நிர்வாகத்துறையில் வல்லுனர்களை உருவாக்க முஸ்லிம் சமூகம் முன்னுரிமையளிக்க வேண்டும்

மாகோ கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஏ.எம். றிஸ்வி

0 128

விசி­னவ இளங்­கலைப் பட்­ட­தா­ரிகள் (VUGA) அமைப்பின் வரு­டாந்த ஒன்று கூடல் மற்றும் பரி­ச­ளிப்பு நிகழ்­வுகள் என்­பன 12.01.2025 அன்று சியம்­ப­லா­கஸ்­கொ­டுவ மதீனா தேசிய பாட­சாலை கேட்போர் கூடத்தில் நடை­பெற்­றது. இதில் விசேட அதிதியாக கலந்து கொண்ட மாகோ கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஏ.எம். றிஸ்வி (நளீமி) ஆற்­றிய உரையின் முக்கிய பகுதிகள் வருமாறு.

தொகுப்பு: எம்.எல்.எம்.றவூப் (ஒய்வு பெற்ற அதிபர்)

5.0 தொழிற்­பு­ரட்­சியின் (Industry 5.0 revolution) ஊடாக வேக­மாக மாறி­வரும் உலகம்

இன்­றைய உலகம் மிக வேக­மாக மாறி­வ­ரு­கி­றது. மனிதன் Global citizen ஆகவும், சமூகம் Online community ஆகவும் மாறி­யி­ருக்­கி­றது. இன்று வளரும் பரம்­பரை Alpha Gen கடந்து Beta Gen என பரம்­பரை அறி­மு­க­மா­கி­யி­ருக்­கி­றது. இன்­றைய உலகம் phygital world என அழைக்­கப்­ப­டு­கி­றது. அமெ­ரிக்க அறி­ஞ­ரான Buckminster Fuller தனது Critical Path என்ற நூலில் அறிவு இரட்­டிப்­ப­டையும் வளைவு (Knowledge Doubling Curve) என்ற கோட்­பாட்­டினை அறி­முகம் செய்­தி­ருக்­கிறார். இதில் 1900 ஆம் ஆண்­டு­க­ளுக்கு முன் ஒர் அறிவு (சிந்­தனை, கோட்­பாடு, சித்­தாந்தம்) இரட்டிப்­ப­டை­வ­தற்கு ஒரு நூற்­றாண்டும், 1945 காலங்­களில் 25 வரு­டங்­க­ளா­கவும், இது 1980 களில் 12 மாதங்­களும், தற்­போது 12 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு ஒரு தடவை அறிவு இரட்­டிப்­ப­டை­கி­றது என்ற கருத்தை முன்­வைத்தார். அதா­வது 12 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு இடைப்­பட்ட காலத்தில், நாம் தெரிந்த ஒரு விடயம், மாற்­றங்­க­ளுக்கு உட்­பட்டு, அது புது­மை­களைக் கண்­டு­வ­ரு­கி­றது.

இன்­றைய உலகம் 5.0 கைத்­தொழில் புரட்­சியின் புது­மை­களின் மாற்­றங்­க­ளோடு இயங்­கிக்­கொண்­டி­ருக்­கி­றது. Artificial intelligence (AI செயற்கை நுன்­ன­ண­றிவு) என்­பது இன்று அனைத்து துறை­யிலும் தவிர்க்க முடி­யாத ஒரு விட­ய­மாக மாறி­யி­ருக்­கி­றது. இதன் விளை­வாக உலகம் அனைத்து துறை­க­ளிலும் பெருந்­த­ரவுத் தொகு­தி­களை (Big Data) மையப்­ப­டுத்தி Human- robotic Combination இணைந்து இயங்க துவங்­கி­யி­ருக்­கி­றது. பெருத்த தகவல்களைக் கொண்­டி­ருக்கும் தனி­ந­பர்­களும் சமூ­கமும் நாடுமே இன்று அதி­காரம் மிக்­க­வர்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர். அதா­வது தகவல் முத­லா­ளியம் (information Capitalism) என்று சொல்­லப்­ப­டு­கி­றது. அதா­வது இன்­றைய உலக பொரு­ளா­தா­ரத்தின் மூல­த­ன­மாக தக­வல்கள் காணப்­ப­டு­கி­றது.

எமது நாடும் இந்த மாற்­றங்­களை கண்­டு­வ­ரு­கி­றது. இலங்கை 2022 ஆம் ஆண்டில் 52 வீத­மா­ன­வர்கள் இணைய பாவ­னையில் உள்­ள­தோடு, மக்­களில் நூற்­றுக்கு 147% கைய­டக்க தொலை­பே­சிப்­பா­வ­னையில் இருக்­கின்­றனர். தற்­போ­தைய அர­சாங்­கத்தின் Digitalization முக்­கிய கொள்­கை­யா­கவும் காணப்­ப­டு­வது இதன் அவ­சியப்­பாட்டை காட்­டு­கி­றது. உலக பொரு­ளா­தார அமை­யத்தின் (www.weforum.org) ஆய்வின் படி 2030 ஆம் ஆண்டு மிக­வே­க­மாக வள­ர்ச்­சி­ய­டைவும் தொழில்கள் (Fastest growing jobs- 2030) அனைத்தும் நவீன தொழி­நுட்­பத்­திற்கு ஏற்­ற­தா­கவே அமையும். எனவே நாமும் மாற வேண்­டிய தேவை இருக்­கி­றது.
University Grants Commission’s tracer study ஆய்வுத் தக­வல்­களின் படி, கலைப்­பட்­ட­தா­ரி­க­ளுக்­கான இலங்­கையில் வேலை­வாய்ப்­புக்கள் வீதம் (Employability Rate) 28.9 காணப்­ப­டு­கி­றது. எனவே இத்­துறைச் சேர்ந்­த­வர்கள் நவீன கால வேலை உல­கிற்கு ஏற்ப தமது தக­வ­மைவை மீள வடி­வ­மைப்­பது கட்­டா­ய­மாகும்.

நிர்­வாக தொழில்­வல்­லு­னர்கள் (Administrative Professionals) இடை­வெளி, அதனை நிரப்­ப­வேண்­டி­யதன் கடப்­பாடு.
இன்று எமது சமூ­கத்தில் வைத்­தி­யர்கள், பொறி­யி­ய­லா­ளர்கள் உரு­வாக்­கு­வ­தற்கே நாம் அதி­க­மான பிர­யத்­த­னங்­களை எடுத்­து­வ­ரு­கிறோம். இதற்­காக அதி­க­மான செயற்­திட்­டங்கள் (Projects) முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றது. சமூகம் சார் நிதி உத­வி­களும் வழங்­கப்­ப­டு­கி­றது. மேற்­படி முயற்­சிகள் பாராட்­டப்­பட வேண்­டி­யது. அவற்றின் வெற்­றி­களை சமூகம் இப்­போது அனு­ப­விக்­கி­றது என்­பதில் மாற்­றுக்­க­ருத்­தில்லை. இதற்­கி­டையில் எமது சமூ­கத்­திற்கு அனைத்து துறை­யிலும் வழி­காட்டி நெறிப்­ப­டுத்த வேண்­டிய சமூ­கத்­த­லை­வர்­களின் (Social Leader) தேவை இரட்­டிப்­ப­டைந்­தி­ருக்­கி­றது.

ஒரு சமூ­கத்­தினை சம­கால அர­சியல், பொரு­ளா­தார, தொழி­நுட்ப மாற்­றங்­க­ளுக்கு ஏற்ப திட்­ட­மிட்டு நகர்­த்த ­வேண்­டிய பொறுப்பில் இருப்­ப­வர்கள் இத்­த­ரப்­பி­னரே. குறிப்­பாக சமூ­கத் தலை­வர்கள் என்ற வகையில் நிர்­வாகம் சார்ந்த தொழில் வல்­லு­னர்­களின் (Administrative professionals) போதாமை என்­பது எமது சமூகம் துறை­வா­சி­யாக பல­யீ­னப்­ப­டு­வ­தற்கு ஒரு முக்­கிய காரணம் என்­பது எனது அபிப்­பி­ராயம். எனவே நிர்­வாகம் சார்ந்த தொழில் வல்­லு­னர்­களின் தேவை என்­பது இன்­றைய சமூகம் வேண்டி நிற்கும் முதன்மை விடயம் என்­பது எனது அவ­தானம். இதற்­காக எமது இளம் பட்­ட­தா­ரிகள் தயா­ரா­கு­வதும் தயா­ராக்­கப்­ப­டு­வதும் சமூ­கத்தின் கடப்­பாடாகும்.

இதன் பின்­னணில், சில தர­வு­களை பகிர்ந்­து­கொள்­வது பொருத்தம் என கரு­து­கிறேன். நாட­ளா­விய ரீதியில் காணப்­படும் 12 வகை­யான இலங்கை நிர்வாக சேவை­களில் எமது சமூ­கத்தின் பிர­தி­நி­தித்­துவம் 5 வீதத்­திற்கு உட்­பட்­ட­தா­கவே காணப்­ப­டு­கி­றது. உதா­ர­ண­மாக இலங்கை கல்வி நிரு­வாகச் சேவையில் (SLEAS) நாட­ளா­விய ரீதியில் இருக்­க­வேண்­டிய மொத்த ஆளணி 2691 ஆகும். இதில் எமது சமூ­கத்தின் பிர­தி­நி­தித்­துவம் 98 பேர். (3.6%) இலங்கை நிர்­வாக சேவை (SLAS) தேசிய மட்ட ஆளணி 2496 பேர், இதில் எமது சமூகம் சார்­பான பிர­தி­நி­தித்­துவம் 79 (3.1%) இலங்கை திட்­ட­மிடல் சேவை (SLPS) தேசிய மட்ட ஆளணி 769, சமூகம் சார்­பான பிர­தி­நி­தித்­துவம் 36 (4.68%) இலங்கை விஞ்­ஞான சேவையில் (SLSS) 411 (தேசிய மட்டம்) 5 (1.2%) பேர் மட்­டுமே எமது சமூகம் சார்­பான ஆள­ணி­யினர். இத்­த­ரங்­க­ளுக்கு ஏற்ப, உயர் பதவி நிலை­களைப் பொறுத்­த­வ­ரை­யிலும் இலங்­கையில் காணப்­படும் 100 கல்வி வல­யங்­களில் 7 கல்வி வல­யங்­களில் மாத்­தி­ரமே எமது சமூ­கத்­தினைச் சேர்ந்­த­வர்கள் வலயக் கல்விப் பணிப்­பாளர் என்ற பத­வியில் இருக்­கின்­றனர். நாட்­டி­லுள்ள 331 பிர­தேச செய­லகங்­களில் 15 இல் பிர­தேச செய­லா­ளர்­க­ளாக கட­மை­பு­ரி­கின்­றனர்.

குரு­ணாகல் மாவட்­டத்­தினைப் பொறுத்­த­வ­ரை­யிலும் எமது சமூ­கத்­தினைச் சேர்ந்த SLAS அதி­கா­ரிகள் ஆறு பேர், SLEAS அதி­கா­ரிகள் 9 பேர் மட்­டுமே இச்­சே­வை­களில் உள்ள ஆள­ண­யி­ன­ராகும். இது எமது சமூ­கத்­திற்கும் எமது நாட்­டிற்­கு­மான பங்­க­ளிப்பில் எமது சமூகம் சார்­பான போதா­மை­யினைக் காட்டி நிற்­கி­றது. அவ்­வாறே கல்­வி­யியற் ­கல்­லூரி விரி­வு­ரை­யா­ளர்கள், பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர்கள் பட்­­டி­ய­லிலும் சொற்­ப­மா­ன­வர்­களே பணி­பு­ரி­கின்­றனர்.
எடுத்­துக்­காட்­டாக அண்­மைய பெறு­பே­றுகள் சிலவற்றை நோக்­கு­கையில் எமது சமூ­கத்தின் குறைந்­த­ள­வி­லான ஈடு­பாட்டை, ஆர்­வத்தை புரிந்­து­கொள்ள முடி­கி­றது. கடந்த வருடம் இலங்கை கல்வி நிரு­வாகச் சேவையில் (மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட) பரீட்­சையில் நேர்­முகத் தேர்­வுக்­காக அழைக்­கப்­பட்ட 735 பேர் ­கொண்ட பட்­டி­யலில் 27 (3.67%) மட்­டுமே எமது சமூகம் சார்­பாக தெரி­வா­ன­வர்கள். (சிங்­களம்: 584 79%, தமிழ்: 124 17%) இதில் குரு­ணாகல் மாவட்டம் சார்­பாக யாரும் தெரி­வாக வில்லை. (இதன் இறுதி தெரிவுப் பட்­டியல் இன்னும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை) அவ்­வாறே கடந்த மாதம் பெறு­பே­றுகள் வெளி­யாகி நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்­காக அழைக்­கப்­பட்ட பின்­வரும் பரீட்­சை­களில் SLAS 204 பேரில் 5 , SLPS 145 பேரில் 3 SLAcS 149 பேரில் 3 என்ற வகை­யி­லேயே முஸ்லிம் பட்­ட­தா­ரிகள் தெரி­வா­கினர்.

நாட்டின் முதன்­மை­யான நிர்­வாக அல­காக காணப்­படும் கிராம சேவகர் பணி­யிலும் எமது சமூகம் சார்ந்­த­வர்கள் மிகவும் குறை­வா­கவே நுழை­கின்­றனர். கடந்த வருடம் புதி­தாக நிய­மனம் பெற்ற1942 பேரில் 148 முஸ்­லிம்கள் (8%) (சிங்­களம்: 1502 77% தமிழ்: 292 15%) இதில் குரு­ணாகல் மாவட்­ட­த்தி­லிருந்து 6 பேர் மட்­டுமே தெரி­வாகினர். அவ்­வாறே எமது மாட்­டத்தில் அண்­மைய ஆசி­ரியர் நிய­மனங்­களின் போது விசே­ட­மாக 50 இற்கும் மேற்­பட்ட கணி­தப்­பா­டத்­திற்­கான வேலை­வாய்ப்­புக்கள் இருந்த போதும், உரிய பட்­ட­தா­ரிகள் தெரி­வுப்­ப­ரீட்­சை­களில் உரிய புள்­ளி­களை பெறு­வதில் போதாமை காணப்­பட்­டதன் கார­ண­மாக வெறும் 12 பேர் மட்­டுமே தெரி­வாகினர். குரு­ணாகல் மாவட்­டத்தில் காணப்­படும் 88 தமிழ்­மொழிப் பாட­சா­லை­களில் இன்னும் 25 இற்கும் மேற்­பட்ட அதிபர் சேவை இடை­வெ­ளிகள் காணப்­ப­டு­கி­றது.

கிராம சேவகர் அல­கி­லி­ருந்து பாட­சாலை, கல்வி வலயம், பிர­தேச செய­லகம், அமைச்சின் செய­லா­ளர்கள் என பரந்துபட்ட நிர்­வாக அல­கு­களில் நிர்­வாக வல்­லு­னர்­களின் வறுமை பர­வ­லாக காணப்­ப­டு­கி­றது. இன்று எமது சமூ­கத்­திற்கும் நாட்­டிற்கும் சிறந்த பங்­க­ளிப்­புக்­க­ளையும் பணி­க­ளையும் செய்­யக்­கூ­டிய நிர்­வாக துறை­களில் எமது சமூ­கத்தின் ஈடு­பாடு மிகவும் மந்த நிலையில் காணப்­ப­டு­கி­றது. எனவே இதன் தேவை, அவ­சி­யப்­பாடு தொடர்பில் இளங்­க­லைப்­பட்­ட­தா­ரிகள், இளம் பட்­ட­தா­ரிகள் வழிப்படுத்த, வழிகாட்டப்பட வேண்டும். இதற்கு சமூகம்சார்ந்த புத்திஜீவிகள், தனவந்தர்கள், சமூக நிறுவனங்கள் அக்கறை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இறுதியாக இளம் பட்டதாரிகள் தமது பல்கலைக்கழக காலங்களில் Life skills, Soft skills, Digital skills போன்ற துறைசார்ந்த திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக பாடத்தெரிவு விடயங்கள், ஆய்வு, வாசிப்பு, தேடல், முயற்சியாண்மை சிந்தனை முன்னெடுப்பு (Entrepreneurial thinking) போன்றவற்றில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும். மேற்படி தரவுகளை மையப்படுத்தி எமது திட்டமிடல்கள் அமைதல் வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.