மௌலவி ஒருவரை நடுவீதியில் பொலிஸார் தாக்கிய சம்பவம்: நடந்தது என்ன?

0 32

எஸ்.என்.எம்.சுஹைல்

முச்­சக்­க­ர­வண்டி ஓட்டிச் சென்ற மௌல­வி­யொ­ரு­வரை பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் சீரு­டை­ய­ணிந்­த­படி கன்னத்தில் அறைந்து தாக்­குதல் நடத்­திய சம்­பவம் தொடர்­பான காணொ­லி­யொன்று கடந்த வாரம் சமூ­க­ வ­லைத்­த­ளங்­களில் வைர­லா­கி­யி­ருந்­தது. இந்­நி­லையில், குறித்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் கைது­செய்­யப்பட்­ட­தான தக­வலும் வெளி­யா­கி­யி­ருந்­தது. இந்த சம்­பவம் தொடர்பில் பாதிக்­கப்­பட்ட மௌல­வி­யுடன் நேர­டி­யாக உரை­யாடி விடயம் தொடர்பில் தெரிந்­து­கொண்டோம். அத்­துடன், இது­வி­ட­ய­மாக பொலிஸ் தரப்­பி­னரின் நட­வ­டிக்­கைகள் எடுத்து வரு­வ­தாக பொலிஸ் ஊடக பிரிவு தெரி­வித்­தது. அத்­தோடு, இந்த தாக்­கு­த­லா­னது உல­மாக்­களை அவ­ம­தித்­த­தாகவே கரு­து­வ­தாக அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தெரி­வித்­துள்­ளது. இந்த விவ­காரம் குறித்து இனி நாம் விரி­வாக பார்ப்போம்.

தாக்­கப்­பட்ட மௌலவி யார்?
அநு­ரா­த­புரம் சலா­ஹி­யாவில் ஹிப்ழ் கற்­கை­யையும் அக்­கு­றணை ரஹ்­மா­னியா அரபுக் கல்­லூ­ரியில் கிதாபு கற்­கை­ளையும் முடித்த எப்­பா­வல, கட்­டி­யாவ கிரா­மத்தைச் சேர்ந்த 36 வய­து­டைய அல்­ஹாபில் அல் ஆலிம் அப்துல் லதீப் கியாஸ்தீன் (ரஹ்­மானி) என்­ப­வரே கடந்த பெப்­ர­வரி மாதம் 23 ஆம் திகதி மடாட்­டு­கம, கைலப்­பத்­தான பகு­தியில் பொலி­ஸாரால் தாக்­கப்­பட்ட மௌல­வி­யா­வ­ராவார். இவர், ஹொரோ­வ­பொத்­தான, அங்­கு­நெச்சி மஸ்­ஜிதுல் ஹுதா ஜும்ஆப் பள்­ளி­வா­சலில் பேஷ் இமா­மாக கட­மை­யாற்­றி­வ­ரு­கின்றார். அப்­பி­ர­தே­சத்தில் திரு­மணம் முடித்­துள்ள குறித்த மௌல­விக்கு இரு பெண் பிள்­ளை­களும் ஒரு ஆண் பிள்­ளை­யு­மாக மூன்று பிள்­ளைகள் இருக்­கின்­றனர்.

நடந்தது என்ன?
கண் பார்­வையை இழந்­துள்ள மௌல­வியின் மாம­னா­ருக்கு கண்­டி­யி­லுள்ள தனியார் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெறு­வ­தற்­காக முன்­ப­திவு செய்­துள்ளார். இந்­நி­லையில் மௌலவி கியாஸ், அவ­ரது மனை­வியுடன் மாம­னா­ருக்கு சிகிச்சை பெறு­வ­தற்­காக தனது இரண்டு பிள்­ளை­க­ளையும் எடுத்­து­கொண்டு, கடந்த 22 ஆம் திகதி காலை ஹொரோ­வ­பொத்­தா­னை­யி­லி­ருந்து கண்­டிக்கு முச்­சக்­கர வண்­டியில் சென்­றுள்ளார். மறுநாள் மாம­னா­ருக்கு சிகிச்­சை­பெற வேண்­டி­ய­நி­லையில் கண்­டிக்கு சென்ற இவர்கள், மாம­னாரின் சகோ­த­ரியின் வீட்டில் தங்­கி­விட்டு 23 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை காலை கண்­டி­யி­லுள்ள தனியார் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­றுக்­கொண்டு மீண்டும் ஹொரோ­வ­பொத்­தானை நோக்கி பய­ணித்­துள்­ளனர்.

இந்த பய­ணத்­தின்­போது ஏ9 வீதியில் தம்­புள்ளை தாண்டி மடாட்­டு­கம பகு­தி­யி­லுள்ள கைலப்­பத்­தா­னயில் உணவு உட்­கொள்­வ­தற்­காக சாப்­பாட்­டுக்­க­டை­யொன்­றுக்­க­ருகில் முச்­சக்­கர வண்­டியை நிறுத்தும் போதே மௌலவி பொலிஸ் உத்­தி­யோத்­தரால் தாக்­கப்­படார்.

நடு­வீ­தியில் நடந்­தது என்ன?
ஏ9 வீதியில் கண்­டி­யி­லி­ருந்து யாழ்­ப்பாண திசையில் சென்­று­கொண்­டி­ருந்த மௌலவி முச்­சக்­கர வண்­டியை பாதையின் வலப்­பக்­க­மாக திருப்­பு­வ­தற்­கான சமிக்ஞை மின் விளக்கை ஒளிரச் செய்து திருப்ப முற்­பட்­டுள்ளார். இந்­நி­லையில், எதிர் திசையில் மிக வேக­மாக மோட்டார் சைக்கிளொன்று வரு­வதை கண்டு அதற்கு இட­ம­ளித்த பிறகும் வீதியின் மறு­பக்­கத்­திற்கு சென்று முச்சக்­கர வண்­டியை நிறுத்த முற்­பட்­ட­போது, கடந்து சென்ற மோட்டார் சைக்கிளில் சென்­றவர் திரும்பி மீண்டும் வந்து மௌல­வியை பல­மாக கன்னத்தில் இரண்டு மூன்று தட­வைகள் அறைந்து தாக்­கி­யுள்ளார். பின்னர் முச்­சக்­கர வண்­டி­யி­லி­ருந்து கீழே இறங்­கிய மெளலவியை பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் மீண்டும் சர­மா­ரி­யாக தாக்­கி­விட்டு அங்­கி­ருந்து சென்­றுள்ளார்.

தாக்­கு­த­லை­ய­டுத்து என்ன நடந்­தது?
இந்த தாக்­கு­தல் பெப்­ர­வரி 23 ஞாயிறு மாலை 5.30 மணி­ய­ளவில் இடம்­பெற்­றது. தாக்­கப்­பட்ட மௌலவி சாப்­பாட்டுக் கடையில் தேனீர் அருந்­தி­விட்டு பொலிஸில் முறைப்­பா­டுகள் ஏதும் அளிக்காமல் ஹொரோ­வ­பொத்­தானை வீட்­டுக்கு திரும்­பி­விட்டார். இந்­நி­லையில், பலத்த தாக்­கு­த­லுக்கு உள்­ளான மௌல­விக்கு இரவில் கடு­மை­யான வலி ஏற்­பட்­டுள்­ளது. கன்னத்தில் வீக்கம் ஏற்­பட்­ட­துடன், தலையில் வருத்­தமும், கழுத்தை திருப்ப முடி­யாத நிலையும் ஏற்­பட்­டுள்­ளது. எனினும், அவர் தாக்­கப்­பட்ட தின­மான 23 ஆம் திகதி முறைப்­பா­ட­ளிக்­கவோ, சிகிச்சை பெறவோ இல்லை.

இதனியடையே, மௌலவி தாக்­கப்­பட்ட விடயம் கைலப்­பத்­தான சாப்­பாட்டுக் கடையில் பொருத்­தப்­பட்­டி­ருந்த சீ.சீ.ரீ.வி. கெம­ராவில் பாதி­வா­கி­யி­ருந்­தது. இந்தப் பதிவை, அங்­கி­ருந்து பெற்­றுக்­கொண்டே வீடு திரும்­பி­யி­ருக்­கிறார் மௌலவி.

ஹொரோ­வ­பொத்­தா­னையில் சிகிச்சை
தாக்­கப்­பட்ட மௌலவி கியாஸ்தீன், மறுநாள் காலை ஹொரோ­வ­பொத்­தான வைத்­தி­ய­சா­லைக்கு சிகிச்சை பெறச் சென்றார். இந்­நி­லையில், அவ­ருக்கு ஏற்­பட்ட பலத்த காயம் குறித்து வைத்­தி­ய­சா­லையில் வின­வப்­பட்­ட­போது முதல்நாள் கைலப்­பத்­தா­னையில் நடந்த சம்­பவம் தெரி­விக்­கப்­பட்­டது. இதன்­போது, வைத்­தி­ய­சாலை ஊடாக விடயம் ஹொரோ­வ­பொத்­தானை பொலி­ஸா­ருக்கு அறிவிக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த பொலிஸ்­ நி­லைய அதி­கா­ரிகள் வைத்­தி­ய­சா­லைக்கு சென்று முறைப்­பாட்­டையும் பெற்­றுக்­கொண்­டனர்.

மூன்று நாட்கள் ஹொரோ­வ­பொத்­தான வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்ற, அங்கு Scan மற்றும் xray வச­திகள் இன்­மையால் அநு­ரா­த­புர வைத்­தி­ய­சா­லைக்கு வியா­ழக்­கி­ழமை 27 ஆம் திக­தி­யன்று மாற்­றப்­பட்­டுள்ளார்.

அநு­ரா­த­புர வைத்­தி­ய­சா­லையில் xray எடுக்­கப்­பட்டு பார­தூ­ர­மான நிலைமை இல்லை என அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து வெள்­ளிக்­கி­ழமை (02.28) வீடு திரும்­பி­ய­தாக கூறினார் மௌலவி கியாஸ்தீன்.

பொலிஸ் நட­வ­டிக்கை
மேற்­படி சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளதை விடி­வெள்­ளிக்கு உறுதி செய்த பொலிஸ் ஊடகப் பிரிவு, தாக்­குதல் சம்­பவம் இடம்­பெற்று மறுநாள் பெப்­ர­வரி 23 ஆம் திகதி பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் மடாட்­டு­கம பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு கடந்த திங்­க­ளன்று (மார்ச் 3 ஆம் திகதி) நீதி­மன்றில் ஆஜர்­செய்­யப்­பட்டு பிணை­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது எனவும் தெரி­வித்­தது.

இந்த சம்­பவம் குறித்­த­தான விசா­ர­ணை­களை மடாட்­டு­கம பொலிஸார் மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் , இது தொடர்­பான வழக்கு விசா­ர­ணைகள் எதிர்­வரும் ஜூன் மாதம் 30 திகதி இடம்­பெறும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரி­வித்­தது.

இது இவ்­வா­றி­ருக்க, நேற்­று­முன்­தினம் செவ்­வா­யன்று பாதிக்­க­ப்பட்ட மௌல­வி­யுடன் முச்­சக்­கர வண்­டியில் சென்ற அவ­ரது மாமனார் மற்றும் மனைவி ஆகியோர் வாக்­கு­மூலம் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக மடாட்­டு­கம பொலிஸ் நிலை­யத்­திற்கு அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர். ஏற்­க­னவே, சுக­யீ­ன­முற்­றுள்ள மௌல­வியின் மாம­னாரும் மனை­வியும் நோன்பு நோற்ற நிலையில் ஹெரோ­வ­பொத்­தா­னை­யி­லி­ருந்து நீண்ட தூரம் பய­ணித்து கெக்­கி­ரா­வைக்கு அரு­கா­மை­யி­லுள்ள மடாட்­டு­க­ம­வுக்கு சென்று வாக்­கு­மூலம் அளித்­தி­ருந்­தனர்.

உலமா சபை கண்­டனம்
கியாஸ்தீன் மௌலவி தாக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அநு­ரா­த­புர மாவட்ட ஜம்­இய்­யதுல் உல­மா­வினர் அவ­ருக்கு ஆறுதல் கூறினர். அத்­தோடு, ஹொரோ­வ­பொத்­தான கிளை­யி­னரும் அவரை நேரில் சந்­தித்து ஆறு­தல்­ப­டுத்தி நலம் விசா­ரித்­தனர். இது இவ்­வா­றி­ருக்க அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவும் தொலை­பேசி ஊடாக தொடர்­பு­கொண்டு பாதிக்­கப்ட்ட மௌல­விக்கு ஆறுதல் கூறினர். மேலும், இந்த விவ­கா­ரத்­துக்கு கண்­டன அறிக்­கை­யொன்­றையும் வெளி­யிட்­டி­ருந்­தது.

அதில், அநு­ரா­த­புரம் மாவட்டம் கெக்­கி­ராவ பிர­தே­சத்தில் மௌலவி ஒரு­வரை பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் தாக்­கிய சம்­பவம் தற்­போது பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருக்­கி­றது. இது தொடர்­பி­லான காணொ­ளி­களும் சமூக வலைத்­த­ளங்­களில் பகி­ரப்­பட்டு வரு­கின்­றன.

குறித்த மௌலவி மீது நிகழ்த்­தப்­பட்ட அத்­து­மீ­றிய செயற்­பாட்­டினை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை மிக வன்­மை­யாக கண்­டிப்­ப­தோடு பாதிக்­கப்­பட்ட மௌல­விக்கு மிகத் துரி­த­மாக நீதி­யினை பெற்றுக் கொடுக்­கு­மாறும், தாக்­குதல் நடாத்­திய பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ருக்­கெ­தி­ராக உரிய ஒழுக்­காற்று நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறும் பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகி­யோ­ரிடம் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை வேண்­டுகோள் விடுக்­கி­றது என கூறப்­பட்­டி­ருந்­தது.

இத­னி­டையே, இந்த சம்­பவம் குறித்து அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் கூறு­கையில், அநு­ரா­த­பு­ரத்தில் மௌலவி மீது நடத்­தப்­பட்ட தாக்­குதல் முழு உல­மாக்­க­ளையும் முஸ்­லிம்­க­ளையும் அகௌ­ரவப்படுத்­தி­ய­மைக்கு சம­மா­ன­தாகும். எனவே, இந்த விட­யத்தை உலமா சபை மிகச் சாதா­ர­ண­மாக எடுத்­துக்­கொள்­ளாது. தாக்­கப்­பட்ட விவ­கா­ரத்­திற்கு நீதியை பெற்­றுக்­கொள்­வ­தற்கு போராடும் எனவும் தெரிவித்தார்.

கெக்கிராவைக்கு அருகாமையில் நடுவீதியில் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரால் மௌலவியொருவர் தாக்கப்பட்டமை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தாக்குதலுக்கு உள்ளான மௌலவி உடல் உபாதைக்கு உள்ளாகி வைத்தியசாலையில் 5 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ளார். அத்தோடு, இந்த சம்பவத்தையடுத்து அவர் பல்வேறு இன்னல்களுக்கும் முகம்கொடுத்துள்ளார்.

இதனிடையே, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இச்சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 30 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்கிறது. பொலிஸாரின் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ள அகில இலங்கை ஜம்இய்துல் உலமா இவ்விவகாரத்தை கண்டித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் அரசாங்கமும் பொலிஸ் தரப்பும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நாமும் வலியுறுத்துகிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.