உழ்ஹிய்யா தொடர்பான தேசிய ஷூரா சபையின் வழிகாட்டல்கள்

0 251

“குர்­பா­னியின் ஒட்­ட­கத்தை (கால்­ந­டையை) அல்­லாஹ்வின் அடை­யாள சின்­னங்­களில் ஒன்­றாக நாம் உங்­க­ளுக்கு ஆக்­கி­யி­ருக்­கிறோம். அதில் உங்­க­ளுக்கு பெரும் நன்மை இருக்­கி­றது.” (அல்- குர்ஆன் 22:36)

இந்த அல்-­குர்ஆன் வசனம் உழ்­ஹிய்­யாவின் முக்­கி­யத்­து­வத்­தையும் அது இஸ்­லாத்தின் அடை­யாளச் சின்­னங்­களில் ஒன்று என்­ப­தையும் உணர்த்­து­கின்­றது.
“நிச்­ச­ய­மாக அல்லாஹ், செய்­வ­ன­வற்றை திருந்தச் செய்­யும்­படி பணித்­தி­ருக்­கின்றான்” (ஸஹீஹ் முஸ்லிம்) இந்­ந­பி­மொழி இஸ்­லாத்தின் அடிப்­படைக் கோட்­பா­டு­களில் ஒன்­றான அல்-­இஹ்ஸான்’ (செய்­வதைச் சிறப்­பாக, உரிய முறையில் செய்தல்) என்ற கருத்தை விளக்­கு­கின்­றது. அதற்கு உதா­ர­ண­மாக நபி (ஸல்) அவர்கள் குர்பான் கொடுப்­பதைக் குறிப்­பி­டு­கின்­றார்கள். “நீங்கள் பிரா­ணி­களை அறுத்தால் அழ­கிய முறையில் அறுங்கள். உங்கள் கத்­தியை நீங்கள் கூர்­மை­யாக்கிக் கொள்­ளுங்கள்!
(விரை­வாக) அறுப்­பதன் மூலம் அதற்கு நிம்­ம­தியைக் கொடுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறி­னார்கள்.

மிரு­கத்தை அறுக்­கும்­போது முறை­யாக அறுக்க வேண்டும்; கத்­தியை கூர்­மை­யாக வைத்­துக்­கொள்ள வேண்டும்; அறுக்கும் மிரு­கத்தின் கஷ்­டத்தை எளி­தாக்க வேண்டும் என்­றெல்லாம் நபி­ய­வர்கள் இங்கு விளக்கம் சொல்­கின்­றார்கள்.
உழ்­ஹிய்யா என்­பது அதற்கு சக்தி பெற்­ற­வர்கள் மேற்­கொள்ளும் ஒரு வணக்­க­மாகும். ஹஜ்ஜுப் பெருநாள் தினத்­திலும் அதற்­க­டுத்து வரும் அய்­யாமுத் தஷ்ரீக் எனப்­படும் மூன்று நாட்­க­ளிலும் இதனை வழங்­கு­வது நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழி­மு­றை­யாகும்.

அந்த வகையில் பல்­லி­னங்­களும் பல்­ச­ம­யங்­களும் உள்ள ஒரு தேசத்தில் வாழும் இலங்­கைவாழ் முஸ்­லிம்கள் இச்­சி­றப்­பான மார்க்க அனுஷ்­டா­னத்தை நிறை­வேற்றும் போது பின்­வரும் வழி­காட்­டல்­களை கவ­னத்­திற்­கொள்­ளு­மாறு தேசிய சூரா சபை கேட்டுக் கொள்­கி­றது.

  1. உழ்­ஹிய்யா தொடர்­பான மார்க்க சட்ட திட்­டங்­களை உல­மாக்­களை அணுகி அறிந்து கொள்­ளுதல்.
  2. உழ்­ஹிய்­யாவை நாட்டின் சட்­ட­வி­தி­மு­றை­க­ளையும் மாற்று மத சமூ­கங்­களின் சமய உணர்­வு­க­ளையும் சமூக மர­பு­க­ளையும் மதித்து பொறுப்­பு­ணர்­வுடன் நிறை­வேற்றல்.
  3. ஆடு, மாடு­களைக் கொள்­வ­னவு செய்தல் – எடுத்துச் செல்லல் தொடர்­பாக பின்­வரும் விட­யங்களை கவ­னத்திற் கொள்ளல்:
  4. கிராம உத்­தி­யோ­கத்­த­ரினால் (GS) விலங்கின் உரிமை அத்­தாட்­சிப்­ப­டுத்­தப்­படல்.
    மிருக வைத்­தி­ய­ரி­ட­மி­ருந்து (Veterinary Surgeon) விலங்கின் உரி­மைக்­கான சான்­றிதழ், கால்­நடை விப­ரச்­சீட்டு (Cattle Voucher), சுகா­தார அத்­தாட்சிப் பத்­திரம் (Health Certificate) என்­ப­வற்றைப் பெற்­றுக்­கொள்ளல்.
  5. விலங்­கு­களை எடுத்துச் செல்­வ­தற்­கான அனு­ம­தியை (Transport Permit) பிர­தேச செய­ல­கத்தில் (DS Office) பெற்­றுக்­கொள்ளல்.
  6. விலங்­கு­களை எடுத்துச் செல்­வ­தற்குப் பொருத்­த­மான வாக­னங்கள் பயன்­ப­டுத்­தப்­பட வேண்டும். அர­சாங்க வர்த்­த­மா­னியின் படி விலங்­கு­களை வாக­னத்தில் ஏற்­றிச்­செல்ல அனு­ம­திக்­கப்­பட்ட எண்­ணிக்கை பேணப்­படல். (இலங்கைச் சன­நா­யக சோச­லிசக் குடி­ய­ரசு வர்த்­த­மானிப் பத்­தி­ரிகை (அதி விசே­ஷட) இல. 1629/17 – 2009.11.26)
  7. ஆடு, மாடு ஆகி­ய­வற்றை உழ்­ஹிய்­யா­வாகக் கொடுக்க முடி­யு­மாக இருந்­தாலும் பசு, காளை போன்ற விலங்­குகள் சில மதங்­களில் புனி­த­மாகக் கரு­தப்­ப­டு­வதால் ஆடு­களை குர்­பா­னிக்­காக தெரிவு செய்­வது விரும்­பத்­தக்­க­தாகும்.
  8. குர்பான் நிறை­வேற்­றப்­படும் இடம் மற்றும் முறை
    குர்­பானி விலங்­கு­களை பொது­மக்­க­ளுக்குத் தென்­படும் வகையில் பாதை­யோ­ரங்­களில், பொது இடங்­களில் கட்டி வைப்­பதை முற்­றாகத் தவிர்த்தல்.
  9. குர்பான் செய்­வ­தற்குப் பொருத்­த­மான இடம், நேரம் என்­ப­வற்றை முன்­கூட்­டியே தீர்­மா­னித்தல். உழ்­ஹிய்யா செய்­யப்­படும் இடம் பொது­மக்கள் காணக் கூடிய இட­மாக இல்­லாமல், அவர்­களின் பார்­வை­யி­லி­ருந்து ஒதுக்­க­மான இடத்தில் அந்த அனுஷ்­டா­னத்தை நிறை­வேற்­று­வது மிகவும் அவ­சி­ய­மாகும்.
  10. தத்­த­மது மஹல்­லாக்­களை மையப்­ப­டுத்தி பிர­தேச சூழ­லுக்கு ஏற்ப பொது மஷூ­றாவின் அடிப்­ப­டையில் உழ்­ஹிய்யா விட­யங்­களை முன்­னெ­டுத்தல்.
  11. உழ்­ஹிய்யா நிறை­வேற்­று­வதன் மார்க்க ஒழுங்­கு­மு­றை­களைப் பேணி நடத்தல்.
    மிருக வைத்­தி­யர்கள் மற்றும் உள்­ளு­ராட்சி சபையின் உரிய அதி­கா­ரிகள் உழ்­ஹிய்யா செய்யும் இடத்தைப் பார்­வை­யிட அனு­ம­தித்தல்.
  12. சுத்தம் மற்றும் ஒழுங்­கு­களைப் பேணுதல்.

குர்பான் செய்­யப்­பட்ட பின் விலங்­கு­களின் கழி­வு­களை (எலும்பு, கால், இரத்தம், சாணம், தோல் என்­ப­வற்றை) மிகவும் பொறுப்­பு­ணர்­வுடன், சுற்றுச் சூழ­லுக்கு பாதிப்பு ஏற்­ப­டாத வகையில், உரிய முறையில் அகற்­றுதல் அல்­லது பூமியின் ஆழத்தில் புதைத்தல்.
குறிப்­பாக மேற்­சொன்ன இரு விட­யங்­க­ளிலும் அரசு விதி­மு­றைகள், அனு­ம­திகள், சுகா­தார சட்­டங்கள் ஆகி­ய­வற்றின் படி செயல்­படல்.

குர்பான் பங்­கீடு செய்யும் போது பின்­வரும் விட­யங்­களைப் பேணி நடத்தல்:
குர்பான் பங்­கீட்­டின்­போது ஒழுங்கு முறைப்­ப­டியும், சாணக்­கி­ய­மா­கவும் நடந்து கொள்ளல்.

ஒரே ஊரில், பிர­தே­சத்தில் ஒன்­றுக்கு மேற்­பட்ட தரப்­பினர் கூட்­டா­கவோ தனித்­த­னி­யா­கவோ குர்பான் பங்­கீட்டில் ஈடு­படும் பட்­சத்தில் பொருத்­த­மான முறையில் ஒருங்­கி­ணைப்பை மேற்­கொள்ளல்.

இம்­முறை உழ்­ஹிய்யா வழங்­கப்­படும் காலப்­ப­கு­தியில் போயா தினம் (June -10) வரு­வதன் கார­ணத்தால் அந்­நாளின் உழ்­ஹிய்யா கொடுப்­ப­தையும், பங்­கி­டு­வ­தையும், வாக­னங்­களில் வெளி­யூர்­க­ளுக்கு அனுப்­பு­வ­தையும் முற்­றாகத் தவிர்த்துக் கொள்ளல்.

உழ்­ஹிய்யா விட­யத்தில் ஜீவ­கா­ருண்­யத்தைப் பற்­றியும் அய­ல­வர்­க­ளது உணர்­வு­களை மதித்து நடப்­பது குறித்தும் வந்­துள்ள இஸ்­லாத்தின் வழி­காட்­டல்­களை கவ­னத்திற் கொள்ளல்.

மாமிசம் சாப்­பி­டாத அல்­லது அவற்றை உண­வுக்­காக அறுப்­ப­தனை விரும்­பாத சகோ­தர சமூ­கங்­க­ளது சமய உணர்­வுகள் மற்றும் சமூக மர­பு­களை மதித்து புத்தி சாது­ரி­ய­மாக, சுய கட்­டுக்­கோப்­புடன் நடந்து கொள்ளல்.

உழ்­ஹிய்யா தொடர்­பான விளம்­ப­ரங்கள், செய்திகள் மற்றும் புகைப்படங்களை பொது ஊடகங்களில், இடங்களில் பிரசுரிப்பதைத் தவிர்த்துக் கொள்ளல்.

தனித்தனியாகவும் கூட்டாகவும் உழ்ஹிய்யாவை நிறைவேற்றக்கூடிய அனைவரும் மேற்குறிப்பிடப்பட்ட வழி­காட்­டல்­களைக் கருத்திற் கொண்டு நடை­மு­றைப்­ப­டுத்­து­வோ­மாக.

நபி(ஸல்) அவர்கள் நிச்­ச­ய­மாக அல்லாஹ், நீங்கள் செய்யும் ஒரு வேலையை நேர்த்­தி­யாகச் செய்­வதை விரும்­பு­கின்றான்’ (தப­றானி) கூறி­னார்கள்.

எதிர்­வரும் ஹஜ்ஜுப் பெருநாள் அனை­வ­ருக்கும் மகிழ்ச்­சி­யையும் புரிந்­து­ணர்­வையும் அபி­வி­ருத்­தி­யையும் தரக்கூடிய ஒரு நாளாக அமையட்டும்!

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.