மர்ஹூம் டாக்டர் லாஹிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

0 102

இலங்­கையில் நவீன இரு­தய அறுவை சிகிச்சைத் துறையில் ஆற்­றிய அளப்­ப­ரிய சேவைக்­காக மர்ஹூம் டாக்டர் வை. கே.எம் லாஹி ­வாழ்நாள் சாத­னை­யாளர் விருது வழங்கி கௌர­விக்­கப்­பட்­டுள்ளார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை பத்­த­ர­முல்லை, வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்­டலில் ஆரம்­ப­மா­கிய இலங்கை இரு­தய மற்றும் மார்பு அறுவை சிகிச்சை நிபு­ணர்கள் சங்­கத்தின் புல­மைத்­துவ அமர்வின் போது (Academic session) அதன் தலைவர் டாக்டர் முதித்த சன்­சக்­கா­ர­வினால் இந்த அதி உயர் விருது அவ­ருக்­காக வழங்கி வைக்­கப்­பட்­டுள்­ளது.

மர்ஹூம் டாக்டர் லாஹியின் மனைவி பாத்­திமா மின்னா,புதல்வி சப்­றினா மற்றும் குடும்­பத்­தினர் பிர­சன்­ன­மா­கி­யி­ருக்க, மரு­மகன் சட்­டத்­த­ரணி ஹபீல் பாரிஸ் அதனைக் கையேற்றார். கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் டாக்டர் லாஹி­யினால் பயிற்­று­விக்­கப்­பட்­ட­வர்­களில் ஒரு­வ­ரான இரு­தய அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் இரேஷ் விஜே­மான்ன அன்­னாரின் மகத்­தான பங்­க­ளிப்­புகள் பற்றி விப­ரித்துக் கூறினார்.

கொழும்பு ரோயல் கல்­லூ­ரியில் கல்வி கற்ற டாக்டர் யூசுப் காமில் முஹம்மத் லாஹி, கொழும்பு மருத்­துவக் கல்­லூ­ரியில் மருத்­துவ பட்­ட­தா­ரி­யானார். இங்­கி­லாந்தில் மிடில் செக்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் இரு­தய அறுவை சிகிச்சைத் துறையில் பட்டப் பின்­ப­டிப்பை மேற்­கொண்டு நிறைவு செய்து நாடு திரும்பி, பின்னர் கொழும்பு பெரி­யாஸ்­பத்­திரி லேடி(சீமாட்டி) ரிஜ்வே சிறுவர் ஆஸ்­பத்­திரி ஆகி­ய­வற்றில் இரு­தய அறுவை சிகிச்சை துறையில் பணி­யாற்றி, தனது 63 ஆவது வயதில் ஓய்வு பெற்ற நிலையில் 2021 ஆம் ஆண்டு காலமானார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.