குறிஞ்சாக்கேணி பால நிர்மாணத்திற்கு சவூதி 10.5 மில். டொலர் நிதி ஒதுக்கீடு

நிதி திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு சவூதி நிதியத்திற்கிடையே ஒப்பந்தம் கைச்சாத்து

0 52

(றிப்தி அலி)
கடந்த பல வரு­டங்­க­ளாக கைவி­டப்­பட்­டுள்ள கிண்­ணியா, குறிஞ்­சா­க்கேணி பாலத்தின் நிர்­மாணப் பணி­களை மீள ஆரம்­பிக்க 10.5 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. அபி­வி­ருத்­திக்­கான சவூதி நிதி­யத்தின் ஊடா­கவே இந்த நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

பேரா­தனை – பதுளை – செங்­க­லடி வீதி அபி­வி­ருத்தி திட்­டத்­திற்கு ஒதுக்­கப்­பட்ட நிதியில் மீத­மா­க­வுள்ள தொகையே இந்த பால நிர்­மா­ணத்­திற்கு ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பி­லான திருத்­தப்­பட்ட ஒப்­பந்தம் நிதி, திட்­ட­மிடல் மற்றும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சின் செய­லாளர் மஹிந்த சிறி­வர்­த­ன­விற்கும் அபி­வி­ருத்­திக்­கான சவூதி நிதி­யத்தின் பணிப்­பாளர் (சட்டம்) அப்­துல்­மொஹ்சன் ஏ. அல்­முத்­லா­விற்கும் இடையில் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது.
திருத்­தப்­பட்ட ஒப்­பந்­தத்தின் மூலம், பேரா­தனை – பதுளை – செங்­க­லடி வீதி அபி­வி­ருத்தி திட்­டத்தில் மீத­முள்ள நிதி­யினை நெடுஞ்­சாலை வலை­ய­மைப்பு மேம்­பாட்டுத் திட்­டத்தின் ஊடாக குறிஞ்­சா­க்கேணி பாலத்தின் நிர்­மாணப் பணிக்கு மாற்­றப்­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இப்­பால நிர்­மா­ணத்தின் ஊடாக கிண்­ணியா பிர­தே­சத்தில் வாழும் சுமார் ஒரு இலட்சம் மக்­களின் போக்­கு­வ­ரத்து மற்றும் வணிகத் தேவை­களை இல­கு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

இத­னி­டையே, திரு­கோ­ண­மலை மாவட்டம் கிண்­ணியா நகர சபை பிர­தேச சபையை இணைக்கும் குறிஞ்­சாக்­கேணி பாலம் புன­ர­மைப்­புக்­காக கடந்த 2022 ந­வம்பர் 23 ஆம் திகதி மூடப்­பட்­டி­ருந்­த­போது சேவையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த இயந்­திரப் படகு விபத்­துக்­குள்­ளா­னதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உள்ளடங்கலாக பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணித் தாய் உட்பட சுமார் 8 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.