பூக்குளம் மக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட ஜனநாயக உரித்து !

0 93

சபீர் மொஹமட்

இந்­திய தேர்தல் ஆணைக்­குழு “BELIEF IN THE BALLOT” என்ற ஒரு புத்­த­கத்தை வெளி­யிட்­டி­ருந்­தது. அந்­நூலில் இந்­தி­யாவின் தேர்­தல்­க­ளில்­போது நடை­பெற்ற சுவா­ரஸ்­ய­மான சம்­ப­வங்கள் பல எழு­தப்­பட்­டுள்­ளன. அதிலே “If We cannot Fly We will Walk” என்ற ஒரு அத்­தி­யாயம் உள்­ளது. கடந்த வாரம் தேர்தல் சார்ந்த ஒரு சில கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக புத்­தளம் சென்­றி­ருந்­த­போது இந்த கதை திரும்­பவும் ஞாப­கத்­திற்கு வந்­தது. அதா­வது, இந்­தி­யாவின் ஹிமாசல் மற்றும் காஷ்மீர் ஆகிய மாநி­லங்கள் கடல் மட்­டத்­தி­லி­ருந்து 6000 முதல் 15,000 வரை­யி­லான உய­ரத்தில் உயர்ந்த மலை­களால் சூழப்­பட்ட பிர­தே­சங்­க­ளாகும். இந்த மலைப்­பி­ர­தே­சங்­களில் ஒரு சில பகு­தி­க­ளுக்கு செல்ல உரிய போக்­கு­வ­ரத்து வச­திகள் இன்னும் சரி­யாக இல்லை. ஆனாலும் அங்கே வாழ்­ப­வர்­களின் வாக்­க­ளிக்கும் உரி­மையை எவ­ராலும் மறுத்­து­விட முடி­யாது. அதற்­க­மைய அங்­குள்ள “ரலகுங், பேமா” ஆகிய இரு பிர­தே­சங்­க­ளுக்கும் எத்­தனை சிர­மங்கள் வந்­தாலும் இந்­திய தேர்தல் ஆணைக்­குழு ஹெலி­காப்டர் மூலம் வாக்­குப்­பெட்­டி­க­ளையும் அதி­கா­ரி­க­ளையும் அனுப்பி வைப்­பார்கள். ஆனால் 2009 மே மாதம் 15 நடை­பெற்ற லோக்­சபா தேர்­தலின் போது தேர்தல் அதி­கா­ரி­க­ளுக்கு ஹெலி­காப்டர் மூலம் அங்கே செல்­வ­தற்கு, கால­நிலை இடம் கொடுக்­க­வில்லை. பின்னர் அங்கே செல்ல வேறு வழி­களை தேர்தல் ஆணைக்­குழு சிந்­திக்கத் தொடங்­கி­யது. மே 12, “இயன்ற அளவு தூரம் வாக­னத்தில் சென்று பின் நடந்து செல்வோம்” என தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

2009 மே 12, வாக்­குப்­பெட்­டிகள் மற்றும் உரிய ஆவ­ணங்­க­ளுடன் 12 அதி­கா­ரிகள் தமது பய­ணத்தை தொடங்­கி­னார்கள். வாக­னத்தில் இய­லு­மான தூரம் சென்று மிகுதி 45 KM தூரத்தை அவர்கள் 48 மணித்­தி­யா­ல­யங்கள் தொடர்ந்து நடந்தே சென்று “ரலகுங்” கிரா­மத்தை அடைந்­தார்கள். அத்­த­னைக்கும் அவ்­விரு கிரா­மங்­க­ளிலும் இருப்­பதோ வெறு­மனே 37 வாக்­கா­ளர்கள் மட்­டுமே. பின் 2009 மே 15 எவ்­வித தடங்­கலும் இன்றி உரிய முறையில் வாக்­க­ளிக்கும் நிலையம் நிறு­வப்­பட்டு தேர்தல் நடாத்­தப்­பட்­டது. இத்­தனை சவால்­க­ளுக்கும் மத்­தியில் தங்­களை தேடி தங்­க­ளு­டைய ஊருக்கே வந்த தேர்தல் அதி­கா­ரி­க­ளுக்கு தக்க சன்­மானம் ஒன்­றினை அளிக்கும் வித­மாக அவ்­விரு ஊர்­க­ளையும் சேர்ந்த 37 வாக்­கா­ளர்­களும் தமது வாக்­கு­களை வழங்­கி­யுள்­ளார்கள். ரலகுங் வாக்­க­ளிக்கும் நிலை­யத்தில் அன்­றைய வாக்­க­ளிக்கும் வீதம் 100% என பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த கதையை எனக்கு மீண்டும் ஞாப­கப்­ப­டுத்­திய மற்­றைய சம்­பவம் புத்­தளம் தேர்தல் மாவட்­டத்தின் வனாத்­த­வில்லு தேர்தல் தொகு­திக்கு உட்­பட்ட பூக்­குளம் கிராம மக்­களும் புத்­தளம் மாவட்டம் தேர்தல் அதி­கா­ரி­களும் ஆகும். பூக்­குளம் என்­பது, புத்­தளம் மற்றும் மன்னார் மாவட்­டங்­களின் எல்­லையில் காணப்­ப­டு­கின்ற ஒரு மீன்­பிடி கிராமம். புத்­த­ளத்­தி­லி­ருந்து பூக்­குளம் செல்­வ­தாயின் வனாத்­த­வில்லு தாண்டி வில்­பத்­துவ சர­ணா­ல­யத்தின் நுழை­வா­யி­லுக்கு சென்று அங்­கி­ருந்து சுமார் மூன்று மணித்­தி­யா­ல­யங்கள் நடக்க வேண்டும். சுற்­றுலா பய­ணி­க­ளுக்­கான வாகனம் தவிர வேறு எந்­த­வொரு போக்­கு­வ­ரத்தும் அங்கே இல்லை. அடுத்து மன்னார் ஊடாக அனு­ரா­த­புரம் சென்று புத்­தளம் வரு­வது. பெரும்­பாலும் 2018 ஆம் ஆண்­டு­க­ளுக்கு முன்னர் வாக்­க­ளிப்­ப­தற்­காக அவ்­வாறே அம்­மக்கள் வனாத்­த­வில்லு சென்­றுள்­ளார்கள்.

பழைய கோவில்

“எங்கள் இருப்­பினை உறு­திப்­ப­டுத்­து­கின்ற ஒரே விடயம் வாக்­க­ளிப்­பது மட்­டுமே. ஆகவே இயன்ற அளவு நாங்கள் தேர்தல் தினத்தில் இங்கே வந்து வாக்­க­ளிப்போம்” பூங்­குலம் மீன்­பி­டிக்­கி­ரா­மத்தை சேர்த்த ஜெய­சீலன் இவ்­வாறு கூறினார். மேலும் ஜெய­சீலன் கூறு­கையில், இந்த கிரா­மத்தில் கிட்­டத்­தட்ட 50 குடும்­பங்கள் அளவில் உள்­ளன. 1980 ஆம் ஆண்­டுக்கு முன்னர் இதை­விட அதி­க­மா­ன­வர்கள் இங்கே இருந்த போதிலும் யுத்தம் கார­ண­மாக கல்­பிட்டி பிர­தே­சத்­திற்கு இடம்­பெ­யர்ந்­தார்கள். 2009 ஆம் ஆண்­டிற்கு பின்னர் மீண்டும் நாங்கள் எமது பழைய இடங்­க­ளுக்கு குடி­யி­ருப்­பு­களை அமைத்துக் கொள்ள வந்த போது வன ஜீவ­ரா­சிகள் திணைக்­களம் அதற்கு அனு­மதி வழங்­க­வில்லை. ஏனென்றால் நாங்கள் இங்­கி­ருந்து சென்ற பின்னர் எமது ஊரையும் சேர்த்து சர­ணா­லயம் என கெசட் செய்­துள்­ளார்­களாம். எமக்கு மீன்­பிடி தவிர வேறு எந்த தொழிலும் தெரி­யாது. அவ்­வா­றி­ருக்க நாங்கள் வேறு இடங்­க­ளுக்கு சென்று எவ்­வாறு வாழ்­வது ?

பூங்­குளம் கிரா­மத்தில் இடிந்த நிலையில் ஒரு பாட­சா­லையும் ஊர் மக்­க­ளுக்கு கட­வுளை வழி­ப­டு­வ­தற்கு ஒரு ஆல­யமும் உள்­ளது. மேலும் வீட­மைப்பு திட்டம் ஒன்­றி­னூ­டாக வழங்­கப்­பட்ட 20 வீடுகள் மூடப்­பட்ட நிலையில் காணப்­பட்­டன. ஏனென்றால் காட்டு யானை­களின் தொல்லை மற்றும் நீர் மின்­சாரம் போன்ற எந்த ஒரு அடிப்­படை வச­தி­களும் அவர்­க­ளுக்கு இன்னும் கிடைக்­கப்­பெ­ற­வில்லை. தங்­க­ளு­டைய பிள்­ளைகள் கல்­பி­டிய பிர­தே­சத்தில் தங்கி படிக்­கின்­றார்கள், என ஊர் மக்கள் கூறி­னார்கள்.

பாடசாலை

“கடந்த ஜனா­தி­பதித் தேர்தல் மற்றும் அதற்கு முன்னர் நடை­பெற்ற தேர்­தல்­களின் போது அதோ அந்த ஆல­யத்தில் வாக்­க­ளிக்கும் நிலையம் ஒன்று நிறு­வப்­பட்­டது. தேர்­த­லுக்கு முன் தினம், கடற்­படை, போலீஸ், வன ஜீவ­ரா­சிகள் திணை­க்கள அதி­கா­ரிகள் உட்­பட 20 பேர­ளவில் இங்கே வந்து தங்­கி­னார்கள். அவர்கள் உண்­மை­யி­லேயே மிகவும் சிர­மப்­பட்­டார்கள். வில்­பத்­துவ சர­ணா­ல­யத்தின் ஊடாக வாக்குப் பெட்­டிகள் பலத்த பாது­காப்­புக்கு மத்­தியில் இங்கே கொண்­டு­வ­ரப்­பட்­டது. பின்னர் நாங்கள் 80 பேர­ளவில் அன்­றைய தினம் வாக்­க­ளித்தோம். வந்­தி­ருந்த அதி­கா­ரிகள் எங்­களைப் பார்த்து – ‘நாங்கள் மிகுந்த சிர­மத்­துக்கு மத்­தியில் இங்கே உங்­க­ளு­டைய வாக்­கு­களை பெற்றுக் கொள்­வ­தற்­காக வந்­துள்ளோம். எனவே எப்­ப­டி­யா­வது வந்து வாக்­க­ளி­யுங்கள்’ என்­றார்கள்.
எந்­த­வொரு அர­சி­யல்­வா­தியும் இந்த கிரா­மத்­திற்கு வந்­ததே இல்லை. எவரும் இனிமேல் வரப்­போ­வதும் இல்லை. ஆனாலும் வாக்­க­ளிப்­பது அவர்­க­ளு­டைய உரிமை என்­பதை மட்டும் இவர்கள் நன்கு அறிந்­துள்­ளார்கள். மேலும் இவர்­க­ளு­டைய குடி­யு­ரி­மையை பாது­காக்­கின்ற ஒரே விட­ய­மாக இன்று காணப்­ப­டு­வது இந்த தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தாகும். தேர்­தலில் ஒன்­றுக்கு மேற்­பட்ட விறுப்பு வாக்­குகள் வழங்­குதல் குறித்த தெளி­வுகள் இல்­லா­விட்­டாலும் எந்தக் கட்­சிக்கு வாக்­க­ளிக்க வேண்டும் என்­பதில் ஊர் மக்கள் அனை­வரும் மிகத் தெளி­வாக உள்­ளார்கள்.

“அவர்­க­ளுக்கு வர முடி­யா­விட்டால், நாங்கள் அவர்­க­ளிடம் செல்வோம் என்­கி­றது இலங்கை தேர்­தல்கள் திணை­களம்”

இந்த பூக்­குளம் கிராமம் பற்றி புத்­தளம் மாவட்ட உதவி தேர்தல் ஆணை­யாளர் லக்‌­ஷித ஜய­நா­ய­க­விடம் நாங்கள் வின­வினோம். “புத்­தளம் மாவட்­டத்தின் வடக்கு எல்­லையில் காணப்­ப­டு­கின்ற பூக்­குளம் கிரா­மம்தான் எமக்கு இருக்­கின்ற சவால் மிகுந்த வாக்­கெ­டுப்பு நிலையம். ஒரு சாரா­ருக்கு அங்கே வாக்­கெ­டுப்பு நிலை­ய­மொன்றை நிறு­வு­வதில் அவ்­வ­ளவு திருப்தி இல்லை, மறு சாரார் எப்­ப­டி­யா­வது அங்கே வாக்­கெ­டுப்பு நிலையம் ஒன்றை நிறுவ வேண்டும் என உறு­தி­யாக உள்­ளார்கள். அதேபோல் அக்­கி­ரா­மத்தை சேர்ந்து வாக்­கா­ளர்­களும் மிகவும் விருப்­பத்­துடன் வாக்­க­ளிப்­பதில் ஈடு­ப­டு­கின்­றார்கள். சில இளம் தேர்தல் அதி­கா­ரிகள் பூக்­குளம் போன்ற சவால் மிகுந்த பிர­தே­சங்­க­ளுக்கு தேர்தல் கட­மை­க­ளுக்­காக செல்ல ஆர்­வ­மாக உள்­ளார்கள். எனவே எவ்­வித தடை­களும் இன்றி நாங்கள் அக்­கி­ரா­மத்தில் வாக்­கெ­டுப்பு நிலை­ய­மொன்றை நிறு­வினோம். கால­நிலை தவிர்ந்த ஏனைய அத்­தனை சவால்­க­ளையும் நாங்கள் வெற்­றி­க­ர­மாக முகம் கொடுத்து பூக்­குளம் கிராம மக்­களின் வாக்­கு­களை கடந்த மூன்று தேர்­தல்­க­ளிலும் பெற்றுக் கொண்டோம். ஆனால் இம்­முறை, தொடர்­மழை கார­ண­மாக வில்­பத்­துவ சர­ணா­ல­யத்­திற்கு உள்ளே ஒரு சில இடங்கள் நீரில் மூழ்­கக்­கூடும். அப்போது வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்ல முடியாமல் போய்விடலாம். எனவே முன்னாயத்தமாக நாங்கள் கடல் வழியாக கடற் படையின் உதவியுடன் அவற்றை அங்கே கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை நாங்கள் இம்முறை மேற்கொண்டுள்ளோம்” என தெரிவித்தார்.

இரண்டு நாட்கள் உயிரை பணயமாக வைத்து 37 வாக்காளர்களுக்காக 48 KM தூரத்தை நடந்து கடக்கின்ற இந்திய தேர்தல் அதிகாரிகளைப் போல் 80 வாக்காளர்களுக்காக வில்பத்துவ சரணாலயத்தின் ஊடாக வனவிலங்குகள் மற்றும் ஏனைய ஆபத்துக்களையும் தாண்டி முன் தினம் சென்று வாக்களிக்கும் நிலையத்தை நிறுவி வாக்குகளை சேகரித்து வருகின்ற இலங்கையின் தேர்தல் அதிகாரிகளும் இருக்கும் வரை இவ்விரு நாடுகளிலும் ஜனநாயகம் எம்போதும் பாதுகாக்கப்படும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.