தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு திருத்த சட்டமூலம் ஜனநாயகத்துக்கு விரோதமானது

கபீர் ஹாசிம் சபையில் தெரிவிப்பு; ம.வி.மு.வினர் வித்தைக்காரர்கள் எனவும் சாடல்

0 56

(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)
மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் முற்­பி­ற­வியில் வித்­தைக்­கா­ரர்­க­ளாக இருந்­தி­ருப்­பார்­களா என்று தெரி­ய­வில்லை. ஏனெனில் சந்­தர்ப்­பத்­துக்கு ஏற்றாற் போல் (பல்டி) குத்­துக்­க­ரணம் அடிக்­கி­றார்கள். தனிப்­பட்ட தரவுப் பாது­காப்பு (திருத்தச்) சட்­ட­மூலம் ஜன­நா­ய­கத்­துக்கு விரோ­த­மா­ன­தாக அமையும் என்று ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கபீர் ஹாசிம் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்­று­முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற தரவுப் பாது­காப்பு (திருத்தச்) சட்­ட­மூலம் மீதான விவா­தத்தில் உரை­யாற்­று­கையில் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரை­யாற்­றி­ய­தா­வது,
தனிப்­பட்ட தரவுப் பாது­காப்பு (திருத்தச்) சட்­ட­மூலம் தொடர்பில் தொழில்­நுட்ப மட்­டத்தில் விசேட அவ­தானம் செலுத்­தப்­ப­டு­வதைப் போன்று ஜன­நா­யக அம்­சங்கள் குறித்தும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இன்று எதிர்க்­கட்­சியில் இருப்­ப­வர்கள் நாளை அர­சாங்­கத்­துக்கு வரலாம், அர­சாங்கம் எதிர்க்­கட்­சிக்கு செல்ல நேரிடும்.
2022 ஆம் ஆண்டு தனிப்­பட்ட தரவு பாது­காப்பு சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்­துக்கு முன்­வைக்­கப்­பட்ட போது தற்­போ­தைய ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க அன்று கடு­மை­யாக எதிர்ப்புத் தெரி­வித்தார்.தரவு பாது­காப்பு அதி­கா­ர­சபை ஒன்றை நிறு­வ வேண்டும்.இதற்­கான நிய­ம­னங்கள் அர­சி­ய­ல­மைப்பு பேர­வையால் வழங்­கப்­பட வேண்டும் என்று குறிப்­பிட்டு பல திருத்­தங்­களை முன்­வைத்தார்.

மக்கள் விடு­தலை முன்­னணி அன்று குறிப்­பிட்ட தரவு பாது­காப்பு அதி­கார சபை இன்று முன்­வைக்­கப்­பட்­டுள்ள தனிப்­பட்ட தரவுப் பாது­காப்பு (திருத்தச்) சட்­ட­மூ­லத்தில் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. இந்த சட்­ட­மூலம் ஜன­நா­ய­கத்­துக்கு முற்­றிலும் எதி­ரா­ன­தாக அமையும்.

மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் முற்­பி­ற­வியில் வித்­தைக்­கா­ரர்­க­ளாக இருந்­தி­ருப்­பார்­களா என்று தெரி­ய­வில்லை ஏனெனில் சந்­தர்ப்­பத்­துக்கு ஏற்றாற் போல் (பல்டி) குத்துக்கரணம் அடிக்கிறார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் குறிப்பிட்டது ஒன்று, தற்போது செய்வது பிறிதொன்று. இந்த சட்டமூலத்துக்கு பல திருத்தங்களை நாங்கள் முன்வைப்போம் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.