அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாத விடயத்தில் அரசாங்கம் பொருத்தமான அணுகுமுறையை கையாள வேண்டும்

ஆளும் கட்சி எம்.பி.க்களுடனான சந்திப்பில் தேசிய ரா சபை எடுத்துரைப்பு

0 53

அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் இல்­லா­மையால் முஸ்லிம் சமூகம் அதி­ருப்­தி­யோடு இருக்­கி­றது. எனவே, இந்த விவ­கா­ரத்தை அர­சாங்கம் பொருத்­த­மான அணுகு முறை ஊடாக கையாள வேண்டும் என தேசிய ஷூரா சபை ஆளும் கட்சி முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் எடுத்­துரைத்­துள்­ளது.

ஆளும் கட்சி முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை தேசிய ஷூரா சபை (NSC) யின் பிர­தி­நி­திகள் குழு­வொன்று கடந்த வாரம் கொழும்பில் சந்­தித்து பல்­வேறு தேசிய மற்றும் முஸ்லிம் சமூக விட­யங்­கள் குறித்து கலந்­து­ரை­யா­டி­யது. இதன்­போதே மேற்­கு­றித்த விடயம் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இந்த சந்­திப்பில் பிரதி சபா­நா­யகர் டாக்டர் ரிஸ்வி ஸாலிஹ் (கொழும்பு), தேசிய ஒரு­மைப்­பாட்டு பிர­தி­ய­மைச்சர் அஷ்ஷைக் முனீர் முளப்பர் (கம்­பஹா), பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான முஹம்­மது அஸ்லம் (குரு­ணாகல்), முஹம்மட் பஸ்மின் (கண்டி), முஹம்­மது பைசல் (புத்­தளம்), ரியாஸ் பாருக் (கண்டி) மற்றும் அபூ­பக்கர் ஆதம்­பாவா (தேசியப் பட்­டியல்) ஆகியோர் கலந்து கொண்­டனர்.

தேசிய ஷுரா சபையின் சார்பில் அதன் தேசியத் தலை­வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.ஸுஹைர், முன்னாள் தலைவர் அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல், உப தலை­வர்­க­ளான டாக்டர் மரீனா ரிபாய், சட்­டத்­த­ரணி நத்வி பஹா­வுத்தீன், செய­லாளர் சட்­டத்­த­ரணி ரஷீத் எம் இம்­தியாஸ், பேரா­சி­ரியர் எஸ்.எம்.ஷிபா, விரி­வு­ரை­யாளர் எம்.ஏ.எம். ஹகீம் அபூ­பக்கர், உப செய­லாளர் பர்சான் ராசிக், பொரு­ளாளர் அனஸ் அஸீஸ், உப பொரு­ளாளர் என்.எம்.நுஹ்மான், மற்றும் முன்னாள் உப­த­லைவர் எம்.எச்.எம். ஹஸன் ஆகியோர் பங்­கேற்­றனர்.

இதன்­போது, ஷூரா சபையின் செயற்பா­டுகள் மற்றும் நோக்­கங்கள் பற்றி அதன் முன்னாள் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் எடுத்­து­ரைத்தார். தற்­போ­தைய அர­சியல் சூழ்­நி­லையில் முஸ்லிம் சமூ­கத்தின் கவ­லை­க­ளையும் எதிர்­பார்ப்­பு­க­ளையும் சபையின் குழு­வினர் முன்­வைத்­தனர். இந்த சந்­திப்பில் மனித உரி­மைகள், யாப்புத் திருத்­தங்கள் மற்றும் சிறு­பான்­மை­யி­னரின் பாது­காப்பு உள்­ளிட்ட பல முக்­கி­ய­மான தேசிய விட­யங்கள் ஆரா­யப்­பட்­டன.

நாட்­டுடன் தொடர்­பான அதி­முக்­கிய தீர்­மா­னங்­களை எடுக்கும் மன்­ற­மா­கிய அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் இல்­லாமல் இருப்­ப­தா­னது முஸ்லிம் சமூ­கத்தில் விவாதப் பொரு­ளாக மாறி­யி­ருப்­பது பற்­றியும் முஸ்லிம் சமூகம் அது தொடர்­பாக அதி­ருப்­தி­யோடு இருப்­பது பற்­றியும் இந்த விவ­கா­ரத்தை உரிய முறையில் கையா­ளு­வ­தற்கு அரசு பொருத்­த­மான அணுகு முறையை கையாள வேண்டும் என்றும் ஷூரா சபையின் குழு தெரி­வித்­தது.

மேலும், தேசிய ஒற்­றுமை, தேசத்தின் இறை­யாண்மை என்­பன தொடர்­பாக முஸ்லிம் சமூகம் கொண்­டுள்ள உறு­தி­யான நிலைப்­பாட்டை இந்த சந்­திப்பில் ஷூரா உறுப்­பி­னர்கள் உறு­திப்­ப­டுத்­தினர். பிரி­வி­னை­வாத, தீவி­ர­வாத இயக்­கங்­களை முஸ்லிம் சமூகம் எப்­போதும் ஆத­ரிக்­க­வில்லை என்றும், ஆனால், முஸ்­லிம்கள் அடிக்­கடி இன­வாதத்தால் பாதிக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் குறிப்­பிட்­ட­துடன் குறிப்­பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் முஸ்­லிம்கள் நீண்­ட­கா­ல­மாக எதிர்­கொண்டு வரும் இடம்­பெ­யர்வு மற்றும் போரின் போது ஏற்­பட்­டுள்ள பாரிய இழப்­பு­களை அர­சாங்கம் கவ­னிக்க வேண்டும் என்­ப­தையும் குழு­வினர் வலி­யு­றுத்­தினர்.

அர­சாங்­கத்­துடன் தொடர்ந்து கலந்­து­ரை­யா­டு­வ­தற்கும், தேசிய ஒற்­றுமை, நீதியின் ஆட்சி என்­ப­வற்றின் முன்­னேற்­றத்­திற்­காக உறு­தி­யாக செயல்­ப­டு­வ­தற்கும் தேசிய ஷூரா சபை தயா­ராக இருக்­கி­றது என்றும் குழு தெரி­வித்­தது. இலங்கை தேசம் பொரு­ளா­தார ரீதியில் முன்­னே­று­வ­தற்கு இஸ்­லா­மிய நாடு­க­ளது முத­லீட்டு முயற்­சிகள் மென்­மேலும் அதி­க­ரிக்­கப்­ப­டு­வ­தற்­கான முன்­மொ­ழிவை அர­சாங்­கத்­திற்கு தேசிய ஷூரா சபை ஏற்­க­னவே முன்­வைத்­தி­ருப்­பதை நினை­வூட்­டிய குழு­வினர் தேசத்தின் நலனில் ஷூரா சபைக்கு இருக்கும் அக்­க­றையை இதன் ஊடாக வெளிப்­ப­டு­வ­தா­கவும் தெரி­வித்­தனர்.

இதற்கு முன்னர் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய­லாளர் டில்வின் சில்வாவை ஷூரா சபையின் பிர­தி­நி­திகள் சந்­தித்து முஸ்லிம் சமூ­கத்­து­டனும் நாட்டின் அபி­வி­ருத்­தி­யு­டனும் தொடர்­பான 27 அம்ச கோரிக்­கைகள் அடங்­கிய மக­ஜரை கைய­ளித்து கலந்­து­ரை­யாடல் நடாத்­திய சந்­தர்ப்­பத்தை பிர­தி­நி­திகள் நினை­வூட்­டினர்.

பாரா­ளு­மன்ற அமர்­வு­களின் போது முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உரை­களை நிகழ்த்­தவும் கலந்­து­ரை­யா­டல்­களைச் செய்­யவும் முஸ்லிம் சமூகம் தொடர்­பான தேவை­யான புள்ளி விப­ரங்­க­ளையும் தரவுகளையும் தயாரித்து தருவதற்கான தயார் நிலையில் தேசிய ஷூரா சபை இருப்பதனையும் தேவைப்படின் அதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஷூரா சபையை அணுக முடியும் என்றும் குறிப்பிடப்பட்டது.

முஸ்லிம் சமூகத்திற்கும், நாட்டிற்கும் நன்மை பயக்கும் வகையில் முக்கிய விடயங்களை அரசாங்கத்தின் பிரதிநிதிகளது கவனத்திற்கு கொண்டு செல்லும் வாய்ப்பாகவும் இச்சந்திப்பு அமைந்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.