முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டிய தேர்தல்!

0 61

றிப்தி அலி

இலங்­கையின் 9 ஆவது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக அநுர குமார திசா­நா­யக்க, கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலின் ஊடாகத் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ளார்.

இவரே இலங்­கையின் இறுதி நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி என அவ­ரு­டைய கட்­சி­யான தேசிய மக்கள் சக்­தியின் நிறை­வேற்றுக் குழு உறுப்­பி­ன­ரான சுனில் ஹந்­துன்­நெத்தி தெரி­வித்­துள்ளார்.

இலங்­கையின் ஜனா­தி­பதித் தேர்தல் வர­லாற்றில் மும்­முனைப் போட்டி காணப்­பட்ட முத­லா­வது தேர்தல் இது­வாகும். ஜனா­தி­ப­தி­யாக பிர­க­டனப்­ப­டுத்­து­வ­தற்­கான 50 சத­வீத வாக்­கினை இந்தத் தேர்­தலில் எந்­த­வொரு வேட்­பா­ளரும் பெற­வில்லை.

இதனால், ஜனா­தி­பதித் தேர்தல் வர­லாற்றில் முதற் தட­வை­யாக விருப்பு வாக்­குகளை எண்ணி புதிய ஜனா­தி­பதி யார் என தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இவ்­வா­றான பல்­வேறு சிறப்­பம்­சங்­களைக் கொண்ட இந்த தேர்­தலின் ஊடாக சிறு­பான்மை அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு சாவு­மணி அடிக்­கப்­பட்­டுள்­ளது.

அதிலும் குறிப்­பாக முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு இந்த தேர்­தலின் ஊடாக நல்­ல­தொரு செய்தி வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்தத் தேர்­தலில் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் வேட்­பா­ளர்­க­ளான ரணில் விக்­ர­ம­சிங்க மற்றும் சஜித் பிரே­ம­தாச ஆகி­யோ­ருக்கு ஆத­ர­வ­ளித்­தனர்.

ஆனால் முஸ்லிம் மக்­களின் கணி­ச­மான வாக்­குகள் ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்­கா­விற்கு வழங்­கப்­பட்­டுள்­ளமை சுட்­டிக்­காட்­டத்­தக்­க­தாகும். சிறு­பான்­மை­யினர் பெரும்­பான்­மை­யாக வாழு­கின்ற வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகா­ணங்­களில் சஜித் பிரே­ம­தாச வெற்றி பெற்­றுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் அவர் வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகா­ணங்­களில் வெற்றி பெற்றார். இதற்­கான காரணம் சிறு­பான்­மை­யி­னரின் அதிக ஆத­ர­வினைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் மற்றும் இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி ஆகி­யன சஜித் பிரே­ம­தா­ச­விற்கு ஆத­ர­வ­ளித்­த­மை­யாகும்.
அது போன்று சில முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தொகு­தி­களில் அவர்கள் ஆத­ர­வ­ளித்த ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் வெற்றி பெற்­றி­ருக்க முடியும். எனினும், அத்­தொ­கு­தி­களில் அவர்­க­ளது வேட்­பா­ள­ருக்கு கிடைத்த வாக்­கு­களில் பாரிய வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்­கவின் வாக்குகள் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகு­தியில் பாரி­ய­ளவில் அதி­க­ரித்­துள்­ளன. உதா­ர­ண­மாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் கோட்­டை­யான கல்­முனைத் தொகு­தியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் அநுர குமார திசா­நா­யக்க 709 வாக்­கு­களை மாத்­தி­ரமே பெற்­றி­ருந்தார்.

இந்தத் தேர்­தலில் அவர் 10,937 வாக்­கு­களை கல்­முனைத் தொகு­தியில் பெற்­றுள்ளார். பாரி­ய­ளவில் அவ­ரு­டைய வாக்கு அதி­க­ரித்துள்­ளது. இது போன்றே முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழு­கின்ற சம்­மாந்­துறை, பொத்­துவில், கல்­குடா, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை, மூதூர் மற்றும் மன்னார் போன்ற தேர்தல் தொகு­தி­க­ளிலும் அநுர குமார திசா­நா­யக்­காவின் வாக்­குகள் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

இதற்கு மேல­தி­க­மாக வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியில் முஸ்­லிம்கள் அதி­க­மாக வாழு­கின்­றன பேரு­வளை, காலி, கொழும்பு மத்தி, ஹாரிஸ்­பத்­துவ, உடு­நு­வர, மாவ­னெல்லை, புத்­தளம் போன்ற தேர்தல் தொகு­தி­க­ளிலும் அநுர குமார திசா­நா­யக்­கவின் வாக்­குகள் வெகு­வாக அதி­க­ரித்­துள்­ளன.

முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளுடன் முஸ்லிம் மக்கள் இல்லை என்ற செய்­தியே­ இந்த வாக்­க­ளிப்பின் ஊடாக வெளிவந்துள்ளது. இறு­தி­யாக 1999 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் பெரும்­பான்மை மக்­க­ளுடன் இணைந்து நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­க­வினை முஸ்­லிம்கள் தெரி­வு­செய்­தனர்.

இதற்கு பிர­தான காரணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்­ரபின் தீர்க்­க­மான முடி­வு­க­ளாகும். 1989, 1994 மற்றும் 1999 ஆகிய ஆண்­டு­களில் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் அவர் ஆத­ர­வ­ளித்த ஜனா­தி­பதி வேட்­பாளர் வெற்றி பெற்­றதே வர­லா­றாகும்.

அதன் பின்னர் நடை­பெற்ற அனைத்து ஜனா­தி­பதித் தேர்­தல்­க­ளிலும் முஸ்லிம் சமூ­கமும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் ஆத­ரித்த வேட்­பாளர் தோற்­பதே வழ­மை­யாகும். 2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்தல் விசித்­தி­ர­மா­ன­தாகும்.
இவ்­வா­றான நிலையில் இந்த முறை நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் அநுர குமார திசா­நா­யக்­க­விற்கு முக்­கி­ய­மான முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் எவரும் ஆத­ர­வ­ளிக்­க­வில்லை. அத்­துடன் அவர்­களும் கூடு விட்டு கூடு பாய்­வதை வழ­மை­யாகக் கொண்ட முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களை அவர்­களும் இணைக்­க­வில்லை. மாறாக இந்தத் தேர்­தலில் யாரையும் ஆத­ரிக்­காமல் மௌன­மாக இருக்­கு­மாறு தேசிய மக்கள் சக்தி வேண்­டி­யி­ருந்­தது.

இதனை முஸ்லிம் கட்­சி­யொன்றின் தலை­வரும் குறிப்­பிட்­டி­ருந்தார். இவற்றை மீறி ரணில் விக்­ர­ம­சிங்க மற்றும் சஜித் பிரே­ம­தாச ஆகி­யோரை முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் ஆத­ர­வ­ளித்­தனர்.

இதன்­போது, பல பொய்­க­ளையும் அர­சியல் மேடை­களில் கூறி வந்­தனர். குறிப்­பாக ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்­க­வி­னையும் அவ­ரது கட்­சி­யான தேசிய மக்கள் சக்­தி­யினை தாக்கி பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தனர்.

முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களின் பொய்­களை நம்பத் தயா­ரில்லை என்ற அடிப்­ப­டையில் அவர்­க­ளது தீர்­மா­னத்துக்கு எதி­ராக அநுர குமார திசா­நா­யக்­க­விற்கு முஸ்­லிம்கள் இந்தத் தேர்­தலில் வாக்­க­ளித்­தனர்.

இதன் ஊடாக ஜனா­தி­ப­தியின் வெற்­றியில் முஸ்­லிம்­களும் பாரி­ய­ளவில் பங்­க­ளிப்பு செலுத்­தி­யுள்­ளனர் என்ற விட­யத்­தினை எவ­ராலும் மறுக்க முடி­யாது. இன ஐக்­கி­யத்­து­ட­னான எதிர்­கா­லத்­திற்கு இது­வொரு சிறந்த சமிக்ஞையாகும்.
இவ்­வா­றான நிலை­யி­லேயே எதிர்­வரும் நவம்பர் 14ஆம் திகதி பாரா­ளு­மன்றத் தேர்தல் இடம்­பெ­ற­வுள்­ளது. ஜனா­தி­பதித் தேர்­தலில் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் சிறந்த பாடம் புகட்­டி­யது போது பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் பாடம் புகட்ட வேண்­டி­யது முஸ்லிம் மக்­களின் தலை­யாயக் கட­மை­யாகும்.

இதன் ஊடாக முஸ்லிம் சமூ­கத்தில் காலா­கா­ல­மாக இடம்­பெற்று வரு­கின்ற ஏமாற்று அர­சி­ய­லுக்கு நிச்­ச­ய­மாக சாவு­மணி அடிக்க முடியும். முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் சுக­போ­கங்­களை அனு­ப­வித்து வந்­தார்­களே ஒழிய மாறாக சமூக தொடர்பில் எந்தவித குரலும் கொடுக்கவில்லை.

அதே­வேளை, தங்கள் பிர­தே­சங்­களில் அபி­வி­ருத்தி தொடர்பில் எந்­த­வித நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை. இதனால் தான் முஸ்லிம் பிர­தே­சங்கள் இன்று வரை எந்­த­வித அபி­வி­ருத்­தி­யு­மில்­லாமல் தேங்கிக் கிடக்கின்றது.

இதேவேளை, கடந்த பாராளுமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷவின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து ஜனாஸா எரிப்பிற்கு காரணமாக இருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் தோற்றகடிக்க வேண்டியது முஸ்லிம் சமூ­கத்தின் தலை­யாயக் கட­மை­யாகும். அத்­துடன் சமூ­கத்­திற்­காக குரல்­கொ­டுக்­கக்­கூ­டிய சிறந்த தலை­வர்­களை பாரா­ளு­மன்­றத்­திற்கு அனுப்ப வேண்­டி­யது காலத்தின் தேவையாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.