உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக பள்ளிகளை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

0 39

(றிப்தி அலி)
எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக பள்ளிவாசல்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தல் தொடர்­பான விட­யங்­க­ளுக்கு பள்­ளி­வா­ச­லையோ, அதன் சுற்­றுச்­சூ­ழ­லையோ அல்­லது அதன் உடை­மை­க­ளையோ பயன்­ப­டுத்­து­வதை தவிர்த்­து­கொள்­ளு­மாறு திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

அத்­துடன் பள்­ளி­வா­ச­லையோ, பள்­ளி­வாசல் சுற்றுச் சூழ­லையோ அல்­லது அதன் உட­மை­க­ளையோ மற்றும் நம்­பிக்­கை­யாளர் பத­வி­க­ளையோ துஷ்­பி­ர­யோகம் செய்­வது உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட்டால் வக்பு சட்­டத்­திற்கு அமை­வாக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அவர் குறிப்­பிட்டார்,

பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் பள்­ளி­வா­ச­லையும் தங்­க­ளது பத­வி­க­ளையும் உள்ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­காக துஷ்­பி­ர­யோகம் செய்­வ­தாக வக்பு சபைக்கும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கும் பல முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. இத­னை­ய­டுத்தே முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸினால் மேற்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.