கூட்டாக செயற்படுவது குறித்து எதிரணிகள் கலந்துரையாடல்

ஐ.ம.ச., பொ.ஜ.பெ., ஐ.தே.க., தமிழ்–முஸ்லிம் கட்சிகளும் பங்கேற்பு

0 47

பாரா­ளு­மன்ற விவ­கா­ரங்கள் உட்­பட எதிர்­கால அர­சியல் நட­வ­டிக்­கைகள் தொடர்­பி­லான முக்­கிய கலந்­து­ரை­யா­ட­லொன்று எதிர்க்­கட்­சியைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சகல கட்சித் தலை­வர்­களின் பங்­கேற்­புடன் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச தலை­மையில் நேற்று புதன்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் அமைந்­துள்ள எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

பாரா­ளு­மன்­றத்­திலும் வெளி­யிலும் கூட்­டாக இணைந்து செயல்­ப­டு­வது தொடர்­பாக எதிர்க்­கட்­சியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­க­ளி­டையே இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­காக எதி­ர­ணிகள் விசேட கலந்­து­ரை­யா­ட­லொன்றில் ஈடு­பட்­டுள்­ளன.
எதிர்க்­கட்சித் தலை­வரும் ஐக்­கிய மக்கள் சக்­தியின் தலை­வ­ரு­மான சஜித் பிரே­ம­தாச தலை­மையில் நேற்று பாரா­ளு­மன்ற எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற இக்­க­லந்­து­ரை­யா­டலில் ஐக்­கிய மக்கள் சக்தி, புதிய ஜன­நா­யக கூட்­டணி, ஸ்ரீலங்கா பொது­ஜ­ன­பெ­ர­முன, ஐக்­கிய தேசியக் கட்சி, இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி உட்­பட ஏனைய தமிழ் கட்­சி­களின் பிர­தி­நி­திகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் உள்­ளிட்ட கட்­சி­ய­ினரும் கலந்­து­கொண்­டனர்.

இந்த ஒன்­றி­ணைந்த செயற்­பா­டுகள் மூலம் பல­மான பாரா­ளு­மன்ற நட­வ­டிக்­கை­களை கொண்­ட­மைந்த பாரா­ளு­மன்­றத்தைக் கட்­டி­யெ­ழுப்ப முடியும் என்றும், அர­சாங்­கத்தின் சிறந்த தீர்­மா­னங்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­பது போலவே, நாட்டு மக்­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் சகல நட­வ­டிக்­கை­க­ளுக்கும் எதிர்ப்பை வெளி­யிட்டு மக்கள் பக்கம் நாம் முன்­நிற்போம் என்றும் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச இங்கு தெரி­வித்­துள்ளார்.
பாரா­ளு­மன்ற குழுக்­களில் கவனம் செலுத்தி அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும் என இங்கு சகல கட்சித் தலை­வர்­களும் தமது கருத்­துக்­களை எடுத்­து­ரைத்து சுட்­டிக்­காட்­டினர். கடந்த ஜன­வரி 29 ஆம் திக­தியும் எதிர்க்­கட்­சியைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்சித் தலை­வர்கள் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச தலை­மையில் கூடி இதே­போன்ற கலந்­து­ரை­யா­ட­லொன்றை நடத்­தி­யி­ருந்­த­தோடு, நேற்று இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலும் இதன் ஓர் தொடர்ச்­சி­யாகும்.

இக்­க­லந்­து­ரை­யா­டலில் எதிர்க்­கட்­சியின் பிர­தம கொறடா கயந்த கரு­ணா­தி­லக்க, எதிர்க்­கட்­சியின் பிரதி அமைப்­பாளர் ஜே.சி. அல­வ­து­வல, எதிர்க்­கட்­சியின் பிரதி அமைப்­பாளர் அஜித் பி. பெரேரா, அகில இலங்கை மக்கள் காங்ரஸ் தலைவர் ரிஷாத் பதி­யுதீன், ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன தேசிய அமைப்­பாளர் நாமல் ராஜ­பக்ஷ, இலங்கை தொழி­லாளர் காங்ரஸ் பொதுச் செய­லாளர் ஜீவன் தொண்­டமான், சர்­வ­ஜன அதி­காரம் கட்சி தலைவர் திலித் ஜய­வீர, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் செய­லாளர் நிஸாம் காரி­யப்பர், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் பிரதி தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், பி. சத்தியலிங்கம், அமிர்தநாதன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அனுராத ஜயரத்ன, டி.வீ. சானக மற்றும் காதர் மஸ்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.