மத்ரஸாவில் மாணவர்களை தங்கவைக்க முடியாத நிலையில் விடுமுறையளித்தோம்

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக்கல்லூரி விளக்கம்

0 56

மத்­ர­ஸா­வுக்குள் மழை நீர் புகும் நிலை ஏற்­பட்­ட­தை­ய­டுத்து மாண­வர்­களை தங்க வைக்க முடி­யாத சூழ்­நிலை ஏற்­பட்­ட­மையால் விடு­மு­றை­ய­ளிக்க வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­ட­தாக நிந்­தவூர் காஷிபுல் உலூம் அர­புக்­கல்­லூரி தெரி­வித்­துள்­ளது.
மாவ­டிப்­பள்ளி பகு­தியில் வெள்ள நீரில் 6 மத்­ரஸா மாண­வர்கள் அடித்துச் செல்­லப்­பட்டு காணாமல் போன சம்­ப­வத்­தை­ய­டுத்து மேற்­படி அரபுக் கல்­லூ­ரியின் நிர்­வாக சபை வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதில் மேலும் தெரி­விக்­க­கப்­பட்­டுள்­ள­தா­வது, கடந்த இரு தினங்­க­ளாக எமது பிர­தே­சத்தில் ஏற்­பட்ட அசா­தா­ரண கால­நிலை மாற்­றத்தை அடுத்து கடும் காற்­றுடன் கூடிய பெரு­மழை கார­ண­மாக முன்னர் ஒரு­போதும் இல்­லா­த­வாறு நிந்­தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்­லூ­ரியின் பள்­ளி­வா­ச­லினுள் மழை நீர் உட்­பு­குந்­தது. அத்­துடன் மாணவர் விடுதி (மூன்றாம் மாடியில் முழு­மை­யாக நீர் ஒழுக்கு ஏற்­பட்­டது) மற்றும் பாட­சாலை பொது கல்வி பிரிவு ஆகி­ய­வற்­றிலும் நீர் ஒழுக்­குகள் பர­வ­லாக காணப்­பட்­ட­துடன் மல­சல கூட குழி­களும் நிரம்பி மல­சல கூடங்கள் பாவிக்க முடி­யாத நிலையில் காணப்­பட்­டது, அத்­துடன் மூன்று மாண­வர்கள் மாடிப்­ப­டியில் வழுக்கி விழுந்த நிலை­மையும் அவ­தா­னிக்­கப்­பட்­டது.

இந்த நிலையில் தொடர்ந்து மாண­வர்­களை பாது­காப்­பாக வைத்­தி­ருப்­பது சிரமம் என்­பதால் இக் கல்­லூ­ரியின் நிர்­வாக சபை தலைவர் மௌலவி என் இஸ்மத் (ஷர்கி) யின் அனு­ம­தி­யோடு, மசூ­றாவின் அடிப்­ப­டையில் கல்­லூ­ரிக்கு அவ­ச­ர­மாக விடு­முறை வழங்­கு­வது பொருத்தம் என தீர்­மா­னிக்­கப்­பட்­டது

இத­னை­ய­டுத்து, மாண­வர்­களை பாது­காப்­பாக வீட்­டுக்கு அனுப்பி வைப்­ப­தற்கு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டன.

இது குறித்து அதிபர் வட்ஸ் அப் குழுவின் மூலமும் நேர­டி­யாக தொலை­பேசி ஊடா­கவும் பெற்­றோர்­க­ளுக்கு நேற்­று­முன்­தினம் காலை­யி­லேயே தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருந்தார்,
அதிபர் மற்றும் 3 உஸ்­தா­து­மார்கள் மற்றும் இரு பணி­யா­ளர்­க­ளோடு விசே­ட­மாக வாட­கைக்கு அமர்த்­தப்­பட்ட பேருந்து வண்டி மூலம் மாண­வர்கள் தமது வீடு­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டனர்.

மாண­வர்­களின் வதி­விட பிர­தே­சத்தை பஸ்­வண்டி அண்­மிக்­கின்ற போது அவர்­க­ளது பெற்­றோர்­க­ளுக்கு தொலை­பேசி மூலம் மீண்டும் அழைப்பை ஏற்­ப­டுத்தி அவர்­களை பிர­தான வீதிக்கு வர­வ­ழைத்து அவர்­க­ளிடம் மாண­வர்­களை ஒப்­ப­டைப்­பது, என்ற அடிப்­ப­டை­யி­லேயே இந்த பயண ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

இதன்­போது காரை­தீவு சந்­தியில் இருந்து சம்­மாந்­துறை நோக்கி பேருந்து வண்டி பய­ணிக்க முடி­யாத நிலையில் அங்கு சேவையில் ஈடு­ப­டுத்­தப்­பட்ட உழவு இயந்­தி­ரத்தின் இழுவை பெட்­டியில் ஏற்­றப்­பட்ட மாண­வர்கள் (13) பதின்­மூன்று பேர், மாவ­டிப்­பள்ளி தாம்­போதியை கடக்கும் போது உழவு இயந்­திரம் தடம் புரண்டு குடை­சாய்ந்­ததில் ஆறு மாண­வர்கள் காணாமல் போயுள்­ளனர்.

மேலும் முற்­கூட்­டியே வானிலை முன்­ன­றி­விப்­புக்கள் செய்­யப்­பட்ட போதிலும் மாண­வர்கள் கல்­லூ­ரியில் தங்­கி­யி­ருப்­பது தான் பாதுகாப்பானது என கருதிய நிலையில், இக்கல்லூரியில் ஏற்பட்ட அனர்த்த அசாதாரண நிலைமையை அடுத்து மீண்டும் இவ்வாறான ஒரு முடிவை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இந்த கவலையான நேரத்தில் நிலைமையை உணர்ந்து அனைவரும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.