குச்சவெளி மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்தும் அனுமதியை கடற்படைக்கு வழங்கியது யார்?

வடக்கு, கிழக்கில் மாத்திரம் சுருக்கு வலை தடைக்கான காரணம் என்ன எனவும் இம்ரான் எம்.பி. சபையில் கேள்வி

0 48

(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)
குச்­ச­வெளி மீனவர் மீது துப்­பாக்கி சூடு நடத்தும் அனு­ம­தியை கடற்­ப­டைக்கு வழங்­கி­யது யார்? இது ­தொ­டர்பில் முழு­மை­யான விசா­ரணை மேற்­கொள்ள வேண்டும். அதே­வேளை, சுருக்கு வலைக்­கான அனு­ம­திப்­பத்­திரம் காலி, அம்­பாந்­தோட்டை, மாத்­தறை போன்ற பிர­தே­சங்­களில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற நிலையில் வடக்கு, கிழக்கில் மட்டும் இதற்கு ஏன் தடை என ஐக்­கிய மக்கள் சக்­தியின் திரு­கோ­ண­மலை மாவட்ட எம்.பி. இம்ரான் மஹ்ரூப் கேள்வி எழுப்­பினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை நடை­பெற்ற 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்­டத்தின் கீழான ஒழுங்­கு­வி­திகள் மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

குச்­ச­வெ­ளியில் செவ்­வாய்க்­கி­ழமை துப்­பாக்­கிச்­சூடு நடந்­துள்­ளது. மீன­வர்­க­ளுக்­கி­டை­யி­லான பிரச்­சி­னை­யாக காணப்­பட்ட நிலையில் அது துப்­பாக்கி சூட்டில் முடிந்­துள்­ளது. இதில் ஒரு இளைஞன் காய­ம­டைந்­துள்ளார். குச்­ச­வெளி ஜாயா நகர் பிர­தே­சத்தில் பள்­ளி­முனை பிர­தே­சத்தில் காணப்­ப­டு­கின்ற அய்­யூப்கான் ஐனூஸ் என்று சொல்­லப்­ப­டு­கின்ற 23 வயது இளை­ஞனே காய­ம­டைந்­துள்ளார்.

இந்த மீன­வர்­களின் பிரச்­சி­னை­களை நாம் இங்­குள்ள அமைச்­சர்­களின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­துள்ளோம். அத­ன­டிப்­ப­டையில் கடற்­தொழில் திணைக்­க­ளத்தால் முறை­யாக வழங்­கப்­பட்­டுள்ள சுருக்­கு­வலை அனு­ம­திப்­பத்­திரம் பெற்று மீன­வர்கள் தாக்­கப்­பட்­டுள்ள இந்த சம்­பவம் கண்­டிக்­கத்­தக்­கது.

இந்த சுருக்­கு­வலை அனு­ம­திப்­பத்­தி­ரத்­திலே குறிப்­பி­டப்­பட்­டுள்ள இந்த 7 மைல் நிபந்­தனை தான் பிர­தான கார­ண­மா­க­வுள்­ளது. இந்த நிபந்­தனை திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தைப்­பொ­றுத்­த­வரை குடாப்­ப­கு­தி­க­ளுக்கு பொருத்­த­மற்ற நிபந்­த­னை­யாக காணப்­ப­டு­கின்ற கார­ணத்­தி­னால்தான் இவ்­வா­றான பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­கின்­றன.

முஸ்­லிம்கள் ஹஜ்­ஜுப் ­பெ­ரு­நாளை எதிர்­கொள்­கின்ற இந்த நேரத்தில் அந்த பிர­தே­சத்தில் இருக்­கின்ற மீன­வர்கள் வரு­மா­னத்தை ஈட்­டிக்­கொள்­கின்ற வகையில் கட­லுக்கு செல்­கின்ற நிலையில், இவர்கள் தீவி­ர­வா­தி­க­ளாக, போதைப்­பொ­ருளை கடத்­து­ப­வர்­க­ளாக கருத்­தில்­கொண்டு தாக்­கப்­பட்­டுள்­ளார்கள். எனவே இந்த தாக்­குதல் தொடர்பில் முறை­யான விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும்.

இந்த மீனவர் மீது துப்­பாக்கி பிர­யோகம் மேற்­கொள்­வ­தற்­கான அனு­ம­தியை கடற்­ப­டை­யி­ன­ருக்கு யார் கொடுத்­தது? இந்த துப்­பாக்கி பிர­யோ­கத்தால் உயி­ரி­ழப்பு ஏற்­பட்­டி­ருக்­கு­மானால் நிலைமை என்ன? முன்னர் இந்த நிபந்­த­னையை மீனவர் மீறினால் கடற்­ப­டை­யினர் பொருட்­களை பறி­முதல் செய்­வார்கள். எச்­ச­ரிப்­பார்கள். ஆனால் இன்று துப்­பாக்கி சூடு நடத்தும் நிலைக்கு வந்­துள்­ளார்கள் இந்த சம்­பவம் அந்­தப்­பி­ர­தே­சத்தில் இன­வா­த­மா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றது.

சுருக்கு வலைக்­கான இந்த அனு­ம­திப்­பத்­திரம் காலி, அம்­பாந்­தோட்டை, மாத்­தறை போன்ற பிர­தே­சங்­களில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. ஆனால் இதனை வடக்கு, கிழக்கில் பயன்படுத்துகின்ற போது இந்த அனு­ம­திக்கு தடை என்ற நிலைப்­பாடு காணப்­ப­டு­கி­றது. நாட்­டிலே சுருக்கு வலைக்கு தடை என்றால் நாடு முழு­வதும் தடை செய்­யப்­பட வேண்டும். ஆனால் பிர­தேச ரீதி­யா­கவே தடை செய்­யப்­ப­டு­கின்­றது. அத­னால்தான் இதனை இன­வா­த­மாக பார்க்க வேண்டியுள்ளது என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.