ஹஜ் பெருநாளுக்காக கல்விக் கல்லூரி ஆசிரியர்களுக்கு வெள்ளிக்கிழமை அரைநாள் விடுமுறை வழங்க வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் பிரதமரிடம் கோரிக்கை

0 49

இலங்கை முஸ்­லிம்கள் எதிர்­வரும் சனிக்­கி­ழமை ஹஜ்ஜுப் பெரு­நாளைக் கொண்­டாட உள்­ளனர். இதற்­காக கல்விக் கல்­லூ­ரி­களில் கல்வி பயிலும் முஸ்லிம் ஆசி­ரியர் பயி­லு­னர்­க­ளுக்கு முதல் நாளான வெள்­ளிக்­கி­ழமை அரைநாள் விடு­முறை வழங்க ஏற்­பாடு செய்­யு­மாறு திரு­கோ­ண­மலை மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மகரூப் பிர­த­மரும், கல்வி அமைச்­ச­ரு­மான கலா­நிதி ஹரினி அம­ர­சூ­ரி­ய­விடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

பிர­த­மரை நேற்­று­ முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை நேரில் சந்­தித்த இம்ரான் எம்.பி. இது தொடர்­பான மகஜர் ஒன்றைக் கைய­ளித்தார். 7ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் தின­மாகும். வழ­மை­யாக வெள்­ளிக்­கி­ழமை மாலை வரை கல்விக் கல்­லூ­ரி­களில் போதனை செயற்­பா­டுகள் இடம் பெறு­கின்­றன. இதன் பின்னர் தூர இடங்­க­ளுக்குச் செல்லும் ஆசி­ரியர் பயி­லு­னர்­களால் அவர்­க­ளது இருப்­பி­டங்­க­ளுக்குச் செல்­வதில் இடர்­பா­டுகள் உள்­ளன.

எனவே, இதனைக் கருத்தில் கொண்டு கல்விக் கல்­லூ­ரி­களின் முஸ்லிம் ஆசி­ரியர் பயி­லு­னர்­க­ளுக்கு வெள்­ளிக்­கி­ழமை அரைநாள் விடு­முறை வழங்க ஏற்­பாடு செய்­யு­மாறு அவர் கோரிக்கை விடுத்­துள்ளார். இதனை செவி­ம­டுத்த பிரதமர் உரிய அதிகாரிகளோடு கலந்துரையடி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.