சுங்­கத்தில் இருந்து சர்ச்­சைக்­கு­ரிய 323 கொள்­க­லன்கள் விடு­விக்­கப்­பட்­டமை தொடர்பில் விசா­ரணை வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சபையில் வலியுறுத்து

0 65

(எம்.ஆர்.எம்.வசீம், இரா­.ஹஷான்)
சுங்­கத்தில் இருந்து சர்ச்­சைக்­கு­ரிய 323 கொள்­க­லன்கள் வெளியில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் எங்­களை குற்றம் சாட்­டாமல் இதனை வெளிப்­ப­டுத்­திய சுங்க தொழிற்­சங்க தலைவர் உள்­ளிட்ட அதி­கா­ரி­க­ளிடம் விசா­ரணை மேற்­கொள்ள வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஏற்­று­மதி, இறக்­கு­மதி கட்­டுப்­பா­டுகள் தொடர்­பான கட்­ட­ளைகள் மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
சுங்க தொழிற்­சங்க கூட்­டணி ஜனா­தி­ப­திக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்­கி­றது. அதில்,இறக்­கு­மதி கொள்­க­லன்­களின் நீண்ட தூர வரி­சையில் மறைந்து, சுங்க பணிப்­பாளர் நாயகம், சுங்க கொள்­கலன் விடு­விப்பு ஒழுங்­கு­வி­தி­க­ளுக்கு முர­ணாக செயற்­பட்­டுள்ளார். அதன் பிர­காரம் சுங்­கத்தில் இருந்து கட்­டா­ய­மாக பரீட்­சிக்க வேண்டும் என சுங்க முகா­மைத்­துவ பிரிவால் இனம் காணப்­பட்டு சிவப்பு அட்டை ஒட்­டப்­பட்ட 323 கொள்க­லன்கள் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக சுங்க அதி­கா­ரி­களின் சங்­கத்தின் தலைவர் ஜீ.ஜே, சன்­ஜீவ கையெ­ழுத்­திட்டு அனுப்­பி­யுள்ளார்.

சுங்­கத்தில் இருந்து 323 கொள்­க­லன்கள் பரீட்­சிக்­கப்­ப­டாமல் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக நாங்கள் பொய் கூறுவதாக அமைச்சர் தெரி­விக்­கிறார். 323 கொள்­க­லன்கள் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக நாங்கள் தெரி­விக்­க­வில்லை. சுங்க அதி­கா­ரி­களின் சங்­கத்தின் தலைவர் ஜனா­தி­ப­திக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்­தி­லேயே தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவர் தெரி­வித்­தி­ருப்­பது பொய் என்றால் அவரை கைது­செய்து விசா­ரணை செய்­யுங்கள். அதனை விடுத்து எங்­களை குற்றம் சாட்ட வேண்டாம்.

அர­சாங்கம் தொழிற்­சங்­கங்­க­ளுக்கு பயம். அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு தயக்கம் காட்­டு­கி­றது. அநுர குமார திஸா­நா­யக்­கவை ஜனா­தி­ப­தி­யாக்க உதவி செய்­த­வர்­களே அந்த குற்­றச்­சாட்டை தெரி­விக்­கின்­றனர். அது மாத்­தி­ர­மல்ல, இந்த 323 கொள்­க­லன்­களில் இதற்கு முன்னர் குற்­றச்­சாட்­டுக்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் இருப்­ப­தாக அந்த கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதனால் அரசாங்கம் எங்கள் மீது குற்றச்சாட்டு தெரிவிக்காமல் இந்த விடயத்தை வெளிப்படுத்திய சுங்க தொழிற்சங்க அதிகாரிகளை விசாரணை மேற்கொண்டு இது தொடர்பான உண்மை நிலையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.