பிரதிநிதித்துவ அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார் அலி சப்ரி

0 50

(எஸ்.என்.எம்.சுஹைல்)
முன்னாள் அமைச்சர் யூ.எல்.எம்.அலி சப்ரி பிர­தி­நி­தித்­துவ அர­சி­ய­லி­லி­ருந்து ஒதுங்­கு­வ­தாக அறி­வித்­துள்ளார்.

மிகக் குறு­கிய காலத்­திற்குள் நீதி, வெளி­வி­வ­காரம் மற்றும் நிதி ஆகிய முக்­கிய அமைச்சுப் பத­வி­களை வகித்த அவர் திடீ­ரென இந்த அறி­விப்பை வெளி­யிட்­டுள்ளார்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் சுயா­தீன வேட்­பாளர் ரணில் விக்­­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ரவு தெரி­வித்­தி­ருந்த நிலையில் அவர் தோல்­வி­ய­டைந்­த­தை­ய­டுத்து இத்­தீர்­மா­னத்தை முன்னாள் அமைச்சர் அலி சப்ரி வெளி­யிட்டார்.

இது தொடர்­பாக அவர் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கையில், ஒரு பாரா­ளு­மன்ற தவ­ணைக்­கா­க­ வேண்­டியே நான் அர­சி­ய­லுக்கு வந்­தி­ருந்தேன். ஏற்­க­னவே, தீர்­மா­னித்­த­தற்கு அமை­யவே, நான் பிர­தி­நி­தித்­துவ அர­சி­ய­லி­லி­ருந்து ஒதுங்­கிக்­கொள்­கிறேன்.

அர­சி­ய­லி­லி­ருந்து விலகி மீண்டும் சட்­டத்­த­ர­ணி­யாக எனது பணி­களை தொட­ரவே திட்­ட­மிட்­டி­ருக்­கிறேன்.

நான் மிகக் குறு­கிய காலம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவும் அமைச்­ச­ரா­கவும் பதவி வகித்­தாலும் மிக முக்­கிய பொறுப்­புகள் எனக்கு தரப்­பட்­டது.

ஆரம்­பத்தில் நீதி அமைச்சு எனக்கு தரப்­பட்­டது. இதற்­க­மைய எனது பதவிக் காலத்தில் நூற்­றுக்கும் மேற்­பட்ட சட்­டங்­களை கொண்­டு­வர முடிந்­தது.
அத்­தோடு, மிகவும் நெருக்­க­டி­யான நேரத்தில் நிதி அமைச்சு எனக்கு தரப்­பட்­டது. மத்­திய வங்கி முன்னாள் ஆளுநர் அஜித்­நிவாட் கப்ரால் மற்றும் அட்­டி­கல போன்­றோரை நீக்கி நிதி அமைச்­சிலும் பல்­வேறு மாற்­றங்­களை கொண்­டு­வர முடிந்­தது. தற்­போது பத­வியில் இருக்கும் மத்­திய வங்­கியின் ஆளு­நரை நிய­மித்­தி­ருந்தேன். இவர், ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க நிதி­ய­மைச்சை வகித்­த­போதும் தொடர்ந்தும் பதவி வகித்தார். இன்­றைய நிதி­ய­மைச்சு பத­வியை வகிக்கும் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­கவும் அதே ஆளு­நரை பத­வியில் நீடிக்க வைத்­துள்ளார்.

இது­போக, வெளி­வி­வ­கார அமைச்சை வகித்­துள்ளேன். அவ்­வ­மைச்சுப் பத­வியை ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க எனக்கு பொறுப்­பேற்­கு­மாறு கேட்­டுக்­கொண்டார். அவ்­வ­மைச்சுப் பத­வியின் மூலம் இலங்­கைக்கு சர்­வ­தேச உத­வி­களை பெற்­றுக்­கொ­டுக்கும் சந்­தர்ப்பம் எனக்கு கிட்­டி­யது. அத்­துடன், மத்­திய கிழக்கு நாடுகள், இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்பு நாடு­க­ளுடன் இலங்­கையின் தொடர்பை மேலும் வலுப்­ப­டுத்த முடிந்­தது. மேலும், அயல்­நா­டு­க­ளு­ட­னான இரா­ஜ­தந்­திர உற­வு­க­ளையும் பலப்­ப­டுத்த முடிந்­தது.

மேலும், ஒரு சிறு­பான்மை அர­சி­யல்­வா­தி­யாக, முஸ்லிம் பிர­தி­நி­தி­யாக நாட்டின் கௌர­வத்தை பாது­காக்க முடிந்­த­துடன், சமூ­கத்­திற்கு எந்­த­வ­கை­யிலும் இழுக்கு ஏற்­ப­டாத முறையில் அர­சியல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடிந்­ததை கௌரவமாக கருதுகிறேன் என்றார்.

மிக குறுகிய மற்றும் இக்கட்டான காலத்தில் நிதி அமைச்சு, நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு போன்ற இலங்கையின் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்த முஸ்லிம் அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.