அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுக்களில் பணியாற்ற எதிரணி முஸ்லிம் எம்.பி.க்கள் உள்ளீர்ப்பு

0 72

(எம்.ஆர்.எம்.வசீம்,இரா.ஹஷான்)
அர­சாங்க பொறுப்பு முயற்­சிகள் பற்­றிய குழுவில் பணி­யாற்­று­வ­தற்கு மேலும் உறுப்­பி­னர்கள் நிய­மனம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக சபா­நா­யகர் அறி­வித்தார்.
பாரா­ளு­மன்றம் நேற்­று­முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை கூடி­ய­போது சபா­நா­ய­கரின் அறி­விப்­பின்­போதே சபா­நா­யகர் இதனை சபைக்கு அறி­வித்தார்.

இது­தொ­டர்­பாக சபா­நா­யகர் தொடர்ந்து அறி­விப்பு செய்­கையில்,
2025 மார்ச் 19ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்­தினால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட பிரே­ர­ணைக்­க­மைய பாரா­ளு­மன்ற நிலை­யியற் கட்­டளை 120 இன் ஏற்­பா­டு­களின் பிர­காரம், அர­சாங்க பொறுப்பு முயற்­சிகள் பற்­றிய குழுவில் பணி­யாற்­று­வ­தற்­காக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவுக் குழு­வினால் பெயர் குறித்து நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

அதே­நேரம் பாரா­ளு­மன்ற நிலை­யியற் கட்­டளை 111 இன் ஏற்­பா­டுகள் மற்றும் 2025 மார்ச் 17 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்­தினால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட பிரே­ரணை என்­ப­ன­வற்­றிற்கு அமை­வாக அந்­தந்த துறைசார் மேற்­பார்வைக் குழுக்­களில் பணி­யாற்­று­வ­தற்­காக பின்­வரும் உறுப்­பி­னர்கள் தெரிவுக் குழு­வினால் பெயர் குறித்து நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் மூலோ­பாய அபி­வி­ருத்தி பற்­றிய துறைசார் மேற்­பார்வைக் குழுவில் பணி­யாற்­று­வ­தற்கு எஸ்.எம்.மரிக்கார் பெய­ரி­டப்­பட்­டுள்ளார்.

அதே­போன்று விஞ்­ஞானம், தொழில்­நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரி­ணாமம் பற்­றிய துறைசார் மேற்­பார்வைக் குழுவில் பணி­யாற்ற, ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம். நிசாம் காரி­யப்­பரும் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாது­காப்பு பற்­றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் தெரிவாகி இருப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.