புயலின் தாக்கம் இலங்கைக்கு இல்லை பலத்த காற்றும் கடும் மழையும் நிலவும்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இரு தினங்களில் தமிழ்நாட்டை நோக்கி நகரும்

0 49

(எம்.மனோசித்ரா)
தென்­மேற்கு வங்­காள விரி­கு­டாவில் உரு­வாகி நிலை­கொண்­டி­ருந்த காற்­ற­ழுத்த தாழ்வு மண்­டலம் நேற்று புதன்­கி­ழமை மாலை 5 தொடக்கம் 6 மணி­க்குள் புய­லாக வலுப்­பெற்­றது. இந்தப் புயல் நாளை அல்­லது நாளை மறு­தினம் கிழக்கு கடற்­பி­ராந்­தி­யத்­தி­யத்­தி­னூ­டாக நகர்ந்து இந்­தி­யாவின் தமிழ்­நாட்டைக் கடக்­க­வுள்­ள­தாக இலங்கை வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

இப் புயல் கார­ண­மாக நேரடி பாதிப்­புக்கள் இலங்­கைக்கு ஏற்­ப­டாது என்ற போதிலும், மறை­முக தாக்­க­மாக வேக­மான காற்று மற்றும் தொடர்ச்­சி­யான மழை­யு­ட­னான கால­நிலை நிலவும் என வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நாயகர் அத்­துல கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார்.

பாதிப்­புக்கள்
நிலவும் சீரற்ற கால­நி­லையால் பாதிக்­கப்­பட்டோர் எண்­ணிக்கை இரண்டு இலட்­சத்தைத் தாண்­டி­யுள்­ளது. நாட்­டி­லுள்ள 18 மாவட்­டங்­களில் 141 பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வு­களில் 66 947 குடும்­பங்­களைச் சேர்ந்த 2 இலட்­சத்து 30 743 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.

நேற்று புதன்­கி­ழமை மாலை வரை நால்வர் உயி­ரி­ழந்­துள்­ள­தோடு, 8 பேர் காணாமல் போயுள்­ளனர். இது தவிர 9 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.

நிந்­தவூர் டிரக்டர் விபத்தில் நான்கு மாண­வர்­களும், புத்­தளம் பிர­தே­சத்தில் வெள்­ளித்தில் அடித்துச் செல்­லப்­பட்ட நப­ரொ­ரு­வரும் உள்­ள­டங்­க­லாக 8 மர­ணங்கள் பதி­வா­கி­யுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் பணிப்­பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உதய ஹேரத் தெரி­வித்தார்.

யாழ்ப்­பாணம், மாத்­தறை மற்றும் அம்­பாறை மாவட்­டங்­களில் 8 வீடுகள் முழு­மை­யா­கவும், ஏனைய மாவட்­டங்­களில் 620 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ளன. மண்­ச­ரிவு மற்றும் வெள்ள எச்­ச­ரிக்கை கார­ண­மாக 165 பாது­காப்பு முகாம்­களில் 15 586 நபர்கள் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர். இதே­வேளை 12 மாவட்­டங்­களில் 1712 குடும்­பங்­களைச் சேர்ந்த 6016 பேர் உற­வி­னர்கள் மற்றும் நண்­பர்­க­ளது வீடு­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

அம்­பாறை மாவட்­டத்­தி­லேயே அதி­க­ள­வானோர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இம்­மா­வட்­டத்தில் 20 பிர­தேச செய­ல­கங்­களில் 34 885 குடும்­பங்­களைச் சேர்ந்த ஒரு இலட்­சத்து 23 876 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு, 2082 குடும்­பங்­களைச் சேர்ந்த 6710 பேர் 52 தற்­கா­லிக முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இதே­போன்று மன்னார் மாவட்­டத்­திலும் 14 237 குடும்­பங்­களைச் சேர்ந்த 49 560 பேரும், யாழ்ப்­பா­ணத்தில் 2706 குடும்­பங்­களைச் சேர்ந்த 9642 பேரும், புத்­த­ளத்தில் 1893 குடும்­பங்­களைச் சேர்ந்த 6615 பேரும், அநு­ரா­த­பு­ரத்தில் 1730 குடும்­பங்­களைச் சேர்ந்த 5451 பேரும், திரு­கோ­ண­ம­லையில் 1537 குடும்­பங்­களைச் சேர்ந்த 4385 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

மேலும் கேகாலை, கிளி­நொச்சி, இரத்­தி­ன­புரி, காலி, பதுளை, முல்­லைத்­தீவு, நுவ­ரெ­லியா, மட்­டக்­க­ளப்பு, மாத்­தறை, மாத்­தளை மற்றும் வவு­னியா ஆகிய மாவட்­டங்­களும் பாதிப்­புக்­களை எதிர்­கொண்­டுள்­ளன.

கால­நிலை
தெற்கு அந்­தமான் தீவில் கடந்த 21ஆம் திகதி இக்­காற்­ற­ழுத்த தாழ்­வு­நிலை உரு­வா­னது. பின்னர் காற்­ற­ழுத்த தாழ்வு மண்­ட­ல­மாக நிலை­கொண்டு வடக்கு நோக்கி நகர்ந்­தது. இந்த தாழ்வு மண்­டலம் நேற்று மாலை 4 மணி­ய­ளவில் திரு­கோ­ண­ம­லைக்கு 120 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை­கொண்­டி­ருந்­தது. இதன் தாக்­க­மா­கவே வடக்கு, வட­மத்­திய, வடமேல், மத்­திய மற்றும் மேல் மாகா­ணங்­களில் 100 – 200 மில்லி மீற்­ற­ருக்கும் அதிக மழை­வீழ்ச்சி பதி­வா­கி­ய­தாக வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நாயகர் அத்­துல அத்­துல கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார்.

இந்த தாழ­முக்க மண்­டலம் புய­லாக வலு­வ­டைந்­துள்­ள­மையால் இலங்­கைக்கு நேரடி தாக்­கங்கள் இல்லை. இப்­புயல் நாளை அல்­லது நாளை மறு­தினம் இந்­தி­யாவின் தமிழ் நாட்டை நோக்கி நகர்­வதால் எமக்கு பாதிப்­புக்கள் இல்லை. எவ்­வா­றி­ருப்­பினும் சில பகு­தி­களில் ஓர­ளவு மழை வீழ்ச்சி பதி­வாகும். அதே­வேளை இது கிழக்கு கடலின் ஊடாக நகர்­வதால் அப்­ப­கு­தி­களில் காற்றின் வேகம் மணித்­தி­யா­லத்­துக்கு 40 – 50 கிலோ மீற்­ற­ராகக் காணப்­படும். ஆழ்­கடல் பகு­தி­களில் 80 – 90 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதி­க­ரிக்கும் என்­பதால் கடற்­றொ­ழி­லா­ளர்கள் கட­லுக்கு செல்­வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அத்­துல அத்­துல கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார்.

பொது போக்­கு­வ­ரத்து பாதிப்பு
வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவு கார­ண­மாக கொழும்பு – கோட்­டை­யி­லி­ருந்து பதுளை வரை­யான இரவு நேர அஞ்சல் புகை­யி­ரத சேவை நேற்­றைய தினம் இரத்து செய்­யப்­பட்­டது. இதே­வேளை வெள்­ளத்தால் மட்­டக்­க­ளப்பு புகை­யி­ரத வீதி­யூ­டான புகை­யி­ரத போக்­கு­வ­ரத்­துக்­களும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தன.

ஒழுவில் பிர­தே­சத்தில் பால­மொன்று தாழி­றங்­கி­யதால் அக்­க­ரைப்­பற்று – கல்­முனை வீதி­யூ­டான போக்­கு­வ­ரத்து முற்­றாக பாதிக்­கப்­பட்­டது. மர­மொன்று முறிந்து விழுந்­ததன் கார­ண­மாக கொழும்பு – அநு­ரா­த­புரம் வீதி­யூ­டான போக்­கு­வ­ரத்தும் தடை­பட்­டது.
கொழும்பு – யாழ்ப்­பாணம் ஏ9 வீதியில் ஓமந்தை பிர­தே­சத்தில் ஏற்­பட்ட வெள்ளம் கார­ண­மாக மாற்று வீதிகள் பயன்­ப­டுத்­தப்­பட்­டன. பாதெ­னிய – அநு­ரா­த­புரம் வீதியில் மினு­வாங்­கொடை பாலம் நீரில் மூழ்­கி­யுள்­ளது. இதனால் மாற்று வீதியைப் பயன்­ப­டுத்­து­மாறு குரு­ணாகல் மாவட்ட செய­லாளர் அறி­வித்­துள்ளார்.

வெள்ளம், மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை
தொடர் மழை கார­ண­மாக களனி கங்­கையின் நீர்­மட்டம் உயர்­வ­டைந்­துள்­ள­மையால் சீதா­வாக்கை, தொம்பே, கடு­வலை, பிய­கம, கொலன்­னாவ, கொழும்பு மற்றும் பகு­தி­க­ளுக்கும், கலா ஓயா நீர்­மட்டம் உயர்­வ­டை­வதால் நொச்­சி­யா­கம, இரா­ஜாங்­கனை, வனாத்­த­வில்லு மற்றும் கரு­வ­ல­கஸ்வௌ பகு­தி­க­ளுக்கும் வெள்ள எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை மல்­வத்­து­ஓயா நீர்­மட்டம் உயர்­வ­டை­வதால் அநு­ரா­த­புரம் – மஹ­வி­லச்சி பிர­தேச செய­ல­கத்­துக்­குட்­பட்ட பகு­தி­க­ளுக்கும், வவு­னியா – வெண்­க­லச்­செட்­டிக்­குளம், மன்னார் – நானாட்டான், மூசாலை, மடு ஆகிய பகு­தி­க­ளுக்கும், தெதுரு ஓயா நீர்­மட்டம் உயர்­வ­டை­வதால் வாரி­ய­பொல, நிக்­க­வ­ரெட்­டிய, மஹவ, கொபெய்­கனே, பிங்­கி­ரிய, பல்­லம, சிலாபம், ஆரச்­சி­கட்­டுவ மற்றும் ரஸ்­நா­யக்­க­புர ஆகிய பகு­தி­க­ளுக்கும் வெள்ள எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

கண்டி, மாத்­தளை மற்றும் நுவ­ரெ­லியா மாவட்­டங்­க­ளுக்கு தேசிய கட்­டிட ஆராய்ச்சி நிறு­வனம் மண்­ச­ரிவு சிவப்பு எச்­ச­ரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய கண்டி மாவட்டத்தில் ஹரிஸ்பத்துவ, மெததும்பர, உடுதும்பர, தொலுவ, யட்டிநுவர, உடபலாத்த, பஹதஹேவாஹெட்ட, உடுநுவர மற்றும் தெல்தோட்ட பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தளையில் உகுவெல, யடவத்த, ரத்தோட்டை, வில்கமுவ, அம்பன்கங்க கோரள, லக்கல, பல்லேபொல, நாவுல மற்றும் மாத்தளை பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், நுவரெலியாவில் வலப்பனை பிரதேச செயலகப்பிரிவுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை பதுளை, காலி, களுத்துறை, கேகாலை, குருணாகல், மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.