ரமழான் மாதத்தில் விடுபட்ட நோன்புகளை கழா செய்வது தொடர்பான வழிகாட்டல்

0 95

ரமழான் மாதத்தில் விடு­பட்ட நோன்­பு­களை கழா செய்­வது தொடர்­பாக அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் ஃபத்வாக் குழு வழி­காட்டல் அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டுள்­ளது.

அவ்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ரமழான் மாதத்தில் நோன்பு நோற்­பதை அல்­லாஹு தஆலா முஸ்­லிம்­க­ளுக்கு கட­மை­யாக்­கி­யுள்­ள­தோடு, அவர்­களில் சில­ருக்கு நோன்பை விடு­வ­தற்கு சலு­கையும் வழங்­கி­யுள்ளான். சலுகை வழங்­கப்­பட்­ட­வர்கள் அந்­நோன்பை ரம­ழா­னுக்குப் பின்னர் நோற்றுக் கொள்­வதை அல்­லது அதற்குப் பக­ர­மாக ஃபித்யாக் கொடுப்­பதை மார்க்கம் கட­மை­யாக்­கி­யுள்­ளது.

ரம­ழானில் நோன்பு விடு­பட்­ட­வர்கள் பின்­வரும் வழி­காட்­டல்­க­ளுக்­கேற்ப நடந்­து­கொள்­ளு­மாறு கேட்டுக் கொள்­கின்றோம்.

தற்­கா­லி­க­மான நோய், மாத­விடாய், பிர­சவம், பிர­யாணம் போன்ற கார­ணங்­க­ளுக்­காக நோன்பை விட்­ட­வர்கள் அந்­நோன்பை எதிர்­வரும் ரம­ழா­னுக்கு முன்னர் கழா செய்து கொள்ள வேண்டும். எதிர்­வரும் ரம­ழா­னுக்கு முன்னர் நோன்பை நோற்றுக் கொள்­வ­தற்கு சக்­தி­யி­ருந்தும் கழா செய்­ய­வில்­லை­யெனில், அந்­நோன்பைக் கழா செய்­வ­துடன், தான் உட்­கொள்ளும் பிர­தான உண­வான அரி­சி­யி­லி­ருந்து 600 கிராம் ஃபித்­யா­வாக ஏழைக்குக் கொடுத்தல் வேண்டும். இவ்­வாறு நோன்பை கழா செய்­யாமல் வரு­டங்கள் கடந்து செல்லும் போது ஒரு வரு­டத்­திற்கு ஒரு ஃபித்யா என்ற வகையில் ஃபித்­யாவும் இரட்­டிப்­பாகும்.

கர்ப்­பிணித் தாய்­மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்­மார்­களில், தனக்கு ஆபத்து ஏற்­படும் என்று பயந்து விட்ட நோன்பை எதிர்­வரும் ரம­ழா­னுக்கு முன்னர் கழா மாத்­திரம் செய்து கொள்ள வேண்டும்.

அவ்­வாறே அவர்­களில் தனது பிள்­ளைக்கு ஏதும் ஆபத்து ஏற்­பட்­டு­விடும் என்ற கார­ணத்­திற்­காக மாத்­திரம் நோன்பை விட்­ட­வர்கள் அந்­நோன்பை கழா செய்­வ­துடன் ஒரு நோன்­புக்குப் பக­ர­மாக தான் உட்­கொள்ளும் பிர­தான உண­வான அரி­சி­யி­லி­ருந்து 600 கிராம் ஃபித்­யா­வாக ஏழைக்குக் கொடுத்தல் வேண்டும். இவர்­களும் எதிர்­வரும் ரம­ழா­னுக்கு முன்னர் நோன்பை நோற்றுக் கொள்­வ­தற்கு சக்­தி­யி­ருந்தும் கழா செய்­ய­வில்­லை­யெனில், அந்­நோன்பைக் கழா செய்­வ­துடன் 600 கிராம் அரி­சியும் ஃபித்­யா­வாகக் கொடுத்தல் வேண்டும்.

இவ்­வாறு நோன்பை கழா செய்­யாமல் வரு­டங்கள் கடந்து செல்லும் போது ஒரு வரு­டத்­திற்கு ஒரு பித்யா என்ற வகையில் ஃபித்­யாவும் இரட்­டிப்­பாகும்.
நோன்பை நோற்றுக் கொள்ள முடி­யாத அள­விற்கு நிரந்­தர நோய் மற்றும் வயோ­திபம் போன்ற கார­ணங்­க­ளுக்­காக நோன்பை விட்­ட­வர்கள் ஒரு நோன்­புக்குப் பக­ர­மாக தான் உட்­கொள்ளும் பிர­தான உண­வான அரி­சி­யி­லி­ருந்து 600 கிராம் ஃபித்­யா­வாக ஏழைக்குக் கொடுத்தல் வேண்டும்.
(வருடங்கள் கடந்து சென்றாலும் இவர்களது பித்யா இரட்டிப்பாக மாட்டாது). – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.