோன்பை ஆரம்­பி­யுங்கள், பிறையைக் கண்டால் நோன்பை விடுங்கள்’ என்று கூறி­யுள்­ளார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹு முஸ்லிம்) இதன் விளக்­கமும் நீங்கள் பிறையைக் காணா­விட்டால் நோன்பு நோற்க வேண்டாம் என்­ப­தாகும்.

இன்னும், ஸஹீஹு முஸ்­லிமில் பதி­வா­கி­யுள்ள சம்­ப­வத்தில், குரைப் ரஹி­ம­ஹுல்லாஹ் அவர்கள் ஷாம் தேசத்­தி­லி­ருந்து மதீனா வந்­த­பொ­ழுது, ஷாம் தேசத்தில் றமழான் மாதம் ஆரம்­பித்­த­தற்கும் மதீ­னாவில் ஆரம்­பித்­த­தற்கும் ஒரு நாள் வித்­தி­யாசம் இருந்­ததைக் கண்ட, இப்னு அப்பாஸ் ரழி­யல்­லாஹு அன்­ஹுமா அவர்கள் நாங்கள் மதீ­னாவில் பிறை கண்­டதன் அடிப்­ப­டையில் தான் நோன்பை நோற்றோம். அதன் அடிப்­ப­டை­யி­லேயே நோன்பை விடுவோம். ஷாம் தேசத்தில் றமழான் மாத ஆரம்பம் வித்­தி­யா­ச­மாக இருந்­தாலும் சரியே. நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் இவ்­வாறே எமக்கு ஏவி­னார்கள் என்று கூறி­னார்கள்.

இந்த ஹதீஸும் பிராந்­தி­யத்­துக்குப் பிராந்­தியம் பிறை மாத ஆரம்பம் வித்­தி­யாசம் அடையும் என்­பதை தெளி­வாக சுட்­டிக்­காட்­டு­கின்­றது.

எனவே, இவற்றின் அடிப்­ப­டையில் தலைப்­பிறை தென்­ப­டு­வ­தற்­கேற்ப நாட்­டுக்கு நாடு அறபாவுடைய தினம் வேறுபடும் என்பதால், இலங்கை நாட்டில் துல் ஹிஜ்ஜாவின் ஒன்பதாம் தினமே, இலங்கையில் அறபாவுடைய சுன்னத்தான நோன்பு நோற்கும் தினமாகும்.

இக்கருத்தையே அறபா நோன்பு விடயத்தில் அஷ்-ஷைக் இப்னு உஸைமின் றஹிமஹுல்லாஹ் உட்பட பெரும்பான்மையான தற்கால மார்க்க அறிஞர்களும் தாருல் இப்தா, தாருல் உலூம் தேவ்பந்த் மற்றும் றாபிததுல் ஆலம் அல்-இஸ்லாமிய்யின் இஸ்லாமிய பிக்ஹ் ஒன்றியம் ஆகிய ஃபத்வா அமைப்பினர்களும் கொண்டுள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.