ஜனாதிபதி ஆட்சி முறைமையின் கீழ்தான் முஸ்லிம்களுக்கு பேரம்பேசும் சக்தி கிடைக்கும்

சிறுபான்மையினரே அரசியலமைப்பு குறித்து தீர்மானிக்க வேண்டும் என்கிறார் ஹக்கீம்

0 99

(எம்.எம்.மின்ஹாஜ்)
ஜனா­தி­பதி ஆட்சி முறை­மையின் கீழ்தான், நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு பேரம் பேசும் சக்தி கிடைக்கும் என தெரி­வித்­துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், எனவே, அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்தம் குறித்து சிறு­பான்மை மக்கள் தீர்­மா­னத்­திற்கு வர வேண்டும் எனவும் தெரி­வித்தார்.

அத்­துடன், இப்­போ­தைய ஜனா­தி­பதி நிறைய வாக்­கு­று­தி­களை வழங்கி இருக்­கிறார். ஆனால், இன்­றுள்ள சூழ்­நி­லையில் அந்த வாக்­கு­று­தி­களை எவ்­வாறு அவர் நிறை­வேற்றப் போகிறார்? என்றும் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

“நியா­யத்தின் குரல்” என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் கடந்த 30 ஆண்டு காலத்தில் இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய நூல்­களின் வெளி­யீட்டு விழா நேற்­று­முன்­தினம் கண்டி, எஸ்.சேனாநாயக்க மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்ற போது உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது,
நான்கு பாகங்­க­ளாக வெளி­வந்­தி­ருக்கும் எனது பாரா­ளு­மன்ற உரைகள் அடங்­கிய நூலில் பாரா­ளு­மன்­றத்தில் நான் ஆற்­றிய முக்­கிய உரைகள், பல­ த­ரப்­பட்ட விவா­தங்­களின் போது ஆற்­றிய உரைகள், அனு­தாபப் பிரே­ர­ணை­களில் ஆற்­றிய உரைகள், பாரா­ளு­மன்­றத்­திற்கு வெளி­யிலும் மறைந்த முக்­கிய ஆளு­மை­க­ளுக்­கும் அந்­தந்த கட்­சி­களின் அழைப்பின் பேரில் உள்­நாட்­டிலும், வெளி­நாட்­டிலும் உரைகள் நிகழ்த்­தி­யி­ருக்­கின்றேன்.

சுனாமி அனர்த்­தத்தைத் தொடர்ந்து உதவி வழங்கும் நாடுகள் ஒரு மாநாட்டின் ஊடாக சுனா­மிக்கு பிந்­திய செயற்­பாட்டு கட்­ட­மைப்பு (PTOMSபொறி­முறை நோர்­வே­யு­டைய ஏற்­பாட்டில் நடை­பெற்­றது. வெளி­நாட்­டி­லி­ருந்து வரக்­கூ­டிய நிதி உதவி சம்­பந்­த­மாக அதில் ஆரா­யப்­பட்­ட­போது அரசு மற்றும் விடு­தலைப் புலிகள் என்­பன மட்­டுமே உள்­வாங்கப் பட்­டி­ருந்­தன.முஸ்­லிம்கள் முழு­மை­யாக ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். அதனை நான் எதிர்த்தேன். வன்­மை­யாக எதிர்த்­த­தனால் அது சாத்­தி­ய­மா­க­வில்லை.

இப்­போ­தைய ஜனாதிபதி நிறைய வாக்குறுதி வழங்கி இருக்கிறார்.ஆனால் இன்றுள்ள சூழ்நிலையில் அந்த வாக்குறுதிகளை எவ்வாறு அவர் நிறைவேற்றப் போகிறார் ?

முஸ்லிம்களை பொறுத்தவரையில் இந்த நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையில் பேரம் பேசக்கூடிய தன்மை இருப்பதன் காரணமாக சிறுபான்மை சமூகங்கள் அரசியலமைப்பு சீர்திருத்தம் பற்றி தீர்மானிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கின்றோம் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.