நாடெங்கும் தொடர்ச்­சி­யான கன மழை பல பகு­தி­களும் வெள்­ளத்தில் மூழ்­கின

கிழக்கில் பாரிய அனர்த்தங்கள் பதிவு; மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்பு

0 101

(எம்.ஏ.றமீஸ், பாரூக் சிஹான், சினாஸ் எம்.எஸ்.எம் நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், எச்.எம்.எம்.பர்ஸான், எஸ்.எம்.எம்.முர்ஷித், ஏ.எச். ஹஸ்பர்,ஜே.எம்.ஹாபிஸ்)

வங்­காள விரி­கு­டாவில் ஏற்­பட்­டுள்ள தாள­முக்கத்தால் இலங்­கைக்கு ஏற்­பட்­டி­ருக்கும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக நாடு முழு­வ­திலும் தொடர்ச்­சி­யான கன மழை பெய்து வரு­கின்­றது. இதனால், கிழக்கு மாகா­ணத்தில் பெரும் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ள­துடன், வடக்­கிலும் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. அத்­தோடு, மலை­ய­கத்­திலும் அனர்த்­தங்கள் பதி­வா­கி­யுள்­ளன.

அம்­பாறை
அம்­பாறை மாவட்­டத்தில் கடந்த சில தினங்­க­ளாக பெய்து வரும் அடை­மழை கார­ண­மாக இம்­மா­வட்­டத்தில் நால்வர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன், இருவர் காணாமல் போயுள்­ளனர். காணாமல் போன­வர்­களை தேடும் பணிகள் துரிதப்படுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும், இது­வரை இம்­மா­வட்­டத்தில் ஒரு இலட்­­சத்து 23 ஆயி­ரத்து 876 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் அம்­பாறை மாவட்ட பிரதிப் ­ப­ணிப்­பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரி­வித்தார்.

தொடர்ந்து பெய்து வரும் அடை­மழை கார­ண­மாக அம்­பாறை மாவட்­டத்தில் தாழ்­நிலப் பகு­திகள் முற்­றாக மூழ்­கி­யுள்­ளன. அத்­துடன், பிர­தான வீதிகள் சில மழை நீரினால் நிரம்­பி­யுள்­ள­துடன், நிந்­தவூர் மாட்­டுப்­பளை பகு­தியில் பால­மொன்று உடைப்­பெ­டுத்­த­மையால் கல்­முனை- அக்­க­ரைப்­பற்று போக்­கு­வ­ரத்து முற்­றாக துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை, அம்­பாறை – கண்டி வீதி, அம்­பாறை – கல்­முனை பிர­தான வீதி­களின் போக்­கு­வ­ரத்தும் முற்­றாக பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

நேற்று நண்­பகல் 12 மணி­யுடன் நிறை­வ­டைந்த 24 மணி நேரத்தில் அம்­பாறை மாவட்­டத்தின் இங்­கி­னி­யா­கலை பிர­தே­சத்தில் 240.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி அதி­கப்­ப­டி­யாக பதி­வா­கி­யுள்­ள­துடன், மகா­ஓயா பிர­தே­சத்தில் 132.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ள­தா­கவும் வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தின் அம்­பாறை மாவட்ட வானிலை அவ­தா­னிப்­பாளர் எம்.ஏ.எம்.அக்மல் தெரி­வித்தார்.

இம்­மா­வட்­டத்தில் உள்ள நீர் நிலை­களின் நீர் மட்டம் வெகு­வாக உயர்­வ­டைந்­துள்­ளன. தாழ்­நிலப் பிர­தே­சத்தில் வசித்து வந்த மக்கள் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு இடம்­பெ­யர்ந்து வரு­கின்­றனர். உற­வி­னர்கள் இல்­லங்­க­ளுக்கும், பாட­சா­லைகள், மத நிறு­வ­னங்கள் போன்­ற­வற்றில் பலர் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இம்­மா­வட்­டத்தில் 34885 குடும்­பங்­களைச் சேர்ந்த ஒரு இலட்­சத்து 23 மூவா­யி­ரத்து 876 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 52 நலன்­புரி நிலை­யங்­களில் 2082 குடும்­பங்­களைச் சேர்ந்த 6710 நபர்கள் தங்­க­வைக்­கப்­பட்டு பரா­ம­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். இது­வரை இம்­மா­வட்­டத்தில் 70 வீடுகள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ள­தா­கவும் அம்­பாறை மாவட்ட அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் பிர­திப்­ப­ணிப்­பாளர் எம்.ஏ.சி.முகம்மட் றியாஸ் தெரி­வித்தார்.

அதிக மழை வீழ்ச்சி கார­ண­மாக இம்­மா­வட்­டத்தில் செய்கை பண்­ணப்­பட்ட ஆயி­ரக்­க­ணக்­கான விவ­சாயச் செய்­கைகள் பாதிப்­ப­டைந்­துள்­ளன. இம்­மா­வட்­டத்தின் நெற்­செய்கை மற்றும் உப உணவுப் பயிர்ச் செய்கை போன்­ற­வற்­றுக்கும் பெரும் பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன.

இதே­வேளை, கடற்­றொ­ழிலில் ஈடு­பட்டு வரு­ப­வர்கள் தமது மீன்­பிடி பட­குகள், வள்­ளங்கள் போன்­ற­வற்றை கடற்­க­ரை­யி­லி­ருந்து வெகு தொலை­விற்கு அப்­பு­றப்­ப­டுத்தி கரை­யொ­துக்கி வைத்­துள்­ளனர். இதற்­கென கன­ரக இயந்­தி­ரங்­களின் உத­வி­யுடன் கடற்­றொழில் உப­க­ர­ணங்கள் கரை­யொ­துக்­கப்­பட்டு வரு­கின்­றன. கடல் அலை­களின் வீரியம் இம்­மா­வட்­டத்தில் அதி­க­ரித்து காணப்­ப­டு­வதால் சில பிர­தே­சங்­களில் கடல் நீர் கரைப் பகு­தி­க­ளுக்கு ஊடு­ரு­வி­யுள்­ள­த­னையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.

அம்­பாறை மாவட்­டத்தின் வெள்ள நிலை­மை­களில் இருந்து மக்­களை பாது­காக்கும் பொருட்டு மாவட்ட அர­சாங்க அதிபர் சிந்­தக அபே­விக்­ரம உள்­ளிட்ட மாவட்­டத்தின் மக்கள் பிர­தி­நி­திகள், முப்­ப­டை­யினர், துறைசார் முக்­கி­யஸ்­தர்கள் பொது அமைப்­பினைச் சேர்ந்­த­வர்கள், நலன்­வி­ரும்­பிகள், பொது­மக்கள் போன்றோர் மக்கள் நல சேவையில் ஈடு­பட்டு வரு­வ­தாக அனர்த்த முகா­மைத்து மத்­திய நிலை­யத்தின் பிரதிப் பணிப்­பாளர் எம்.ஏ.சி.முகம்மட் றியாஸ் மேலும் தெரி­வித்தார்.

மாட்­டுப்­பளை பாலம் சேதம்
நிந்­தவூர் பிர­தேச செய­லகப் பிரிவின் கீழுள்ள மாட்­டுப்­பளை பிர­தே­சத்தில் பால­மொன்று உடைப்­பெ­டுத்­துள்­ள­மையால் அக்­க­ரைப்­பற்­று-­ கல்­முனை பிர­தான போக்­கு­வ­ரத்­துகள் முற்­றாக தடைப்­பட்­டுள்­ளன.

கல்­மு­னை-­ அக்­க­ரைப்­பற்று பிர­தான வீதியில் ஒலுவில் களி­யோடைப் பாலத்­தினை அண்­டிய பிர­தே­சத்தில் வயல் நிலங்­களை ஊடறுத்து செல்லும் பாதையில் அமைந்­துள்ள இப்­பாலம் தாழ் இறங்­கி­யுள்­ளது. இப்­பாலம் விவா­சய நிலப்­ப­ரப்­பினை சூழ்ந்த பகு­தியில் உள்­ளது. கடந்த சில தினங்­க­ளாக பெய்து வரும் அடை மழை கார­ண­மாக இப்­ப­குதி விவ­சாய நிலப்­ப­ரப்­புகள் முற்­றாக நீரினால் நிறைந்­துள்­ளன.

இப்­பா­லத்­தினை நோக்கி வேக­மாக நீர் பாய்ந்து செல்லும் வேளை­யி­லேயே இது உடைப் பெடுத்­துள்­ள­தாக நீர்ப்­பா­ச­னத்­துறை அதி­கா­ரிகள் குறிப்­பி­டு­கின்­றனர்.

தென்­கி­ழக்குப் பல்­க­லை­யிலும் வெள்ளம்
இத­னி­டையே, தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ள­மை­யினால் விடுதி பூட்­டப்­பட்­டுள்­ளது. அத்­துடன், அங்­கி­ருந்து மாண­வர்கள் வெளி­யேறி வீடு­க­ளுக்கு சென்­றுள்­ளனர்.

இத­னி­டையே, வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­க­ளுக்கு திகா­ம­டுல்ல மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான அஷ்ரப் தாஹிர் மற்றும் எம்.எஸ்.உதுமா லெப்பை ஆகி­யோரும் சென்று பார்­வை­யிட்­டனர்.

மட்­டக்­க­ளப்பு
கடந்த ஓரிரு தினங்­களில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் பெய்த கன மழை கார­ண­மாக மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் பல முக்­கிய இடங்கள் வெள்­ளத்தால் சூழப்­பட்­டி­ருந்­தன.
முக்­கிய இடங்­க­ளான மட்­டக்­க­ளப்பு விமான நிலைய சுற்­றுப்­ப­குதி, மத்­திய பஸ் தரிப்­பிடம், மட்­ட­க்­க­ளப்பு நகர பொதுச் சந்தை, அர­சடிச் சந்தி, கிழக்குப் பல்­க­லை­கக்­க­ழக மருத்­துவ பீட சுற்­று­வட்டப் பகுதி, கல்­லடி, காத்­தான்­குடி-, நொச்­சி­முனை, மட்­டக்­க­ளப்பு – கொழும்பு நெடுஞ்­சா­லையில் சித்­தாண்டி, வந்­தா­று­மூலை – கொம்­மா­துறை, மட்­டக்­க­ளப்பு பது­ளை­ வீதிப் பகு­தியில் மாவ­டி­ஓடை, ஈர­லக்­குளம், வண்ணாத்­தி­ஆறு, வவு­ண­தீவு பிர­தேச செய­லாளர் பிரிவில் கன்­னங்­குடா, கரை­யாக்­கன்­தீவு, பண்­டா­ரி­யா­வெளி எனப் பல பகு­திகள் வெள்ள நீரில் மூழ்­கி­யுள்­ளன.

வெள்­ளத்­தினால் மூழ்­கி­யுள்ள
காங்­கே­ய­னோடை பிர­தேசம்
குளங்­களின் வான் கத­வுகள் திறக்­கப்­பட்­ட­தாலும் மழை­யுடன் கூடிய கால­நிலை நில­வு­வ­தாலும் காங்­கே­ய­னோடை பிர­தே­சத்தில் பாரிய வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ள­துடன் 90 வீத­மான வீடு­க­ளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்­ளது.

அந்த பிர­தே­சத்தில் பொது­மக்­களை மீட்­ப­தற்­காக அப்­ப­குதி இளை­ஞர்­களும் நலன் விரும்­பி­களும் சிறிய வள்­ள­ங்கள் மூலம் செயற்­பட்டு வரு­கின்­றனர்.
நோயா­ளர்கள் மற்றும் முதி­ய­வர்கள் சிறிய வள்­ளத்தின் மூலம் மீட்கப்பட்டு மேட்டு நிலப்­பி­ர­தே­சத்­திற்கு கொண்டு வந்து அங்கு உள்ள வீடு­களில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.
காங்­கே­ய­னோடை பிர­தே­சத்­தி­லுள்ள பள்ளிவாசல்­களின் நிரு­வா­கிகள் ஒன்­றி­ணைந்து சமைத்த உணவினை வழங்கு வதற்­கான ஏற்­பா­டு­களை மேற்கொண்­டுள்­ளனர்.

இதேபோன்று காத்­தான்­குடி வாவிக் கரை­யோரம் வெள்ளம் ஏற்­பட்­டுள்­ள­துடன் பிர­தே­சத்தில் உள்ள பலரின் வீடு­க­ளுக்குள் வெள்­ளநீர் உட்­பு­குந்­ததால் பிர­தேச மக்­களும் பாரிய அசௌ­க­ரி­யங்­க­ளையும் சங்­க­டங்­க­ளையும் எதிர் நோக்கி இருக்­கின்­றனர்.
காத்­தான்­குடி வாவிக்­க­ரை­யோரம் வசிக்கும் பொது­மக்­களின் வீடு­க­ளுக்குள் வெள்­ளநீர் உட்­பு­குந்­ததால் அங்­கி­ருந்த பொது­மக்கள் இடம்­பெ­யர்ந்து பாட­சாலை பள்­ளி­வாசல் உட்­பட உற­வி­னர்கள், நண்­பர்கள் வீடுகளிலும் மற்றும் பொது இடங்­க­ளிலும் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

மட்­டக்­க­ளப்பில் குளங்­களின்
நீர் மட்டம் உயர்வு
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் அமைந்­துள்ள பிர­தான குளங்­களில் நீர்­மட்டம் அதி­க­ரித்­துள்­ள­தாக நீர்ப்­பா­சனத் திணைக்­க­ளத்தின் மாவட்ட அலு­வ­லகம் அறி­வித்­துள்­ளது.

அதற்­கி­ணங்க கட்­டு­மு­றிவு குளத்தில் 12 அடி, உறு­காமம் குளத்தில் 17.9அடி, வெலிக்காக் கண்­டிய குளத்தில் 17.11 அடி, நீர்­மட்டம் அதி­க­ரித்து வான்­க­தவு திறக்­கப்­பட்டு அவற்­றி­லி­ருந்து மேல­திக நீர் வெளி­யே­று­கின்­றது.

உன்­னிச்சைக் குளத்தில் 30அடி, வாக­னேரி குளத்தில் 18.3அடி , மேலும் வட­மு­னைக்­கு­ளத்தின் நீர்­மட்டம் 13. 6″அடி நீர் மட்டம் அதி­க­ரித்­துள்­ளது.
புனாணை அணைக்­கட்டு 8.3″அடி, நவ­கிரிக் குளத்தின் 30.5 அடி, கித்துல் குளத்தின் 4 அடி நீர்­மட்டம் உயர்த்­துள்­ளது.

ஓட்­ட­மா­வடி, கோர­ளைப்­பற்றில் பாதிப்பு
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை ­கா­ர­ண­மாக வெள்­ளத்தால் ஓட்­ட­மா­வடி பிர­தேச செய­லாளர் பிரிவில் 455 குடும்­பங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஓட்­ட­மா­வடி பிர­தேச செய­லாளர் ஏ.தாஹிர் தெரி­வித்தார்.

இவர்­க­ளுக்­கான சமைத்த உண­வுகள் பிர­தேச செய­லகம் மற்றும் தொண்டு நிறு­வ­னங்கள் மற்றும் பிர­தேச தன­வந்­தர்கள் மூலம் வழங்­கப்­பட்­டுள்­ள­துடன் இவர்­களை கவ­னிப்­ப­தற்கு பிர­தேச செய­ல­கத்­தினால் அவ­சர அனர்த்த குழுவும் நிய­மிக்­கப்­பட்டு அவர்கள் மூலம் வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் கவ­னிக்­கப்­பட்டு வரு­கின்­றனர்.
கோற­ளைப்­பற்று பிர­தேச செய­லாளர் பிரிவில் 505 குடும்­பங்­களை சேர்ந்த 1511 நபர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் கிண்­ணை­யடி மற்றும் மீராவோடை கிராம சேவகர் பிரி­வு­களில் இடைத்­தங்கல் முகாம்கள் அமைக்­கப்­பட்­டுள்­ள­துடன் நாசி­வன்­தீவு கிரா­மத்­திற்­கான போக்­கு­வ­ரத்து முற்­றாக தடைப்­பட்­டுள்­ள­துடன் அங்கு 543 குடும்­பங்­க­ளைச் ­சேர்ந்த 1623 நபர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக கோற­ளைப்­பற்று பிர­தேச செய­லாளர் திரு­மதி ஜெயந்தி திருச்­செல்வம் தெரி­வித்தார்.

இதேவேளை கோற­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­லாளர் பிரிவில் 106 குடும்­பங்­களைச் சேர்ந்த 388 நபர்கள் வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் இவர்கள் உற­வினர் மற்றும் நண்­பர்கள் வீட்டில் வசித்து வரு­வ­தாக கோற­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­லாளர் எஸ்.எச்.முஸம்மில் தெரி­வித்தார்.

காவத்­த­முனை மக்கள் இடம்­பெ­யர்வு
கோற­ளைப்­பற்று மேற்கு ஓட்­ட­மா­வடி பிர­தேச செய­லகப் பிரி­வுக்­குட்­பட்ட காவத்­த­முனை பிர­தேச மக்கள் வெள்ளம் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.

 

தொடர்­மழை கார­ண­மாக குடி­யி­ருப்பு பகு­திகள் நீரில் மூழ்­கி­யுள்­ளன. இதன் கார­ண­மாக இது­வரை 129 குடும்­பங்ளைச் சேர்ந்த 352 பேர் தங்­க­ளது வீடு­களை விட்டு இடம்­பெ­யர்ந்து காவத்­த­முனை அல் அமீன் வித்­தி­யா­ல­யத்தில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.
அதே­போன்று, பாதிக்­கப்­பட்ட பலர் தங்­க­ளது உற­வி­னர்கள் வீடு­களில் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.

இடம்­பெ­யர்ந்து பாட­சா­லையில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்­கான அனைத்­து­வித தேவை­க­ளையும் ஓட்­ட­மா­வடி பிர­தேச செய­லகம் மேற்­கொண்டு வரு­கி­றது.

மட்­டக்­க­ளப்பு – கொழும்பு
போக்­கு­வ­ரத்து தடை
அத்­தோடு, மன்­னம்­பிட்­டிய சந்தி (மகா ஒயா) வீதி உடைந்து காணப்­ப­டு­வதால் மட்­டக்­க­ளப்பு -–கொழும்பு வீதி மூடப்­பட்­டுள்­ளது. அதே­போன்று, மன்­னம்­பிட்டி, வெலி­கந்தை, புனாணை ஆகிய பகு­தி­களில் நீர் மட்டம் அதி­க­ரித்துக் காணப்­ப­டு­வதால் அவ்­வீ­தி­யூ­டா­கவும் பய­ணிக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

புனாணை பகு­தியில் புகை­யி­ரதப் பாதையை குறுக்­க­றுத்து நீர் அதி­க­ரித்துச் செல்­வதால் மட்­டக்­க­ளப்பு –- கொழும்பு புகை­யி­ரத சேவையும் மறு அறி­வித்தல் வரை இடை நிறுத்­தப்­பட்­டுள்­ளது. எனினும் நேற்று நண்பகலுக்குப் பின்னர் இப் பாதையூடான போக்குவரத்தும் ரயில் போக்குவரத்தும் வழமைக்குத் திரும்பின.

திரு­கோ­ண­மலை
திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் நேற்று (27) மதியம் 12.30 வரை 2208 குடும்­பங்­களைச் சேர்ந்த 6512 நபர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ நிலை­யத்தின் திரு­கோ­ண­மலை மாவட்ட பிரதிப் பணிப்­பாளர் கே.சுகு­னதாஸ் தெரி­வித்தார்.

இதில் சேரு­வில பிர­தேச செய­லாளர் பிரிவில் 12 குடும்­பங்­களைச் சேர்ந்த 40 நபர்­களும், மூதூரில் 938 குடும்­பங்­களைச் சேர்ந்த 2574 நபர்­களும், தம்­ப­ல­காமம் பிர­தேச பகு­தியில் 96 குடும்­பங்­களைச் சேர்ந்த 301 நபர்­களும் , மொர­வெ­வவில் 29 குடும்­பங்­களைச் சேர்ந்த 91 நபர்­களும், திரு­கோ­ண­மலை பட்­டி­னமும் சூழலும் பகு­தியில் 316 குடும்­பங்­களைச் சேர்ந்த 1282 நபர்­களும், கிண்­ணி­யாவில் 709 குடும்­பங்­களைச் சேர்ந்த 1852 நபர்­களும், குச்­ச­வெ­ளியில் 48 குடும்­பங்­களைச் சேர்ந்த 129 நபர்­களும், கந்­த­ளாயில் 58 குடும்­பங்­களைச் சேர்ந்த 235 நபர்­களும், வெரு­கலில் ஒரு குடும்­பத்தைச் சேர்ந்த 03 நபர்­களும், பத­வி­சி­றி­புர பகு­தியில் ஒரு குடும்­பத்தைச் சேர்ந்த 05 நபர்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.
இதில் சேரு­வில, தம்­ப­ல­காமம், பட்­டி­னமும் சூழலும், குச்­ச­வெளி ஆகிய பிர­தேச செயல பகு­தியில் பாது­காப்பு நிலை­யங்­க­ளிலும் பாதிக்­கப்­பட்ட சில குடும்­பங்கள் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­துடன் 668 குடும்­பங்­களை சேர்ந்த 2369 நபர்கள் உற­வி­னர்­களின் வீடு­க­ளுக்கு இடம் பெயர்ந்­துள்­ளனர். குறித்த கன மழை கார­ண­மாக நேற்று மதியம் வரை பகு­தி­ய­ளவில் 14 வீடுகள் சேத­ம­டைந்­துள்­ள­தா­கவும் பிரதி பணிப்­பாளர் மேலும் தெரி­வித்தார்.

பிர­தேச சபை செய­லா­ளர்­க­ளுடன்
கலந்­து­ரை­யாடல்
அனர்த்த நிலை­மையில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய அவ­சர நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மகரூப் கிண்­ணியா நகர சபை, கிண்­ணியா பிர­தேச சபை, மூதூர் பிர­தேச சபை, திரு­கோ­ண­மலை பட்­டி­னமும் சூழலும் பிர­தேச சபை செய­லா­ளர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார்.
வெள்ள நீரை விரை­வாக வடிந்­தோட செய்ய தேவைப்­படும் கன­ரக இயந்­தி­ரங்­களை தனி­யா­ரிடம் இருந்து பெறுதல், பிர­தேச சபை ஊழி­யர்­க­ளுக்கு மேல­தி­க­மாக பொது­மக்­களின் பங்­க­ளிப்பை பெறு­வது மற்றும் நிவா­ரண நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக இதன்­போது கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

மன்­னாரில் வெள்ளப் பாதிப்பு
வட மாகா­ணத்தில் தொடர்ச்­சி­யாக பெய்­து­வரும் அடை­ம­ழையின் கார­ண­மாக வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்டு, மக்­களின் இயல்­பு­நிலை பாதிக்­கப்­பட்­டுள்­ளது.
அந்­த­வ­கையில், நிலவும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக, மன்னார் மாவட்­டத்தில் வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளையும், வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்ள பகு­தி­க­ளையும் பார்­வை­யி­டு­வ­தற்கு, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாட் பதி­யுதீன் மன்­னா­ருக்கு சென்­றி­ருந்தார்.

அக்­கு­றணை நக­ரத்தில் மீண்டும் வெள்ளம்
கடந்த சில தினங்­க­ளாக தொடர்ந்து பெய்து வரும் அடை­மழை கார­ண­மாக கண்டி மாவட்­டத்­திலும் இன்னும் பல இடங்­க­ளிலும் பாதிப்­புக்கள் ஏற்­பட்­டுள்­ளன. குறிப்­பாக அக்­கு­றணை நக­ரத்தில் கண்டி- – மாத்­தளை பிர­தான வீதியில் மீண்டும் வெள்ளம் ஏற்­பட்­டது.

இதன் கார­ண­மாக அக்­கு­றணையூடாக செல்லும் வாக­னங்­க­ளுக்கு மாற்று வழியைப் பயன்படுத்த வேண்­டி­வந்­தது.

அக்­கு­றணை நக­ரத்­திற்கு அண்­மித்­த­தாக ஓடும் பிங்கா ஓயா மற்றும், வஹு­கல ஓயா என்­ப­வற்றின் நீர் மட்டம் அதி­க­ரிக்கும் போது அக்­கு­றணை நக­ரத்தின் தாழ்­நிலம் பகு­தி­க­ளான சியா ஞாப­கார்த்த வைத்­தியசாலை சந்தி மற்றும் துனு­வில வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கும்
முன்பள்ளிகளுக்கும் விடுமுறை
நாட்டிலுள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் முஸ்லிம் பாடசாலைகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன. எனினும், சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் மேலும் இரு தினங்களும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாத்தா குலேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகள் நவம்பர் 29 வரை தற்காலிகமாக மூடப்படும் என மத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மத்திய மாகாணத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, வடமத்திய மாகாணத்தில் உள்ள 94 முஸ்லிம் மற்றும் தமிழ் பாடசாலைகள் இம்மாதம் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை மூடப்படும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.

மேலும், வடமத்திய மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட 1,480 முன்பள்ளிகளை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மாகாண ஆரம்பக் குழந்தைப் பருவ அதிகார சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் நிலந்த ஏகநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக சப்ரகமுவா மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நவம்பர் மாதம் 27,28,29ம் திகதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

அத்­தோடு, மேல் மற்றும் வட மேல் மாகா­ணங்­க­ளிலும் முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கு விடு­முறை வழங்­கப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.