இஸ்லாமிய வரையறைகளுடன் நாட்டின் சட்டத்தை மதித்து உழ்ஹிய்யா கடமைகளை நிறைவேற்றுவோம்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டலில் வலியுறுத்து

0 28

இலங்கை முஸ்­லிம்கள் உழ்­ஹிய்யா கட­மையை நிறை­வேற்­றும்­போது இஸ்­லா­மிய நெறி­மு­றை­களை பின்­பற்றி நாட்டின் சட்­டங்­க­ளையும் மதித்து செயற்­பட வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தமது வழி­காட்­டலில் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஷ்வி, ஃபத்வாக் குழு பதில் செய­லாளர் அஷ்-ஷைக் எம்.டி.எம். ஸல்மான் இணைந்து வெளி­யிட்­டி­ருக்கும் குறித்த உழ்­ஹிய்யா வழி­காட்­டலில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
உழ்­ஹிய்யா என்­பது இஸ்­லாத்தில் முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒரு ஸுன்­னத்­தாகும். சில அறி­ஞர்கள் உழ்­ஹிய்யாக் கொடுப்­பது வாஜிப் என்றும் கூறி­யுள்­ளனர். உழ்­ஹிய்யாக் கொடுப்­பது பற்றி, அல்­லா­ஹு­த­ஆலா அல்-­குர்­ஆனில் “உம் இறை­வ­னுக்­காக நீர் தொழுது, குர்­பா­னியும் கொடுப்­பீ­ராக!” (108:02) என்று குறிப்­பிட்­டுள்ளான்.

ஆடு, மாடு, ஒட்­டகம் ஆகி­ய­வற்­றையே உழ்­ஹிய்­யா­வாகக் கொடுக்க வேண்டும் என்­பது மார்க்க அறி­ஞர்­களின் ஒரு­மித்த கருத்­தாகும். எமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில், ஒட்­டகம் கிடைக்­கப்­பெ­றா­மை­யினால் ஆடு அல்­லது மாட்­டையே உழ்­ஹிய்­யா­வாகக் கொடுக்க முடியும். அவை­யல்­லாத எதுவும் உழ்­ஹிய்­யா­வாக நிறை­வேறமாட்­டாது.
இவ்­வ­ணக்­கத்தை இஸ்லாம் கூறும் எல்­லா­வித நெறி­மு­றை­க­ளையும் பேணிச் செய்­வ­துடன், எமது நாட்டில் நடை­மு­றை­யி­லுள்ள விலங்குச் சட்டம் (Animal Act No. 29 of 1958) கூறும் விட­யங்­க­ளையும் கட்­டாயம் கவ­னத்திற் கொள்­ளு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை முஸ்­லிம்­களை வேண்டிக் கொள்­கின்­றது.

உழ்­ஹிய்­யா­வு­டைய அமல்­களை நிறை­வேற்­றுவோர் பின்­வரும் வழி­காட்­டல்­களைப் பின்­பற்­றுதல் வேண்டும்:

  1. உழ்­ஹிய்யா கொடுக்க நாட்­ட­முள்­ள­வர்கள் துல் ஹிஜ்ஜஹ் மாதம் பிறந்­த­தி­லி­ருந்து உழ்­ஹிய்யா கொடுக்கும் வரை உரோ­மங்­களை நீக்­கு­வ­தையும் நகங்­களை வெட்­டு­வ­தையும் தவிர்ந்து கொள்­வது ஸுன்­னத்­தாகும்.
  2. ஹஜ்ஜுப் பெருநாள் தினத்­தன்று சூரியன் உத­ய­மாகி பெருநாள் தொழு­கை­யையும், இரு குத்­பாக்­க­ளையும் நிகழ்த்­து­வ­தற்கு தேவை­யான நேரம் சென்­ற­தி­லி­ருந்து துல் ஹிஜ்ஜஹ் 13ஆம் நாள் சூரியன் மறையும் வரை உழ்­ஹிய்­யாவை நிறை­வேற்­றலாம்.
  3. ஓர் ஒட்­டகம் அல்­லது ஒரு மாட்டில் ஏழு நபர்கள் மாத்­தி­ரமே கூட்­டுச்­சேர முடியும். ஏழு நபர்கள் இணைந்து ஒரு மாட்­டையோ அல்­லது ஓர் ஒட்­ட­கத்­தையோ உழ்­ஹிய்­யா­வாக நிறை­வேற்­று­வதை விட, தனித்­த­னி­யாக ஒவ்­வொ­ரு­வரும், ஓர் ஆட்டை அல்­லது ஒரு மாட்டை அவ­ரவர் வச­திக்­கேற்ப உழ்­ஹிய்யா கொடுப்­பது ஏற்­ற­மா­ன­தாகும். இச்­சி­றப்­பினை அடைந்து கொள்ள ஒவ்­வொ­ரு­வரும் தனது சக்­திக்­கேற்ப முயற்­சிக்க வேண்டும்.
  4. பலர் ஒன்­று­சேர்ந்து கூட்­டாக உழ்­ஹிய்­யாவை நிறை­வேற்றும் போது பேணப்­பட வேண்­டிய ஒழுங்­குகள் பற்­றிய ஜம்­இய்­யாவின் வழி­காட்டல் இவ்­வி­ணைப்பில் காணப்­ப­டு­கின்­றது.
  5. மிரு­கங்­க­ளுக்கு எச்­சந்­தர்ப்­பத்­திலும் எவ்­வித நோவி­னை­யையும் கொடுப்­பது கூடாது.
  6. உழ்­ஹிய்­யா­வுக்­கான பிரா­ணி­களை அறுக்கும் வரை பிரா­ணி­க­ளுக்­கான தீனி கொடுக்­கப்­பட வேண்டும்.
  7. அறுப்­ப­தற்­காகப் பயன்­ப­டுத்தும் கத்­தியை நன்­றாகத் தீட்டி, கூர்­மை­யாக வைத்துக் கொள்ளல் வேண்டும்.
  8. ஒரு பிரா­ணியின் முன்­னி­லையில் இன்­னொரு பிரா­ணியை அறுப்­பதைத் தவிர்த்துக் கொள்ளல்.
  9. அறுப்­ப­தற்­காக பயன்­ப­டுத்­தப்­படும் இடத்தை சுத்­த­மாக வைத்துக் கொள்­வ­தோடு, அறுவைப் பிரா­ணியின் எலும்பு, இரத்தம் மற்றும் ஏனைய கழி­வுப்­பொ­ருட்­களை அகற்றும் போது சுகா­தார விதி­மு­றை­களைப் பேணிக் கொள்ள வேண்டும்.
  10. அறு­வைக்­காகப் பயன்­ப­டுத்­திய இடத்தில் கிருமி நாசி­னி­களைத் தெளித்து சுத்­தத்தை உத்­த­ர­வா­தப்­ப­டுத்தல் வேண்டும்.
  11. மஸ்­ஜிதைப் பாது­காப்­பதும் அதனைச் சுத்­த­மாக வைப்­பதும் எமது பொறுப்­பாகும். ஆகவே, உழ்­ஹிய்யாப் பிரா­ணி­களை அறுப்­ப­தற்கும் அத­னுடன் தொடர்­பு­டைய இதர தேவை­களை மேற்­கொள்­வ­தற்கும் மஸ்ஜித் மற்றும் அதை அண்­டி­யுள்ள தொழுகை நடை­பெறும் இடங்­களை பயன்­ப­டுத்­து­வதை முற்­றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
  12. அறுப்பு தொடர்­பான இஸ்­லா­மிய வழி­காட்­டலை பின்­பற்ற வேண்டும்.
  13. பல்­லி­னங்­க­ளோடு வாழும் நாம் பிற சமூ­கத்­த­வர்கள் வேத­னைப்­படும் வகை­யிலோ அல்­லது அவர்­க­ளு­டைய உணர்வு தூண்­டப்­படும் வகை­யிலோ நடந்து கொள்ளக் கூடாது.
  14. நாட்டின் மரபைப் பேணும் வகையில் பௌத்­தர்­களால் கண்­ணி­யப்­ப­டுத்­தப்­படும் போயா தினத்­தன்று உழ்­ஹிய்யா நிறை­வேற்­று­வதை கண்­டிப்­பாக தவிர்ந்து கொள்­வ­தோடு, ஏனைய நாட்­களை இதற்­காகப் பயன்­ப­டுத்திக் கொள்ளல்.
  15. நம் நாட்டின் சட்­டத்தை கவ­னத்திற் கொண்டு, மிரு­கத்தின் உரி­மைக்­கான சான்­றிதழ், மாட்டு விப­ரச்­சீட்டு, சுகா­தார அத்­தாட்சிப் பத்­திரம், மிரு­கங்­களை எடுத்துச் செல்­வ­தற்­கான அனு­மதிப் பத்­திரம் போன்ற ஆவ­ணங்­களை முன்­கூட்­டியே தயார்­ப­டுத்திக் கொள்ளல் வேண்டும்.
  16. அனு­ம­தி­யின்றி உழ்­ஹிய்­யா­வுக்­கான பிரா­ணி­களை வண்­டி­களில் ஏற்றி வரு­வ­தையும், அனு­மதி பெற்­ற­தை­வி­டவும் கூடு­த­லான எண்­ணிக்­கையில் எடுத்து வரு­வ­தையும் முற்­றிலும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
  17. உழ்­ஹிய்யா நிறை­வேற்­றப்­படும் போது படங்கள் அல்­லது வீடி­யோக்கள் எடுப்­பதை தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்­பாக, சமூக வலைத்­த­ளங்­களில் அவற்றை பகிர்ந்து கொள்­வதை கண்­டிப்­பாக தவிர்த்­து­கொள்ள வேண்டும்.

மேற்­கு­றித்த விட­யங்­களை உழ்­ஹிய்­யாவை நிறை­வேற்­றக் ­கூ­டி­ய­வர்கள் கடை­ப்பி­டித்து நடந்து கொள்­ளு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கின்றது.

அத்­துடன் மஸ்­ஜி­து­டைய இமாம்கள், கதீப்­மார்கள் உழ்­ஹிய்­யாவின் சிறப்­பையும், அவ­சி­யத்­தையும் முஸ்­லிம்­க­ளுக்கு எடுத்­து­ரைப்­ப­தோடு அதன் சட்ட திட்­டங்­க­ளையும், ஒழுங்கு முறை­க­ளையும் குறிப்­பாக மிருக அறுப்பை விரும்­பாத பல்­லி­னங்கள் வாழு­கின்ற சூழலில் அவர்­களின் உணர்­வுகள் பாதிக்­கப்­ப­டாத வண்ணம் முறை­யாக இக்­க­ட­மையை நிறை­வேற்­று­வது பற்­றியும் முஸ்­லிம்­க­ளுக்கு கட்­டாயம் தெளி­வு­ப­டுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கின்றது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.