உழ்ஹிய்யா என்பது அதனை நிறைவேற்ற வசதியுள்ளவர்கள் செய்யும் ஓர் உயர்வான சுன்னாவாகும். இது தியாக மனப்பாங்குடன் அடுத்தவர்களுக்கு உதவுதல் உள்ளிட்ட சிறந்த சமூகப் பண்புகளை வலுப்படுத்துகிது. உழ்ஹிய்யா விலங்குகளின் கொள்வனவானது தேசிய பொருளாதாரத்தில் சுமார் நூறு கோடி ரூபா அளவு பங்களிப்புச் செய்கிறது என்பதை எமது அடிப்படை மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகிறன.
இருப்பினும் உழ்ஹிய்யா விலங்குகளை நியாயமான விலையில் பெற்றுக்கொள்ளல், குறித்த விலங்கு ஹலாலான முறையில் உரிய விவசாயியிடமிருந்து பெறப்பட்டதா என்பதை ஆவண ரீதியாக உறுதிப்படுத்தல், விலங்குகளை எடுத்துச் செல்லும் போது பொலிஸ் மற்றும் நிர்வாக ரீதியாக ஏற்படும் நெருக்கடிகள், இலஞ்சம், ஊழல், மற்றும் இனப்பாகுபாடு உள்ளிட்ட பல பிரச்சினைகளை எமது வியாபாரிகள் எதிர்கொண்டு வருகின்றனர். தூரநோக்குடன் கூடிய திட்டமிடல்கள் மற்றும் சமூக வழிகாட்டல்கள் மூலம் உழ்ஹிய்யா செயற்பாடுகளின் வினைத்திறனை மேம்படுத்தி உரிய இலக்கை அடைய முடியுமென நாம் நம்புகிறோம்.
இந்தப் பின்னணியில் இந்த செயற்பாட்டு ஆய்வானது பின்வரும் இலக்குகளை கொண்டுள்ளது:
1. உழ்ஹிய்யா சார்ந்த விடயங்கள் மற்றும் விலங்குகளைக் கொள்வனவு செய்தல் தொடர்பான நடைமுறை செயற்பாடுகளை விரிவாக ஆராய்தல்.
2. பிராந்திய மட்டத்தில் உழ்ஹிய்யா வழங்குபவர்கள், கால்நடை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், மஸ்ஜித் நிர்வாகம் மற்றும் சமூக அமைப்புக்களின் பங்கேற்புடன் மேம்படுத்தப்பட்ட செயல்திட்டங்களை முன்னெடுத்தல்.
3. தேசிய மட்டத்தில் உரிய அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களுடனான கலந்துரையாடல் ஊடாக உழ்ஹிய்யா தொடர்பான நடைமுறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முயற்சிப்பதுடன் பெரிய அளவிலான நிலையான செயற்திட்டங்களை வகுத்தல்.
இதன் பொருட்டு இந்த ஆய்வில் நாடளாவிய ரீதியாக தரவுகளை சேகரிக்கும் பணியில் தன்னார்வலர்களாக ஈடுபட 100 பேரளவில் தேவைப்படுகின்றனர். ஆர்வமுள்ளவர்கள் எம்மோடு இணைந்து கொள்ளலாம். நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களும் உள்ளடங்கும் விதமாக இளம் அரச உத்தியோகத்தகர்கள், பல்கலைக்கழக இளம் பட்டதாரிகள், பல்கலைக்கழ மற்றும் உயர் கல்வி நிறுவனங்களினது விடுகை வருட மாணவர்கள் விண்ணப்பிப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது.
இந்த ஆய்வில் பங்கேற்கும் தன்னார்வலர்கள் முன்பதிவு செய்திருப்பது அவசியமாகும்.
முஹம்மது அஜிவதீன், BA (Hons), M.Phil., PGD M&E – 0770822146 மற்றும் ஏ.ஜீ. நளீர் அஹமட் (BA) MA (Reading) – 0776214141 ஆகியோரை தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களையும் பதிவுகளையும் மேற்கொள்ளலாம்.
உங்கள் பங்களிப்பு இந்த ஆய்வின் வெற்றிக்கு மிக முக்கியமாகும்.
குறிப்பு: தரவுகளின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும். ஆய்வு சாாந்த முக்கிய தகவல்கள் குறிப்பாக உழ்ஹிய்யா விலங்குகளின் எண்ணிக்கை போன்ற விடயங்கள் ஊடகங்கள் அல்லது சமூக ஊடகள் மூலம் பகிர்ந்துகொள்ளப்படமாட்டாது.- Vidivelli