காஸாவை அமெரிக்கா கைப்பற்றி சொந்தமாக்கும்

டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு; ஹமாஸ், உலக நாடுகள் கடும் எதிர்ப்பு

0 40

போரினால் அழி­வ­டைந்­துள்ள காஸா பிராந்­தி­யத்தை அமெ­ரிக்கா தனது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரும் என அறி­வித்­துள்ள அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் காஸாவில் வாழும் மக்கள் வேறு நாடு­களில் குடி­யேற்­றப்­ப­டு­வார்கள் என்றும் தெரி­வித்­துள்ளார்.

வெள்ளை மாளி­கையில் இஸ்­ரே­லிய பிர­தமர் நெதன்­யா­ஹு­வுடன் நடந்த பேச்­சு­வார்த்­தைக்குப் பிறகு ஊட­கங்கள் மத்­தியில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே ட்ரம்ப் இந்த அறி­விப்பை வெளி­யிட்டார். ட்ரம்பின் இந்த அறி­விப்பை ஹமாஸ் உட்­பட பல்­வேறு நாடுகள் கடு­மை­யாக கண்­டித்­துள்­ளன. ட்ரம்பின் யோச­னையை முற்­றாக நிரா­க­ரிப்­ப­தாக சவூதி அரே­பி­யாவும் அறி­வித்­துள்­ளது.

அமெ­ரிக்­கா­வுக்கு விஜயம் செய்­துள்ள இஸ்ரேல் பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யா­கு­வுடன் இணைந்து வாஷிங்­டனில் டொனால்ட் ட்ரம்ப் செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்தார். அப்­போது அவர், “அமெ­ரிக்கா காஸா பகு­தியைக் கைப்­பற்றும். மேலும், நாங்கள் அதை சொந்­த­மாக்கிக் கொள்வோம். காஸா பகு­தியில் உள்ள பலஸ்­தீ­னி­யர்கள் வேறு இடங்­களில் மீள்­கு­டி­யேற்­றப்­ப­டு­வார்கள். காஸாவில் உள்ள வெடிக்­காத ஆபத்­தான அனைத்து குண்­டுகள் மற்றும் பிற ஆயு­தங்­களை அகற்­று­வ­தற்கு நாங்கள் பொறுப்­பேற்போம்.
அப்­ப­குதி மக்­க­ளுக்கு வரம்­பற்ற வேலைகள் மற்றும் வீட்­டு­வ­ச­தி­களை வழங்கும் ஒரு பொரு­ளா­தார வளர்ச்­சியை அமெ­ரிக்கா உரு­வாக்கும். இது முழு மத்­திய கிழக்­குக்கும் மிகவும் பெரு­மைப்­ப­டக்­கூ­டிய ஒன்­றாக இருக்கும். மத்­திய கிழக்கின் அந்தப் பகு­திக்கு பெரும் ஸ்திரத்­தன்­மையை இது கொண்டு வரும். அங்கு யார் வசிப்­பார்கள் என்று கேட்­கி­றீர்கள். அது “உலக மக்­களின்” வீடாக மாறக்­கூடும்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடை­யே­யான தற்­போ­தைய போர் நிறுத்தம் நீடித்த அமை­தியின் தொடக்­கத்தைக் குறிக்­கி­றது. இந்த போர் நிறுத்தம், ரத்­தக்­க­ளரி மற்றும் கொலை­களை முற்­றி­லு­மாக முடி­வுக்குக் கொண்­டு­வரும். நட்பு நாடு­க­ளு­ட­னான நம்­பிக்­கையை மீட்­டெ­டுக்­கவும், பிராந்­தியம் முழு­வதும் அமெ­ரிக்க வலி­மையை மீண்டும் கட்­டி­யெ­ழுப்­பவும் எனது நிர்­வாகம் விரை­வாக செயல்­பட்டு வரு­கி­றது.

யூத எதிர்ப்பைக் கொண்­டுள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் கவுன்சில் (UNHRC) மற்றும் பலஸ்­தீன அக­தி­க­ளுக்­கான ஐ.நா. பணி­யகம் (UNRWA) ஆகி­ய­வற்­றி­லி­ருந்து அமெ­ரிக்கா வெளி­யே­று­கி­றது. ஹமா­ஸுக்கு பணத்தை வழங்­கி­யதும் மனி­த­கு­லத்­துக்கு மிகவும் விசு­வா­ச­மற்­ற­து­மான ஐ.நா. நிவா­ரண மற்றும் பணி­ய­கத்­துக்­கான அனைத்து ஆத­ர­வையும் நிறுத்தும் அறி­விப்பை வெளி­யி­டு­வதில் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன்.
ஈரா­னிய ஆட்சி மீது அதி­க­பட்ச அழுத்­தத்தை பிர­யோ­கிக்க வேண்டும் என்ற எங்கள் கொள்­கையை மீட்­டெ­டுக்­கவும் நட­வ­டிக்கை எடுத்­துள்ளேன். ஈரா­னுக்கு எதி­ராக, மீண்டும் ஒரு­முறை மிகவும் ஆக்­ரோ­ஷ­மான சாத்­தி­ய­மான தடை­களை அமுல்­ப­டுத்­துவோம். ஈரா­னிய எண்ணெய் ஏற்­று­ம­தியை பூஜ்­ஜி­யத்­திற்கு கொண்டு வருவோம். மேலும், பிராந்­தி­யத்­திலும் உல­கிலும் பயங்­க­ர­வா­தத்­திற்கு நிதி­ய­ளிக்கும் ஈரானின் ஆட்சித் திறனைக் குறைப்போம்.

மக்கள் காஸா­வுக்குத் திரும்பிச் செல்­லக்­கூ­டாது என்று நான் நினைக்­கிறேன். பலஸ்­தீ­னர்­க­ளுக்கு காஸா மிகவும் துர­திர்ஷ்­ட­வ­ச­மான இடம் என்று நான் கேள்­விப்­பட்டேன். அவர்கள் நர­கத்தில் வாழ்­வதைப் போல வாழ்­கி­றார்கள். காஸா, மக்கள் வாழ்­வ­தற்­கான இட­மல்ல” என தெரி­வித்தார்.

அதே­நே­ரத்தில், 45 கிலோமீட்டர் நீளமும் அதிகபட்சம் 10 கிமீ அகலமும் கொண்ட, கடலோரப் பகுதியான காஸாவை அமெரிக்கா எவ்வாறு, எந்த அதிகாரத்தின் கீழ் கைப்பற்றி ஆக்கிரமிக்க முடியும் என்ற கேள்விக்கு ட்ரம்ப் நேரடியாக பதிலளிக்கவில்லை. ட்ரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்க ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காஸாவை இனச்­சுத்­தி­க­ரிப்புச் செய்யும் ட்ரம்பின் தீர்­மா­னத்தை வன்­மை­யாகக் கண்­டித்­துள்ள ஹமாஸ் இந்தத் தீர்­மா­னத்தை எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயல் என வர்­ணித்­துள்­ளது.

‘‘காஸாவைக் கைப்­பற்றும் ட்ரம்பின் கருத்­துக்கள் அபத்­த­மா­னவை. காஸா மக்கள் இதனை அனு­ம­திக்­க­மாட்­டார்கள் என்­பதால் பிராந்­தி­யத்தில் பதற்­றத்தை குழப்­பத்­தையும் உரு­வாக்­கு­வதே இதன் நோக்கம்’’ என ஹமாஸின் சிரேஷ்ட அதி­காரி சமி அபூ சுஹ்ரி தெரி­வித்­துள்ளார்.

‘‘ட்ரம்பின் இந்த அறிக்­கைகள் பலஸ்­தீனம் மற்றும் பிராந்­தியம் பற்­றிய குழப்­பத்­தையும் ஆழ­மான அறி­யா­மை­யையும் பிர­தி­ப­லிக்­கின்­றன. காஸா ஒன்றும் பொது­வான நிலம் அல்ல. அது வாங்­கு­வ­தற்கும் விற்­ப­தற்­கு­மான ஒரு சொத்தும் அல்ல. இஸ்­ரே­லுக்கு ஆத­ர­வா­னதும் பலஸ்­தீ­னுக்கு எதி­ரா­ன­து­மான அமெ­ரிக்க சார்பு தொடர்­கி­றது’’ என ஹமாஸின் மூத்த அதி­காரி இஸ்ஸத் அல் ரேஷிக் தெரி­வித்­துள்ளார்.

ட்ரம்பின் திட்­டத்தை நிரா­க­ரித்­துள்ள பலஸ்­தீன விடு­தலை அமைப்பு பலஸ்­தீன மக்­களை அவர்­க­ளது சொந்த நிலத்­தி­லி­ருந்து வெளி­யேற்றும் எந்த தீர்­மா­னத்­தையும் ஆத­ரிக்க முடி­யாது எனத் தெரி­வித்­துள்­ளது. ‘‘சர்­வ­தேச சட்­டத்­திற்­குட்­பட்ட வகையில் இரு அரசு தீர்வு வழங்­கப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் பலஸ்­தீன தலை­மைத்­துவம் உறு­தி­யா­க­வுள்­ளது’’ என பலஸ்­தீன விடு­தலை அமைப்பின் பொதுச் செய­லாளர் ஹுசைன் அல் ஷெய்க் தெரி­வித்­துள்ளார்.

பலஸ்­தீன ஜனா­தி­பதி மஹ்மூத் அப்பாஸ் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் ‘‘ எமது மக்­களின் உரி­மைகள் மீறப்­ப­டு­வதை நாம் ஒரு­போதும் அனு­ம­திக்­க­மாட்டோம். இதற்­கா­கவே நாம் பல தசாப்­தங்­க­ளாக போராடி வரு­கிறோம். ட்ரம்பின் அழைப்­புக்கள் சர்­வ­தேச சட்­டங்­களை மீறு­வ­தாக உள்­ளன. இரு அரசு தீர்வின் அடிப்­ப­டையில் 1967 ஆம் ஆண்டு இருந்த எல்­லை­களின் அடிப்­ப­டையில் ஜெரூ­ச­லமை தலை­ந­க­ராக கொண்ட ஒரு பலஸ்­தீன அரசை நிறு­வாமல் பிராந்­தி­யத்தில் அமை­தி­யையும் சமா­தா­னத்­தையும் அடைய முடி­யாது’’ எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

அமெ­ரிக்க ஜன­நா­யக கட்­சியின் செனட்டர் மேர்பி ட்ரம்பின் அறி­விப்பை கடு­மை­யாக கண்­டித்­துள்ளார். ‘‘ காஸா மீது அமெ­ரிக்கா படை­யெ­டுக்­கு­மானால் அது ஆயிரக் கணக்­கான அமெ­ரிக்க வீரர்­களின் படு­கொ­லைக்கும் மத்­திய கிழக்கில் பல தசாப்­தங்­க­ளுக்கு நீடிக்கும் போருக்­குமே வழி­வ­குக்கும். இது ஒரு மோச­மா­னதும் நகைச்­சு­வை­யா­ன­து­மான அறி­விப்­பாகும்’’ என அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

ரஷ்­யாவும் ட்ரம்பின் அறி­விப்பை நிரா­க­ரித்­துள்­ளது. ‘‘மேற்குக் கரையை முழு­மை­யாக கட்­டுப்­ப­டுத்­தவும் காஸா­வி­லி­ருந்து பலஸ்­தீ­னர்­களை வெளி­யேற்­றவும் அமெ­ரிக்கா முயற்­சிக்­கி­றது. இவ்­வா­றான கூட்டுத் தண்­டனை கொள்­கையை ரஷ்யா நிரா­க­ரிக்­கி­றது’’ என அந்­நாட்டு வெளி­யு­றவு அமைச்சர் சேர்ஜி லாவ்ரோ குறிப்­பிட்­டுள்ளார்.

காஸா மக்­களை பல­வந்­த­மாக வெளி­யேற்­று­வதை எதிர்ப்­ப­தாக தெரி­வித்­துள்ள சீனா இரு அரசு தீர்வை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.ட்ரம்பின் நிலைப்­பாடு ஏற்றுக் கொள்ள முடி­யாது எனத் தெரி­வித்­துள்ள துருக்கி பலஸ்­தீனில் அமைதி நிலை­நாட்­டப்­பட்டால் நிறுத்­தப்­பட்­டுள்ள இஸ்­ரே­லு­ட­னான வர்த்­தக உற­வு­களை மீளத் தொடங்­கு­வது பற்றி சிந்­திக்க முடியும் என்றும் தெரி­வித்­துள்­ளது.

பிரான்சும் இந்த திட்­டத்தை கடு­மை­யாக எதிர்ப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது. இதனை சர்­வ­தேச சட்­டத்தை கடு­மை­யாக மீறும் செய­லாக வர்­ணித்­துள்ள பிரான்ஸ் வெளி­யு­றவு அமைச்சின் பேச்­சாளர் கிறிஸ்டோப் லெமோயி காஸாவின் எதிர்­காலம் பலஸ்­தீன அரசின் கைக­ளி­லேயே இருக்க வேண்டும் எனவும் அதனை மூன்­றா­வது நாடு கட்­டுப்­ப­டுத்தக் கூடாது என்றும் தெரிவி்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் லாம்மி பலஸ்தீனர்களின் எதிர்காலம் அவர்களது சொந்த பூமியிலேயே உள்ளது எனத் தெரிவித்துள்ளார். பலஸ்தீனர்கள் காஸா மற்றும் மேற்குக் கரையில் உள்ள அவர்களது தாயகங்களில் செழிப்புடன் வாழ வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.