ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க நேற்று முன்தினம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்திற்கு விஜயம் செய்தார். கட்சியின் கிழக்கு மாகாண முஸ்லிம் அங்கத்தவர்களும் இச்சந்திப்பில் பங்குபற்றினர்.
இச்சந்திப்பு தொடர்பில் சம்பிக்க ரணவக்கவின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்,
“முஸ்லிம் சமூகத்திற்குள் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தவறான புரிதல்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. மேலும் நாட்டின் எதிர்காலத்தை நோக்கி அனைத்து மதக் குழுக்களும் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்றும் படித்த, புத்திசாலித்தனமான மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் எவ்வாறு முன்னோக்கிச் செல்ல முடியும் என்பது குறித்து இரு தரப்பினருக்கும் இடையே கருத்துக்கள் பரிமாறப்பட்டன. குறிப்பாக கடந்த காலங்களில் எழுந்த சில தவறான புரிதல்களைத் தெளிவுபடுத்துவதற்காக, இரு தரப்பினரும் மிகவும் முற்போக்கான கருத்துக்களைப் ைப் பரிமாறிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. – Vidivelli