பலஸ்தீனத்தை ஆதரிக்கவும், காஸா மனிதாபிமான பேரழிவை கண்டிக்கவும் ஒன்றிணைந்த அரசாங்கமும் எதிர்க்கட்சியும்

0 99

எம்.ஐ.அப்துல் நஸார்

காஸாவில் நிகழும் மனி­தா­பி­மான பேர­ழி­வினை உட­ன­டி­யாக முடி­வுக்குக் கொண்­டு­வ­ரவும், போர்­நி­றுத்தம் மற்றும் முற்­று­கையை நீக்­கவும் அழைப்பு விடுப்­ப­தற்­காக இலங்கையின் அனைத்து அர­சியல் தலை­வர்­களும் கடந்த வியா­ழக்­கி­ழமை கொழும்பில் ஒன்­று­கூ­டினர். இங்கு பிர­த­மரும் எதிர்க்­கட்சித் தலை­வரும் பலஸ்­தீன சுதந்­திரக் கோரிக்­கைக்கு இலங்­கையின் முழு ஆத­ர­வையும் தெரி­வித்­தனர்.
அரபு மொழியில் பேர­ழிவு என்று பொருள்­படும் – ‘அல் நக்­பா’வை நினை­வு­கூரும் நிகழ்வில் உரை­யாற்­றி­ய­போது அவர்கள் தங்கள் உறு­தி­மொ­ழி­களை மீண்டும் உறு­திப்­ப­டுத்­தினர்.

அல் நக்பா என்­பது 1947 இல் ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தீர்­மானம் 181 ஐத் தொடர்ந்து 1948 இல் இஸ்ரேல் தன்னை ஒரு சுதந்­திர நாடாக அறி­வித்­த­தற்கு சில மாதங்­க­ளுக்கு முன்னும் பின்னும் 500 க்கும் மேற்­பட்ட கிரா­மங்­களைச் சேர்ந்த சுமார் 750,000 பலஸ்­தீ­னர்கள் இன அழிப்பு செய்­யப்­பட்­டதைக் குறிக்­கி­றது.

ஹெக்டர் கோப்­பெ­க­டுவ விவ­சாய ஆராய்ச்சி மையத்தில் கூடி­யி­ருந்த ஏரா­ள­மானோர் மத்­தியில் உரை­யாற்­றிய பிர­தமர் ஹரிணி அம­ர­சூ­ரிய, காஸாவில் அதி­க­ரித்து வரும் வன்­முறை மற்றும் இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் உணவு உதவி தடுக்­கப்­பட்­டமை தொடர்பில் இலங்­கையின் ஆழ்ந்த கவ­லையை தெரி­வித்தார்.

‘காஸாவில் கூர்­மை­ய­டைந்­து­வரும் மனி­தா­பி­மான பேர­ழிவு தொடர்பில் ஐக்­கிய நாடுகள் சபை பல­முறை எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. மார்ச் 2025 இல் முற்­றுகை அமுல்­ப­டுத்­தப்­பட்­ட­தி­லி­ருந்து, அத்­தி­யா­வ­சிய உணவு, தண்ணீர் மற்றும் மருந்துப் பொருட்கள் கொண்டு செல்­லப்­ப­டு­வது கடு­மை­யாக தடை­செய்­யப்­பட்­டுள்­ளது, இது மனி­தா­பி­மான நிவா­ரண நட­வ­டிக்­கை­களை முடக்­கி­யுள்­ளது. மிகவும் அதிர்ச்­சி­யூட்டும் வித­மாக, மார்ச் 18 அன்று வான்­வழித் தாக்­கு­தல்கள் மீண்டும் ஆரம்­ப­மா­ன­தி­லி­ருந்து காஸாவில் ஒவ்­வொரு நாளும் குறைந்­தது 100 குழந்­தைகள் கொல்­லப்­ப­டு­கி­றார்கள் அல்­லது காய­ம­டை­கி­றார்கள் என்று ஐ.நா. தெரி­வித்­துள்­ளது. பொது­மக்­க­ளுக்கு – குறிப்­பாக குழந்­தை­க­ளுக்கு – எதி­ரான இந்த மட்­டற்ற வன்­முறை, மன­சாட்­சிக்கு விரோ­த­மா­னது மற்றும் எந்­த­வொரு மனி­தா­பி­மான தரா­த­ரத்­தாலும் அல்­லது சட்­டத்­தாலும் பொறுத்­துக்­கொள்ள முடி­யாது,’ என பிர­தமர் தெரி­வித்தார்.

சர்­வ­தேச சமூ­கத்தின் உறுப்­பி­னர்கள் என்ற வகையில், நாடுகள் பார்­வை­யா­ளர்­க­ளாக இருக்க முடி­யாது என அவர் தெரி­வித்தார். ‘கடு­மை­யான மீறல்கள் இடம்­பெ­று­வ­தற்­கான நம்­ப­க­மான சான்­றுகள் வெளிப்­படும் போது, மௌனம் காப்­பது, அந்த மீறல்­க­ளுக்கு உடந்­தை­யாக இருப்­ப­தற்கு சம­மாகும். பொறுப்­புக்­கூ­றலை உறுதி செய்தல், அப்­பாவி உயிர்­களைப் பாது­காத்தல் மற்றும் பலஸ்­தீன மக்­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுத்தல் போன்ற கவ­லை­களை வெளிப்­ப­டுத்­து­வதைத் தாண்டி தீர்க்­க­மான நட­வ­டிக்கை எடுப்­பது நமது அவ­சரக் கட­மை­யாகும். அதை­விடக் குறைந்த செயற்­பா­டுகள் எமது மனி­த­நே­யத்தின் தோல்­வி­யாக இருக்கும்,’ என அவர் மேலும் தெரி­வித்தார்.

இலங்கை சர்­வ­தேச சமூ­கத்­தையும், சம்­பந்­தப்­பட்ட அனைத்து தரப்­பி­ன­ரையும் நீடித்த தீர்வை அடைய புதுப்­பிக்­கப்­பட்ட முயற்­சி­களை மேற்­கொள்­ளு­மாறு அழைப்பு விடுத்­துள்­ள­தாக பிர­தமர் கூறினார்.

‘வன்­மு­றையை உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும் என்ற எமது கோரிக்­கையை நாம் மீண்டும் வலி­யு­றுத்­து­கிறோம். காஸா­விற்கு உணவு, எரி­பொருள், மருந்து, மின்­சாரம் மற்றும் நீர் வழங்கல் உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சியப் பொருட்கள் மற்றும் மனி­தா­பி­மான உத­வி­களை சுதந்­தி­ர­மாக எடுத்துச் செல்ல உத­வு­மாறு நாம் அழைப்பு விடுக்­கிறோம்,’ என அவர் தெரி­வித்தார்.

கொழும்பிலுள்ள பலஸ்­தீன தூத­ரகம் மற்றும் பலஸ்­தீ­னத்­துக்­கான இலங்கை ஒருமைப்பாட்டுக் குழு ஆகி­யன இணைந்து ஏற்­பாடு செய்த நிகழ்வில் கௌரவ விருந்­தி­ன­ராக எதிர்க்­கட்சித் தலை­வரும் ஐக்­கிய மக்கள் சக்­தியின் தலை­வ­ரு­மான சஜித் பிரே­ம­தாச பங்­கு­பற்­றினார்.

பலஸ்­தீனப் பிரச்­சி­னையை ஆத­ரிப்­பதில் இலங்­கையின் நீண்­ட­கால உறு­திப்­பாட்டை அவர் நினைவு கூர்ந்தார். அடுத்­த­டுத்த அர­சாங்­கங்கள், அவற்றின் அர­சியல் சித்­தாந்­தத்தைப் பொருட்­ப­டுத்­தாமல், பலஸ்­தீன மக்­க­ளுக்­காக குரல் கொடுத்­துள்­ளன என அவர் குறிப்­பிட்டார்.

‘இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் உள்ள அனைத்து பிர­தி­நி­தி­களும் பலஸ்­தீன மக்­க­ளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கருத்தில் உடன்­பட்டு நிற்­கின்­றனர் என்­பதில் நாங்கள் பெரு­மைப்­ப­டு­கிறோம்.’

பலஸ்­தீனப் பிரச்­சி­னைக்கு ஒரு நியா­ய­மான தீர்வு பெற்றுக் கொடுக்­கப்­படல் வேண்டும் என்­பதை நோக்­க­மாகக் கொண்ட நட­வ­டிக்­கை­களை விளக்­கிய திரு. பிரே­ம­தாச, பலஸ்­தீன மக்கள் மீது பாகு­பாடு காட்­டுதல், ஓரங்­கட்­டுதல், துன்­பு­றுத்தல் மற்றும் இலக்கு வைத்தல் ஆகி­ய­வற்­றுக்­கான இடை­வி­டாத முயற்­சி­களை முடி­வுக்குக் கொண்­டு­வர அழைப்பு விடுத்தார். ‘அவர்­களின் பிரிக்க முடி­யாத உரி­மைகள் வெறும் அறி­விப்­புகள், பேச்­சுக்கள் மற்றும் வாய் வார்த்­தைகள் மூலம் மட்­டு­மல்ல, செயற்­பாட்டின் மூலம் அடை­யப்­பட வேண்டும்.’

இலங்கை பலஸ்­தீன மக்­களின் நல­னுக்­காக ஐக்­கிய நாடுகள் சபை நிறு­வ­னங்­க­ளிலும் பொதுச் சபை­யிலும் தலைமை தாங்க வேண்டும் என தான் முன்­மொ­ழிய விரும்­பு­வ­தா­கவும், எதிர்க்­கட்சி அத்­த­கைய நட­வ­டிக்­கையை நிபந்­த­னை­யின்றி ஆத­ரிக்கும் என்றும் அவர் தெரி­வித்தார்.

‘பலஸ்­தீன மக்­களின் நல­னுக்­காக நாம் தலைமை தாங்க வேண்டும், பலஸ்­தீன மக்­களை அழிக்கும் முயற்­சி­க­ளையும், அவர்­களை வெளி­யேற்றும் அனைத்து முயற்­சி­க­ளையும் தடுத்து நிறுத்த வேண்டும்.’

காஸாவில் உள்ள வைத்­தி­ய­சா­லைகள், பாட­சா­லைகள் மற்றும் பாலர் பாட­சா­லைகள் உள்­ளிட்ட உட்­கட்­ட­மைப்­பு­களை அழிப்­பது கொடூ­ர­மான மற்றும் மனி­தா­பி­மா­ன­மற்ற குற்­றங்­க­ளாகும் என விவ­ரித்த அவர், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டத்தின் கீழ் இவ்­வா­றான மீறல்கள் சர்­வ­தேச நீதி நிறு­வ­னங்­களின் முன் கொண்டு வரப்­பட வேண்டும் எனவும் தெரி­வித்தார்.

‘‘நக்பா தினம் துக்க தினம் அல்ல, ஆனால் உலகின் பழ­மை­யான அர­சியல் பிரச்­சி­னை­களில் ஒன்­றிற்கு நியா­ய­மான தீர்வைக் காண்­ப­தற்கு சர்­வ­தேச சமூ­கத்தை நட­வ­டிக்கை எடுக்கத் தூண்டும் நாள்’’ என பலஸ்­தீன தூதுவர் இஹாப் ஐ.எம். கலீல் தெரி­வித்தார். ‘தாம­த­மான நீதி என்­பது நீதி மறுக்­கப்­ப­டு­வது அல்ல. அது நீதி அழிக்­கப்­ப­டு­வ­தாகும்,’ எனவும் அவர் குறிப்­பிட்டார். உலகம் இப்­போது செயல்­பட வேண்டும் என்றும் பலஸ்­தீன மக்­க­ளுக்கு எதி­ராக போர்க்­குற்­றங்­களைச் செய்­ப­வர்­களை பொறுப்­புக்­கூறச் செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

வர­லாற்றின் சரி­யான பக்­கத்தில் நிற்­ப­தற்­காக இலங்­கைக்கு அவர் நன்றி தெரி­வித்தார்.
ஜன­நா­யகம் மற்றும் பாரா­ளு­மன்­ற­வா­தத்தின் பரந்த மற்றும் நல்­லொ­ழுக்க வரை­ய­றை­யுடன் உல­க­ளா­விய பிரச்­சி­னை­களை இலங்கை அணு­கு­கி­றது என இலங்கை பலஸ்­தீன ஒருமைப்பாட்டுக் குழுவின் இணைத் தலை­வ­ரான அமைச்சர் பிமல் ரத்­நா­யக்க தெரி­வித்தார்.

‘எமது பாரா­ளு­மன்ற மற்றும் அர­சாங்­கத்தின் கொள்கை வகுக்கும் செயல்­முறை பெறு­ம­தி­மிக்­கது என்­ப­தோடு கொள்­கை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­தாகும். நாம் வர­லாற்றின் சரி­யான பக்­கத்தில் இருக்க விரும்­பு­கிறோம். மக்­களால் வர­லாறு எழு­தப்­ப­டும்­போது, உல­க­ளா­விய நீதிக்­காக நிமிர்ந்து நின்ற ஒரு தேச­மாக இலங்கை பிர­கா­சிக்க வேண்டும் என்று நாம் விரும்­பு­கிறோம்’ என அவர் சுட்­டிக்­காட்­டினார்.

மே 15, 1948 அன்று நடந்த நக்­பா­வுக்குப் பிறகு பலஸ்­தீன மக்கள் பல தசாப்­தங்­க­ளாக ஒடுக்­கு­முறை மற்றும் ஆக்­கி­ர­மிப்பை அனு­ப­வித்து வரு­கின்­றனர் என்­பதைக் குறிப்­பிட்ட அவர், ஒக்­டோபர் 7, 2023 தொடக்கம் பதி­னைந்து மாதங்கள் நீடித்த முன்­னெப்­போதும் இல்­லாத இனப்­ப­டு­கொ­லை­யான நக்பா, அமெ­ரிக்­காவின் முழு ஆத­ரவு மற்றும் உடந்­தை­யுடன் மீண்டும் தொடங்­கி­யுள்­ளது’ எனக் குறிப்­பிட்டார்

இஸ்­ரேலிய ஆக்­கி­ர­மிப்பை ‘அப்­பா­விகள் மீதான படு­கொலை, மனி­த­கு­லத்­திற்கு எதி­ரான குற்றம் மற்றும் உல­கத்தின் மன­சாட்­சியின் மீது படிந்த ஒரு கறை’ என வர்­ணித்த பிமல் ரத்­நா­யக்க, சர்­வ­தேச சமூகம் என்று தன்­னைத்­தானே அறி­வித்துக் கொள்­வது ‘முற்­றிலும் அவ­மா­ன­க­ர­மா­னது’ என்றும், இது உல­க­ளா­விய ஒழுங்கை அரித்து, நீதியை நிலை­நி­றுத்­தவும் அனைத்து மக்­களின் உரி­மை­களைப் பாது­காக்­கவும் வடி­வ­மைக்­கப்­பட்ட நிறு­வ­னங்கள் மீதான நம்­பிக்­கையை சுக்­கு­நூ­றாக உடைத்­து­விட்­டது என்றும் தெரி­வித்தார்.

‘முழு மக்­களும் இனப்­ப­டு­கொலை மற்றும் இடம்­பெ­யர்வை எதிர்­கொள்­ளும்­போது நாம் சும்மா இருக்க முடி­யாது. பல­வீ­ன­மா­ன­வர்­க­ளுக்கு அமுல்­ப­டுத்­தப்­படும் அதே வேளையில் பலம்­வாய்ந்­த­வர்­க­ளுக்குப் புறக்­க­ணிக்­கப்­படும் விதத்தில் சர்­வ­தேச சட்டம் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட சிலரால் ஒரு கரு­வி­யாக மாறு­வதை நாம் அனு­ம­திக்க முடி­யாது எனவும் அவர் தெரி­வித்தார்.

இன அழிப்­புக்­கான அனைத்து முயற்­சி­க­ளையும் கண்­டித்து, காஸாவில் உட­னடி போர் நிறுத்தம், பலஸ்­தீன பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து இஸ்­ரே­லிய துருப்­புக்­களை திரும்பப் பெறுதல், ஜெரூ­ஸ­லத்தில் உள்ள அல்-­அக்ஸா பள்­ளி­வாயல் முற்­றுகை மற்றும் அவ­ம­திப்­புக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது உரையில், காஸாவில் உள்ள அகதி முகாம்கள் மீதான குண்டுத் தாக்குதல்களைக் கண்டிப்பதில் வெளிவிவகார அமைச்சின் மெத்தனப் போக்கினை விமர்சித்தார். ‘சில நேரங்களில் வெளிவிவகார அமைச்சு அறிக்கையைப் பார்க்கும்போது, இதுபோன்ற ஒரு அறிக்கையை வெளியிடாமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும். அது இங்கேயும் இல்லை, அங்கேயும் இல்லை.’ என்பது போல் காணப்படுகின்றது.

பலஸ்தீனக் கொள்கையில் இலங்கை அரசாங்கம் உண்மையிலேயே உறுதியாக இருந்தால், இஸ்ரேலுக்கு இலங்கைப் பணியாளர்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார். பொருளாதார ரீதியாக பின்தங்கிய பலஸ்தீன மக்களுக்கான வேலைகளை இலங்கைத் தொழிலாளர்கள் எடுத்துக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் மற்றும் இலங்கை பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளும் நிகழ்வில் உரையாற்றினர்.

படங்கள்: ஜே.சுஜீவகுமார்

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.