வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் 4 ஜனாஸாக்கள் மீட்பு

0 41
  • உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்
  • காணாமல்போனோரை தேடும் பணிகள் தொடர்கின்றன

(யூ.எல்.எம்.றியாஸ், பாறூக் ஷிஹான்)
அம்­பாறை மாவட்­டத்தின் சம்­மாந்­துறை பிர­தே­சத்தில் உழவு இயந்­தி­ரத்தில் பய­ணித்த சமயம் வெள்ள நீரினால் அடித்துச் செல்­லப்­பட்டு அரபுக் கல்­லூரி மாண­வர்கள் அறுவர் காணாமல் போன நிலையில் நால்­வரின் ஜனா­ஸாக்கள் நேற்று மாலை வரை மீட்­கப்­பட்­டுள்­ளன. ஏனை­யோரின் ஜனா­ஸாக்­களை மீட்கும் பணிகள் தொடர்ந்து வரு­கின்­றன.
நிந்­தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்­லூ­ரியில் கல்வி பயின்று வரும் மாண­வர்­களே இவ்­வாறு வெள்­ளத்தில் சிக்கி உயி­ரி­ழந்­த­வர்­க­ளாவர்.

காரை­தீவு சம்­மாந்­துறை பிர­தான வீதியில் மாவ­டிப்­பள்ளி பிர­சேத்தில் செவ்­வாய்க்­கி­ழமை மாலை 5.30 மணி­ய­ளவில் இந்த விபத்துச் சம்­பவம் பதி­வா­கி­யுள்­ளது. கிழக்கு மாகா­ணத்தின் பல்­வேறு பகு­தி­களும் மழை மற்றும் வெள்ள அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் நிந்­தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு விடு­முறை வழங்­கப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து மாண­வர்கள் பஸ் மூல­மாக தமது வீடு­க­ளுக்குச் செல்ல முற்­பட்ட போது சம்­மாந்­துறை மாவ­டிப்­பள்ளி பிர­தே­சத்தில் வெள்ள நீர் பாய்ந்­தோ­டி­யதால் அப்­ப­கு­தியை கடப்­ப­தற்கு உழவு இயந்­தி­ரத்தில் ஏறிச் சென்­றுள்­ளனர். இந்த உழவு இயந்­தி­ரத்தில் 11 மாண­வர்­களும் மேலும் சிலரும் பய­ணித்­துள்­ள­தாக தெரிய வரு­கி­றது. எனினும் பாய்ந்­தோடும் வெள்ள நீருக்கு தாக்குப் பிடிக்க முடி­யாத உழவு இயந்­திரம் குடை­சாய்ந்­துள்­ளது.

இதனால் அதில் பய­ணித்த அனை­வரும் வெள்ள நீரில் அடித்துச் செல்­லப்­பட்­டுள்­ளனர். எனினும் அங்­கி­ருந்­த­வர்கள் மூலம் 5 மாண­வர்கள் உட­ன­டி­யாக மீட்­கப்­பட்டு வைத்­தி­ய­சா­லை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். எனினும் அதில் பய­ணித்த ஏனை­யோரை மீட்க முடி­யாது போயுள்­ளது.

இந்­நி­லையில் நேற்று மாலை வரை நான்கு மாண­வர்­களின் ஜனா­ஸாக்கள் மீட்­கப்­பட்­டன. சம்­மாந்­துறை மலை­ய­டிக்­கி­ரா­மத்தை சேர்ந்த 15 வய­து­டைய பாரூக் முகம்­மது நாஸிக் மற்றும் சம்­மாந்­து­றையைச் சேர்ந்த 16 வய­து­டைய முஹம்­மது சாஜின், சம்­மாந்­துறை மலை­ய­டிக்­கி­ரா­மத்தைச் சேர்ந்த16 வய­து­டைய ஆசிக் முகம்­மது அப்னான் மற்றும் சம்மாந்துறை மலையடிக்கிராமத்தைச் சேர்ந்த முஹம்மட் பாறூக் சர்ஹான் (வயது 15) ஆகி­யோரின் ஜனா­ஸாக்­களே மீட்­கப்­பட்­டுள்­ளன. ஏனை­யோரைத் தேடும் பணி­களில் கடற்­படை, விசேட அதி­ர­டிப்­படை, மற்றும் இரா­ணு­வத்­தி­ன­ருடன் பொது­மக்­களும் ஈடு­பட்­டுள்­ளனர்.

சாய்ந்­த­ம­ருது ஜனாஸா நலன்­புரி அமைப்பு, மாளி­கைக்­காடு ஜனாஸா நலன்­புரி அமைப்பு, காரை­தீவு சமூக செயற்­பாட்­டா­ளர்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் தேடுதல் நேற்றும் தொடர்ந்தது. இதன்போதே 4 ஜனாஸாக்களும் மீட்கப்பட்டன. எனினும் நேற்று மாலை வேளை இருள் சூழ்ந்த நிலையில் இன்று காலை வரை மீட்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதே­வேளை இந்த உழவு இயந்­தி­ரத்தில் மொத்தம் எத்­தனை பேர் பய­ணித்­தனர் என்ற விப­ரங்கள் இது­வரை சரி­யாகத் தெரி­ய­வில்லை. குறித்த உழவு இயந்­திரம் நேற்­றைய தினம் மீட்­கப்­பட்­ட­போது அத­னுடன் சேர்த்து இரண்டு மோட்டார் சைக்­கிள்­களும் மீட்­கப்­பட்­டுள்­ளன. இந்த மோட்டார் சைக்­கிள்­களில் பய­ணித்­த­வர்­களும் உழவு இயந்­தி­ரத்தின் சார­தியும் வெள்­ளத்தில் சிக்­குண்­டி­ருக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் உயி­ரி­ழப்­புகள் மேலும் அதி­க­ரிக்­கலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை காரைதீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.