தேர்தலொன்றே சிறந்த தீர்வாகும்

வாசுதேவ நாணயக்கார

0 598

அழுத்­தங்­க­ளி­லி­ருந்து தப்­பிக்­கொள்ள தேர்­த­லுக்கு செல்­வதே சிறந்த தீர்­வாகும். என்­றாலும் அர­சாங்கம் அதி­கா­ரத்தை தக்­க­வைத்­துக்­கொள்ள பல்­வேறு சதி முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. அதன் ஆரம்ப கட்­ட­மா­கவே ஜன­வரி முதல் ஊட­கங்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தாக பிர­தமர் தெரி­வித்­தி­ருக்­கின்றார் என ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.

சோச­லிச மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்கு வரு­வ­தற்­காக அவர்­க­ளுடன் இருந்­த­வர்­க­ளுக்கு பல்­வேறு வாக்­கு­று­தி­களை வழங்­கி­யி­ருந்­தது. தற்­போது அந்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றிக்­கொள்ள முடி­யாமல் அழுத்­தங்­க­ளுக்கு உள்­ளாகி வரு­கின்­றது. குறிப்­பாக தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் ஆத­ர­விலே இந்த அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்கு வந்­தது. புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை தயா­ரிப்­பதே அவர்­களின் கோரிக்­கை­யாக இருந்து வரு­கின்­றது. அத்­துடன் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு எதிர்க்­கட்­சியில் இருந்­தாலும் அர­சாங்­கத்தின் பங்­கா­ளி­யா­கவே செயற்­பட்டு வரு­கின்­றது. புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை தயா­ரித்­துக்­கொள்­ளவே அவர்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ர­வ­ளித்து வந்­தனர். தற்­போது அவர்கள் அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக அர­சாங்­கத்­துக்கு அழுத்­தங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

மேலும் அமைச்­சுப்­ப­த­விகள் தொடர்­பாக அர­சாங்­கத்­துக்குள் முரண்­பா­டுகள் இடம்­பெற்று வரு­கின்­றன. ஐக்­கிய தேசியக் கட்சி பின்­வ­ரிசை உறுப்­பி­னர்­க­ளுக்கு எந்த அமைச்சுப் பத­வியும் கிடைக்­கா­ததால் அவர்கள் விரக்­தி­ய­டைந்­துள்­ளனர்.  அதே­நேரம் ஐக்­கிய தேசிய முன்­னணி கட்­சி­களின் சில­ருக்கு அமைச்­சுப்­ப­தவி வழங்­கு­வ­தாக ஏற்­க­னவே தெரி­விக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் அமைச்­சுப்­ப­த­விகள் வழங்­கப்­ப­ட­வில்லை. அதனால் அவர்­களும் அர­சாங்­கத்­துக்கு அழுத்­தங்­களை பிர­யோ­கிக்க ஆரம்­பித்­தி­ருக்­கின்­றனர்.

இவ்­வா­றான நிலையில் அர­சாங்­கத்­துக்கு பார­ாளு­மன்­றத்தில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் ஆத­ரவு கிடைக்­கா­விட்டால் 103 உறுப்­பி­னர்­களே இருக்­கின்­றது. அர­சாங்­கத்­துக்கு தொடர்ந்து இந்­நி­லையில் பய­ணிப்­பது கடி­ன­மான விட­ய­மாகும். அதனால் அர­சாங்கம் பொதுத்­தேர்­த­லுக்கு செல்­வதே சிறந்த தீர்­வாகும். என்­றாலும் அர­சாங்கம் தேர்­த­லுக்கு செல்­லாமல் எப்­ப­டி­யா­வது அதி­கா­ரத்தை தக்­க­வைத்­துக்­கொள்­ளவே முயற்­சிக்­கின்­றது.

மேலும் அதி­கா­ரத்தை தக்­க­வைத்­துக்­கொள்ள அர­சாங்கம் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­துள்­ளது. அண்­மையில் மாவ­னெல்­லையில் இடம்பெற்ற சம்பவமும் அரசாங்கத்தின் சதித்திட்டமாகவும் இருக்கலாம். அத்துடன் ஊடகங்களை அடக்கவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனவரியிலிருந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கின்றார். எனவே அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் மேற்கொள்ளும் சதித்திட்டங்களை மறைக்கவே ஆரம்பமாக ஊடகங்களை அடக்க பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.