மினா ‘பீ வலயத்தில்’ தங்க ஹாஜி ஒருவருக்கு 1195.45 சவூதி ரியால் செலுத்தப்பட்டுள்ளது

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவிப்பு

0 72

(றிப்தி அலி)
புனித ஹஜ் கட­மை­யினை மேற்­கொள்வதற்காக இலங்­கை­யி­லி­ருந்து இந்த வருடம் செல்லவுள்ள ஹாஜி­க­ளுக்­காக மினாவில் ஒதுக்­கப்­பட்­டுள்ள ‘பீ வல­யத்தில்’ ஒரு ஹாஜி தங்குவதற்காக 1,195.45 சவூதி ரியால் செலுத்­தப்­பட்­டுள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தெரி­வித்­தது.

இக்­கட்­டணம் ஹஜ் முகவர் நிறு­வ­னங்­க­ளினால் திணைக்­க­ளத்தின் ஊடாக மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இதன் இன்­றைய இலங்கைப் பெறு­மதி 95,650 ரூபா­வாகும். புனித ஹஜ் யாத்­தி­ரை மேற்­கொள்ளும் இலங்கை ஹாஜிகள் சுமார் ஐந்து நாட்கள் மினாவில் தங்­கு­வது வழ­மை­யாகும்.

இதே­வேளை, புனித ஹஜ் யாத்­தி­ரை­யினை மேற்­கொள்­ள­வுள்ள 3,500 இலங்கை ஹாஜி­க­ளுக்கு சவூதி அரே­பி­யாவில் சேவை­களை வழங்­கு­வ­தற்­காக ஜித்­தா­வி­லுள்ள அல் பைத் எனும் நிறு­வனம் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது.

புத்­த­சா­சன சமய விவ­கார மற்றும் கலா­சார அமைச்சர் ஹினி­தும சுனில் செனவி, தேசிய ஒரு­மைப்­பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், அரச ஹஜ் குழு தலைவர் றியாஸ் மிஹ்லார், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் மற்றும் ஜித்­தா­வி­லுள்ள இலங்கை கொன்­சி­யூலர் அலு­வ­ல­கத்தின் பிர­தி­நி­திகள் ஆகி­யோரின் பங்­கு­பற்­ற­லுடன் இடம்­பெற்ற நேர்­கா­ணலின் போதே இந்த நிறு­வனம் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த நிறு­வ­னத்தின் ஊடாக மக்கா, மதீனா, அரபா, மினா மற்றும் முஸ்­த­லிபா போன்ற இடங்­களில் உணவு, தங்­கு­மிடம் மற்றும் போக்­கு­ர­வத்து வச­திகள் போன்­றன இலங்கை ஹாஜி­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

குறித்த சேவை நிறு­வ­னத்­துடன் அரச ஹஜ் குழுவோ அல்­லது முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமோ இது­வரை எந்­த­வொரு ஒப்­பந்­தமும் கைச்­சாத்­தி­ட­வில்லை. மாறாக 2025ஆம் வரு­டத்­திற்கு ஹஜ் உரிமம் பெற்ற ஹஜ் முக­வர்­களே இணைய வழியில் அல் பைத் நிறு­வ­னத்­துடன் ஒப்­பந்தம் செய்­து­கொள்வர் என திணைக்­களம் தெரி­வித்­தது.
அதே­வேளை, மினாவில் வலயம் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான கட்­ட­ணத்­தினை மாத்­தி­ரமே ஹஜ் முகவர் நிறு­வ­னங்கள் திணைக்­க­ளத்தின் ஊடாக அல் பைத் நிறு­வ­னத்­திற்கு செலுத்தின.

ஏனைய அனைத்துக் கொடுப்­ப­ன­வு­களும், சேவை வழங்கும் நிறு­வ­னத்­திற்கு அங்­கீ­காரம் பெற்ற ஹஜ் முகவர் நிறு­வ­னங்­க­ளினால் நேர­டி­யா­கவே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.
இதனால், ஹஜ் முகவர் நிறு­வ­னங்கள் பெற்­றுக்­கொள்ளும் வச­தி­க­ளுக்கு ஏற்­பசேவை வழங்கும் நிறு­வ­னத்தின் விலை­களில் மாற்­றங்கள் ஏற்­ப­டலாம் அது தொடர்­பான தக­வல்­களை ஹஜ் முகவர் நிறுவனங்களிடமிருந்தே பெற்றுக்கொள்ள முடியும்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு எம்.ஐ. அஹமட் கபீரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு வழங்கப்பட்ட பதிலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.