அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் – ஒரு நோக்கு

0 148

இப்னு சுபைதர்

ஜனா­தி­பதி அநுரகுமார திசா­நா­யக்­கவின் வெற்­றி­யோடு தற்­போது நாடு முழு­வதும் தேசிய மக்கள் சக்தி தொடர்­பான ஒரு ஈர்ப்பு மக்கள் மத்­தியில் எழுந்­துள்­ளதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. இதனால் சிங்­க­ளவர், தமிழர், முஸ்­லிம்கள் என்ற வேறு­பா­டு­களை மறந்து பொது­மக்கள் தேசிய மக்கள் சக்­திக்கு தமது ஆத­ரவை வெளிப்­ப­டுத்தத் தொடங்­கி­யுள்­ளனர்.

அம்­பாறை (திகா­ம­டுல்ல) மாவட்ட முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வரை கடந்த காலங்­களில் அதி­க­மானோர் ஐக்­கிய தேசி­யக்­கட்சி சார்­புள்­ள­வர்­க­ளாக இருந்­தனர். இதனால் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­லி­ருந்தே முஸ்லிம் பிர­தி­நி­திகள் தெரி­வா­கினர். பின்னர் முஸ்லிம் கட்­சி­களின் தோற்­றத்­தோடு இந்த ஆத­ரவு முஸ்லிம் கட்­சி­களின் பக்கம் திரும்பி முஸ்லிம் கட்­சி­களில் இருந்து முஸ்லிம் பிர­தி­நி­திகள் தெரி­வா­கினர்.

அம்­பாறை மாவட்­டத்தில் கடந்த பொதுத் தேர்தல் முடி­வு­களின் படி இம்­மா­வட்­டத்தின் 7 ஆச­னங்­களில் 4 பேர் முஸ்­லிம்­க­ளாக இருந்­தனர். எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசீம் ஆகியோர் முஸ்லிம் காங்­கிரஸ் சார்­பா­கவும், ஏ.எல்.எம்.அதா­வுல்லா தேசிய காங்­கிரஸ் சார்­பா­கவும், எஸ்.எம்.எம்.முஸர்ரப் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சார்­பா­கவும் தெரி­வாகி இருந்­தனர்.

நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­தலில் கடந்த முறை போன்று இங்கு 4 முஸ்லிம் ஆச­னங்கள் கிடைப்­ப­தற்­கான சாத்­தியக் கூறுகள் குறை­வாக உள்­ள­தா­கவே அர­சியல் அவ­தா­னிகள் கருத்துத் தெரி­விக்­கின்­றனர். இதற்குக் காரணம் முஸ்லிம் கட்­சி­க­ளுக்கு ஆத­ரவு வழங்கி வந்­தோருள் ஒரு சாரார் இம்­முறை தேசிய மக்கள் சக்­திக்கு தமது ஆத­ரவை வெளிப்­ப­டுத்தி நிற்­கின்­ற­மை­யாகும்.
முஸ்­லிம்­க­ளது ஆத­ரவும் தேசிய மக்கள் சக்­திக்கு கிடைப்­பதால் அக்­கட்சி அம்­பாறை மாவட்­டத்தில் 3 ஆச­னங்­களைப் பெறக் கூடிய சாத்­தியக் கூறுகள் அதிகம் உள்­ளன. எனினும் அக்­கட்­சியில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் கிடைக்­குமா என்­பது கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது. சமீ­பத்தில் நடந்து முடிந்த ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வுகள் இதனை தெளிவுபடுத்­து­கின்­றன.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜனா­தி­பதி அநுரகுமார திசா­நா­யக்க திகா­ம­டுல்ல தேர்தல் மாவட்­டத்தில் பெற்ற வாக்­குகள் பின்­வ­ரு­மாறு:
தொகுதி வாக்­குகள்
அம்­பாறை – 60,292
பொத்­துவில் – 18,053
சம்­மாந்­துறை – 8,569
கல்­முனை – 10,937
தபால் வாக்­குகள் –  11,120
மொத்தம் – 108,971

இந்த வாக்­க­ளிப்பு முறையை நோக்­கு­கின்ற போது அம்­பாறை தொகு­தி­யுடன், ஏனைய சிங்­கள பிர­தே­சங்­க­ளையும் சேர்த்து அநுர குமார திசா­நா­யக்க பெற்ற வாக்­கு­களுள் சுமார் 65 வீத­மா­னவை சிங்­கள மக்­க­ளது வாக்­குகள் என்­பது சந்­தே­கத்­திற்­கி­ட­மின்றி தெளி­வா­கின்­றது.

1989 ஆம் ஆண்டும் அதன் பின்­னரும் நடந்த பொதுத் தேர்­தல்­களில் மக்கள் இன­ரீ­தி­யாகச் சிந்­தித்தே விருப்பு வாக்­க­ளித்து வந்­துள்­ளனர் என்­பதை நாம­றிவோம். யார் என்­னதான் கூறி­னாலும் இப்­போதும் கூட இந்த மனோ­நி­லையில் பெரி­தாக மாற்றம் ஏற்­ப­ட­வில்லை.

எனவே, தற்­போ­தைய வேட்­பா­ளர்­களின் விருப்பு வாக்­கு­களில் சிங்­கள வேட்­பா­ளர்­களின் விருப்பு வாக்­குகள் உயர் நிலையில் இருக்கும் என்­பது உறு­தி­யா­னது. ஆகை­யினால் தேசிய மக்கள் சக்­தியில் வெற்­றி­பெறும் மூவரும் பெரும்­பான்­மை­யின உறுப்­பி­னர்­க­ளாக இருப்­ப­தற்­கான சாத்­தியக் கூறு­களே அதிகம் உள்­ளன.

ஐக்­கிய மக்கள் சக்­தியின் சஜித் பிரே­ம­தாச கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் அம்­பாறைத் தொகு­தியில் 53,410 வாக்­குகள் பெற்­றுள்ளார். இந்த வாக்­கு­களில் சற்று தளர்வு ஏற்­படக் கூடிய சாத்­தியம் இருந்­தாலும் ஏனைய தொகு­தி­களில் இருந்து இக்­கட்­சிக்கு கிடைக்கும் சொற்ப வாக்­கு­க­ளோடு சேர்த்து இக்­கட்சி ஒரு ஆச­னத்தைப் பெறு­வ­தற்­கான அதி­க­பட்ச வாய்ப்­புகள் உள்­ளன.

அம்­பாறைத் தொகு­தியின் விருப்பு வாக்கு இந்த ஆச­னத்தை தீர்­மா­னிக்கும் பல­மிக்க சக்­தி­யாக இருப்­பதால் இதுவும் பெரும்­பான்­மை­யின சகோ­தரர் ஒரு­வ­ருக்­கான ஆச­ன­மாக இருக்கும் என்­பதில் சந்­தேகம் ஏதும் தென்­ப­ட­வில்லை.
கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் ரணில் விக்­ர­ம­சிங்க அம்­பாறை மாவட்­டத்தில் 86,539 வாக்­கு­களைப் பெற்றார். இதில் சுமார் 30 வீத­மா­னவை சிங்­கள மக்­க­ளது வாக்­குகள். ஏனை­யவை முஸ்லிம், தமிழ் மக்­க­ளது வாக்­குகள். இந்த வாக்­கு­களில் சிறிது தளர்வு ஏற்­பட்­டாலும் இம்­முறை ரணில் தலை­மை­யி­லான கேஸ் சிலிண்­ட­ருக்கும் ஒரு ஆசனம் கிடைக்கக் கூடிய சாத்­தியம் உள்­ளது.

இங்கு முஸ்லிம் வேட்­பா­ளர்கள் பிர­தேச ரீதி­யாகப் பிரிந்து விருப்பு வாக்கு வேட்­டையில் ஈடு­ப­டாமல் ஓர­ளவு கூட்டு முயற்­சியில் ஈடு­பட்டால் இக்­கட்­சி­யி­லி­ருந்து ஒரு முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தைப் பெறலாம். முஸ்­லிம்கள் தங்­க­ளுக்குள் பிரிந்து நின்றால் இந்த ஆச­னமும் முஸ்­லிம்­க­ளுக்கு கிடைக்­காமல் போகலாம்.

மிகுதி 2 ஆச­னங்­களைப் பெறு­வ­தற்கு முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தமிழ்க்­கட்­சிகள் என்­பன களத்தில் உள்­ளன. கடந்த பொதுத் தேர்­தலில் தாம் பெற்ற ஆசன இழப்பு அனு­ப­வத்தை மனதில் கொண்டு இம்­முறை தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்­க­ளித்தால் ஒரு தமிழ்ப் பிர­தி­நி­தித்­துவம் கிடைக்கும் சாத்­தியம் உள்­ளது.

மிகுதி ஒரு ஆசனம் முஸ்லிம் காங்­கி­ர­சுக்கா அல்­லது அகில இலங்கை மக்கள் காங்­கி­ர­சுக்கா என்­பதை வாக்­க­ளிப்பு தீர்­மா­னிக்கும்.
எனவே, இந்தத் தேர்தல் அம்­பாறை மாவட்ட முஸ்லிம் மக்­களைப் பொறுத்தவரை மிக முக்­கி­ய­மான ஒரு தேர்­த­லாகும். கடந்த முறை 4 முஸ்லிம் ஆச­னங்­களைப் பெற்­றி­ருந்த இம்­மா­வட்டம் இம்­முறை அதிக பட்சம் 3 ஆச­னங்­க­ளையும் குறைந்த பட்சம் ஒன்று அல்­லது இரண்டு ஆச­னங்­க­ளையும் பெறு­வ­தற்­கான வாய்ப்­பு­களே உள்­ளன.

இம்­மா­வட்­டத்தில் 3 முஸ்லிம் ஆச­னங்கள் கிடைக்­குமா? அல்­லது அத­னை­விடக் குறைந்த ஆச­னங்கள் கிடைக்­குமா என்­பதை முஸ்லிம் மக்­க­ளது வாக்­க­ளிப்பு முறையே தீர்­மா­னிக்கும். எதிர்­வரும் 15 ஆம் திகதி இது தொடர்­பான விளக்கம் அனைவருக்கும் கிடைத்துவிடும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.