எரிசக்தி, சுற்றுலா, முதலீடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளை மேம்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு

0 75

இலங்­கை­யு­ட­னான நீண்­ட­கால உற­வு­களை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தி வைப்­ப­தற்­காக, எரி­சக்தி, சுற்­றுலா, வெளி­நாட்டு முத­லீடு மற்றும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு ஆகிய துறை­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும் என ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் உப பிர­த­மரும் வெளி­யு­றவு அமைச்­ச­ரு­மான ஷேக் அப்­துல்லா பின் சயீட் அல் நஹியான் தெரி­வித்தார்.

இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருக்கும் ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் உப பிர­த­மரும் வெளி­யு­றவு அமைச்­ச­ரு­மான ஷேக் அப்­துல்லா பின் சயீட் அல் நஹியான் தலை­மை­யி­லான குழு­வினர், நேற்­று­முன்­தினம் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்­கவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­ய­போது இதனைத் தெரி­வித்­தனர்.

இலங்­கைக்கும் ஐக்­கிய அரபு அமீ­ர­கத்­திற்கும் இடை­யி­லான நீண்­ட­கால இரு­த­ரப்பு உற­வு­களை மேலும் பலப்­ப­டுத்தி,மேம்­ப­டுத்­து­வ­தையும், இரு நாடு­களும் பொரு­ளா­தார நன்­மை­களை ஈட்­டிக்­கொள்ள வேண்டும் என்­ப­தையும் நோக்காகக் கொண்டு, ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் உப பிர­த­மரும் அவ­ரது குழு­வி­னரும் இலங்­கைக்கு வருகை தந்­துள்­ளனர்.
ஐக்­கிய அரபு அமீ­ரகம் மற்றும் அதன் மக்கள் சார்­பாக இலங்­கையின் புதிய அர­சாங்­கத்­திற்கு வாழ்த்து கூறிய உப பிர­தமர், புதிய அர­சாங்­கத்தின் திட்­டங்­க­ளுக்கு ஐக்­கிய அரபு அமீ­ரகம் முழு­மை­யான ஆத­ரவை வழங்கும் என்றும் கூறினார்.

இலங்­கையின் மறு­ம­லர்ச்சி வேலைத்­திட்­டத்­திற்கு ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்­கவின் முயற்­சிகள், அர்ப்­ப­ணிப்பு மற்றும் ஐக்­கிய அரபு அமீ­ர­கத்­து­ட­னான முன்­னேற்­ற­க­ர­மான அணு­கு­மு­றை­யையும் உப பிர­தமர் பாராட்­டினார்.

இங்கு கருத்து தெரி­வித்த ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்க, இலங்­கையில் முத­லீட்­டிற்கு உகந்த சூழல் உரு­வா­கி­யி­ருப்­ப­தாகக் கூறினார். கடந்த காலங்­களை போன்று முத­லீ­டு­களை வலு­வி­ழக்கச் செய்யும் நிலைமை மீண்டும் ஏற்­பட இட­ம­ளிக்­கப்­ப­டாது என்றும், முத­லீ­டு­களைப் பாது­காப்­ப­தற்­கான சட்ட ஏற்­பா­டுகள் செய்­யப்­படும் என்­ப­தையும் ஜனா­தி­பதி வலி­யு­றுத்­தினார்.

இலங்­கையின் கடன் மறு­சீ­ர­மைப்பு செயல்­முறை மற்றும் பொரு­ளா­தார ஸ்திரத்­தன்­மையை ஏற்­ப­டுத்த அர­சாங்கம் மேற்­கொண்­டி­ருக்கும் நட­வ­டிக்­கைகள் குறித்து பிர­தி­நி­திகள் குழு­வுக்கு விளக்­க­ம­ளித்த ஜனா­தி­பதி, துறை­முக இறங்­கு­துறை அபி­வி­ருத்தி, துறை­முக நகர அபி­வி­ருத்தி, சுற்­றுலா தொழில்­துறை, எரி­சக்தி துறை மற்றும் போக்­கு­வ­ரத்துத் துறை ஆகி­ய­வற்றில் முத­லீட்டு வாய்ப்­புகள் குறித்தும் தெளி­வு­ப­டுத்­தினார்.

பிராந்­தி­யத்தின் சிறந்த முத­லீட்டு மைய­மாக சுற்­றுலா தல­மா­கவும் இலங்­கையை மாற்­று­வதே புதிய அர­சாங்­கத்தின் நோக்­க­மாகும் என்­பதை ஜனா­தி­பதி மேலும் தெரி­வித்தார்.
தொழில் மற்றும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி பிரதி அமைச்சர் கலா­நிதி அனில் ஜயந்த பெர்­னாண்டோ, ஜனா­தி­ப­தியின் சிரேஷ்ட மேல­திகச் செய­லாளர் ரோஷன் கமகே, ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் இரா­ஜாங்க அமைச்சர் அஹ்மட் அல் செயி, இலங்­கைக்­கான ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் தூதுவர் கலீட் அல் அமேரி, வர்த்­தகம் மற்றும் வாணிப அலு­வல்கள் உதவி அமைச்சர் சயீட் அல் ஹஜேரி, எரி­சக்தி மற்றும் ஸ்திரத்­தன்­மைக்­கான வெளி­யு­றவு உதவி அமைச்சர் அப்­துல்லா பெலாலா, வெளி­யு­றவு அமைச்­சரின் பிரதி பணிக்­குழு பிர­தானி அஹ்மட் பர்­ஹைமா, வெளி­யு­றவு அமைச்சின் கொள்கை தயா­ரிப்பு திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் முஅத் அல் வாரி, வெளி­யு­றவு அமைச்சர் அலு­வ­ல­கத்தின் ஊடக மற்றும் சிரேஷ்ட நிபுணர் மைதா அல் மயி­சோரி, ஆசிய மற்றும் பசிபிக் அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் அதி­கா­ரிகள் சிலரும் இந்­நி­கழ்வில் கலந்து கொண்­டனர்.
இத­னி­டையே, இலங்­கைக்குத் விஜயம் செய்­துள்ள ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் பிரதிப் பிர­த­மரும் வெளி­வி­வ­கார அமைச்­ச­ரு­மான மேதகு ஷேக் அப்­துல்லா பின் சயீத் அல் நஹ்­யானை வர­வேற்கும் நிகழ்வு வெளி­வி­வ­கார அமைச்சர் விஜித ஹேரத் தலை­மையில் இடம்­பெற்­றது.

இந்த சந்­திப்பின் போது, வர்த்­தக முத­லீடு, சுற்­றுலா, எரி­சக்தி மற்றும் வேலை வாய்ப்­புகள் உள்­ளிட்ட பல்­வேறு துறை­களில் ஐக்­கிய அரபு அமீ­ர­கத்­துடன் பல ஆண்­டு­க­ளாக வளரும் நம் உற­வு­களை மேலும் வலுப்­ப­டுத்­து­வது குறித்த களந்­து­றை­யா­டப்­பட்­டது.
மேலும், ஐக்­கிய அரபு அமீ­ர­கத்­துடன் வர்த்­தக மற்றும் கைத்­தொழில் சம்மேளனமும், இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனமும் இணைந்து “ஐக்கிய அரபு எமிரேட்ஸ்–இலங்கை கூட்டு வர்த்தக சபை”யை நிறுவுவதற்கான முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.

இப்­பு­திய முயற்சி, இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான பொரு­ளா­தார ஒத்­து­ழைப்பை மேம்­ப­டுத்­து­வ­தோடு, வணிக உற­வு­களை மேலும் தீவி­ரப்­ப­டுத்தும் வகையில் ஒரு முக்­கி­ய­மான முன்­னேற்­றத்தைக் ஏற்­ப­டுத்தும் என நம்­பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.